E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி : ஐந்து நாளில் 10 லட்சம் பேர் பங்கேற்பு
ஜூன் 27,2010,21:08

கோவை : தமிழுக்கு மத்திய அரசு செம்மொழி அங்கீகாரம் வழங்கிய பிறகு நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி பெறுமா? உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஆதரவு கிடைக்குமா? என்ற கேள்விகள் மாநாடு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து துளைத்தெடுத்துக்கொண்டிருந்தது. ஆனால், உலகத்தமிழச் செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் குவிந்த தமிழர் ஆர்வலர்களின் கூட்டம் சர்ச்சைகளை தகர்த்தெரிந்து மாநாட்டை மகத்தான வெற்றி பெற வைத்துள்ளது.

கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு கடந்த செப்டம்பரில் வெளியானது. அக். 23ம் தேதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான இலச்சினையை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி, ஆய்வரங்க அமைப்பு குழுக்களை அமைக்கவும் உத்தரவிட்டார். ஜனவரி- 2010ல் மாநாடு நடக்கும் என்று அறிவிப்பு வெளியானதும், மாநாடு வேலைகளை வேகப்படுத்தி நிறைவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. உலகத் தமிழச் செம்மொழி மாநாட்டுக்கான அடிப்படை வேலைகளை செய்யக்கூட காலஅவகாசம் இல்லாததால், மாநாடு ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டது. கோவையில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு, அவிநாசி ரோட்டிலுள்ள கொடிசியா அரங்கில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு நவ. 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன், இணைய மாநாட்டையும் உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் இணைந்து நடத்த நவ. 12ம் தேதி அறிவிப்பு வெளியானது.

மாநாட்டை ஒட்டி மொத்தம் 21 குழுக்கள் அமைக்கப்பட்டது. மாநாட்டு தலைமைக்குழு, ஆலோசனைக்குழு, சிறப்பு மலர்க்குழு, ஆய்வரங்க அமைப்பு, தமிழ் இணைய மாநாடு, ஒருங்கிணைப்பு, வரவேற்பு, ஊர்வலம், பொது அரங்க நிகழ்ச்சி அமைப்பு, விருந்தோம்பல், கண்காட்சி, கலைநிகழ்ச்சி மற்றும் சுற்றுலா, தங்கும் இடவசதி, மாநாட்டு அரங்கம் அமைப்பு, மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரம், கோவை நகர மேம்பாடு, மருத்துவம் மற்றும் சுகாதாரம், மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வை, போக்குவரத்து ஏற்பாடு, பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்பு பணி, ஆய்வரங்க அமைப்பு உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவுக்கும் அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சியினர், அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மாநாட்டுக்காக 380 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கோவை மாவட்டம் மேம்படுத்தப்பட்டது. அந்த நிதியில், கோவை நகரில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்படுத்தப்பட்டது. துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் கோவையில் முகாமிட்டு மாநாடு வேலைகளில் கவனம் செலுத்தினர். மாநாடு தேதி நெருக்கிக்கொண்டிருந்த நிலையில், மாநாட்டை ஒட்டி துவங்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களும், அடிப்படை வசதிகளும் நிறைவு செய்ய முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றி பணிகளை நிறைவு செய்தனர்.

பல தடைகளையும் தாண்டி உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ம் தேதி துவங்கியது. வாகனங்கள் நிறுத்துவதற்கு பொதுமக்கள், விஐபி, ஊடகம், விருந்தினர்களுக்கு தனித்தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது. போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில், மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர், சுகாதார வசதிகளையும் கவனித்தனர். இதனால், மாநாட்டிற்கு ஐந்து நாட்களும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக இருந்தது. கோவையில் மாநாடு துவக்க நாளில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர். முதல் நாளில் கட்சியினர் அழைத்து வந்த "கரைவேஷ்டி' கூட்டமாக இருக்கும்; அடுத்தடுத்த நாட்களில் தான், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக வருவோரை கணக்கிட முடியும் என்று அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் காத்திருந்தனர். எல்லோர் கருத்தையும் தகர்த்தெரியும் வகையில் கட்டுக்கடங்காத கூட்டம் மாநாட்டை ஆக்கிரமித்தது.

காலை 9.00 மணி முதல் குடும்பமாக வந்த பொதுமக்கள் பொது அரங்கத்தில் அமர்ந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசித்தனர். மொழி ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்களுக்கு கொடிசியா உள்ளரங்கத்தில் தனியாக அரங்குகள் அமைத்து ஆய்வு கட்டுகரைகளை சமர்ப்பித்தனர். இணைய மாநாடு, தொல்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பொதுமக்கள் நாள் முழுவதும் பார்த்து ரசித்தனர். தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் செவிக்கு உணவு கிடைத்ததை போன்று, மக்கள் பசியாறுவதற்கு மானிய விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டது. கண்காட்சியை காண பொதுமக்களிடையே ஆர்வம் அதிகமாக உள்ளதால், வரும் 4ம் தேதி வரையிலும் கண்காட்சியை நீட்டிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். செம்மொழி மாநாடு முடிந்ததும், இனியவை நாற்பது அலங்கார ஊர்வலத்தில் அணிவகுத்து ஊர்திகளை கொடிசியா வளாகத்தில் மக்களின் பார்வைக்கு நிறுத்தி வைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதார். மாநாடு முடிந்ததும் போலீஸ் கெடுபிடிகள் இல்லாமல் பொதுமக்கள் சிற்பங்களையும், கைவினைப்பொருட்களையும், இனியவை நாற்பது அலங்கார ஊர்திகளையும் பார்த்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பொது அரங்கத்தில் 50 ஆயிரம் பேர் அமர்வதற்கு இருக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. இருக்கை கிடைக்காமல் பொதுமக்கள் மாநாட்டு நிகழ்வுகளை நகர்ந்தவாறு பார்த்து ரசித்தனர். தினமும் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்றனர். கடந்த ஐந்து நாட்களில் 10 லட்சம் பேர் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் உணர்வுகளை பெற்றுச் சென்றுள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.

மாநாட்டில் நடந்தது என்ன: முதல் நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் "திராவிட மொழிகளில் தொன்மையான தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழின் பழமை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை உலக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் எளிமையாக்கப்பட்டு, கணினி தமிழ் வளர வேண்டும்' என்பதை வலியுறுத்தினார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "என்னால் முடிந்ததை தமிழுக்கு செய்து கொண்டுள்ளேன். தமிழுக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் உத்தரவிடுங்கள். அந்த உத்தரவை நிறைவேற்ற காத்திருக்கிறேன்' என்று அறிவித்தார். மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கருத்து கூறி வருகின்றனர். மாநாட்டு நிறைவு நாளில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். அது இன்னொரு "பட்ஜெட்' ஆக இருக்கும்' என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கருத்தரங்குகளில் பேசிய தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், "தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் தமிழ் சென்றடைய வேண்டும். அதற்காக தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், தமிழையும் பாதுகாக்க தமிழர்கள் வாழும் நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும். இணைய தளத்தில் தமிழ் மொழிக்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் அறிஞர்கள் மாநாட்டை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்' என்று வலியுத்தினர். ஆய்வரங்கத்தில் 198 அமர்வுகளில் 787 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் வரலாறு, சிறப்புகள், மொழி பெயர்ப்புகள், இணைய தளத்தில் தமிழின் வளர்ச்சிகள், தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். செம்மொழி மாநாட்டில் தமிழனின் கலாச்சாரம், பண்பாடு, தமிழ் புராணங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் தினமும் அரங்கேறின. செம்மொழி மாநாட்டிற்கு ஏராளமான தடைகள் வந்த போதும், தமிழக முதல்வர் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தார். ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வரங்கம் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டு, கண்காட்சி மூலம் மக்களிடையே தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ள நிலையில் இந்த மாநாட்டால் தமிழின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

தினமலரின் பங்கு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தினமலர் நாளிதழ் பங்கு இன்றியமையாததாக இருந்தது. மாநாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் "தினமலர் இணையதளத்தில்' வெளியிட்டு உலகத்தமிழர்கள் மாநாட்டை நேரில் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் அறிஞர்கள் பேட்டி, கருத்துக்கள், கட்டுரைகள், கவியரங்கம், கருத்தரங்கம், விவாதங்களை உடனுக்குடன் தினமலர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், தினமலர் நாளிதழில் தினமும் சிறப்பு மலர் வெளியிட்டது. இணைய மாநாட்டில் தினமலர் இணைதள அரங்கில், மாநாட்டு நிகழ்வுகளை இலவச பிரதியாக அச்சிட்டு கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. தானியங்கி இயந்திரத்தின் மூலம் தினமலர் நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டது. போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. பொதுமக்களுக்காக வலைதள வசதியுடன் கணினிகள் அமைக்கப்பட்டு, இலவச பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.
தினமலர் இணைய தள அரங்குக்கு வந்த முதல்வர், துணை முதல்வர், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், வெளிநாட்டு தமிழர்கள், தமிழ் அறிஞர்களுக்கு தினமலர் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய கடல்தாமரை புத்தகம் இலவமாக வழங்கப்பட்டது. அரங்கை பார்வையிட்ட துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தினமலரின் தமிழ்ச் சேவையை பாராட்டினர்.

வாசகர் கருத்து (48)
கணிமொழியன் சென்னை,இந்தியா
2011-03-03 15:01:37 IST
குடும்ப விழா...
deva pondicherry,இந்தியா
2011-01-05 08:07:02 IST
sammozhi sirantha mozhi ,...
நாராயண மூர்த்தி.இ நரையன்குளம்,இந்தியா
2010-10-24 16:55:14 IST
தினமலரில் வெளியிட்டுள செய்திகள், புகைப்படங்கள், நிகழ்படங்கள் எனக்கு தமிழ் செம்மொழி மாநாட்டை நேரில் சென்று பார்த்தது போல உள்ளது. தினமலருக்கு மிக மிக மிக மிக நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். ......
Siva Singapore,ஸ்லேவாக்கியா
2010-08-13 15:39:31 IST
உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களை ஏன் அழைக்கவில்லை என்ற வினா பூதாகாரமாக எழுப்பப்பட்டு வருகிறது. தமிழக அளவில் உள்ள அனைத்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். அல்லது வரவழைகப் பட்டுள்ளனர். ஆனால் அப்துல் கலாம் ஏன் வரவில்லை? அப்துல் கலாம் திட்டமிட்டு புறக்கனிக்கப்பட்டாரா? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. அப்துல் கலாம் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்து வருவது குறித்து மாநாட்டு பொறுப்பாளர்கள் விளக்கம் அளிக்க மறுத்து வருகின்றனர். அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றால் மீடியாக்கள் அவரைச் சுற்றியே வட்டமிடும். பொதுமக்களும் அவரைக் காணவே விரும்புவார்கள். குழந்தைகளும் மாணவர்களும் அவரோடு பேசப் போட்டி போடுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட நிகழ்ச்சி நடத்துபவர்கள் விரும்பவில்லை. எனவேதான் அப்துல்கலாமை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்....
சுரேஷ் கோயம்புத்தூர்,இந்தியா
2010-07-06 20:49:30 IST
ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த மாநாட்டின் முலமாக தலா 250 ரூபாய் கடன் தான் மிச்சம். கருணை உள்ள கலைனர் கருணாநிதி க்கு நன்றி...
jey cbe,இந்தியா
2010-07-06 12:28:39 IST
கனிமொழி டீம் டிட் எ கிரேட் ஜாப் இன் organising cultural programs அண்ட் rally . congrats...
C.RAJAGOPAL coimbatore,இந்தியா
2010-07-05 15:15:46 IST
Hai....Thanks to honble chief minister of tamilnadu...No words to say abt his perform....nice job.....Kalaingner rockz.......
JEYAPRAKASH coimbatore,இந்தியா
2010-07-03 14:24:41 IST
ஹாய் , வெரி நைஸ் அண்ட் good...
ரவி.மீ ஜெட்டாஹ்,செனகல்
2010-06-30 12:33:24 IST
இலங்கை தமிழர் விடயத்தால் கருணாநிதி மற்றும் மாநாட்டின் மீதும் கடுப்பில் இருந்த என்னை, தினமலர் வழங்கிய மாநாட்டு செய்தியை படிக்க படிக்க எல்லாவற்றையும் மறந்து உள்ளம் மகிழ்ந்து போனேன் .தினமலருக்கு நன்றி .வாழ்க தமிழ்! வளர்க தமிழர் பண்பாடு !!...
R.சிவப்பிரகாசம் Coimbatore,இந்தியா
2010-06-30 00:31:05 IST
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' உண்மை தத்துவம் எதிர்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை. செம்மொழி தமிழ் எல்லோருக்கும் பொதுவானது என்று ஓடி வந்து அல்லது குறைந்தபட்சம் ஒரு பாராட்டையாவது சொல்லிய்ருக்க வேண்டுமல்லவா. மேடையில் தமிழ் என்று முழங்குபவர்கள் இப்போது எங்கே ஒழிந்து கொண்டார்கள்?...
R சிவப்பிரகாசம் கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-30 00:16:00 IST
இன்று மாலை என் குடும்பத்தினருடன் சென்று வந்தோம். மாநாடு முடிந்த பின்னும் இப்படி ஒரு கூட்டத்தை நான் கண்டதில்லை. அதேபோல் காவல் துறையின் பங்கும் மிக சிறப்பாக இருந்தது. பேரணியில் பங்கேற்ற அணைத்து 'இனியவை நாற்பது' சிறப்புகளையும் ஒரே இடத்தில பார்த்து மகிழ வாய்ப்பு கிடைத்தது. முதல்வருக்க்கு கோவை நகர மக்களின் சார்பாக மீண்டும் நன்றி. இரவு எட்டு மணி வரை என்று அறிவித்தும் மக்கள் கூட்டம் காரனமாக பத்து மணி வரை அனுமதித்த காவல் துறைக்கும் நன்றி....
கலை kumar muscat,இந்தியா
2010-06-29 21:04:11 IST
தமிழனால் மட்டுமே நடத்த முடயும். நன்றி thamizha...
பாபு ecogreenunit coimbatore,இந்தியா
2010-06-29 18:51:22 IST
தேங்க்ஸ் தினமலர்,தமிழ் மாநாட்டில் உங்களுடய பங்கு மகத்தானது ,மாநாடு கண்ட கலைஞர் , தமிழக அரசு, வெற்றி பெற செயித மக்களுக்கு நன்றிகள் உரித்தாகுக...
iindian dubai,யூ.எஸ்.ஏ
2010-06-29 15:56:21 IST
அதில எத்தனை லட்சம் குடிமகன்கள்? நாலு நாளா டி வி யில கருணாநிதி புராணம் தாங்க முடியலை. உண்மை யான தமிழ் மாநாடு கொஞ்சம். மத்ததெல்லாம் உருட்டு பெறட்டு, கொள்ளை. எவன் அப்பன் வீடு சொத்துல கருணாநிதி இதை தி மு க மாநாடு ஆக்கி இருக்கிறார் ? ...
ராமகோபாலன் salam,இந்தியா
2010-06-29 14:46:51 IST
மாநாட்ட என் வட இந்திய சேனல் ஒன்று கூட ஒளிபரப்பவில்லை...
raji singapore,இந்தியா
2010-06-29 10:21:51 IST
naan Ondru solla aasai padugirrean. Endha semmozhi maanadu etharkku? Ennai keattal arasiyal ulnokkam endruthan kuruvean. Oru pazamozhi. "Kudikka koolu illa, Kooooo........ Malli poo ethukku?"...
பாலா மும்பை,இந்தியா
2010-06-29 06:26:58 IST
எல்லாரு நல்ல இருத்த போதும் எல்லாருக்கும் தமிழ்மால ஒரு நம்பிக்கை வரணும் அப்பா தா உலக அளவில் போகும். ஆல் தி பெஸ்ட்....
V . சிவராஜ் Chennai,இந்தியா
2010-06-28 22:40:45 IST
I am very much proud and delighted that the world classical tamil language meeting creates an awareness among the world tamil speaking people and to pursuade others to follow our tamil cultures. My Heartfelt congrautlation to our beloved CM, who is made tremendous effort to achieve the success....
R.sivakumar tirupur,இந்தியா
2010-06-28 19:54:29 IST
nanri dinamalar because delived to good news every day thanks...
ந. ஜெயபாலன் நெல்லை நகர் Tirunelvelimavattamtamilnadu,இந்தியா
2010-06-28 19:23:22 IST
சூழ்நிலை காரணமாக இரண்டு நாட்கள் மட்டும்தான் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த குறையை தினமலர் தான் தீர்த்து வைத்தது.தினமாருக்கு என் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள். ...
krishnaraj male,மாலி
2010-06-28 17:23:32 IST
தமிழ் செம்மொழி மாநாட்டு நிகழ்சிகளை உடனுக்குடன் தெரியபடித்திய தினமலருக்கும், மாநாட்டை சிறப்பாக நடத்திக்காட்டிய நமது முதல்வர், துணை முதல்வர், சிறப்பாக செயல்பட்ட நமது தமிழக காவல் துறை, மாநாட்டுக்காக உழைத்த தொழிலாளர்கள், வருகை புரிந்த அயல் நாட்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி, நன்றி......
sheihu Chennai,இந்தியா
2010-06-28 16:38:26 IST
இப்படிப்பட்ட ஒரு மாபெரும் நிகழ்ச்சியை நிகழ்த்திக்காட்ட நம்மால் முடியும் என்பதை தமிழக அதிகாரிகள் நிரூபித்து உள்ளனர். பாராட்டுக்கள்!! இதே அர்ப்பணிப்பை நம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தமிழகத்தில் செயல் படுத்தப்படும் எல்லாத் திட்டங்களிலும் செயல் படுத்த வேண்டும். அப்படி செய்தால் நாம் இந்தியாவுக்கே வழி காட்டலாம். நாம் சாகும் போது எதை கொண்டு செல்லப்போகிறோம்? தயவு செய்து ஏழைகளை, நம்மை விட நலிந்தவர்களை பந்தாடுவதை விடுத்து, அவர்களை கை தூக்கி விட உதவுங்கள்!! நம்மிடம் அதற்க்கான எல்லா வளங்களும், திறன்களும் உள்ளன என்பதையே இந்த மாபெரும் நிகழ்ச்சியின் வெற்றி நமக்கு காட்டுகிறது. தேவை அர்ப்பணிப்பும், விடா முயற்சியுமே !!! தினமலருக்கு மிக்க நன்றி !!!...
கோவை தமிழன் dammam,செனகல்
2010-06-28 16:02:59 IST
தமிழன் என்று சொல்லடா தலை நிமிருந்து நில்லடா! தினமலர்க்கு பாராட்டுக்கள் வளர்க தினமலர் சேவை! கலைசருக்கு நன்றி!! தொடரட்டும் நம் தமிழ் பயணம்! ...
N.S.Baskaran Pillai NairobiKaneya,இந்தியா
2010-06-28 15:41:49 IST
செம்மொழி மாநாட்டின் நிகழ்வுகளை நம் கண் முன்னே கொணர்ந்ததில் தினமலரின் பங்களிப்பு உலகம் முழுதும் பரவி உள்ள தமிழர்களுக்கு ஓர் அன்பளிப்பு.. வாழிய செந்தமிழ்! வாழிய தமிழினம்! வாழிய தமிழ்த் திருநாடு!... தலைவரின் தனி திறமையை வாழ்த்த வயது இல்லாததால் தலை தாழ்த்தி வணகுகீரன்...
kilavansethupathi chennai,இந்தியா
2010-06-28 13:59:46 IST
தினமலருக்கு வாழ்த்துக்கள் ,வணக்கங்கள் . எப்போதும் செய்தி சொல்வதில் தினமலருக்கு இணை இல்லை .நன்றி வாழ்க வளமுடன் சேதுபதி ....
ravi chennai,இந்தியா
2010-06-28 13:53:15 IST
மக்கள் வரிப்பணம் 400 கோடி ரூபாய் கோவைல் விதைக்கப்பட்டுள்ளது மகசூல் சின்னத்திரை விளம்பரம் மூலம் இனிவரும் நாள்க்களில் அருவடைசெயயப்படும் ...
அருண்குமார் பாலு மாயவரம்,இந்தியா
2010-06-28 13:52:38 IST
தினமலரின் இணய தளத்தின் மூலம் எனக்கு தமிழ் செம்மொழி மாநாட்டை நேரில் நம் கண்களுக்கு விருந்தாக்கிநீர்.. வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு... ...
க.குணசேகரன் Chennai,இந்தியா
2010-06-28 12:42:14 IST
தமிழ் செம்மொழி மாநாடு மாபெரும் வெற்றி அடைந்ததிற்கு ஊடகங்கள் மிகவும் உறுதுணையாக இருந்ததை எவராலும் மறுக்க முடியாது. அது மட்டுமல்ல! இந்த மாநாடு பல எதிர்பர்ர்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் வாழ்க்கையில் மிகபெரிய வெற்றி அடைய இந்த செம்மொழி மாநாடு அடித்தளமாக அமைய வேண்டும். அப்போது தான் இந்த மாநாடு முழு வெற்றி பெற்றதாக அர்த்தம். ...
Ramamurthy Coimbatore,இந்தியா
2010-06-28 12:07:06 IST
பரவசம் திரும்பிய திசை எங்கும் மக்கள் வெள்ளம் & தமிழ் ...
ஆ.பாலசுப்பிரமணியன் நாகர்கோயில்,இந்தியா
2010-06-28 11:07:06 IST
முழு பக்கம் ஒதுக்கி செய்திகள் வெளிட்டது பராட்டுதலுக்கு உரியது .நன்றி...
இருள் பாண்டியன் திண்டுக்கல்,இந்தியா
2010-06-28 10:54:18 IST
தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு நல்ல பொக்கிஷம். முதல்வருக்கு பாராட்டுகள். இருந்தாலும், இவ்வளவு பணம் செலவு கொஞ்சம் கூடுதலாக உள்ளது. வாழ்க தமிழ். வெல்க தமிழ் இனம். நன்றி,...
Ravi S hyderabad,இந்தியா
2010-06-28 10:36:57 IST
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !! வாழிய பாரத மணித்திருநாடு !!வந்தே மாதரம் !!...
Michael Singapore,ஸ்லேவாக்கியா
2010-06-28 10:33:44 IST
குறிப்பிட்ட இடைவெளியில் இது போன்ற மாநாடுகள் நடைபெரும் என்று கலைஞர் அறிவித்ததுதான் முத்தாய்ப்பு. பொதுவாக இந்த மாநாடு எனக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்திருக்கிறது. தமிழக முதல்வருக்கு நன்றியும் வாழ்த்துக்களும். அடுத்து, பொருளியல் தமிழ் என்ற அளவில் தமிழர்களின் அடுத்த கட்ட பொருளியல் உச்ச மேம்பாட்டிற்கான மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுதான் தமிழை அடுத்த உயர் நிலைக்கு கொண்டு செல்லும்....
Muralidharan Bangalore,இந்தியா
2010-06-28 07:53:44 IST
Super...
sanjeevi singapore,ஸ்லேவாக்கியா
2010-06-28 06:48:57 IST
தினமலர் சேவை அழகு ! அச்சுத் துறையின் பங்கு அற்புதம் ! திரை கடல் தாண்டி தேன்தமிழ் தென்றலை பருகச் செய்த தினமலரே உமக்கு எங்கள் கைகூப்பு !...
soundar coimbatore,இந்தியா
2010-06-28 06:05:43 IST
அய்யா நங்கள் எதிர்பார்த்தபடி தினச்மலரில் செய்திகள் செம்மொழி மனட்டைபற்றி வரவில்லை இன்னும் நல்லமுறையில் பங்கற்றவேண்டும் என்பது என் தல்மயனகருது ...
வேதலிங்கம் கோபால் atlanta,உஸ்பெகிஸ்தான்
2010-06-28 05:39:21 IST
பார்கிங் என்பதற்கு தமிழ் வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாமே. ?!. மற்றபடி எப்போதுமே மிகமிக சிறப்பாக தமிழ் சேவையும் செய்திகளையும் நேர்த்தியாக செய்யும் தினமலருக்கு என் தலை தாழ்ந்த வணக்கமும் நன்றியும் உரித்தாகட்டும் ....
tayan mkr,இந்தியா
2010-06-28 04:10:19 IST
மை லைப் ஒன்லி தமிழ் தமிழ் இல்லே நான் இல்லை தமிழ் தமிலன் wallha பட் வி ஆர் இந்தியன் i லவ் indian ...
rajaji jeddah,இந்தியா
2010-06-28 02:55:54 IST
தமிழ் ச்செம்மொழி மாநாடு இவ்வளவு மகத்தான வெற்றியடைந்ததற்கு அரசின் ஒருங்கிணைந்த பணிகளே.முழு நம்பிக்கையோடு,முழு இதயத்தோடு, தொய்வில்லா ஊக்கத்தோடு ஆக்கம் தந்த முதல்வரின் ஆளுமைக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்....
செந்தில்வேலன் பீடேர்ஸ்பர்க்,உஸ்பெகிஸ்தான்
2010-06-28 02:30:10 IST
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வெல்க தமிழ்!.........
drpksamy IITKanpur,இந்தியா
2010-06-28 02:25:03 IST
தினமலரில் வெளியிட்டுள செய்திகள், புகைப்படங்கள், நிகழ்படங்கள் எனக்கு தமிழ் செம்மொழி மாநாட்டை நேரில் சென்று பார்த்தது போல உள்ளது. தினமலருக்கு மிக மிக மிக மிக நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். ...
Av M Jaaffardeen Kualalumpur,மாலத்தீவு
2010-06-28 01:27:08 IST
May god bestow long life to Kalanjar to enable to achieve such mega events in the future. I understand 10 lakhs people participited in the conference It is indeed personal achievement of the C M This gave a lot of traders to benefit. He has blackened the face of the opponenrs particularly the President of the Tamil Research centre in Japan May the almighty bless him always ...
Av M Jaffardeen Kualalumpur,மாலத்தீவு
2010-06-28 01:12:57 IST
கலைஞரால் மட்டுமே இது சாத்தியம். ஒரு திட்டத்தை அறிவித்தால் அதனுடன் தானும் மெனக்கட்டு ஈடுபாடு காட்டுவதில் எந்தத் தலைவருக்கும் அவர் ஈடாகமாட்டார். அவர் சொன்னதைச் சாதிப்பார் என்பதற்கு இது ஒரு உதாரணம்...
Abul Hasan Victoria,சியர்ரா லியோன்
2010-06-28 00:40:41 IST
செம்மொழி மாநாட்டின் நிகழ்வுகளை நம் கண் முன்னே கொணர்ந்ததில் தினமலரின் பங்களிப்பு உலகம் முழுதும் பரவி உள்ள தமிழர்களுக்கு ஓர் அன்பளிப்பு.. வாழிய செந்தமிழ்! வாழிய தமிழினம்! வாழிய தமிழ்த் திருநாடு!...
ஹரிகுமார் doha,ரீயூனியன்
2010-06-28 00:24:11 IST
Really a wonderfull job by our cm.no one can do this in ther life time,never and ever.I congrats all off the effets who support for this great achivement.I am be proud to be a tamilan that to in Dr,Kalainger period....
ஸ்ரீ கண்ணன் salem,இந்தியா
2010-06-27 23:31:51 IST
தமிழுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ...
ஸ்ரீ kannan salem,இந்தியா
2010-06-27 23:30:16 IST
தினமலருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி தமிழுக்கு அமுதம்போல் மக்களுக்கு தினமலர் வாழ்த்துக்கள் ...
sree salem,இந்தியா
2010-06-27 23:27:30 IST
thinamalaruku kidaitha maperum vetri congrats dinamalar tamil aliyathu athu pol dinamalarum aliya pugal perum...
ர.கார்த்திகேயன் பொள்ளாச்சி,இந்தியா
2010-06-27 23:15:27 IST
தினமலர் நாளிதளின் தமிழ் சேவை உலக தமிழர்களுகெல்லாம் ஓர் வரப்பிரசாதம். வாழ்க செந்தமிழ் பணி.........
robinson manama,பஹ்ரைன்
2010-06-27 23:06:49 IST
நன்றி. தினமலர் ....
ப siddharthan தோஹா,ரீயூனியன்
2010-06-27 23:04:13 IST
நன்றி தினமலர். மேலும் இந்த மாநாடு கட்சி மாநாடாக இல்லாமல் உண்மையில் தமிழ் சிறக்க நடைபெற்றதாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி ....
Radhakrishnan Rustenberg,ஸ்பெயின்
2010-06-27 23:01:58 IST
உண்மையெல எஹு தமிழ் மொழிக்கு ஒரு எழுச்சி மாநாடு...மிக பெரிய வெற்றி.....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »