E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
இதே போன்று செம்மொழி மாநாடு இனியொரு முறை நடத்தப்படுமா: பாரதிதாசன் மகன் சந்தேகம்
ஜூன் 27,2010,15:52

கோவை : கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டை போல, எந்த ஒரு குறைவோ, குறையோ இல்லாமல் இனியொரு முறை இதே போன்று செம்மொழி மாநாடு நடத்தப்படுமா என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது என்று பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் ஆதங்கத்துடன் கூறினார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பார்வையாளராக பங்கேற்ற பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் அளித்த பேட்டி: உலகமே வியந்து விழிகளை திறந்து கோவையை உற்றுநோக்கும் அளவிற்கு கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அமைந்திருந்தது. உலகிலுள்ள கண்களும் செவிகளும் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க முடியாவிட்டாலும், பார்த்தும், கேட்டும் ரசிக்க ஆர்வமாய் அன்றாடம் தொலைகாட்சியின் முன் அமர்ந்து கண்குளிர பார்த்தும், காதுகுளிர கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.  எழுபது ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை பாரதிதாசன், தமிழன் உலகறியும் வகையில், உலகத்தமிழர்களை இணைத்து மக்கள் வெள்ளம் கரைபுரண்டோட உலகத்தமிழ்மாநாடு நடத்துவான் தமிழன் என்று கனவாக கூறினார். அன்று அவர் கண்ட கனவும், இன்று நடக்கும் நிகழ்வுகளும் நனவாக மாறிவிட்டது.

ஆய்வரங்கங்களுக்கென்று தனி மகுடம் சூட்டப்பட்டு பல வசதிகளுடன் கூடிய அமைப்பு ஏற்படுத்தப்ட்டது இதுவே முதல் முறை. இது போன்று எந்த ஒரு தமிழ் மாநாட்டிலும் வசதிகள் செய்து தரப்படவில்லை. தமிழுக்காக , தமிழர்கள் கூடி உலகஅளவில் செம்மொழி மாநாடு நடத்துவதற்காக செய்யப்பட்ட இந்த வசதி இது வரை எந்த நாட்டிலும் செய்யப்படவில்லை. இது போல் மற்றொரு முறை இதே ஏற்பாடுகளுடன் கூடிய செம்மொழி மாநாடு நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பல ஆயிரம் மக்கள் கூடும் பகுதியில் எந்த ஒரு சச்சரவிற்கும் இடம் கொடுக்காமல், மாநாட்டு பங்கேற்பாளருக்கும், ஆய்வரங்க பங்கேற்பாளருக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வகையில் வசதிகளை செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்த தமிழக முதல்வர் மேலும் மொழிக்கு மகுடம் சூட்ட கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி சாதனையாக்கியிருக்கிறார். உலகத்தமிழர்களின் உணர்வை பகிர்ந்து கொள்ளவும், தமிழில் ஆய்வுசெய்து தயார் நிலையில் வைத்திருந்த கட்டுரைகளை சமர்பித்து உலகம் முழுக்க தெரியச்செய்யவும் மிகப்பெரிய ஊடகமாக திகழ்ந்த இந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்திய தமிழக முதல்வருக்கு கோடான கோடி நன்றியை தெரிவிக்கிறேன்.

கோவை நகர் குண்டுவெடிப்பிற்கு பின்பு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மிகவும் பின்தள்ளப்பட்டிருந்தது. கோவைக்கு அடிப்படை கட்டமைப்பை வழங்கி பெருநகரத்திற்குரிய அந்தஸ்தை பெரும் வகையில், ரோடு, சாக்கடை,பாலங்கள், நடைபாதை, தெருவிளக்குகள், சுகாதாரம், துப்புரவு, பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் பெயரில் கோவைக்கு செய்யப்பட்டுள்ளது.  வளர்ச்சியடைவதற்கு, நவீன ரோடு வசதிகள், அதிக ஒளியை கொடுக்கும் தெருவிளக்குகள், முழு சுகாதாரவசதி என்று பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை அள்ளி வீசியிருக்கிறார். இந்த வளர்ச்சித்திட்டங்கள் வேறு பக்கமாக போவதற்கு பல முயற்சிகள் நடந்தன. ஆனால் அவற்றை தகர்த்தெரிந்து மிகப்பெரிய சாதனையாக சாதித்துகாட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் என்றார் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன், அவரது மகன் கோ.பாரதி உடனிருந்தார்.

வாசகர் கருத்து (20)
perumpadyan nigeria,இந்தியா
2010-10-28 05:26:00 IST
I am very very happy to see this. We should become a no. 1 in the world. our children should learn the education by our own mother language like what japanees are following. I request you all to encourage our children to study in tamil ( as well as engish, because at present we need to learn english.) .I hope very soon we will come out. Our mother language is not english, let us try to renew our language. Pls belive we are one of the oncient people in the world. we have rights to claim for that respect. Many people may say this is a political meeting. I strongly belive only cm karunanithi can do this....
PANDIYAN THIRUVAUR,இந்தியா
2010-08-17 19:10:36 IST
மு கருணாநிதி அவர்கள் தமிழ் மீது அதிக பற்றும் பாசமும் வைத்துள்ளார் அதற்க்கு எடுத்துகாட்டகத்தான் இந்த உலகதமிழர் மாநாடு...
ராஜீவ் GINGEE,இந்தியா
2010-08-17 18:59:32 IST
நல்ல பாமிலி மீட்டிங்...
அ.முனிவாசகம் மதுரை,இந்தியா
2010-06-28 19:26:58 IST
TAMILMOZHI MANADU NADATHU IAM VERY HAPPY NEXT YEAR CONTINOU NEXT MANADU...
ப.முரளி coimbatore,இந்தியா
2010-06-28 14:25:44 IST
உண்மை தமிழனுக்கு இது ஒரு தீபாவளி ...
ப.முரளி coimbatore,இந்தியா
2010-06-28 14:23:37 IST
மிக்க நன்று, இனி வார்த்தை இல்லை ...
rrkannaan coimbatore,இந்தியா
2010-06-28 09:06:13 IST
வேஸ்ட் ஒப் money and Time for government and tamil people around world ...
ராமசாமி SARAVANANE paris,பிரான்ஸ்
2010-06-28 08:55:31 IST
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்திய தமிழக முதல்வருக்கு கோடானகோடி நன்றியை தெரிவிக்கிறேன்.பல ஆயிரம் ஆயிரம் கோடி என்னிடம் கொடுத்தல்.இனியொரு முறை இதே போன்று செம்மொழி மாநாடு நடத்தப்படுமா என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது தேவை கேடு??????????????????????????????...
முத்து ராஜேந்திரன் சென்னை,இந்தியா
2010-06-28 07:58:45 IST
உண்மை தான் தொலைகாட்சி மூலம் பார்த்தவர்களுக்கே மாநாடு முடிகிறேதே என்ற வருத்தமும் இனி எப்போது இது போல ஒரு மாநாட்டை நம் பார்ப்போமா என்ற ஏக்கமும்ஏற்பட்டது. இது போன்ற இன்னொரு மாநாட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நாம் கொடுத்துவைத்தவர்கள் தான் ...
கிருஷ்ணன் thiruvallur,இந்தியா
2010-06-28 07:33:59 IST
திஸ் இஸ் ஒஉர் பாமிலி மீட்டிங்....
கிருஷ்ணன் thiruvallur,இந்தியா
2010-06-28 07:30:55 IST
people tax is waste this ceerimany....
ராபாராம் கனி.a துபாய்.,யூ.எஸ்.ஏ
2010-06-28 05:19:27 IST
வாழ்த்த வயதில்லை அதனால் வணங்கி மகிழ்கிறேன் கலைஞரை.........இவ்வுலகம் உள்ளவரை தமிழ் கூறும் நல்லுலகம் உங்கள் புகழ் பாடும்.........நன்றி..வாழ்க செம்மொழியான தமிழ்மொழி............ரா.. இராஜேஷ்..... துபாய். ...
shanmugam vermont,உஸ்பெகிஸ்தான்
2010-06-28 04:00:25 IST
pugalbavar pugalattum; egalbhavar egalattum " THAMIL KANDATHU VETRI" VAZHI VAGUTTAR MUTHALVAR VALHA THAMILAGAM VELGA THAMIL SHANMUGAM FROM U.S.A....
மு ஜவஹர் ராஜ் NAVALADY,இந்தியா
2010-06-27 23:03:57 IST
ஆயிரம் கோடி என்னிடம் கொடுத்தல் எதை விட சூப்பரா நடத்துவேன் ...
Rajaji Singapore,இந்தியா
2010-06-27 22:38:38 IST
உலகத் தமிழ் மாநாடு நடத்திய முதல்வர் ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ...
ச.perinpam colombo,செயின்ட் ஹெலனா தீவு
2010-06-27 22:04:08 IST
கலைஞர் புகழ் பாட ௫௦௦ koodiya...
ravi jeddah,செனகல்
2010-06-27 20:38:24 IST
jeyasekar அவர்களே பெற்ற தாய்க்கு செலவு செய்தால் நஷ்டம் என்று சொல்வீர்களா?...
கே.ரேவதி சேலம்,இந்தியா
2010-06-27 18:56:06 IST
தம்ழி செம்மொழி மாநாடு தமிழுக்கு சிறப்பு. தமிழனுக்கு சிறப்பு.தமிழ்நாட்டுக்கு சிறப்பு.வந்தே மாதரம் ...
ராமகிருஷ்ணன் Madurai,இந்தியா
2010-06-27 18:19:11 IST
இது மாதிரி வேறு எந்த கட்சியும், தங்கள் கட்சி மாநாட்டை இவ்வளவு செலவில் நடத்த முடியுமா? என்பது சந்தேகம் தான், மக்கள் இப்படி ஏமாறுவார்கள் என்பது தெரியாது அல்லவா! ...
jayasekar coimbatore,இந்தியா
2010-06-27 17:47:17 IST
இந்த ஒருவாரகால விடுமுறை எத்தனை பேருக்கு எவளவு நஷ்டம் என்று கருணாநிதி அய்யா அவர்களுக்கு தெரியுமா?...
மேலூர் மனோகரன். செந்துல்.கோலாலம்பூர்.மலேசியா.,இந்தியா
2010-06-27 17:19:52 IST
" செம்மொழி மாநாட்டை"... இதற்குமுன்பு நடந்துமுடிந்த " உலக தமிழ் மாநாடு" போலதான்...இதுவும் நடக்கும் என்று நினைத்திருந்தேன்...! ஆனால்...நினைத்ததற்கு மாறாக உலக தமிழர்கள் அனைவரும் வியக்கும்படி நடந்துகொண்டிருக்கிறது " நவீன அறிவியல் தொழில்நுட்பத்துடன் "... அந்தவகையில் முதல்வர் கலைஞர் அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்...! தமிழ் உள்ளவரை அவர் பெயர் நிலைத்திருக்கும்...! வாழ்க தமிழ்...வளர்க தமிழ்...! ...
முஹமது ஷாஜஹான் வில்லிவாக்கம்சென்னை,இந்தியா
2010-06-27 17:13:06 IST
வில்லைவசி உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் மக்களின் வரி பணத்தை வினாக்க அப்படி என்ன ஆர்வம் ....
Lakshminarayan அபுதாபி,இந்தியா
2010-06-27 16:40:00 IST
அடங்கொப்புரானே! மன்னர் மன்னனுக்கு இப்பிடி ஒரு கேடு நினைப்போ? தமிழுக்கு தேவை இல்லை நிதி. மதியிருந்தால் போதும். ...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »