E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
தமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு
ஆகஸ்ட் 09,2011,18:59

விருதுநகர்: தமிழ் மொழியில் உள்ள புத்தகங்களை வேறு மொழிகளில் மொழி பெயர்க்க, அரசு 58.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை, தமிழாசிரியர்கள் கழகம் வரவேற்றுள்ளது. தமிழ் மொழியில் உள்ள திருக்குறள், மகாகவி பாராதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் போன்ற நூல்கள் ஆங்கிலம், சீனா, அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என சட்டசபையில் அரசு அறிவித்துள்ளது. இந்த நூல்கள் இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளன. இப்பணியில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் பல்கலை கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் தமிழறிஞர்கள் மற்றும் பிற மொழி அறிஞர்கள் ஈடுபட உள்ளனர். இதற்காக, தமிழ் பல்கலைக்கு 48.50 லட்சம், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக தமிழாசிரியர் கழக மாநில இணை செயலாளர் இளங்கோவன் கூறுகையில், ""தமிழ் மொழியின் சிறப்பை மற்ற நாடுகள் அறியும் வகையில், மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து, வெளியிடுவது பயன்பாடாக இருக்கும். இதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, வரவேற்கதக்கது,'' என்றார்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »