E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
நிறைவு விழாத் துளிகள்
ஜூன் 27,2010,20:46

* கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, நேற்றுடன் நிறைவடைவதால் காலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது. மக்கள் குடும்பம் குடும்பமாக வந்ததால், அவிநாசி ரோட்டில் ஹோப்காலேஜ் முதல் மாநாட்டு அரங்கம் வரையிலும் மக்களின் தலைகளையே காணமுடிந்தது.

* ஆயிரக்கணக்கான வாகனங்களில் மக்கள் மாநாட்டுக்கு வந்தால் வாகனங்கள் நிறுத்தும இடங்கள் அனைத்தும் நிரம்பி, ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நகர
முடியாமல் ஸ்தம்பித்து நின்றன.

* கண்காட்சி அரங்கு, இணைய மாநாட்டை காண இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் நான்கு கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் காத்திருந்தனர்.

* நிறைவு விழா நிகழ்ச்சி சரியாக மாலை 4.00 மணிக்கு துவங்கியது. மத்திய அமைச்சர் ராசா நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்ததால், பேச்சை நிறைவு செய்யுமாறு முதல்வர் தகவல் சொல்லியனுப்பினார். அதன்பின்னும், அமைச்சர் ராசா பேச்சை நிறைவு செய்யாததால், தலைமை செயலர் ஸ்ரீபதி ராசாவுக்கு அருகில் வந்து பேச்சை முடித்துக்கொள்ளுங்கள் என்றார்.

* மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசும்போது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஐந்து நாள் நிகழ்ச்சி; நீடிக்கப்போகிறது கண்காட்சி; ஆனால், எங்களுக்கு மட்டும் தொலைக்காட்சி. மாநாடு நிகழ்ச்சியை ஐந்து நாளும் நேரில் இருந்து ரசிக்க முடியாததால் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்த்தேன் என்பதை கவிதை நடையில் பேசினார்.

* மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆங்கிலத்தில் பேசியதை எம்.பி., சிவா தமிழில் மொழி பெயர்த்தார்.

* கடந்த 2007-08ல் தமிழ் மென்பொருளை வடிவமைத்து, தமிழை எளிதாக்கிய சென்னையை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்திற்கு கனியன் பூங்குன்றனார் விருதும், ஒரு லட்சம் ரூபாயும், பாராட்டு பத்திரமும் பரிசாக வழங்கப்பட்டது.

* உலகத் தமிழச் செம்மொழி மாநாடு நடத்திய முதல்வர் கருணாநிதிக்கு, அரசு தலைமை செயலர் ஸ்ரீபதி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தனி அலுவலர் அலாவுதீன் ஆகியோர், வெள்ளியாலான தொல்காப்பியர் சிலையை பரிசாக வழங்கினர்.

* முதல்வர் கருணாநிதி மாலை 5.15 மணிக்கு நிறைவு விழா உரையை துவங்கி, 5.55 மணிக்கு நிறைவு செய்தார். மாநாட்டில், ஆய்வரங்க அமைப்பு கூட்டத்திலும், பொது அரங்கத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களை முதல்வர் அறிவித்தார்.

* உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்ட நாள் முதல் நிறைவு நாளான இன்று வரையிலும் இரவு பகல் பார்க்காமல் அயராது உழைத்த தலைமை செயலர் ஸ்ரீபதி, மாநாடு தனி அலுவலர் அலாவுதீன், கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் நிறைவு உரையில் நன்றி தெரிவித்தார்.

* இலங்கை பிரச்னையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதது தமிழர்களுக்கு வேதனையளிக்கிறது. இலங்கை தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வு காண இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் வாசித்ததும் அரங்கமே அதிரும் வகையில் கரவொலி எழுந்தது.

* மாநாட்டுக்கு வெளியூரில் இருந்து வந்த தமிழர்களும், உடன்பிறப்புகளும் பத்திரமாக வீடு திரும்பி செல்ல வேண்டும். அனைவரும் பத்திரமாக வீடு சென்றடைந்து விட்டனர் என்ற தகவல் கிடைத்தால் தான் என் மனம் நிம்மதியடையும் என்று உருக்கமாக பேசினார்.

* உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அரசியல் சாயம் குண்டுமணியளவும் கலந்து விட்டால் கூட மாநாட்டுக்கு கலங்கம் ஏற்பட்டு விடும். மாநாட்டு ஏற்பாடுகளை பார்க்க வந்தபோது ஒருசில இடத்தில் கழக கொடியை பார்த்தேன். தமிழ் மாநாட்டில் மாநாட்டு சின்னம் பதித்த தமிழ் கொடி மட்டுமே பறக்க வேண்டும். கழக கொடிகள் பறக்கக்கூடாது என்று உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதினேன். அந்த வேண்டுகோளை ஏற்று அரசியல் கலப்பு இல்லாமல் மாநாட்டை வெற்றி பெறச்செய்த உடன்பிறப்புகளுக்கும், பத்திரிகைகளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று முதல்வர் குறிப்பிட்டார்.

* பல்வேறு கட்சியினர் மாநாட்டில் கலந்து கொண்டாலும் தமிழ் கொடியை தவிர வேறு, வர்ண கொடிகளை யாரும் காண்பிக்கவில்லை. அந்த வகையில் மாற்றுக்கட்சியினருக்கும் நன்றி சொல்லியாக வேண்டும் என்று முதல்வர் சிலேடையாக பேசினார்.

* மகிழ்ச்சி, பூரிப்பு, புன்னகையோடு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங்கியது. அதில் எள்ளளவுக்கும் குறைவின்றி அதே பூரிப்போடு மாநாடு வெற்றி இலக்கை அடைந்துள்ளது என்று முதல் குறிப்பிட்டார்.

* உலகத் தமிழச் செம்மொழி மாநாடு நிறைவு விழாவில் என்னுடைய உரை தமிழகத்திற்கு இன்னொரு "பட்ஜெட்' ஆக இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் நிறைவு உரையில் எதிர்பார்த்தளவுக்கு அறிவிப்புகள் எதுவுமில்லை என்று தமிழ் ஆர்வலர்கள் புலம்பினர்.

*ஐந்து நாட்கள் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் நேற்று மாநாடு திடலில் மிக அதிகப்படியான கூட்டம் காணப்பட்டது.

*கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலே பல்வேறு பகுதிகளிலிருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

*மாநாடுக்கு வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடாத வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவை மாவட்ட எல்லையான சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி பகுதிகளில் கோவை மற்றும் கேரளா நோக்கிச் சென்ற சரக்கு லாரிகள், கண்டெய்னர்  மற்றும்  டிரெய்லர்கள் நிறுத்தப்பட்டன. இரவு நேரம் மாநாடு சென்று திரும்பும் வாகனங்களின் போக்குவரத்து ஓய்ந்த பின் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் இந்த லாரிகள் அனுமதிக்கப்பட்டன. இதனால், கருமத்தம்பட்டி, சோமனூர், தெக்கலூர் பகுதிகளில் ஏராளமான லாரிகள் இது போல நிறுத்தப்பட்டிருந்தன.

*அவிநாசி ரோடு வழியாக பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை. அவிநாசி வழியாக திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளிலிருந்து வந்த வெளியூர் பஸ்கள் கருமத்தம்பட்டியிலிருந்து அன்னூர் வழியாக கோவைக்கு திருப்பி விடப்பட்டன. இதில் வந்த பயணிகள் பஸ் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காந்திபுரத்திலிருந்து மீண்டும் சரவணம்பட்டி மற்றும் பீளமேடு வழிகளில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் மாநாடுக்குச் சென்றனர்.

*அவிநாசி ரோட்டில் கோவை மெடிக்கல் மற்றும் ஹோப் காலேஜ் வரையில் எந்த பஸ்களும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், லட்சுமி மில் சந்திப்பிலிருந்து ஹோப் காலேஜ் வரையிலும் மாநாடு சிறப்பு பஸ்கள் தவிர பிற பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த பகுதி முழுவதும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே சென்றன. இதனால், இந்த ரோட்டில் மாநாட்டுக்குச் சென்றவர்களின் நடமாட்டம் தான் மிக அதிகமாக காணப்பட்டது.

*தொலைவிலுள்ள கிராமங்களிலிருந்து குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் பலர் விமான நிலையத்துக்கும் சென்று சுற்றிப்பார்த்தனர்.

*"சிட்ரா' வில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மாநாடு வரவேற்பு வளைவு முன்புறம் ஏராளமானோர் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.

*மாநாடு முன்னிட்டு நடந்த அலங்கார வாகனங்ளின் அணிவகுப்பு காண தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர கோவை மருத்துவ கல்லூரி பகுதியில் பிரத்யேகமாக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மேடைகள் பிரிக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்த இடத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. மருத்துவ கல்லூரியின்  மேற்குப்பகுதியில் உள்ளே நுழைந்து மீண்டும், மேடை உள்ள இடத்தைக் கடந்து, அதே ரோட்டில் சென்று  சேரும் வகையில் பாதசாரிகள் திருப்பி விடப்பட்டனர்.

*சிறிய மேடைகள்  இருந்த இடங்களில் அவற்றின் மீது ஏறி இறங்கி பொதுமக்கள் நடந்து சென்றனர்.

*மாநாடு நடந்த ஐந்து நாட்களில் முதல் மூன்று நாட்கள் கடும் வெய்யில், மழை என்ற எந்த விதமான தொல்லையும் இல்லை. ஆனால், நான்காம் நாள் பிற்பகலில் சற்று அதிகப்படியான வெயில் வாட்டியெடுத்தது. அதே போல நேற்று காலை முதல் கடும் வெயில் காணப்பட்டது. இருப்பினும் குடைகளைப் பிடித்துக் கொண்டும், புடவைத் தலைப்பு மற்றும் சல்வார் துப்பட்டாவை தலையில் போட்டுக் கொண்டு பெண்களும், தொப்பி, சிறிய டவல், பேப்பர் என தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு ஆண்களும் மாநாடு திடலில் தொய்வில்லாமல் சுற்றி வந்தனர்.

*மாநாடு முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை வரும் 4ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்குத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநாடு திடலில் பொதுமக்கள் பார்வைக்கு பல்வேறு இடங்களில் நேற்று அமைக்கப்பட்டது.

*கண்காட்சியைக் காண நீண்ட வரிசையில் மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். இந்த வரிசை கண்காட்சி அரங்கம் முதல், மீடியா அரங்கம் வழியாக "சிட்ரா' செல்ல அமைக்கப்பட்ட புதிய ரோடு முழுவதும் காணப்பட்டது.

*கடும் வெயில் வீசிய நிலையில், மாநாடு பொது அரங்கில் காலை நிகழ்ச்சியில் முடிந்த நிலையிலும் ஆயிரக்கணக்கானோர் பந்தலின் உள்ளே அமர்ந்திருந்தனர். பெரும்பாலானோர் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கேயே அமர்ந்து உண்டனர். மதிய உணவுக்குப் பின் பலரும் பந்தல் உட்பகுதியில் ஓய்வெடுத்தனர்.

*மாநாடு திடலில் உணவகங்களில் உணவு வகைகள் வாங்கிச் செல்ல ஏதுவாக ஏராளமான முகப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பகல் ஒரு  மணி முதல் மாலை நான்கு மணி வரையிலும் மதிய உணவுக்காக ஏராளமானோர் அங்கு திரண்டனர். உணவுப் பொட்டலங்களை வாங்கிய பின் அமர்ந்து சாப்பிட இடமில்லாமல் பெரும் தவிப்பு ஏற்பட்டது. கைகளில் உணவுப் பொட்டலங்களை ஏந்தியபடி நின்று கொண்டு தான் பலரும் சாப்பிட்டனர்.

*நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், உணவகங்களில் அசைவ வகைகள் விற்பனை செய்த ஸ்டால்களில் திரளான கூட்டம் காணப்பட்டது.

*பொதுமக்கள் வசதிக்காக மாநாடு திடலில் பல இடங்களில் தற்காலிக நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநாடு திடலில் உணவகங்களுக்கு முன், அவிநாசி ரோடு அருகே இருந்த கழிப்பிடங்களில்,  அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்க் நிரம்பி வழிந்தது. இதனால் கழிப்பறை அமைக்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் இந்த கழிவுகள் வழிந்து கிடந்தது.

*அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோடுகளில் புறநகர் பகுதியான கருமத்தம்பட்டி, சூலூர் பகுதிகளில்  மாநாடு துவங்கிய நாள் முதல் ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.நேற்று மாலை 7.00 மணிக்கு மேல் இந்த பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் ஓட்டல்களை மூடி விடுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

வாசகர் கருத்து (5)
ராஜா சிங்க் தூத்துக்குடி,இந்தியா
2010-08-19 16:53:47 IST
செமொழி மாநாடு மிக அருமையாக இருந்தது. இறுதி நாள் நடந்த நிகழ்சிகள் ஆனைத்தையும் நான் கண்டு களித்தேன்....
ம.KARUPPUSAMY coimbatore,இந்தியா
2010-07-15 16:21:59 IST
இது மிகுவ்ம் ஸ்ரிரபக இருநிதது மேலும் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடை பெறவேண்டும் தமிழ் அறிகைகள் மிகவும் ஸ்ரிபக இறின்தது...
CHANDRASEKAR muscat,பாகிஸ்தான்
2010-06-28 20:29:32 IST
RAJA IS WASTED IS GOLDEN TIME. P.CHIDAMBARAM SPEAKS EXCELLENT CHIEF MINISTER REALLY GREAT....DOING IS JOB GREATFUL...RAJA SPEAKS SHOWS HE IS NOT WELL PREPARE HOW TO SPEAK IN THAT GOLDEN TIME...WILL NOT COME BACK AGAIN THE WASTED GOLDEN TIME..-CHANDRASEKAR FROM MUSCAT...
R.velumani Coimbatore,இந்தியா
2010-06-28 07:10:25 IST
பல கற்றும் கல்ரர் அற்விலாதர் enpathai சிலர் உறுதி செய்தார் ...
பி.கே.செல்வராஜ் வாகராயம்பாளையம்,இந்தியா
2010-06-27 21:31:34 IST
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடக்க கோவை மக்கள் உதவி உள்ளார்கள்.கோவை திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவான அவினாசி அத்திக்கடவு திட்டத்தை கலைஞர் உடனே நிறைவேற்றுவார?-வாகை பி.கே.செல்வராஜ் கொ.மு.க. ...
vignesh mumbai,இந்தியா
2010-06-27 21:16:15 IST
உடனுக்குடன் செய்திகளை வெளிஇடுவதில் உம்மை விஞ்ச முடியாது.. நேரில் கண்டு களித்தது போன்று இருக்கிறது.. நன்றி.. வாழ்க தமிழ்.....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »