E-paper   |   Sitemap   |   RSS
தினமலர் இணையதள அரங்கை பார்வையிட்டார் துணை முதல்வர்
ஜூன் 26,2010,23:22

கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், அமைந்துள்ள தினமலர் இணையதள அரங்கை, நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும், இணையதள மாநாட்டின் கண்காட்சியில், தினமலர் இணைய தள அரங்கும் இடம்பெற்றுள்ளது. இங்கு மாநாட்டில் பங்கேற்கும் அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்கப்படுகிறது. அத்துடன், இங்குள்ள தானியங்கி விற்பனை இயந்திரம் மூலம் தினமலர் இதழும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கண்காட்சி அரங்குக்கு திடீரென வந்த துணை முதல்வர், தினமலர் அரங்கில் வந்து அமர்ந்தார். அவருக்கு தினமலர் இணைய தளம் குறித்து விளக்கப்பட்டது. மாநாட்டுக்கென பிரத்யேகமாக துவக்கப்பட்ட தினமலர் இணையதளத்தை (tamil.dinamalar.com) ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான வாசகர்கள் பார்வையிட்டுள்ளனர். 172 நாடுகளில் தினமலர் இணையதளம் பார்வையிடப்படுகிறது. மாநாட்டு செய்திகளுக்கு மட்டுமே, 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் வீடியோவாக இணைய தளத்தில் இடம்பெற்றிருந்தது உள்ளிட்ட தகவல்களைக் கேட்ட துணை முதல்வர் ஆச்சரியம் அடைந்தார்.

தினமலர் இணையதளத்தில் உள்ள இனியவை நாற்பது வீடியோவை துணை முதல்வருக்கு, தமிழ் இணைய மாநாட்டு தலைவர் மு. அனந்தகிருஷ்ணன் விளக்கினார். உடனுக்குடன் வெளியிடப்படும் வாசகர்களின் கருத்துக்கள், போட்டோக்கள், வீடியோ மற்றும் செய்திகளைப் பார்வையிட்ட துணை முதல்வர், தினமலர் ஊழியர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். உடன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா இருந்தார்.

வாசகர் கருத்து (3)
க.அன்பரசு மூலனூர்,இந்தியா
2010-06-27 11:59:16 IST
உலக வரலாற்றில் செம்மொழி மாநாடு மிக மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. எந்த மாபெரும் நிகழ்வுகளுக்கு காரணமான தமிழக முதல்வர் அவர்களை எந்த தமிழ்ச் சமுதாயம் என்றென்றும் மறவாது. மாநாடு சிறப்பாக நடைபெற ஆதரவு நல்கிய தினமலருக்கு நன்றிகள் பல......
சஞ்சய் கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-27 07:46:50 IST
அனைவருக்கும் தமிழ் மாநாடு வாழ்த்துக்கள் ... எனக்கு ஒரு ஆசை உண்டு .. நம் துணை முதல்வர் அவர்கள் நம் கொங்கு மண்ணுக்கே குடி வர வேண்டும் .. இங்கேயே இருந்து நம் குறைகளை களைய வேண்டும் .. இந்த பத்து மாதத்திலேயே நம் மண்ணை ஒரு அயல் நாடு போல ஆக்கி காட்டியிருக்கிறார் .. இங்கேயே இருந்து சிங்கப்பூர் போல ம்மாற்றி காண்பிக்க வேண்டும் ..சென்னை யை எப்போதும் மாற்ற முடியாது .. கண்டிப்பாக நமது ஊரை மாற்றி விடலாம் ...தயவு செய்து இங்கேயே வந்துருங்க அய்யா ......
c subash tirupur,இந்தியா
2010-06-27 00:00:15 IST
எத்தனைமுறை பார்த்தாலும் தினமலர் அரங்கம் கண்ணை விட்டு அகலாது அதன் உளியகர்கள் அன்பு என்னை விட்டு பிரியாது அவர்கள் தினமலர்.கம குடும்ப பனியன் அழகு அதற்கு சாட்சி . ...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »