E-paper   |   Sitemap   |   RSS
செம்மொழி மாநாட்டில் 'தினமலர்' பங்களிப்பு அளப்பரியதாகும்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
ஜூன் 26,2010,23:14

கோவை: செம்மொழி மாநாட்டின், இணைய தள கண்காட்சி அரங்கை நேற்று மாலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். தினமலர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'தினமலர் .காம்' அரங்கிற்கு வந்த அமைச்சர், ஆர்வமாக கேட்டறிந்தார். தினமலர் இணையதளம் மற்றும் செம்மொழி மாநாட்டிற்கு என அமைக்கப்பட்டுள்ள தனி இணைய தளத்தை பார்வையிட்டார். அப்போது, 'செம்மொழி மாநாட்டின் முதல் நாள் 5 லட்சம் வாசகர்கள் இந்த இணைய தளத்தை பார்வையிட்டு, 12 ஆயிரம் பேர் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். 172 நாடுகளில் தினமலர் இணைய தளம் பார்க்கப்படுகிறது; வீடியோ செய்திகளும் உடனுக்குடன் வழங்கப்படுகிறது' என தினமலர் ஊழியர்கள் விளக்கினர் . இதனை கேட்ட அமைச்சர் ஆர்ச்சரியம் தெரிவித்ததோடு, சாத்தனார் அரங்கில் நாணயவியல் தொடர்பாக கருத்தரங்கு செய்து உள்ளதா என கேட்டார். செய்தி இணையதளத்தில் உள்ளதை பார்த்த அமைச்சர் ஆர்சரியம் தெரிவித்தார்.

பின்னர், அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது : செம்மொழி மாநாட்டினையொட்டி அமைக்கப்பட்டுள்ள இணைய தள கண்காட்சி அரங்கை காணும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக 'தினமலர்' இணைய தள கண்காட்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தில் மகிழ்ச்சியடைகிறேன். உலக தமிழர்களுக்கு உடனடியாக செய்திகளை வழங்குவதில் முன்னனியில் உள்ளதோடு, செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தனி இணையதளம் அமைத்து, அதனை முதல் நாளில் 5 லட்சத்து ஒராயிரம் பேர் பார்த்துள்ளது மிகப்பெரிய சாதனையாகும்.

தினமலர் ஆசிரியர் முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி, பாண்டிய மன்னன் பெருவழுதியின் நாணங்கள் குறித்து கருத்தரங்கில் ஆற்றிய உரை, மாநாட்டு வளாகத்திலிருந்து நாங்கள் வெளியில் வருவதற்குள் தினமலர் இணையதளத்தில் உள்ளது. உலகளாவிய அளவில் தமிழர்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பதிலும், செம்மொழி மாநாட்டு செய்திகளை கொண்டு சேர்த்ததிலும் முழுமுயற்சி எடுத்துக்கொண்ட தினமலர் பங்களிப்பு அளப்பரியதாகும். தினமலருக்கு எனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

வாசகர் கருத்து (3)
எ.Natarajan Kolkata,இந்தியா
2010-06-29 15:28:14 IST
Hello Thennarasu, Concentrate in Primary education. Give Importance to ENGLISH. Make HIndi as one of the languages to teach. You can give more employment for Hindi teachers. Minimum Graduates/Postgraduates to be appointed to primary schools to get quality English / Tamil education even at the primary level. The present day +2 teachers are not even fit to teach Tamil. Hence highly qualified teachers are a must for betterment in education. Tamil is not the Universal language as that of English. Hence English is a must to advance technically. Think and act to bring TN to the Global standards. Please send this mail to Education minister TN. A.Natarajan Mobile 09432670494...
மு ஜவஹர் ராஜ் நாவலடி,இந்தியா
2010-06-27 23:16:32 IST
தினமலரை மினிஸ்டர் பாராட்டியது காக்க பிடிப்பதற்க .பள்ளி கல்வி துறையில் நிறைய குழப்பங்களை தினமலர் படம் பிடித்து கட்டயுள்ளது அதனால் மினிஸ்டர் புகழ்ந்து உள்ளர ...
இரா. விஸ்வநாதன் மதுரை,இந்தியா
2010-06-27 22:00:24 IST
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் பேட்டி பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி. அவர் இளைஞர். திறமையும், தகுதியும் படைத்த உண்மையான தமிழ் உணர்வாளர். அவருடன் இணைந்து ‘தினமலர்’ செயல்படலாம் என்பது எனது கருத்து. (It's my humble suggestion) தமிழகத்துக்கு வெளியே வாழும் பல கோடி தமிழர்களுக்கு உதவும் வகையில், இணையதளத்தின் வழியாக தமிழ் கற்பதற்கு ‘தினமலர்’ உதவ வேண்டும். அதற்கான முன்முயற்சியை ‘தினமலர்’ எடுக்கும் என்று நம்புகிறேன். அன்புடன்.............இரா. விஸ்வநாதன்....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »