E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு
ஜூன் 27,2010,21:17

கோவை : ""தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்; தமிழ் மொழி வளர்ச்சிக்காக 100 கோடி சிறப்பு நிதியம் உருவாக்கப்படும்; மத்திய ஆட்சிமொழியாக தமிழை உடனடியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

கோவையில் கடந்த 23ம் தேதி துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடுஇன்று நிறைவடைந்து. நிறைவு நாள் விழாவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார்.  "நிறைவு நாள் விழாவில், தமிழுக்காக சில அறிவிப்புகள் வெளியிடப்படும்; அவை இன்னொரு பட்ஜெட் போல் இருக்கும்' என, ஏற்கனவே முதல்வர் கருணாநிதி அறிவித்து இருந்தார். அதைப்போலவே, சில அறிவிப்புகளை வெளியிட்டதுடன், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இம்மாநாட்டின் விளைவாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். நான் பக்கத்திலே நிதி அமைச்சர் இருக்கிறார் என்ற தைரியத்தில் அவர் சொன்னதை செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். முன்கூட்டிய நான் அவைகளை பேச்சோடு பேச்சாக இரண்டுநாளைக்கு முன் அறிவித்தது போன்று நிதிநிலை அறிக்கை போல் தயாரித்துள்ளேன். நிதிநிலை அறிக்கை போல என்றுதான் சொன்னேன் பயந்து விட வேண்டியது இல்லை. அதற்கான நிதி உதவியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். வலதுபுறத்தில் பிரணாப்பும், இடதுபுறத்தில் சிதம்பரமும் இருக்கும் போது நிதியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. ஐந்து நாட்களாக கோவையில் எழுச்சியுடன் நடந்த மாநாடு நிறைவு விழா காண்கிறது. ஐந்து நாட்களும் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் தமிழ் என்றே இருந்தது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஒரே இந்திய மொழி என்னும் சிறப்பு பெற்றது தமிழ் மொழி. உலகமொழியாகத் திகழும் ஆங்கில மொழியில் முதல் எழுத்து வடிவம் கி.பி.,7ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஜெர்மன் முதல் வடிவம் கி.பி. 8ம் நூற்றாண்டு; பிரெஞ்சு 9ம் நூற்றாண்டு; ரஷ்யாவின் பழமையான எழுத்து வடிவம் கி.பி.,10 நூற்றாண்டு; லத்தீனில் இருந்து பிறந்த இத்தாலி மொழி 10ம் நூற்றாண்டில் தான் எழுத்து வடிவம் பெற்றது. ஆனால், கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழின் முதல் எழுத்து வடிவ தொல்காப்பியம் கிடைத்துள்ளது. அதுமுதல் இன்று வரை சாமானியர் முதல் ஆன்றோர் சான்றோர் வரை வாழும் மொழியாகவும்,வரலாற்று மொழியாகவும் உள்ளது. காதல், வீரம் இரண்டும் தமிழர்களின் இரு முக்கிய உணர்வுகள்.அதனை சங்கப்பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.  "குழந்தைப் பருவத்தில் தனது தாயாருடன் மணலில் அழுத்திய விதை முளைத்து புன்னை மரமாக எனக்கு முன் தோன்றியதால்,இம்மரம் என் அக்கா ஆகும் என் அன்னை சொன்னார். அக்காள் முன் உன்னோடு காதல் மொழி பேச கூசுகிறது வேறிடம் சொல்வோம் காதலனே என்றாள், மங்கை ஒருத்தி சங்க இலக்கியத்தில். இதனை "விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி' என்ற நற்றிணைப்பாடல் கூறுகிறது. ஒரு குழந்தை இறந்தால் கூட விழுப்புண் படாமல் இறந்து விட்டதே என வருந்தி வளாõல் பிளந்து புதைத்த வீரத்தை "குழவி இறப்பினும் ஊண்தடி பிறப்பினும்' என்ற புறநானூற்று பாடல் கூறுகிறது. "பிறப்பொக்கும்' என வள்ளுவ மொழிப்படி சமதர்ம சமுதாயத்தை தமிழர்கள் பின்பற்றினர்.

கி.மு., 3ம் நூற்றாண்டிலேயே ரோமானியர்கள் தமிழர்களோடு வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர். பொள்ளாச்சி, வெள்ளகோவில் உள்ளிட்ட கொங்கின் பல்வேறு பகுதிகளிலும் ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்தே ரோமர்கள் கொங்குநாட்டுடன் வாணிபத்த் தொடர்புகொண்டிருந்தனர். ஜாவா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் கடல்வழி வாணிபம் மேற்கொண்டுள்ளனர்.  தொன்மையால், இலக்கண இலக்கியங்கள் வாயிலாக அறநெறி, வாழ்வியல் நெறிமுறைகளைக் கொண்டுள்ளது செம்மொழியான தமிழ் மொழி. தமிழ் வளர்க்க பாடுபட்டவர்களை இந்த நேரத்தில் நினைவுர வேண்டும். ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல், போப், செம்மொழி என நிறுவிய பரிதிமாற்கலைஞர், சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளை அச்சுவடிவம் பெறச்செய்த உ.வேச.சா., சி.வை., தாமோதரம் பிள்ளை, 20ம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள், திரு.வி.க., பாரதியார், பாரதிதாசன், இலங்கை தனிநாயகம் அடகள், வ.ஐ.., சுப்பிரமணியம், ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்ற அனைத்து சான்றோர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். செம்மொழித் தமிழை எதிர்காலத்தில் அறிவியல் தமிழாக கட்டிக் காப்போம் என உறுதி ஏற்போம்.  


செம்மொழி மாநாடு தொடர்பான கலந்தாய்வில் சிவத்தம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், ஏற்கனவே நான் கூறியது போன்று சில அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

அறிவிப்புகள்:

* தமிழகத்தில் ஐந்து இடங்களில்  மரபணு பூங்கா நிறுவப்படும். அதற்கு எம்.எஸ்., சாமிநாதன் பொறுப்பாளராக இருப்பார்.
*  இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படவில்லை. மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கும் சரியான அரசியல் தீர்வு காணப்படவில்லை. சிங்கள அரசால் தரப்பட்ட உறுதிவார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை தருகிறது. தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதற்கான முனைப்புகளை இலங்கை அரசு செய்ய வேண்டும். அதற்காக இந்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இம்மாநாடு வலியுறுத்துகிறது.
* மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சிமொழியாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுமேயானால், செம்மொழியான தமிழ் மொழியை முதல்கட்டமாக உடனடியாகஅறிவிக்க வேண்டும், என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
* சென்னை ஐகோர்ட்டில் தமிழ் பயன்பாட்டு மொழியாக வேண்டும் என, 2006ம் ஆண்டு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதனை தாமதிக்காமல் அங்கீகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
* சமஸ்கிருத ஆய்வுகளுக்கு வழங்குவது போன்று, தமிழ் ஆய்வுக்கும் தேவையான மானியத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.
* இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே, இந்திய அரசு அமைக்க உள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
* கடலால் அழிந்த பூம்புகார், குமரிக்கண்டம் பகுதியில் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்ய மத்திய அரசு திட்டமிட வேண்டும்.
* தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி என்பது முழுமையாக நிறைவேற்றப்பட அரசு அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
* தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு "கணியன் பூங்குன்றனார்' விருதும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். முதல்கட்டமாக விழா மேடையில் விருது வழங்கப்படுகிறது.
* பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ் செம்மொழி என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தப்படும்.
* பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், சான்றோர்களால் மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைகிறது. அதன் செயலாக்கங்கள் பின்வருமாறு அமையும்.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது.
* திராவிட மொழிகளின் கலை,பண்பாடுகளை நினைவுறுத்தும் விதமாக நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைப்பது.
* மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக்காப்பகம் அமைப்பது.
* சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குழுக்களை ஒருங்கிணைப்பது.
* மொழி ஆராய்ச்சியிலும், மொழித்தொண்டிலும் ஈடுபடும் சான்றோர்களுக்கும் ஆதரவளித்து துணை புரிவது.
* உலகத்தமிழறிஞர்கள் கையேடு வெளியிடுவது
* உலகத்தமிழர்களை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வது.
* கோவை செம்மொழி மாநாட்டின் நினைவாக காந்திபுரத்தில் ஒரு கி.மீ.,நீளத்துக்கு100 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.
* தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஆசிய, ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்ப்பது; பிற மொழி படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்கப்படும்.
* அறிவியல் தமிழை மேம்படுத்த கம்ப்யூட்டர், மருத்துவம் போன்ற துறைகளில் பிறமொழி நூல்களை தமிழாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் வளர்ச்சிக்கு தனியாக 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். இவற்றுக்கு மத்திய அரசும் நிதி ஒதுக்கி உதவ வேண்டும். இவ்வாறு, முதல்வர் கருணாநிதி பேசினார்.

வாசகர் கருத்து (128)
dinesh tenkasi,இந்தியா
2011-03-04 23:27:39 IST
Tamil செம்மொழி என்பது நம் யாவரும் அறிந்த ஒன்றே.... நாம் ஒரு விழா எடுத்து தான் இதை உலகிற்கு பறை சாற்றவேண்டும் என்று இல்லை ...... தாம் மக்களின் மதிப்பை பெற வேண்டும் என்று கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார்கள். நம் தமிழ் மக்கள் இலங்கையில் அடைந்த துயரத்தை இந்த அரசாங்கமும் சேரி ஜெயலலிதா வும் சேரி இதை வைத்து பேச தான் செய்தார்கள் செயலில் ஈடுபடவில்லை. எனவே இந்த விழா ஒரு கண் துடைப்பே இந்த அரசாங்கமும் சரி ஜெயலலிதாவும் சரி தமிழ் இன துரோகிகள்...
த.THIRUKUMARAN IDUMBAVANAMTHIRUVARUR,இந்தியா
2011-01-21 19:03:14 IST
TAMIL VAZHA KALAIGNAR VAZHA...
Muruganandam chennai,இந்தியா
2011-01-16 18:49:35 IST
தலைவரே உங்க பாமிலி மட்டும் வெளி நாட்டுல படிக்கலாமா? நாங்கலாம் என்ன கூமுட்டை யா ?...
பாரி அரூர்,இந்தியா
2010-12-10 12:46:19 IST
தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுபதேல்லாம் சரி தான் ஐயா அனால் சில பவா பட்டவர்கள் தமிழ் மட்டும் படித்து விட்டு பயன் இன்றி உள்ளனர் அவர்களை என்ன செய்ய ?...
Abuthahir singapore,ஸ்லேவாக்கியா
2010-12-02 23:42:13 IST
இது மொத்தத்தில் விரயமான செலவு. இதை இல்லாத மக்களுக்கு கொடுத்தா கல்வி வளரும், தமிழ் வளரும். மேலும் தமிழ் தமிழ்நாட்டில் மட்டுமே அதலால் பிற மாநிலங்கள் போல துணை படமாக ஹிந்தி வைப்பதில் எந்த ஒரு தவறும் கெடையாது. இதை யோசித்து முடிவெடுக்கவும். இப்படிக்கு தமிழன் ....
ram birmingham,உருகுவே
2010-09-30 00:59:13 IST
தேங்க்ஸ் டு முதல்வர். தமிழ் வாழ்க வளர்க. தமிழின் அருமை அறிந்தவன் தமிழை தவறாக பேச மாட்டான்...
முரளீதரன் கண்டரமாணிக்கம்,இந்தியா
2010-09-26 12:29:16 IST
Honbl'e chief Minister, Your idea is good, your are only orginal Tamilan, you are really good....
மகேந்திரன் விருதுநகர்,இந்தியா
2010-08-30 18:02:55 IST
.முதல்வர் அவர்களுக்கு நன்றி! .....தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உடனடி வேலை வாயப்பு கொடுத்தால் மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு படிப்பார்கள். முதலில் தமிழ் படித்தவன் அடுத்த மாநிலம் போகமுடியல..சரி தமிழ் நாடு வேலை பார்க்கலாம் என்றால், இங்கேயும் வேலை இல்லை.. அப்ப நாங்க என்னதான் பண்றது.....
2010-08-20 09:30:21 IST
தயவு செய்து எல்லா மொழியும் படிங்கள்.இங்கிலீஷ் ஹிந்தி கண்டிப்பாக படிங்கள்.தமிழ் தாய் மொழியாய் இருக்கட்டும்.தமிழ் வளரும்....
சிவகுமார்.v dubai,யூ.எஸ்.ஏ
2010-08-13 16:39:34 IST
ஓர் முக்கிய அறிவிப்பு:- இதுவரை கருணாநிதி அவர்கள் தன் அரசியல் வாழ்வில் எடுத்த முடிவுகள்படி " தமிழ் வாழும், தமிழகம் வாழும், ஆனால் தமிழர்களை வாழ விடமாட்டார்". குறிப்பு:- கருணாநிதியை பொருத்தமட்டில் தமிழகம் என்றால் அவரது குடும்பம் என்று பொருள் ....
கண்ணனூர் .....றீன் ரியாத்.நாகர்கோயில்,இந்தியா
2010-07-25 15:56:31 IST
தமிழை நேசியுங்க மற்ற மொழிகளையும் தெரிஞ்சிக்குங்க. அத்த வெச்சு போழசிகுங்க. ... குறிப்பா இங்கிலீஷ் இந்தி படிங்க யங்க போனாலும் போலைகலாம்...
janaki madurai,இந்தியா
2010-07-19 11:30:00 IST
நான் தமிழில் கல்வி பயின்றவள், செம்மொழி மாநாட்டில் தமிழில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை என்று கலைஞர் திரு மு கருணாநிதி தெரிவித்தார், அது பற்றிய விவரங்களை நான் தெரிந்து கொள்ள முடியுமா?...
janaki madurai,இந்தியா
2010-07-19 11:25:33 IST
நன்றி உங்களது தமிழ் பற்றிற்கு வாழ்க தமிழ், வளர்க தமிழ் !!!!!!...
ராஜி Tamilnadu,இந்தியா
2010-07-19 08:50:45 IST
Instead of wasting this 300 crores they could have spent this amount to help poor people or to help for iliterate . This ruling party is totally waste. First They should bring the rule those who people nominating for the election they should be educated then no complaints should be there on them. Then oly India will become gud country...
ANJUKAM DINDIGUL,இந்தியா
2010-07-18 16:49:44 IST
முதல்வர் சார் இக்கு நன்றி ...
GOVINDARAJAN R Chennai,இந்தியா
2010-07-15 15:52:37 IST
வாழ்க கலைஞர்.வளர்க தமிழ்.தமிழ் செம்மொழி மாநாடு வெற்றி,வெற்றி....
லூதர் சிங் சென்னை,இந்தியா
2010-07-13 20:45:18 IST
நன்றி தி மு க விற்கு...
kaliyaperumalg villupuram,இந்தியா
2010-07-12 00:02:00 IST
செம்மொழிமாநாடு முழுவெற்றி. முதல்வருக்கு முதற்கண் நன்றிகள் வாழ்க தமிழ்!!வாழ்க தமிழகம்!! ......
RAMALINGAM VRIDDHACHALAM,இந்தியா
2010-07-10 18:01:49 IST
TAMIL VERY GOOD THANKYOU...
sathish .v kanchipuram,இந்தியா
2010-07-06 20:22:30 IST
tamiluku thanks...
த.மகாதேவன் கோயம்புத்தூர்,இந்தியா
2010-07-06 14:38:51 IST
செம்மொழி மாநாடு வெற்றிக்கு என் இனிய நல்வாழ்த்துக்களை முதல்வருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் வாழ்க!...
செபின் bright thuckalay,இந்தியா
2010-07-06 13:54:01 IST
தமிழ் மொழில கை எழுத்து போட கலைஞ்சர் சொன்னாறு ஆனா பாங்க்ல போனா இங்கிலீஷ்ல கை எழுத்து போட சொல்றாங்க என்ன பண்ண...
ரகுபதி திருப்பூர்,இந்தியா
2010-07-06 13:51:56 IST
கலைஞர் க்கு நன்றி காரணம் , நான் தமிழில் படித்த காரணத்தால் இதுவரை என்னக்கு எந்த ஒரு MNC நிறுவனமும் வேலை தரவில்லை , இப்போது என்னக்கு ஓர் நல்ல வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன் . மீண்டும் கலைஞர் க்கு நன்றி இப்படிக்கு ரகுபதி திருப்பூர் 9894055566...
சுப்பு சென்னை,இந்தியா
2010-07-02 19:26:14 IST
டோட்டலி வேஸ்ட் ஆப் மனி அண்ட் தமிழ் மாநாடு...
suresh coimbatore,இந்தியா
2010-07-02 18:58:42 IST
மக்கள் வரிப்பணம் நன்றாக துதிபாட பயன்பட்டது....
ஸ்ரீதர் சுப்பிரமணி டர்பன்,ஸ்பெயின்
2010-07-01 17:49:42 IST
ஒரு நல்ல விசயம் நடக்கிறப்போ குற்றம் குறை சொல்றதை நிறுத்துங்க. ஏன் உங்களுக்கு இந்த வயத்து எரிச்சல் கலைஞர் திமுக கட்சி, நீங்கல்லாம் வேற கட்சி, இல்ல எந்த கட்சியையும் சேராத நடுநிலைவாதியா நீங்க... அதனால அவர் செய்றது எல்லாத்தையும் பொறுத்துக்க முடியலையா இந்த செம்மொழி மாநாடு அவருக்காக நடத்ல ஒவ்வொரு தமிழனுக்காகவும் தான். உடனே சொல்லுவீங்களே தமிழன் வீட்ல சாப்பாடே இல்லாம, வேலை இல்லாம, விவசாயம் இல்லாம, மின்சாரம் இல்லாம இருக்கிறான் அவன் கேட்டான்ன கோடி கோடியா செலவு செய்து இத நடத்துன்னு. அது எப்போதும் தீராத பிரச்சினை அதை கொஞ்சம் கொஞ்சமாக தான் தீர்க்க முடியும் அதுக்காக அந்த பிரச்சினையெல்லாம் முடிந்த பிறகுதான் விழா, மாநாடு நடத்துனும் அப்படினா கஷ்டம் ஆனா அப்போ கூட குறை சொல்லனுமுன்னு இருக்கிறவங்க சொல்லிட்டே தான் இருப்பீங்க. உங்களையே உங்க வீட்டையே எடுத்துக்குங்க நீங்க நிறைய கடன் வாங்கி இருக்கீங்க, உங்க தம்பிக்கு வேலை இல்ல அப்படிங்கறதுக்காக ஆபீஸ்க்கு போகும் பொது கிளுஞ்ச சட்டையும், தடியோடவுமா போறீங்க, தீபாவளி, பொங்கல் வந்தா கொண்டாடாமல இருக்கீங்க. தமிழ் உன்னுடைய மொழி அதுக்கு ஒருத்தர் பெருமை சேர்க்கணும்னு மேமேலும் வளரணும்னு ஆசைபடுறார் அதை வாழ்த்த பெரிய மனசு இல்லாட்டியும் இந்த மாதிரி எல்லோரும் வந்து படிக்கிற எடத்துல அசிங்க படுதாதிங்க. முடிஞ்சா நீங்க ஒரு அரசியல் வாதியா மாறி மக்களுக்கு நல்லது பண்ணுங்க, கொள்ளை அடிக்காதிங்க, லஞ்சம் வாங்கதிங்க, வறுமையை ஒழிங்க, எல்லோருக்கும் வேலை கொடுங்க, நாள் பூரா மின்சாரம் கொடுங்க, எல்லோர்க்கும் படிப்பு கொடுங்க....
தமிழன் tamilnadu,இந்தியா
2010-06-30 19:43:18 IST
இந்த மாநாடு தமிழ்நாட்டிற்கு தேவை இல்லாதது.தமிழை வைத்து தமிழ் நாட்டில் கூட வாழமுடியாது.ஐந்து நாட்களுக்கு 380 கோடி என்பது மெக மிக அதிகம். தமிழ் நாட்டின் மொத்த வரி 1800 கோடி அதில் வசூல் 400 கோடி.பாருங்க மக்களே நீங்க தான் இதை தெரிஞ்சுக்கணும்.நன்றி இப்படிக்கு தமிழன்....
balasubramanian salem,இந்தியா
2010-06-30 15:10:02 IST
முன்பு ஒரு காலத்துல இந்தி இல்லாமல் வாழவே முடியாதுன்னு சொன்னாங்க. இப்ப இங்கிலீஷ் இல்லாமே வாழவே முடியாதுன்னு சொல்றாங்க . எப்படி மாறுது உலகம் . இங்கிலீஷ் எல்லா நாட்டிலையும் இல்லை. ஆனால் பொது மொழி...
balasubramanian salem,இந்தியா
2010-06-30 14:29:38 IST
,தமிழால் வாழுந்து தமிழால் உண்டு உறங்கி தமிழால் குலம் கோத்திரம் கண்டு வாழும் நிலை கண்டு.வரும் காலம் பொற்காலம் ஆக வேண்டும் . அப்படி வளர்த்த தாயே.உன்னை வணங்குகிறேன் . உடல் வளர்த்த தாயே உன்னை பழிப்போரை மன்னித்து விடு . ....
பாலசுப்ரமணியன் சேலம்,இந்தியா
2010-06-30 13:57:28 IST
இது அருமையான திட்டம். தமிழ் வளர மேலும் ஒரு கிளை வளர வகுத்த திட்டம் .தமிழரா இருக்கிற எல்லாரும் பாராட்ட வேண்டும் .மு. கருணாநிதி. வாழ்க . இந்த நூற்ற்றண்டின் தமிழ் வளர்த்த நாயகரே வாழ்க . தமிழால் நீரா உங்களால் தமிழா தமிழன் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை ....
பாண்டி திண்டுக்கல்,இந்தியா
2010-06-30 11:09:10 IST
நாம் எல்லாரும் தமிழர்கள், சூப்பர் ஜோக் அடிக்கிறார் நம்ம முதல்வர். நம்முடைய மக்கள் மற்றும் தமிழில் படிக்கட்டும், அவருடைய மக்கள் அனைவரும் ஆங்கிலம் படிக்கட்டும், ஏனா, அவங்க எல்லாரும் முன்னுக்க வரனுள்ள,,,,,,,,, சூப்பர் தலைவா, உன்னோட தமிழ் மட்டும் வாழ்க,...
ஜான் எபெனேசர் விபின் புபேஷ் மெட்ரோமனிலா,பிட்கெய்ர்ன்
2010-06-30 11:03:28 IST
தமிழனாக பிறந்ததே பெருமையக நினைக்கிறேன். தமிழனாக பிறந்ததால் பிலிப்பைன்ஸ் நாட்டில் தமிழ் டிரான்ஸ்லேட்டராக வேலை கிடைத்துள்ளது. வாழ்க தமிழ். இந்த வாழ்வை கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி...
ரோபா மதுரை,இந்தியா
2010-06-30 10:57:08 IST
அண்ணன் ராக்கி கூறினார், தமிழில் பிழை உள்ளது என்று, நான் ஒன்று கேட்கின்றேன் கொவிக்காதிங்க அண்ணா, உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா? நானும் தமிழன் தான், ஆனால், என்ன பயன், தமிழா வச்சுக்கிட்டு நம்ம ஐயா, கலைஞர் இருக்காரே அந்த சென்னைக்கு சென்று பேசினால் கேவலமாக பார்க்கின்றனர், தமிழ் நம் தாய் மொழிதான் அத வச்சு .... கூட புடுங்க முடியாது, தமிழை வைத்து மட்டும் தமிழ் தமிழ் என்று சொல்லமுடியாது, ஐயா, எங்களுக்கு தமிழை முதல் மொழியாக வைக்க போறிங்க. அப்புறம் எதுக்கு கணிமொழிய தமிழையே படிக்க வைக்கல?????????????? by. தமிழ்....
seltam சிங்கப்பூர்,இந்தியா
2010-06-30 09:17:07 IST
இந்த மாநாடு தேவை இல்லாத ஒன்று, அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட பெரிய திரைப்படம். தமிழன்...
சத்தியா சிங்கபூர்,இந்தியா
2010-06-30 08:47:28 IST
தமிழனுக்கு தமிழ் வேண்டும். ஆனால் தம் மக்களுக்கு மத்தியில் ஆட்சி செய்ய ஹிந்தி வேண்டும் .சுயநலம் கொண்ட அரசியல்வாதிகள் ....
இந்தியன் dubai,யூ.எஸ்.ஏ
2010-06-30 08:09:08 IST
தமிழ் வளர்ப்பவர்கள் முதலில் தமிழ் கலாச்சாரத்தை கொலை செய்யும் மானாட மயிலாட அசிங்கங்களையும் அதில் பேசப்படும் தங்லீஷ்களையும் பார்த்து பரவசம் அடையுங்கள்....
ஓகே yes ஹஸாஹபூப்,செனகல்
2010-06-30 02:05:22 IST
நான் செனகலில் இல்லை; சவூதியில் இருக்கிறேன். சவூதியில் படிக்கும் தமிழ் குடிமக்கள் ஆங்கில வழியில்தான் படிக்க முடியும்; அதுவும் நடுவண் அரசின் CBSE பாடத் திட்டத்தில்தான். தமிழக அரசு சவூதியில் தமிழ் வழி பள்ளியைத் திறந்தால் நாங்களும் தமிழக அரசுப்பணியில் சேர முடியும். இப்படி வெளி நாடு வாழ் தமிழ் மக்களுக்கு வசதி செய்துவிட்டு சட்டம் இயற்றுங்கள்....
கர்னைன் துபாய்,யூ.எஸ்.ஏ
2010-06-29 16:09:19 IST
தமிழ் தமிழ் என்று பேசும் பலரின் குழந்தைகள் தமிழை இரண்டாம் பாடமாகவே ஏற்று படிக்கின்றன. மக்களே யோசியுங்கள், ...
A.Natarajan Kolkata,இந்தியா
2010-06-29 15:03:25 IST
Hello sir, First concentrate in Primary education in English with a talented faculty members. What people wanted is better standard life that is possible only through good education. Convert all govt schools to the level of Global standards/ atleast to the private convent education. Otherwise people will not send their wards to Govt schools. How long u r thinking of looting public money. Atleast follow the footsteps of Kamaraj the former CM. Nothing should be available for free. How can I think of getting things free? Implement 3 language fomula for all round developement. Concentrate in PRIMARY education. Appoint well educated Graduates. PG students in primary schools. Automatically TN will improve. If any one reads only Tamil they cant go even for begging. A.N...
A.Natarajan Kolkata,இந்தியா
2010-06-29 14:39:44 IST
Hello கருணா, Please open Toss mark liquor shops in each and every street to improve your Tamil culture instead of primary schools. Long live karuna for his services as Cm. Such a corrupt state I have never seen. This is also part of Tamil culture. How much U have earned in this 300 crores whether it has reached ur home. If Azhagiri is a minister that too without knowing English, Hindi.... Long live ur adminand ur family. Dont bother about others Let them go to hell. Long live Tamil culture. best of luck to u. A.N...
Eman Chennai,இந்தியா
2010-06-29 10:38:04 IST
Tamizh mozhiku mukkiyam koduthu athai valarka edutha thittam super..AAnal Tamizh lil payanraavargal veru enga sendraalum enna nilamai.. Tamizh, Nam thesiya mozhi Hindhi, Aangilam aagiya ellavaraiyum karpathu safer side ivvulagil vazha..Tamizh endrendrum vazhga valarga!.....
ஓகே எஸ் ஹஸாஹபுப்,செனகல்
2010-06-29 01:46:26 IST
வெளி நாட்டில் தமிழ் வழி பள்ளிகள் எல்லா நாட்டிலும் இல்லையே! தமிழ் வழி பள்ளிகள் இல்லாத நாட்டில் படித்தவர்களுக்கு தமிழ் நாட்டில் அரசு பணிகள் கிடைக்காதா? சொல்வது எளிது; யோசிக்கவே மாட்டார்களா?...
ம.சுவாமி chennai,இந்தியா
2010-06-29 00:31:52 IST
mohankumar - வாஷிங்டன்DC,Uzbekistan 2010-06-28 08:22:55 IST நான் என் வாழ்நாளில் மிகவும் சந்தோசபட்ட தினங்கள் இந்த சில நாட்கள். தமிழ் வளர்ச்சிக்கு இந்த அளவு உழைத்த ஒரு முதல் அமைச்சர் சரித்திரத்தில் இல்லை, இநிமேலும் வருவது ஐயமே. நான் ஒரு மலையாளி ஆயினும், தமிழை மிகவும் நேசிக்கிறேன். தினமரில் இந்ந்த ஐந்து நாட்கள் வந்த ஒவொரு செய்திகளும் , புகைப்படங்களும் என்னுடை கணணியில் சேமித்து வைத்துளேன். வரும் நண்பர்களிடம் பகிர்துகொள்ள. இந்த முதல் அமைச்சர் இனியும் நீண்ட காலம் அரசு செய்து தமிழ் தொண்டு செய்ய என் தமிழ் மக்கள் உதவ வேண்டுகிறேன். அடுத்த தமிழ் மாநாடு வாஷிங்டன் நகரில் நடத்தலாமே. வாழ்க தமிழ், வாழ்க அரசியல் மாமேதை முதல் அமைச்சர் கருணாநிதி. ...வஞ்சக புகழிட்சியா?...
ம.சுவாமி chennai,இந்தியா
2010-06-29 00:18:19 IST
HOW MANY SPELLING, GRAMMAR ,PUNCTUATION MISTAKES IN YOUR COMMENTS. ராக்கியண்ணன் - Coimbatore,India 2010-06-28 22:30:31 IST இங்குள்ள பதிவுகளைக் கவனிக்கும்போது,இருவகையான கருத்துக்கள் வெளிப்படுகின்றன.(1 )அறிவிப்புக்கு வரவேற்பு.(2 )இவ்வறிவிப்பு வெறும் ஏமாற்றுவேலை எனக்குறைகூறுவது. வரவேற்பவர்களின் கருத்துப்பதிவில் எழுத்துப்பழை,இலக்கணப்பிழை அரிதாக உள்ளது.இது இவர்கள கற்ற தமிழின் ஆளுமையைக்காட்டுகிறது. ஆகவே இவர்தம் எண்ணமும் ஆரோக்கியமாக வெளிப்படுகாறது.ஏமாற்றுவேலை எனக்குறைபடுவோரின் மொழியமைப்பைப் பார்த்தாலே அதில் அத்தனை பிழைகளும் குவிந்துள்ளதைக்காணலாம்.இத்தகைய பிழையுடையவர்கள் முதலில் தங்களை தரமானவர்களாக்கிக்கொண்டால் வேலை தானே தேடிவரும்.ஆடத்தெரியாத ஆரணங்கு தன்இயலமையை மறைக்க மேடைகோணல் என்று கூறுவதைப்போல் உள்ளது இவர்தம் புலம்பல்.வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாய்ப் பாதுகாக்கும்.வக்கில்லாதவன் கையில் வாளே இருப்பினும் அது பேடிகை வாளாண்மையாகத்தான் இருக்கும். ......
ம.சுவாமி chennai,இந்தியா
2010-06-29 00:03:38 IST
தமிழ் படித்தவனுக்கு வேலை தமிழ்நாட்டில் இல்லை.அதனாலதான் துபாய் போன்ற நாடுகளில் அல்லல் பட்டுக்கொண்டு இருகிரர்கள் தமிழ்நாடு முன்னேறினால் இங்கு வந்துவிட துடிக்கிறார்கள்.ஆனால் இங்கு நடப்பது வேறு. so tamila dont be cheated by these polotician.learn tamil also learn other languages to earn. learn and earn. after all u have to take care of yourself first, without compromising our mother tongue. தமிழ் வாழ்க . ....
raman newdelhi,இந்தியா
2010-06-28 23:03:42 IST
இனிமேல் தனி மனிதன் வேலைத் திறமை படிப்பு இவற்றைக் கூறும் resume ஐ தமிழில் அச்சு அடித்துக் கொடுத்ததால் போதுமா? இந்த முதல் அமைச்சரின் குடும்பத்தில் யார்தான் தமிழில் படித்து இருக்கிறார்கள்? நான் ஒரு பற்றிமன்றம் பார்த்தேன் - முட்டாள்தனமான தலைப்பு வேறு - தமிழை வளர்ப்பது வெண் திரையா, சின்னத் திரையா அச்சுத் துறையா? - அதைத் தலைமை தாங்கியது நமது முக. இந்த மாதிரியான தமிழ் வளர்ந்து நமக்கு என்ன பயன். இந்த மாநாட்டுக்கு எத்தனை செலவழிந்தது எவருடைய குடும்பத்திற்கு எத்தனை சதவிகிதம் சென்றது என்று இவர் கூறட்டும். சுயநலவாதி முதல் அமைச்சர். ...
ராக்கியண்ணன் Coimbatore,இந்தியா
2010-06-28 22:30:31 IST
இங்குள்ள பதிவுகளைக் கவனிக்கும்போது,இருவகையான கருத்துக்கள் வெளிப்படுகின்றன.(1 )அறிவிப்புக்கு வரவேற்பு.(2 )இவ்வறிவிப்பு வெறும் ஏமாற்றுவேலை எனக்குறைகூறுவது. வரவேற்பவர்களின் கருத்துப்பதிவில் எழுத்துப்பழை,இலக்கணப்பிழை அரிதாக உள்ளது.இது இவர்கள கற்ற தமிழின் ஆளுமையைக்காட்டுகிறது. ஆகவே இவர்தம் எண்ணமும் ஆரோக்கியமாக வெளிப்படுகாறது.ஏமாற்றுவேலை எனக்குறைபடுவோரின் மொழியமைப்பைப் பார்த்தாலே அதில் அத்தனை பிழைகளும் குவிந்துள்ளதைக்காணலாம்.இத்தகைய பிழையுடையவர்கள் முதலில் தங்களை தரமானவர்களாக்கிக்கொண்டால் வேலை தானே தேடிவரும்.ஆடத்தெரியாத ஆரணங்கு தன்இயலமையை மறைக்க மேடைகோணல் என்று கூறுவதைப்போல் உள்ளது இவர்தம் புலம்பல்.வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாய்ப் பாதுகாக்கும்.வக்கில்லாதவன் கையில் வாளே இருப்பினும் அது பேடிகை வாளாண்மையாகத்தான் இருக்கும். ...
VICKY chennai,இந்தியா
2010-06-28 21:03:57 IST
totally fraud...
VIJAY CHENNAI,இந்தியா
2010-06-28 21:01:02 IST
TOTALLY WASTE...
வடக்குபட்டி ராமசாமி யாதும்ஊரே,இந்தியா
2010-06-28 20:31:06 IST
செந்தமிழ பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பது தெளிவுற அனைவரும் ஏற்று கொண்டதுதான்..இங்க கேள்வியே தமிழகத்தின் விலைவாசி கட்டுகடங்காமல், மின்சார வெட்டு தலைவிரித்தாடும், தமிழனம் ஆதரவின்றி இருக்கும் நேரத்தில் தமிழ் மாநாடு, அதுவும் அவசர அவசரமாக (உலக தமிழ் ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து செயல்படாமல்) நடத்துவது தேவையா?? சென்னையில் ...... கழுவகூட தண்ணீர் கிடையாதாம்..அரசு காவலாளிங்க எல்லாம் தமிழ் துண்டு ஆட்ட (அதாம்பா தொண்டாற்ற ) போய்ட்டாங்களாம்??? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசாமாய் போகட்டும்...இவனுங்கள திருத்தவே முடியாது...அரசியல்வாதிகள மட்டும் தண்ணி தெளிச்சு விட்டீங்க அப்புறம் காட்டுவாசிங்களாயிடுவீங்க பாத்துக்கோங்க.....
s.nagalingam bhilai,இந்தியா
2010-06-28 19:52:27 IST
tamil nattil atthanaiyo thozhiljalaikal vanthum tamil patithavargalukku velaikidaipathillai velimanilangalil erunthu vanthu endi anhilam paditthu vandu tamil naddil sulopamaga velai vankikolkirarkal anal tamil naddilpadithavarkalukku velaikidaikka nam muthalvar uthaviseiyavendum anakettukolkiren ...
ரபி chennai,இந்தியா
2010-06-28 19:40:02 IST
thank u for cm ...
venki chenni,இந்தியா
2010-06-28 18:50:18 IST
அட போங்க ப தமிழ் மீடியம் படிச்சிட்டு லைப் ல ரொம்ப கஷ்ட படுறேன் , அசிங்க படுறேன் , ...
பாரதி கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-28 18:47:03 IST
எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். நீங்கள் கொடுத்து இருக்கும் அறிக்கைகள் மிகவும் குறைவு.... தயவு செய்து இன்னும் நல்ல திட்டங்கள் அளிக்கும் மாறு கேட்டு கொள்கிறேன்... நன்றி......
பாலாஜி madurai,இந்தியா
2010-06-28 18:38:43 IST
முதல்வர் அவர்களுக்கு நன்றி! .....
ச.மதனகோபால் Tiruppur,இந்தியா
2010-06-28 17:03:29 IST
முதல கருணை அடிப்படை வேலை கொடுங்க பதினோரு வருசமா இங்க நாங்க வெயிட் பண்றோம் அப்பறம் அப்ப்சல் குரு பத்தி யோசிக்கலாம் ...
KV Radhakrishnan Chennai,இந்தியா
2010-06-28 15:35:10 IST
good one in tamil Thanks Lot!! Please learn english also it is most importment to your life You don't no english you are waste!!!!!!!!!...
chenthamilan chennai,இந்தியா
2010-06-28 15:11:42 IST
அன்பு நண்பர் ஷெரிப். நீங்கள் தமிழரா ? உங்கள் தமிழ் வாக்கியங்கள் பார்த்தல் நீங்கள் தமிழும் படித்தது போல் தெரியவில்லையே , அவர்கள் சொல்வதை விடுங்கள், உங்களுக்கு தாய்மொழி தமிழாக இருந்தால், தமிழே உங்களுக்கு இப்படி என்றால் ஆங்கிலத்தில் எப்படி புலமை வரும். முதலில் தமிழை பிழையின்றி எழுத கற்றுகொள்ளுங்கள். பிறகு ஆங்கிலத்தை பற்றி யோசிக்கலாம். ...
வினோத் குமார் கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-28 15:05:38 IST
திரு. கருணாந்தி அவர்களுக்கு நன்றி. அய்யா தங்கள் கவனம் விவசாயம் மீது வையுங்கள் ...
m. aruldhas marthandam,இந்தியா
2010-06-28 15:00:59 IST
தமிழன் கெஞ்சுதல் அவன் இயல்பு இல்லை. முயற்சி திருவினனை ஆக்கும் என்பதை புரிந்துகொண்டால் அவன் எங்கும் வாழலாம். தமிழ் என்ட உண்ர்வு என்றும் பிற மொழிகளழை படிப்தற்கு தடை விதிப்பது அல்ல. சென்ட்டுடிவிர் எட்டுத்திக்கும் என்றட கணியன் பூன்குண்டன்ர் கூட்டுபடி நம் செயல்பட வேண்டும். தமிழ் வாழ்க! ...
Jathu suwon,தென் கொரியா
2010-06-28 14:40:11 IST
தமிழ் எங்கள் மூச்சு அனால் ஆங்கிலம் தாங்க சுவாச காற்று. உளகெங்கும் ஆங்கிலமே காற்றாய் இருக்கும்போது எப்படிங்க அதை ஒதுக்குவது. அதை ஒதுக்கினாள் எப்படி வாழுவது!!!! வி ழுதுக்கொள் தமிழா!!!! தமிழ் வேண்டும் நம் வீட்டிற்கு ஆங்கிலம் வேண்டும் உலகிற்கு!!!! ஜெய் இந்து!!!! ...
kilavansethupathi chennai,இந்தியா
2010-06-28 14:30:34 IST
தாய் மொழி கண் போன்றது .பிற மொழி கண்ணாடி போன்றது .இன்னொரு மொழி கற்றுக் கொள்வது நமக்கு நல்லதே .இங்க்லீஷ் கண்டிப்பாக வேண்டும் ,சிலர் எனக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதை பெருமை என்று நினைப்பவர்கள் தமிழ் படிக்க வேண்டும்.பாரதியின் சிந்து நதியின் மிசை நிலவினிலே என்ற பாடலில் எத்தனை மொழியை கையாண்டிருப்பார். வாழ்க தமிழ் சேதுபதி ....
ராஜேஷ் Bangalore,இந்தியா
2010-06-28 14:26:10 IST
தமிழ் படிச்சவங்களுக்கு அரிசி, பருப்பு காஸ், பெட்ரோல் போன்றவைகளை சகாய விலையில் தரட்டும். வேலை எல்லாம் நாங்களே தேடிக்குவோம். பொழைப்பு அற்றவர்கள்!!!!!!!!!!!!!!! ராஜேஷ் ...
ismail villpuram,இந்தியா
2010-06-28 14:25:16 IST
முதல வேலை இல்லடஹ்வைங்களுக்கு வேலை கொடுங்க சார் அப்புறமா யோசிக்கலாம் இப்படியிய சொல்லி சொல்லி ஆட்சி யா கைவச படு து கிறீங்கள் .......
medeswaran madurai,இந்தியா
2010-06-28 14:12:43 IST
'சங்கத் தமிழ் அனைத்தும் தா ' என்ற தலைப்பில் கவிதை போட்டி அறிவித்தார்களே .....அதன் தற்போதைய நிலை என்ன?.......
உண்மைவிளம்பி tamilnadu,இந்தியா
2010-06-28 14:10:52 IST
வணக்கம் தமிழா...தமிழ் மட்டும் படிச்சா போதும்னு சொல்ற அய்யா அவர்கள் அவரோட பேரன,மகளை மட்டும் ஹிந்தி படிக்க சொல்லி மினிஸ்டர் ஆக்கிடுவார்...நம்ம எல்லாம் கடைசி வரை தமிழ் வாழ்கனு சொல்லிகிட்டே சும்மா உக்கார வேண்டியது தான்...... ...
இந்தியன் delhi,இந்தியா
2010-06-28 13:17:09 IST
வணக்கம் ... 400 crores complete waste ... thanks for painting the Bridge's and walls of coimbatore... *** இது தேவையா **** சிரிகிறதா அழுகிறதா நு தெரியல ****...
Rangarajan Chennai,இந்தியா
2010-06-28 13:10:50 IST
தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் ஆட்டோ டிரைவர் கூட ஹிந்தி ஆங்கிலம் பேசுகிறான். நம்ம தமிழ்நாட்டுல தான் தமிழ் தவிர மற்ற மொழி தெரியாம எல்லாரும் திண்டாடுறாங்க. ஆனா இந்த அரசியல்வாதிங்க இப்பிடியே சொல்லி சொல்லி யாரையும் வளர விடாம ஆக்கிடாங்க. மக்களே முழிச்சிகுங்க. இனியும் தமிழை நம்பி ஏமாறாதீங்க. அரசியல்வாதிங்கள நம்பி ஏமாறாதீங்க. தமிழை நேசியுங்க மற்ற மொழிகளையும் தெரிஞ்சிக்குங்க. அத்த வெச்சு போழசிகுங்க. ...
வி.கே.லோகநாதன். REDHILLSvilangadupakkam,இந்தியா
2010-06-28 12:53:39 IST
தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உடனடி வேலை வாயப்பு கொடுத்தல் மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு படிப்பார்கள்.தமிழ் நாட்டில் உள்ள வேலை செய்தாலே போதும.நன்றி ....
Pugazh Kovai,இந்தியா
2010-06-28 12:51:24 IST
திரு மணிவண்ணன் தைவான் , நீங்கள் அங்கு போயி உட்கார்ந்துகொண்டு இங்குள்ள தமிழர்களைப்ப் பார்த்து பரிதாபப் படுவது வேடிக்கையாக உள்ளது. முதலில் நீங்கள் இங்கு வந்து உழைக்க கற்றுக்கொள்ளுங்கள்.உங்களால் என்ன செய்ய முடியும்? ஒரு வோட்டு கூட போடமாட்டீர்கள்....
2010-06-28 12:47:31 IST
துபாயிலிருந்து ஷரீப் என்பவர் முட்டாள்தனமாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்!முதலில் தாய் மொழியான தமிழை பிழை அற கற்றுக்கொண்டுவிட்டு,அதன்பின்னர் என்ன மொழியையும் கற்றுக்கொள்ளட்டும்!அதை விட்டு தமிழை படித்து வீணாகிவிட்டதாக புலம்புவது "தற்குரிகளின்"அடையாளம்!!...
Gnan Cbe,இந்தியா
2010-06-28 12:37:43 IST
திரு ஷெரிப் . அவர் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு என்று தான் சொன்னார். தமிழை மட்டுமே படியுங்கள் என்று சொல்லவில்லை.மேலும் இன்றைய நிலைமை தமிழ்நாட்டில் பலருக்கு தமிழ் தெரிவதில்லை.நானும் பல இடன்களுக்கு சென்று வருகிறேன்.தமிழை படிப்பதில் தவறேதும் இல்லை.நீங்கள் துபாய் மற்றும் அமெரிக்க வில் இருந்துகொண்டு கிறுக்கன் என்று சொல்வது உங்களையே தரம் தாழ்த்துவது போல் உள்ளது. ...
வேல் முருகன் A Chennai,இந்தியா
2010-06-28 11:35:01 IST
என் இனிய உடன்பிறப்பே! தமிழன் என்று உரக்க சொல்லி, புறநானூறு, அகநானூறு, பாடி, வேலெடுத்து விளையாடி, பரணி பாடி, திரை கடலாடி, திணை மாவு தின்று, குறவஞ்சி பாடி, களம் இறங்கி களிரடக்கி, ஆநிரை மேய்த்து, ஆலோலம் பாடி, யாழ் மீட்டி, குலைவை இட்டு, கும்மி அடித்து, தெம்மாங்கு பாடி, தமிழ் வாழ்க என்று இன்பமாய் கூடி, கொண்டாடி, அரசு சலுகையாய், இலவச நிலம். இலவச மின்சாரம், இலவச வண்ண தொலை கட்சி பெட்டி, அதில் மானாட, மயிலாட, ஒரு ரூபாய் அரிசி, என்றே இருந்து, சுகமாக டாஸ்மாக் மது அருந்தி இருங்கள். மாறி வரும் உலகில் சுந்தர தெலுங்கர், குடகு கன்னடியர், சொந்த மண்ணில் வாழ வழி இல்லாததால் வெளியேறி எங்கும் வாழ்ந்து வளம் காணும் கேரளத்தார், சிங்கம் இணைய சீக்கியர், குடும்பமாய் நலமாய் வாழும் குஜராத்தியர், புலம் பேர்ந்து புகழ் பெரும் ஸ்ரீலங்கா தேசத்து இலங்கை இனம், ஏற்றம் கொண்ட எகிப்தியர், வயிற்றில் நெருப்பு கட்டி வாழும் நேபாளியர், - இவர்கள் மட்டும் உங்களை போல் இல்லாமல் ஆங்கிலம் நன்கு கற்று முன்னேறி உலகம் முழுதும் பரவி நலமாய் வாழட்டும். நமக்கென்ன? நமக்கு நல்ல மகானாகிய பரம்பரை முதல்வர், மகனாகிய துணை முதல்வர், மகனாகிய மத்திய அமைச்சர், மகளாகிய பாராளுமன்ற உறுப்பினர், பேரனான மத்திய அமைச்சர், மகள் வயிற்று பேரன் நடத்தும் நம் புகழ் பாடும் நல்ல தொலைகாட்சி அலைவரிசை அமைப்புகள், மகன் வயிற்று பேரன் நடத்தும் திரைப்பட நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கே மக்கள் வளமாய் வாழ உள்ளதே. இவையே போதும். உலகில் மற்ற நாட்டவர் வளர்த்தல் அது ஆரியர் சூழ்ச்சி, ஆங்கில மாயை. செம்மொழி தமிழ் வாழ்க. இனி அவரவர் வீட்டில் ஆனந்தமாய் அடுபெரியாமல் வாழுங்கள்....
IMAN trichy,இந்தியா
2010-06-28 11:32:37 IST
தமிழன் இனி முன்னேறுவான். இது சத்தியம்....
2010-06-28 11:32:08 IST
உலக தமிழ் செம்மொழி மாநாடு சிறப்புற அமைந்தது என்பதில் மகிழ்ச்சியுருவதே ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். யார் நடத்தினார் ஏன் நடத்தினார் என்பதைவிட எதற்காக நடந்தது என்பதில் பெருமை அடைய வேண்டும். நான் டில்லியில் அரசு பணியில் இருக்கிறேன். ஒருவேளை தமிழ் நாட்டில் இன போராட்டம் என்று ஒன்று நடந்திராவிடில் நான் தமிழக அரசு ஊழியனாக இருந்திருப்பேன். படித்த சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் எளிதாக வெளியில் பிழைத்துக்கொள்ள முடியும். இதை தான் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று நமது மூதாதையர்கள் உரைத்தார்கள். ஆங்கிலத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஏனோ பிழைப்பை முன்னிறுத்தி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வளர்ந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்றவை ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பத்து விழுக்காடு மென்பொருள் தொழிலில் இருப்பவர்களே ஆங்கிலத்திற்கு வழக்காடுகிறார்கள். நான் தாய்லாந்து (பாங்காக்) சென்ற போது அனைத்து பேரங்காடிகளிலும் (malls) சீட்டுகள் தாய் மொழியில் இருந்தது. விசாரித்ததில் ஆங்கில உதவியாளர்களை அணுகும்படி கூறினார்கள். இதுவும் மொழி பற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்தியாவிலேயே படித்த தமிழன் ஒருவன் தான் மற்றுமொரு தமிழனை பார்த்தபோது ஆங்கிலத்தில் பேசுவான். அதே ஒரு மலையாளியோ, பஞ்சாபியோ, குஜராத்தியோ, மராத்தியோ அவரது மொழிகளில் தான் பேசுவார்கள். இதற்கு தமிழன் மற்றவர்கள் முன்பு தமிழ் பேசுவது அநாகரிகம் என்பர். இன்று எனது உறவினர்களின் குழந்தைகள் பலர் தமிழகத்தில் ஆங்கில வழியில் வடமொழி அல்லது பிரெஞ்சு படித்துவிட்டு athaiyum பேச எழுத தெரியாமல், தமிழை எழுத படிக்க தெரியாமல் இருக்கிறார்கள்....
Rehanabanu Tiruppur,இந்தியா
2010-06-28 11:31:04 IST
தமிழ் வழியில் படிக்கும் குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறன் அதிகம் என்பது உண்மை தான். ஆங்கில வழியில் படிக்கும் எத்தனை பேர் இங்கு சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள்? மாறாக அவர்களுக்கு தமிழும் சரிவர வருவது இல்லை. எல்லாம் நாம் தரும் பயிற்சியைப் பொருத்தது. நம் தமிழ் வழிப் பள்ளிகளிலேயே வாரம் இருதடவை ஆங்கில மொழியில் பேச பயிற்சி தர அரசு ஆணை இட வேண்டும்...
suresh singapore,இந்தியா
2010-06-28 11:13:09 IST
மதிப்பு மிக்க முதல்வர் அவர்களுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படி ஒரு மாநாடு இனி வரும் காலங்களிலும் நடக்கும் என்ற நம்பிக்கை கொள்கிறேன். தமிழுக்காக நீங்கள் இவ்வளவு சிரத்தை எடுக்கும் பொழுது என்னை போன்ற இளைங்கர்களுக்கு தமிழ் ஆர்வம் பெருகுகிறது. எங்கள் வாழ்நாளிலும் எதாவது தமிழுக்காக சாதிக்க துடிக்கும் தமிழ்குடிமகன். வாழ்க முதல்வர், வளர்க தமிழ்....
மனோஜ்குமார்.B கொச்சி,இந்தியா
2010-06-28 10:59:25 IST
ஐயா ஷெரிப் நானும் தமிழ் மொழி வழி கற்றவன் தான். . . நான் இன்று ஒரு தனியார் மென் பொருள் துறையில் சிறந்த பதவியில் உள்ளேன். . . தாய் மொழியில் கற்பதனால் குழந்தைகளின் சிந்தனை திறன் அதிகமாக இருக்கும். . . ஆங்கிலம் எப்போது வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம். . . தமிழனே தமிழனாக வழ பழகி கொள். . . 200 வருடங்கள் அடிமைகளாக இருந்தது போதாதா. . . உம் குழந்தைகளை ஏன் அடிமை மொழி பயில சொல்கிறாய். . ....
gopinath chennai,இந்தியா
2010-06-28 10:35:22 IST
வாழ்க தமிழ். வளர்க நற்றமிழ். நீரதன் புதல்வர் இந்நினை அகற்றாதீர் ... தமிழ் வளர்க்க அனைவரும் தமிழில் பேச எழுத சிந்திக்க வேண்டும் ... வாழ்க செந்தமிழ் மாநாடு.....
ஷெரிப் Dubai,யூ.எஸ்.ஏ
2010-06-28 10:02:13 IST
இன்வங்க பேச்சை கேட்டு உங்க பிள்ளைகளை நசமக்கிரதீங்க . முடிந்த அளவு பிள்ளைகளை இங்கிலீஷ் படிக்க வைங்க .... வீட்டுலயும் பிள்ளைகள் இங்கிலீஷ் பெசுரமாத்ரி பாருங்க .... இந்த கிறுக்கன் பேச்சை கேட்டு தமிழ் படிக்க வைத்து எமந்துரதிங்க .... என்னா தமிழ் மட்டும் படித்து நாங்க படுற கஷ்டம் நம்ம தலைமுறையும் படகூடதுன்னு ஒரு ஆதங்கம்...முடிந்த அளவு தமிழ் பேசாம பிள்ளைகள் இங்கிலீஷ் பேச வைங்க..........
ராஜ் AUSTRALIA sydney,ஆஸ்திரேலியா
2010-06-28 09:49:19 IST
because of english only few billion nri foreign exchange money is coming to india. from IT industry.No politicaian understand this.All policitcians are cheating in india one or the otherway that will not be there for long period .no use of this tamil conference 100% waste of public money....
sathiya seoul,தென் கொரியா
2010-06-28 09:46:50 IST
One should need eyes to see this world. To reach our destiny we also need two eyes, one is our mother tounge and another is english. Both are important for a person to make our motherland proud!!!!...
2010-06-28 09:45:13 IST
தமிழ் பற்று வேண்டும் அதே சமயத்தில் ஆங்கிலமும் நன்கு கற்று கொள்ளவேண்டும் எங்களை போல் தமிழ் வழி கல்வி கற்றவர்களுக்கு ஆங்கிலம் சரி வர பேச முடியாததால் வெளிநாட்டு வணிகர்களிடம் ஆங்கிலத்தில் பேச ஒருவர் தேவைபடுகிறார் வட இந்திய வணிகர்களிடம் பேச ஹிந்தி தேவைபடுகிறது முதலில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுகே ஆங்கிலம் சரிவர தெரிவதில்லை அரசு கல்வி முறையும் சரி இல்லை என்பது எங்களை போன்றவர்களுக்கு தெரியும் ஆதலால் தமிழன் அணைத்து மொழி யும் கற்று கொள்ளவேண்டும் தமிழ்நாடு க்கு வரும் அனைவர்க்கும் தமிழ் கற்று தரவேண்டும் அபோதுதான் "திரைகடலோடியும் திரவியம் தேடமுடியும்" ...
சகாய பிரான்கோ NAGERCOIL,இந்தியா
2010-06-28 09:40:04 IST
செம்மொழி மாநாட்டில் தமிழை பற்றி பேசாமல் எப்படி என முதல்வர் நினைத்து பேசியிருப்பார் ஆனால் மாநாட்டில் பக்கத்தில் இருந்த மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் இதே முதல்வர் தமிழில் தான் பேசினாரா? ஊருக்கு தான் உபதேசம் முதல்வருக்கு மட்டும் .....???? தமிழ் வேண்டும் அதே நேரத்தில் இன்றைய வேலைவாய்ப்புக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி தேவை. அதற்கு முதல்வர் என்ன செய்ய போகிறார் ...
ராஜா dubai,இந்தியா
2010-06-28 09:29:18 IST
டியர் சார், முதலில் தமிழ் படித்தவன் அடுத்த மாநிலம் போகமுடியல..சரி தமிழ் நாடு வேலை பார்க்கலாம் என்றால், இங்கேயும் வேலை இல்லை.. அப்ப நாங்க என்னதான் பண்றது.. அதனாலதான் திருட்டு, கொலை, கொள்ளை நடக்கிறது..திருந்துங்கள்....
உதயகுமார் மதுரை,இந்தியா
2010-06-28 08:52:04 IST
செம்மொழி மாநாடு வெற்றி . முதல்வருக்கு நன்றி . நல்ல தீர்மானகள் ....
giri Berlin,ஜெர்மனி
2010-06-28 08:39:05 IST
ஐயா, முதலில் தமிழ் மொழி பயன்பாட்டினை adhikarikka என்ன வழின்னு யோசிப்போம்... தமிழ் தானாகவே வளரும்... நாம எப்பவுமே நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசிவிட்டு, தமிழ் வளரனும் நு சொன்னா எப்பிடி...? நாம வளர்க்க வேண்டாம்... அழிக்காம இருந்தாலே போதும்... தமிழ் உங்கள வாழ வைக்கும்... அது எப்பவவோ வழர்ந்து மேலோங்கி தான் இருக்கு... உங்கள் ல எத்தன பேருக்கு சிலப்பதிகாரதயோ மனிமேஹலையோ ஆராய்ச்சி பண்ண தெரியும் சொல்லுங்க...? நீங்க தமிழன்னா, உங்களுக்கு தெரியனும்...!...
mohankumar வாஷிங்டன்DC,உஸ்பெகிஸ்தான்
2010-06-28 08:22:55 IST
நான் என் வாழ்நாளில் மிகவும் சந்தோசபட்ட தினங்கள் இந்த சில நாட்கள். தமிழ் வளர்ச்சிக்கு இந்த அளவு உழைத்த ஒரு முதல் அமைச்சர் சரித்திரத்தில் இல்லை, இநிமேலும் வருவது ஐயமே. நான் ஒரு மலையாளி ஆயினும், தமிழை மிகவும் நேசிக்கிறேன். தினமரில் இந்ந்த ஐந்து நாட்கள் வந்த ஒவொரு செய்திகளும் , புகைப்படங்களும் என்னுடை கணணியில் சேமித்து வைத்துளேன். வரும் நண்பர்களிடம் பகிர்துகொள்ள. இந்த முதல் அமைச்சர் இனியும் நீண்ட காலம் அரசு செய்து தமிழ் தொண்டு செய்ய என் தமிழ் மக்கள் உதவ வேண்டுகிறேன். அடுத்த தமிழ் மாநாடு வாஷிங்டன் நகரில் நடத்தலாமே. வாழ்க தமிழ், வாழ்க அரசியல் மாமேதை முதல் அமைச்சர் கருணாநிதி. ...
Chandrasekaran Chennai,இந்தியா
2010-06-28 08:18:32 IST
நான் சமீபத்தில் வேலை காரணமாக சீனா சென்று வந்தேன். அங்கு எனக்கு ஆங்கிலம் தெரிந்த சீன நண்பர்கள் உள்ளனர். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது - முப்பது வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான் ஆங்கிலம் தெரியும். மற்றவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அதன் காரணத்தால் வெளி நாடுகளுடன் தொடர்பு கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் அங்கு - உலகளாவிய - தொழில் தொடங்குவதில் ஆர்வமாக உள்ளனர். ஆனால் பலருக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால், சீனர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால், தற்போது சீனா விழித்த்க்கொண்டு விட்டது. இளைய வயதினர் ஆங்கிலம் கற்க துவங்கி விட்டனர். - தமிழ் மக்களே! இனியாவது சுய நல மிக்க அரசியல் வாதிகளை நம்பாதீர்! ...
தமிழன் கோவை,இந்தியா
2010-06-28 07:54:09 IST
நன்றி தமிழா வுலக செந்தமிழ் மாநாடு கொங்கு நாட்டில் நடந்தது மனதிற்கு இன்பமாக உள்ளது. முதலமைச்சருக்கு நன்றி இப்படிக்கு தமிழன் ...
bala chennai,இந்தியா
2010-06-28 07:42:40 IST
மூடர்களே, இன்று தமிழ்நாட்டில் வெளிநாடுகளின் முதலீடு அதிகமாகி ,அதனால் வேலைவாய்ப்புகள் அதிகரித்து உள்ளது . இதற்கு தமிழ் மட்டும் காரணம் அல்ல . நிறைய ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள் இருப்பதும் ஒரு முக்கியமான காரணம் . தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால் ,பாரத வங்கிகளில் ஆங்கிலத்தில் கூட பதில் அனுப்ப தெரியாத பல மேனேஜர் பதவிக்கு வர நேரிடும், அதனால் வங்கி , பாஸ்போர்ட் நிலையம் எங்கும் தமிழ் மட்டுமே என்ற மாற்ற வேண்டிய நிலையிக்கு அரசு தள்ளப்படும் . தான் வீட்டு பிள்ளைகள் வெளிநாட்டில் ஆங்கிலம் கற்கும் , ஆனால் தமிழ் நாட்டு மக்கள் தமிழ் மட்டுமே கற்க ஊக்குவிற்கும் அரசின் செயல் மூடத்தனமானது . ...
க நடராசன் கோவை,இந்தியா
2010-06-28 07:41:27 IST
கடந்த ஐந்துநாள் கோவை தமிழகத்தின் தலை நகர் போல் காட்சி தந்தது கோவை க்கு இரண்டு நல்ல திட்டம் அறிவித்தமைக்கு நன்றி, தினமலருக்கும் நன்றி !!...
2010-06-28 07:29:42 IST
joe bangalore,இந்தியா எதிர்த்து கருத்து சொல்லுறவன் எல்லாம் முட்டாள் என்டரால் உன்னைபோல துதிபாடுரவண எந்த வகையுள சேர்க்கிறது, இன்னும் ஒரு வாரத்துல நீனும் மறந்துட போற மக்களும் மின்சாரம் இல்ல தண்ணி இல்லன்னு போராட்டத்துக்கு போய்டுவன் நீ மட்டும் பானக்லோரே இருந்திக்கிட்டு ஆபீஸ் குளிர் சாதனத போட்டுகிட்டு சந்தோசமா இருப்ப இங்க உள்ளவன் தமிழ் தமிழ்னு சொல்லிக்கிட்டு வேலை இல்லாம பிட்ச எடுக்க வேண்டியதுதான் நீ என்ன இப்ப அங்க தமிழ்லதான் பேசுறிய இல்ல தமிழ்தான் உனக்கு நல்ல தெர்யும மக்கள் வரி பணத்துல அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கனுங்க அத சொல்லுறத விட்டு விடு சொம்ம்பு தூக்கிட்டு அலயுங்க, படிச்சவனும் இப்படி துதி பாடின பாவம் பாமரன் என்ன செய்வான், இது நம்மளுடிய தல விதி நன்கலம் யாரும் தமிழுக்கு எதிரி இல்ல தமிழன் சொல்ல பெருமைதான் ஆனால் அதே தமிழன் பிச்சக்காரன் மாதிரி இலவசத்துக்கு அடிமையா இருக்கும்போது என்ன பண்ண அவன் வழக்கை தரம் நல்ல இருந்ததான் தமிழன் என்று சொல்ல பெருமையா இருக்கும் இல்லன நம்மள மற்ற மாநிலத்துக்காரன் பிச்சக்காரன் , என்றுதான் சொல்லுன்வனுங்க, பொது சுகதரதுலயும் சரி இல்ல அத்தளம் மாற்றனும் இப்படி மாநாடுபோட்டுகிட்டு வரி பணம் வீண் பண்ணுறது இல்ல ...
Tamizhan Singapore,இந்தியா
2010-06-28 07:28:50 IST
Oru nalathittangalum urppadiya illa. 400 kodi thandamathaan pochu. pesama athai makkal nalathittangalukku payanbaduthi irukkalam....
என்.வி.சுப்பாராவ் பினாங்கு.,மாலத்தீவு
2010-06-28 07:21:46 IST
பல அறிவிப்புக்கள் போட்டு என்ன பயன்? முதலில் ஊடகங்கள் மாற வேண்டும். தொலைகாட்சியில் இன்னும் ஆங்கிலம் முதலிடம் வகிக்கிறது. டிவி என்ற வார்த்தை இன்னும் பயன்பாட்டில். வெட்கம் வெட்கம்,...
Chandrasekaran Chennai,இந்தியா
2010-06-28 07:11:37 IST
தமிழனை அடிமை ஆக்குவதற்கு இதுவும் ஒரு வழி. இவர்களுக்கு குவாட்டர் + பிரியாணி கொடுத்து விட்டு "ஜே" போட ஆட்கள் வேண்டும்! ...
a ccc,கேமரூன்
2010-06-28 05:56:16 IST
valga tamil...
Rama Vairavan singapore,ஸ்லேவாக்கியா
2010-06-28 05:34:32 IST
எல்லாம் சரி. முதலில் மக்கள் ஆங்கிலம் கலக்காமல் பேசுகிறார்களா பாருங்கள். இரண்டு வரிகள் முழுசாய்ப் பேசுவதற்குள் முண்டியடித்துக் கொண்டு ஆங்கிலம் அல்லவா முன்னுக்கு வந்து நிற்கிறது. எல்லாம் தொலைக்காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கம். அதனால் தொலைக்காட்சித் தமிழ் நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் கலக்காது பேச ஆணையிடுங்கள். சட்டம் கொண்டு வாருங்கள். இல்லாவிட்டால் தமிழ் மொழி இருக்கும். தமிழ் சொற்கள் இருக்காது....
mokkasamhy india,இந்தியா
2010-06-28 05:01:25 IST
திரு.ஜவஹர் சொன்னதுபோல் தமிழில் படித்தவர்கள்தான் சட்டசபைக்கு போட்டியிடலாம் என்று என் சட்ட திருத்தம் கொண்டுவருவதில்லை. அவ்வாறு செய்தால் இந்த மாதிரி மாநாடுகள் தேவையட்ட்றது. ...
டி.எஸ் . பிரகாசம் CAMP....SINGAPORE,இந்தியா
2010-06-28 04:48:26 IST
தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்பதைவிட , தமிழாசிரியர் பணி இடங்களை அதிகம் ஏற்படுத்தி நிரப்பவும் , கோவில் நிர்வாக அதிகாரிகள் தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும் வழங்கவும் ஏற்பாடு செய்யலாம். இதேபோல் தமிழ் வளர்ச்சிக்கான துரைகளில் தமிழில் படித்தவர்களுக்கே வேலை கொடுக்கலாம் . ஆங்கில வழியில் பட்டம் பெறுபவர்களுக்கும் வழக்கம்போல் வேலை கட்டாயம் வழங்கவேண்டும். இல்லைஎன்றால் நாம் மீண்டும் கிணற்று தவளை ஆகி விடுவோம் ...
குமார் திருச்சி,இந்தியா
2010-06-28 04:46:06 IST
தனி நபர் துதி அதிகம் காணப்பட்டது. இது தமிழுக்கு நல்லது அல்ல. தமிழ் அந்த தலைவரோடு அழிந்து விட போவது இல்லை. தமிழக கட்சிக்கு தலைவர் இருக்கலாம். தமிழுக்கு தலைவர் இருக்க கூடாது. இது தமிழுக்கு நல்லது அல்ல. மன ரீதியாக தமிழ் அவரது குடும்பத்து உறுப்பினர்கள் மட்டுமே காப்பதாக எனக்கு தோன்றுகிறது. அத்தனை விஷயங்கள் மாநாட்டில் நடந்திருக்கின்றன. இனியாவது தமிழை சுய நலத்திற்காக பயபடுத்துவதை விட்டு விட்டு தமிழுக்காக தமது சுயநலத்தை அர்ப்பணிக்க வேண்டும். ஒரு மொழி அழியாமல் இருக்க, அந்த மொழி பேசுவோர் பல உலக உபயோகமான கண்டுபிடித்து தமிழில் எழுத வேண்டும். பல உலக பிரபலமான பிற மொழி வார்த்தைகளையும் சேர்த்து தமிழ் அனைவருக்கும் பொது என்றும் எளிமையானது என்றும் ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும். அது மட்டுமே தமிழை காப்பாற்ற உதவும். உலகத்தில் அதிகம் பேசப்படுவது ஆங்கிலம் என்றாலும் பிற மொழி வார்த்தைகளை அதிகம் ஏற்று கொண்டதும அங்கிலம் தான். ஒரு சில அதி முக்கிய விஷயங்கள் தமிழில் மட்டும் விரைவில் கிடைக்குமாறு செய்யவேண்டும். நன்றி ...
தமிழ் செம்மொழிமாநாடு,இந்தியா
2010-06-28 04:43:11 IST
கொங்கு மண்டலமாம் கோவை பகுதி திமுக வளர்சிக்கு செம்மொழி மாநாடு திருப்புமுனையாக அமையும்-முதல்வர் அவர்களுக்கு நன்றி! ...
மா இளங்கண்ணன் சிங்கப்போர்,இந்தியா
2010-06-28 03:54:29 IST
நான் செம்மொழி மாநாட்டு முடிவில் எழுத்துச் சீர்மையை முதல் அறிவிப்பார் என எதிர்பார்த்தேன்! ஏமாற்றமே!...
ரங்கராஜ் லாசேஞ்சில்ஸ்usa,இந்தியா
2010-06-28 03:24:08 IST
தமிழ் பி ஏ எம். ஏ எம்பில் பீ எச் டி முடித்துவிட்டு பதிவு சேது காத்திருப்போர் கதி என்ன ஆகும்? தமிழில் படித்தால் வேலை என்றால் தமிழ் படித்தவன் கதி என்ன?இனி ஆட்சியை பிடிக்கும் வேலையில் போய்விடுவார்கள் அல்லது ஆஸ்பத்திரியில் அலைவார்கள் தமிழ் வாழ்க ...
சக்தி அமெரிக்க,செர்பியா & மொண்டெனேகுரோ
2010-06-28 03:22:43 IST
இந்த காலத்துல தமிழ் படிச்சு என்ன கிழிக்க போறாங்க? இதெல்லாம் கேக்க நல்லா இருக்கும், வேலைக்கு ஒத்து போகாது. எல்லா hi-tech வேலைக்கும் ஆங்கிலம்தான் முக்கியம். அத முதல்ல படிப்போம். ...
கணேஷ் இந்திய,இந்தியா
2010-06-28 02:19:04 IST
தமிழில் படித்து முடித்தவன் லட்சம் பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு வேலையும் காணும்.. இனிமேல் படித்தவருக்கு வேலை தருகிரர்கலம்.. என்ன கூத்து இது? முதலில் வேலை கொடுங்கள் ,, அப்புறம் பார்க்கலாம்... தமிழிலா இல்லை ஆங்கிலமா என்று! பார்போம் எதனை பேருக்கு வேலை கிடைகிறது என்று...
mountbettan riyadh,இந்தியா
2010-06-28 02:18:03 IST
செம்மொழிமாநாடு முழுவெற்றி முதல்வருக்கு முதற்கண் நன்றிகள் வாழ்க தமிழ்!!வாழ்க தமிழகம்!! ... ...
Imrankhan Dammam,செனகல்
2010-06-28 01:37:05 IST
வாழ்க தமிழ்..வளர்க தமிழ் வாழ்க பாரத மணித்திருநாடு.. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இது போன்ற தமிழ் மாநாடு கொண்டாடப்பட வேண்டும் மேலும் தமிழை கற்க ஒரு இனைய தளம் விரைவில் தொடங்க வேண்டும்.அதற்ட்கு அரசு மானியமும் வழங்க வேண்டும். வளர்க தமிழ் ...
ஜான்சன் நீல் துபாய்,யூ.எஸ்.ஏ
2010-06-28 01:29:38 IST
இந்த வயதிலும் நமது முதல்வர் காட்டும் ஆர்வமும் உழைப்பும் வியக்கத்தக்கது. ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு இது எத்தனை பயனுள்ளதாக இருக்கும்? ...
sukumar bangalore,இந்தியா
2010-06-28 00:42:51 IST
இன்னொரு பட்ஜெட் உரை இதுதானா! தமிழில் படித்தவர்களுக்கு வேளையில் முன்னுரிமை. தமிழன் என்ன தமிழை மட்டும் படித்து விட்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதா! இவர்களுடைய பிற மொழி வெறுப்பால் தமிழன் இழந்தது அதிகம். முதலிலேயே ஹிந்தி தெரியாதலால், தமிழன் தமிழ் நாட்டை விட்டு வெளியில் அடிக்கும் டிமிக்கி தெரிந்தேதே. அமைச்சர் அழகிரிக்கு எந்த மொழியும் தெரியாதலால் அவர் இது வரை பாராளுமன்றத்தில் உரை ஆற்றவே முடிய வில்லை. தமிழை முழுமையாக இவருடைய குடும்பத்தில் முதலில் கொண்டு வரட்டும். அமைச்சர் பெருமக்கள் பிள்ளைகள் எவ்வளவு பேர் தமிழ் வழியில் படிக்கிறார்கள் என்று பட்டியல் தரட்டும். புறநானுறு, அகநானூறு என்று பழம் பெருமை பேசி தமிழை வளர்த்து விட முடியுமா! தற்கால நடைமுறைக்கு ஏற்றவாறு தமிழை இவர்கள் மேம்படுதிருக்கிரார்களா! பிறமொழியில் வந்திருக்கும் புதிய தகவல்கள் எல்லாம் தமிழில் ஒரு கடைசி தமிழனும் புரியும் வண்ணம் எளிய தமிழில் மொழி பெயர்பட்டிருக்கிருதா. இவர் பதவிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. இவர் மற்றும் இவர் குடும்பம் மேம்பாடு அடைந்ததை போல் தமிழ் மேம்பாடு அடைந்து விட்டதா! இன்னமும் உளுத்துப்போன பட்டிமன்றம் (அதிலும் இவருடைய துதியே அதிகம்),உதவாக்கரை ஆய்வரங்கம், அரசியல் சாயமான அமைச்சர்கள் உரை என்று எவ்வளவு நாட்களுக்குத்தான் மக்களின் வரிப்பணத்தை வீனடிக்கப்போகிரார்கள்? அறிக்கை விட்டே சுய விளம்பரம் தேடிக்கொண்டு, ஆக வேண்டிய வேலைகள் எல்லாம் அறிக்கையோடே இருப்பது என்பது இன்று நேற்றல்ல எப்பொழுதும் நடப்பதே. தமிழன் ஏமாந்து கொண்டிருக்கும் வரை தமிழின் பெயரால் ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டேதான் இருக்கப் போகிறது. ...
2010-06-28 00:34:41 IST
இந்த நூற்றாண்டின் போற்றுதலுக்குரிய அருமையான பயனுள்ள சொம்மொழி மாநாட்டினை நடத்தி உலகத்தமிழர்களின் உள்ளம் குளிர செய்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் நன்றி! தங்களின் தமிழ் பணி மேலும் தமிழ் மக்களுக்கு கிடைத்திட நீண்ட நாள் வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன். செம்மொழி மாநாட்டின் செய்திகளை உடனுக்குடன் தந்த தினமளுர்க்கு பாராட்டுக்கள். வாழ்க தமிழ்! வளர்க தமிழ் !வெல்க தமிழ் ! ...
muthalif abudhabi,இந்தியா
2010-06-28 00:32:48 IST
வாழ்க தமிழ் செம்மொழி மாநாடு வெற்றிக்கு முதலமைச்சருக்கு nandri ...
joe bangalore,இந்தியா
2010-06-28 00:17:37 IST
இவ்வளவு பெரிய விழாவினை கலைஞர் நடத்தியது தமிழுக்காக. இதை ஒரு சில சிறிய மனம் படைத்தவர் அவதூறு செய்கின்றனர். இதை மட்ட்ரவர்கள் பெரிதாக நினைக்க வேண்டாம். தமிழ் சங்ககலதிலேயே செம்மொழியாக திகழ்ந்தது போல, முட்டாள்களும் எந்த காலத்திலும் இருக்க தன செய்கிறார்கள். செம்மொழியையும் மாநாட்டையும் நடத்திய கலைஞரையும் பழிக்கும் முட்டாள்களை சொல்கிறேன். 400 கோடி ரூபாய் செலவு தான். அதற்காக mozhi மாநாட்டை பஞ்சமும் பக்கிரிதனமாகவா நடத்த முடியும். 400 கோடி என்றால் 7 கோடி தமிழர்களும் தலா 75 ரூபாய் கொடுத்ததற்கு சமம். தமிழன் ஒரு 75 ரூபாய் கூட குடமுடியவிட்டால் அவனை போன்ற ஒரு கையால் ஆகாதவன் நாட்டிற்கு தேவையே இல்லை. என்னமோ வரி பணம் வரி பணம் என்கிறார்கள். இவர்களுக்கு நாட்டை பத்தின உண்மையான அக்கறை இல்லை. சூரியனை பார்த்து நாய் குலைத்து மாதிரி தான். ...
மா.மாரிமுத்து.எம்.ஏ ரியாத்,செனகல்
2010-06-28 00:15:03 IST
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற தலைவர் கலைஞரின் அறிவிப்பு வரவேற்க்கதக்கது.வரும் காலங்களில் அணைத்துத் துறைகளிலும் தமிழும்,தமிழர்களும் செழித்தோங்க இது ஒறு அடித்தளம் ஆகும்.வாழ்க கலைஞர்,வளரட்டும் தமிழ் உங்கள் எண்ணம்போல் உலகெங்கும். ...
Bash Riyadh,செனகல்
2010-06-28 00:13:04 IST
தமிழ் வழி படித்தால் ரேசனில் கூடுதல் அரிசி, சக்கரை, மண்ணெண்ணெய் போன்றவை வழங்கப்படும் ...
sukumar bangalore,இந்தியா
2010-06-28 00:09:43 IST
தமிழ் ...
joseph jeyapagash dubai,இந்தியா
2010-06-27 23:49:37 IST
can you produce one tamil film without any keralites help in madras.how many tamilians will get job in tamilnadu by giving tamil name to cinema.joseph...
P.N.Sankararaman SrirangamTiruchirappalli,இந்தியா
2010-06-27 23:47:12 IST
கல்வியோ மொழியோ நம் நாட்டில் அரசியல்வாதிகள் கைகளில் இருந்ததேயில்லை. மன்னர்கள் மொழிகளுக்கு ஆதரவு அளித்திருக்கலாம் அல்லது அவர்களே கூடப் புலமை பெற்றவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் மொழிகளும் கல்வியும் நம் நாட்டில் பிரிட்டிஷ்காரர்கள் காலம் வரை மக்கள் கையிலும் கல்வியாளர்கள் கையிலுமே இருந்தது. இதை தலைசிறந்த காந்தியவாதியும் ஜவஹர்லால் நேருவின் தலைமைக் கல்வி ஆலோசகராகவும் இருவது ஆண்டுகள் இருந்த முனைவர் தரம்பால் அவரது"The Beautiful Tree" என்ற நூலில் ஆதாரபூர்வமாக விரிவாக விளக்கி உள்ளார். எனவே மொழிகளும் கல்வியும் கல்வியாளர்களிடமும் பெற்றோர்களிடமும் வந்தாலொழிய கல்வி வளர்ச்ச்சியோ அல்லது மொழி வளர்ச்சியோ ஏற்பட முடியாது....
jaganஜகன் abudhabi,யூ.எஸ்.ஏ
2010-06-27 23:45:52 IST
முதலில் அரசு அணைத்து தமிழ் விசயங்களை தமிழில் kaniniyil kitaikkumaaru seya vendum...
shiva krishnagiri,இந்தியா
2010-06-27 23:39:21 IST
hi thala vettri namake next also...
P.N.Sankararaman SrirangamTiruchirappalli,இந்தியா
2010-06-27 23:27:49 IST
அரசு வேலைக்காகப் படிப்பு என்ற கண்ணோட்டம் யாருக்கும் எந்த மொழி மீதும் பக்தியையோ பற்றையோ பிடிப்பையோ பாசத்தையோ உருவாக்காது. வெறும் வேலைக்கான கூலிக்காரர்களை மட்டுமே உருவாக்கும். எந்தக் கல்வியானாலும் சரி அது மொழிக் கல்வியாகட்டும் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சுவாமி விவேகானந்தர் கூறியது போல்" ஏற்கனவே மனிதனிடம் இயற்பிலேயே இருக்கும் முழுமையை விஸ்வரூபம் எடுக்க வைக்கும் செயல்முறையே கல்வி" என்ற கண்ணோட்டம் மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் ஆட்சியாளர்களிடமும் வந்தால் மட்டுமே கல்வியின் நோக்கமும் மொழிகளின் மேன்மையும் வெளிப்படும்....
2010-06-27 23:20:06 IST
நன்றி, முதலில் இதை தனியார் துறையில் அமல்படுத்தவேண்டும். மார்க்கெட்டிங்- விற்பனைத்துறையில் ஒரு சாதாரண பொருளை தமிழனிடம் தமிழன் விற்க ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே வேலை தருகிறார்கள்.இந்த அநியாயத்தை வேலை தேடும் தமிழக இளைஞர்கள் சென்னையில் தினமும் சந்திகிறார்கள்.வெல்க தமிழ் ...
Dharman Thondamuthur Coimbatore coimbatore,இந்தியா
2010-06-27 22:59:26 IST
Thanks to கலைஞர். Sucessfully completed the World Classical Tamil conference in coimbatore. We got lots of information about tamil in the conference. We were exepected some fly over in coimbatore. Thanks to Govt. of Tamil nadu for Gandhipuram Flyover. Please start the flyover process before assembly election otherwise........ We are expection some more flyover in coimbatore 1. Ramanathapuram Signal 2. Lakshmi mills flyover 3.Saibaba Colony flyover ...
மு ஜவஹர் ராஜ் நாவலடி,இந்தியா
2010-06-27 22:58:03 IST
தமிழ் வழி படித்தால்தான் சட்ட சபை தேர்தலில் போட்டி இட முடியும் என சட்டம் கொண்டு வர தயாரா ! குறைந்த பட்சம் தம் கட்சி ஈல் தமிழ் வழி படிக்கும் குடும்பத்தினருக்கு சீட்டு கொடுப்பாரா செம்மொழி தலைவன் ...
வினோத்குமார் ஜோலர்பெட்,இந்தியா
2010-06-27 22:46:45 IST
நமது முதலமைச்சர் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அந்தந்த இலாக்கா அதிகாரிகளிடம் உள்ளது. அதை அவர்கள் திறம்பட செயலாற்ற வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். இப்படிக்கு தாய் தமிழை அழியாமல் காக்க விரும்பும் ஒரு சாதாரண தமிழன்......
செந்தில் சரவணன் தொண்டாமுத்தூர்கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-27 22:40:01 IST
கோவை செம்மொழி மாநாட்டின் நினைவாக காந்திபுரத்தில் ஒரு கி.மீ.,நீளத்துக்கு100 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும் - ரொம்ப எதிர்பார்த்தா செய்தி தமிழ்நாடு aarasukku என் மனமர்ந்த நன்றிகள் ...
Yoganathan Lagos,நிய்யூ
2010-06-27 22:25:04 IST
It is a pleasure to hear the great history of Ancient Tamil. I am proud to be a Tamiliam I am helpless to type this in English. We have Lots of Tamils people in many countries who have no chance to learn Tamil although it is their mother tongue. There should be a Web site to teach Tamil for people who wants to learn Tamil. ...
Vasan Coimbatore,இந்தியா
2010-06-27 22:22:21 IST
Arputhamana thitangal. Vazhga Tamil.. Vazhga Kalaigar...
தே ரவிச்சந்திரன் கோவை,இந்தியா
2010-06-27 22:20:36 IST
சமச்சீர் கல்வி என்றீர்கள் ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் போல் சமச்சீர் சம்பளம் இல்லை. இப்போது ஆங்கில வழியில் பயின்றவர்க்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை இல்லையாம். இதுதான் சம தர்மமா. இனி அரசு வேலை எங்களுக்கு காணல் நீர். நீங்களே நல்லா இருங்க. நாங்களும் இந்த மண்ணுல பொறந்தவர்கள் தான். எங்களுக்கும் நீதி இல்லையா. தமிழ் வழியில் பயிலாதவர் தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டி இட முடியாது என்றால் என்ன ஆகும்! இருக்கிற ஒதுக்கீடு போதும். இனியாவது திறமைக்கு வாய்பபு கொடுங்க !...
chockalingam Mamallapuram,இந்தியா
2010-06-27 22:12:18 IST
இனி வரும் மாநாட்டில் தனி நபர் துதி தவிர்த்து தமிழலை துதிப்போபம் ...
தியாகராஜன் திருப்புவனம்,சிவகங்கைமாவட்டம்,இந்தியா
2010-06-27 21:57:53 IST
மாநாட்டின் தலைவர் தமிழ் மக்களுக்கு இனியவை இருபத்திமூன்று தந்து தன்னை தமிழினத்தின் தலைவர் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறார். அறிவிப்புகள் ஆக்கபூர்வமாய் அடுத்தகட்டத்திற்கு சென்று தமிழ் மொழியை உலகின் தலை மொழியாக விளங்க வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்!வளர்க செம்மொழி!! தியாகராஜன். திருப்புவனம்,சிவகங்கை மாவட்டம் ...
சாமி திருப்பூர்,இந்தியா
2010-06-27 21:56:03 IST
அறிவிப்புகளாலும், அரசானைகளாலும் மக்கள் மனதில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. சில நாட்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பது நாடறிந்த உண்மை....
கே.கணேசன் சேலம்,இந்தியா
2010-06-27 21:55:18 IST
செம்மொழிமாநாடு முழுவெற்றி முதல்வருக்கு முதற்கண் நன்றிகள் வாழ்க தமிழ்!!வாழ்க தமிழகம்!! ...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »