E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
இலங்கைத் தமிழர் உரிமை மீட்கப்பட வேண்டும் : இலங்கை முன்னாள் அரசு அலுவலர் பேட்டி
ஜூன் 26,2010,23:00

கோவை : "தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததை கோவையில் கூட உலக தமிழர்கள் கொண்டாடும் வேளையில், இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் உரிமைகள் மீட்கப்பட வேண்டியது அவசியம்,'' என இலங்கையை பூர்வீமாகக் கொண்ட தமிழறிஞர் கூறினார்.

கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க கனடாவை சேர்ந்த முருகேசு பாக்கியநாதன் என்பவர் தனது மனைவியுடன் பங்கேற்றார். "தமிழே பல மொழிகளுக்கு மூலவரி வடிவம்' எனும் ஆய்வுக் கட்டுரையை நேற்று இவர் சமர்ப்பித்தார். விடுதலைப்புலி என தவறாக சந்தேகிக்கப்பட்ட தனது நண்பருக்கு மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாக இவர் தெரிவித்தார். முருகேசு பாக்கியநாதன் அளித்த பேட்டி:

இலங்கை யாழ்ப்பாணம்தான் எனது பூர்வீகம். அங்கு அரசு வாரிய தலைவர் ஆக பணிபுரிந்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்ற பின் கனடாவில் செட்டில் ஆகி விட்டேன். எங்கள் பிள்ளைகள் இன்னும் இலங்கையில்தான் உள்ளனர். நான் அரசு அலுவலராக இருந்ததால் அங்கு நடந்த இனமோதலில் எங்களுக்கு பிரச்னை ஏற்படவில்லை. ஆயுதப் போரில் நம்பிக்கை இல்லை. ஆனால் தமிழர்களின் விடுதலை லட்சியத்தை ஆதரிக்கிறேன். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததை உலகமே கொண்டாடும் வேளையில் அங்கு வசிக்கும் தமிழர்களின் உரிமைகள் மீட்கப்பட வேண்டியது அவசியம்.

செம்மொழி மாநாட்டில் என்னுடன் கனடாவை சேர்ந்த எனது நண்பர் கந்தையா நவரத்னம் பங்கேற்பதாக இருந்தது. "புலம்பெயர் இலக்கிய உருவாக்கத்தில் கனடிய இதழ்களின் பங்கு' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விண்ணப்பித்திருந்தார். அவர் ஒரு சிறந்த தமிழறிஞர்; எழுத்தாளர். தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல தகவல்களை நீண்டகாலம் ஆய்வு செய்து, அவற்றை செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில் சமர்ப்பிக்க ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் அவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக தவறாக கருதிய இந்திய அரசு, அவருக்கு விசா அளிக்க மறுத்து விட்டது. இவ்வாறு, முருகேசு பாக்கியநாதன் கூறினார்.

வாசகர் கருத்து (7)
pandian madurai,இந்தியா
2010-12-24 10:29:45 IST
யார்ருமே இல்லாத ஊருக்கு யார்குடா லைட் போடுறிங்க...
Jay USA,இந்தியா
2010-06-29 09:42:07 IST
முத்து ராஜேந்திரன் கருத்து மிக சரியானது ....
ராமசாமி SARAVANANE paris,பிரான்ஸ்
2010-06-27 18:19:49 IST
இலங்கை யாழ்ப்பாணம்தான் எனது பூர்வீகம். அங்கு அரசு வாரிய தலைவர் ஆக பணிபுரிந்தேன்.ஐந்து ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்ற பின் கனடாவில் செட்டில் ஆகி விட்டேன். இலங்கை தமிழன் உலகம் முழுவதும் பரவி இருப்பதற்கு அடிப்படை காரணங்களில் ஒன்று,உலகம் இப்போதுஇலங்கை தமிழனின் கையில்.இலங்கை??????????????????????????????????????????...
Moorthy டொரோண்டோ,கனடா
2010-06-27 17:28:14 IST
அன்பா Singapore,ஸ்லேவாக்கியா அவர்களின் கருத்துக்களுக்கு நான் நூறுவீதம் உடன்படுகிறேன். நன்றி!...
lambaadaa kaliajntham,போர்டோ ரிகா
2010-06-27 13:14:28 IST
விடுதலை புலிகள் என்றால் என்ன,இந்தியா எதற்காக வி,பு க்கு பயப்படவேண்டும்.அவர்கள் இந்தியாவை விழுங்கி விடுவார்களா?...
முத்து Rajendran chennai,இந்தியா
2010-06-27 09:31:52 IST
தமிழ் மொழியின் சம பங்கு குறைக்க பட்டது அரசு பதவிகளில் தமிழர் குறைக்க பட்டனர். தமிழரின் பூர்வீக உரிமை மறுக்க பட்டது. இது தானே தமிழரை போராட வைத்தது. அடுத்த வீட்டுக்குள் மிக பெரிய சண்டை என்றால் பக்கத்துக்கு வீடு மக்கள் தட்டி கேட்பதில்லையா.? இதை தான் உலக நாடுகள் கேட்கவும் தமிழரை காக்கவும் தவறி விட்டன.மனித உரிமை மீறலை கூட கேட்க தவறி விட்டது உலகம்....
அன்பா Singapore,ஸ்லேவாக்கியா
2010-06-27 07:42:17 IST
வணக்கம். தமிழன் உலகம் முழுவதும் பரவி இருப்பதற்கு அடிப்படை காரணங்களில் ஒன்று, தமிழகத்தில் பிழைக்க போதிய வாய்ப்பில்லை என்பதுதான். பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் தலை சிறந்து இருந்திருக்க வேண்டும். ஆனால், குடும்ப அரசியலும், தொலைநோக்குச் சிந்தனையுள்ள இளையர்கள் ஆட்சியில் இல்லாததும், நாட்டு வளர்ச்சியில் நாட்டம் காட்டும் தலைமைத்துவம் இல்லாதும், தமிழகத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வந்துள்ளன. இலங்கைப் போர், இலங்கைத் தமிழர்களை உலகின் பல்வேறு மூலைகளுக்கு விரட்டியது. தமிழகம், உலகத் தமிழர்கள் மீது அக்கறை காட்டி இருந்தால், தமிழன் மேலும் தலை நிமிர்ந்து நின்று இருப்பான். இலங்கைப் போர், நமக்கு ஒரு படிப்பின். போரில் சிந்திய இரத்தத்தில் கொண்டு, அந்தப் படிப்பினையின் ஒவ்வோர் எழுத்தும் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் தமிழனுக்கு மட்டும் அல்ல, உலகில் பரவிக் கிடக்கும் தமிழினம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், ஒன்று உண்டு. அதுதான் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது. வாருங்கள், தமிழால் ஒன்றுபடுவோம். தமிழா, தமிழனின் மண்ணுக்கான இறந்த தமிழர்களை மறக்காதே. பொருளியல் வளர்ச்சியை நோக்கிச் செல். அந்த வளர்ச்சி, தமிழுக்கு மறு மலர்ச்சியை ஏற்படுத்தச் செய். உலகம் இப்போது நமது கையில். அதை சிந்தித்து செயல்படுத்தி, தமிழையும் தமிழனையும் இணைப்போம். இலங்கை மட்டும் அல்ல, உலகம் முழுவதிலும் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும், இதனால் பெருமிதம் கிட்டட்டும். ...
Nandakumar Netherlands,இந்தியா
2010-06-27 04:28:41 IST
கண்டீப்பாக தமிழர் உரிமை இலங்கையில் மீட்கப்பட வேண்டும் . அண்டை நாடான நம் இந்திய தேசம் அங்கு ப்ரிச்சனையில் இருக்கும் தமிழருக்கு நல் வலி பிறக்க உதவிட வேண்டும் .....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »