E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
சுனாமி பேரலையும், லெமூரியா கண்டமும்
ஜூலை 30,2010,19:15

- பா.சரவணன், ஆசிரியர்
    சிந்து சமவெளியை ஆராய்வதற்கு முன்பு வரை திராவிட நாகரீகத்தின் தொன்மையை யாரும் அறியவில்லை. திராவிட நாகரீகம் 2000 ஆண்டுகளுக்கு பழமையானது என்ற கருத்து தற்போது நிலவுகிறது. நாம் லெமூரியாக் கண்டத்தை ஆராய்வதன் மூலம் அதைவிட எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்பதை நிரூபிக்க முடியும்.
    முதலாம் தமிழ்ச் சங்கம், இரண்டாம் தமிழ்ச்சங்கம் லெமூரியா கண்டத்தில் (குமரிக் கண்டத்தில்) செயல்பட்டது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் தற்போதைய தமிழகத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்கள் செயல்பட்ட லெமூரியா என்ற குமரிக்கண்டம் தற்போது எங்கே?

1967-ல் தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
    1967-ஆம் ஆண்டு ராமேஸ்வரம் தீவில் கடுமையான புயல் தாக்கியது. அதில் தனுஷ்கோடி  நகரம் முற்றிலும் அழிந்தது. தனுஷ்கோடியின் நிலப்பரப்பில் பெருமளவு பரப்பு கடலால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது.
    அதற்கு முன்பு வரை தமிழறிஞர்கள், கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரிடம் லெமூரியாக் கண்டம் பற்றி சாத்தியமில்லாத மனநிலை நிலவியது.
    தனுஷ்கோடி பேரழிவிற்குப் பிறகு லெமூரியாக் கண்டம் கடலால் ஏன் அழிக்கப்பட்டிருக்கக் கூடாது? என்ற கேள்விகள் எழத் தொடங்கின.

தமிழகத்தைத் தாக்கிய சுனாமி
2005 டிசம்பர் 24-ல் சுனாமி என்ற ஆழிப் பேரலை தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களைத் தாக்கியது. அது இந்தோனேசியா பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் நிகழ்ந்தது.

கண்ட ஆக்க நில நகர்வு:
    பூமியின் மேல் ஓட்டில் ஏற்படும் நில நகர்வின் போது கண்டப்பகுதி ஒரேயடியாக நிலத்தில் மூழ்குவதும், கடல்நீர் வழிந்து கண்டத்திற்குள் புகுந்து செல்வதும் ஆகும். இதில் ஏற்கனவே இருந்த கடற்பகுதி கண்டமாக மாறும்.

பான்சியா :
        உலகின் முதன்முதலில் இருந்த புவியலமைப்பு பான்சியா ஆகும். பான்சியா என்றால் ஒரே நிலப்பரப்பு. பான்சியாவைச் சுற்றி  மிகப்பெரிய பெருங்கடல் ஒன்று இருந்தது. அது பான்சலாசா ஆகும். லெமூரியாக் கண்டத்தின் வடக்கே இருந்த கடற்பகுதி டெக்கீஸ் ஆகும். அதுவே தற்போது இமயமலையாக மாறியுள்ளது. இது 10000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் நில நகாவின் போது வடக்கு தெற்கு அழுத்தத்தின் காரணமாக இமயமலை பிதுங்கி உருவாகி இருக்கிறது. உதாரணம்: கடற்கரை, கடலினுள், சமவெளிப்பாலை நிலங்களில் பெட்ரோலியக் கிணறுகள் இருக்க சாத்தியமுண்டு. ஆனால் அஸ்ஸாம் போன்ற இமயமலைத் தொடர் பிரதேசத்தில் பெட்ரோலியக் கிணறு இருப்பது பழங்காலத்தில் அப்பகுதி கடலாக இருந்ததே காரணம்.
    இமயமலையின் மேல் பகுதியில் கிடைத்த சில படிமங்கள் ஆராய்வதன் மூலம் அவை கடல் வாழ் உயிரினங்களை ஒத்துள்ளது. இதனை நோக்கும் போது கண்ட ஆக்க நில நகர்வு லெமூரியாக் கண்டத்தில் நிகழ்ந்ததற்கு சாத்தியங்கள் உண்டு.

லெமூரியா நிலப்பரப்பு:
லெமூரியா நிலப்பரப்பு என்பது தற்போதைய இந்தியப் பெருங்கடலையே குறிக்கிறது. இலங்கை, அந்தமான் தீவுகள், இந்தோனேசியா தீவுகள், லட்சத் தீவுகள் உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலே லெமூரியாக் கண்டமாகும்.

லெமூரியா மக்களின் இடம் பெயர்வு:
    லெமூரியாவை கடல் சூழ்ந்து தாக்கும்போது அதில் வாழ்ந்த லெமூர் இன மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள இடம்பெயர்வு அடைந்து, சிந்து சமவெளியை அடைந்துள்ளனர். பிறகு சிந்து சமவெளியில் அவர்களே நாகரீகத்தை தோற்றுவித்துள்ளனர்.

லெமூரியாவின் மக்கள்:
    லெமூர் என்றால் குரங்கிற்கும், மனிதனுக்கும் இடைப்பட்ட தன்மையை உடையவன் என்று பொருள். ஆகவே இம் மனிதனே உலகில் தோன்றிய முதல் மனிதன் எனலாம்.

மனித குல பரிணாம வளர்ச்சி:
    ஆதிகாலம், கற்காலம், தாமிர காலம், இரும்புக் காலம் என்று வகுக்கும் போது லெமூர் மனிதன் ஆதிகாலத்திற்கும் முற்பட்டவன் என்று கருத வேண்டும். அதாவது மனிதக் குரங்கை விட நாகரீகம் அடைந்த மேம்பட்ட நிலை எனலாம்.
    இவர்களை ராமாயண இதிகாசப் பாத்திரங்களில் வரும் "வாரணங்கள் சேனை' மற்றும் "அனுமன்' போன்ற தோற்றத்தையும் நோக்கலாம். இவர்களை உருவகமாக கூறலாமேயொழிய, இவர்கள் தான் அவர்கள் என்று உறுதியாகக் கூற முடியாது.

பகுற்ளி ஆறும், லெமூரியாவும்:
    ஆற்றங்கரைதான் நாகரீகத்தின் தொட்டிலாகும். லெமூரியாவிலும் பகுற்ளி என்ற வற்றாத ஜீவ நதி ஓடியிருக்கிறது. அது ஓடிய வழித்தடங்களை கடல் நீருக்கடியில் தேடக்கூடிய அறிவியல் தொழில் நுட்பங்களை ஆராய வேண்டும்.
    கடல் நீருக்கு அடியில் அகழாய்வு செய்யும் போது நன்னீர் வாழ் உயிரினங்களின் படிமங்கள் அல்லது DNA க்கள் அது தொடர்புடைய பொருட்கள் அனைத்தையும் அணு இயற்பியல் துறை மூலம் கால வயதைக் கணக்கிட வேண்டும். அவை சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நன்னீர் உயிரினம் என்று தெரிந்தால் அப்பகுதியை தொடர்ந்து அகழாய்வு செய்யலாம். அப்பகுதியை பகுற்ளி ஆற்றுப் படுகை எனவும் கூறலாம். பகுற்ளி ஆற்றுப் படுகையை நாம் கண்டுபிடித்துவிட்டால் லெமூரிய திராவிட நாகரீகத்தை நெருங்கிவிட்டதற்குச் சமம்.
    நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்த நமக்கு கடலின் அடியில் பகுற்ளி ஆற்றுப்படுகை இருப்பதை கண்டுபிடிப்பது ஒரு மைல் கல். அது திராவிட நாகரீகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும்.


    

வாசகர் கருத்து (9)
சுகுமாரன் சென்னை,இந்தியா
2010-08-12 12:01:54 IST
தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், வீரம், கொடை, காதல் மற்றும் அவர்களின் தொன்மை ஆகியவற்றை தற்கால தமிழர்கள் பிற மொழி மக்கள் உலக மக்கள் அறிய இது முக்கிய நிகழ்ச்சி அதில் அரசியலை கலக்க கூடாது...
ஷங்கர் அபுதாபி,யூ.எஸ்.ஏ
2010-08-11 11:29:07 IST
இது முதல்வர் கலைஞர் அவர்களை சந்தோசபடுத்த ஏழை மக்கள் பணத்தை செலவு செய்து எடுத்த விழா...
சரவணன் தமிழ்நாடு,இந்தியா
2010-08-10 17:22:24 IST
தமிழ்நாட்டின் முன்னால் முதல்வருமான வருங்கள முதல்வருமான அம்மா அவர்களுக்கு. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் இழுத்து அடிக்கும் கேரளா அரசுக்கு துணை போய்கொண்டு நீதிமன்றத்தில் 33 முறை வாய்தா வாங்கும் தமிழ்நாட்டின் மைனரட்டி முதலமைச்சர் கருணாநிதியை கண்டித்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் ஆதிமுக உண்மையான விசுவாசமுள்ள தொண்டன் :சரவணன் தமிழ்நாடு. ....
மு.செந்தாமரை வேப்பம்பட்டி,இந்தியா
2010-08-10 13:39:11 IST
தமிழ்நாட்டு வரலாறு தெரிய வேண்டும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு என்ன என்று தெரிய வேண்டும் கிடைக்குமா?...
gurusamynathan thoothukudi,இந்தியா
2010-08-09 11:12:28 IST
இப்போதைய தமிழ் நாட்டை கடல் VIZHUNGUMUN TAMIL PANPADU ILAKKIANGAL KURITHA NOOLKALAI PATHUKAPPANA IDATHIL VAIKKA ARASU NATAVATKKAI EDUKKA VENDUM....
ராஜமோகன் துபாய்,யூ.எஸ்.ஏ
2010-08-06 22:45:10 IST
நல்ல தகவல்கள். படிக்கும் மாணவர்களுக்கு உகந்தது...
பாலகுமார் கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-04 16:38:29 IST
எனுக்கு சேரன் , சோழன் , பாண்டியன் வரலாறு மற்றும் அவர்களின் ஆட்சி பற்றி தெரிய...
Bobby சென்னி,இந்தியா
2010-08-03 18:23:12 IST
உங்களுடைய லெமுரியா பற்றிய கருத்து அருமையாக உள்ளது...
துரை. வே. சென்னை,இந்தியா
2010-08-03 08:09:33 IST
எனக்கு "யாதும் ஊரே யாவரும் கேளிர்" கருத்தில் தந்தை கஸ்பார் தந்த உரை தேவை. கிடைக்குமா? ப்ளீஸ்...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »