E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
ஆன்மிகத்துக்கு இடமில்லை என்பது தவறு!
ஜூன் 26,2010,21:04

செம்மொழி மாநாடுக்கு வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் கூறியதாவது: நான் 1986ல் மலேசியாவில் நடந்த தமிழ் மாநாட்டுக்குச் சென்றிருக்கிறேன்; தஞ்சையில் நடந்த தமிழ் மாநாட்டிலும் பங்கேற்றிருக்கிறேன். இப்படியொரு பிரமாண்டமான ஏற்பாட்டை, கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை. பேருந்து வசதி, சாப்பாடு வசதிகள் எல்லாமே அருமையாக செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டம், ஜெயன்ட் வீல் பார்க்கவும், பாம்பே அப்பளம் சாப்பிடவும் வந்த கூட்டமில்லை. தமிழ் உணர்வோடு வந்த கூட்டம் என்பதில் சந்தேகமில்லை.

உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் ஒன்று கூடியுள்ள அற்புத நிகழ்வாக இந்த மாநாடு அமைந்துள்ளது. செம்மொழி மாநாட்டால் கோவை புதிய தோற்றம் பெற்றிருக்கிறது. இந்த மாநாடு முடிந்தபின், இன்னும் பெரிய வளர்ச்சியைப்பெறும். மாநாடு நடத்தியதால், தமிழ் வளருமா என்று கேட்பது, குறை கூறுபவர்களின் கூற்று. தமிழ் வளர்ச்சிக்கான பல நல்ல அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்பது நிச்சயம். தமிழில் படிப்பவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழை விருப்பப்பாடமாகப் படிப்பவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்க அரசு முடிவு செய்யலாம்.

செம்மொழி மாநாட்டில் ஆன்மிகத்துக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை என்பது குறை கூறுவோரின் கூற்று. இது தமிழுக்கான மாநாடு; ஆன்மிக மாநாடு இல்லை. இதில் எல்லாவற்றுக்கும் இடம் உள்ளது. சமயம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. ஒருவருக்கு தயிர் சாதம் பிடிக்கிறது என்பதற்காக அதையே எல்லோருக்கும் வாரி வழங்கிவிட முடியாது. இது எல்லாம் கலந்து தருகிற விருந்து போன்றது. இங்கே தமிழ் வளர்ப்புக்கான எல்லா அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன. தமிழுக்காக நடத்தப்படும் இந்த மாபெரும் விழாவால், எல்லா தமிழர்களும் பெருமை பெறுவர். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

வாசகர் கருத்து (12)
ரெங்கராஜ் கோவை,இந்தியா
2011-03-15 08:57:40 IST
சேகர் ஐயா அவர்களுக்கு ஞான திருஷ்டி. வந்தவர்கள் அத்தனை பேரின் உள்ளத்தையும் நாடி பிடித்து பார்த்து விட்டவர் போல பேசுகிறார் ! பாவம்...
முத்து துபாய்,இந்தியா
2010-08-19 15:23:17 IST
உன் அரசியல் நாடகம் செல்லாது...
சீ.விட்டல் கைகா,இந்தியா
2010-07-06 06:14:41 IST
உ வே சாமிநாத ஐய்யர் அவர்கள் ஐய்யர் என்பதால் அவர்களை பற்றி குறிப்பிடவில்லை என்பதுதான் உண்மை....
நA சந்திரசேகரன் madurai,இந்தியா
2010-06-28 21:55:28 IST
பக்தி இலக்கியம் தமிழ் மொழிக்கு கிடைத்த பெரும் சிறப்பு. திருவாசகம், அப்பர்,சுந்தரர்,ஞானசம்பந்தர் தேவாரம் நான்கு வேதத்திற்கு சமம் சங்க இல்லக்கியத்தில் ஆன்மிகம் பற்றி இல்லாமல் இருந்திரந்தாலும் பின்னர் வந்த பக்தி இல்லக்கியம் பெரும் சிறப்பு. செந்தமிழ் மகாநாடு பக்தி இல்லக்கியயத்தை பற்றியும் ஆராய வேண்டும். பக்தி இல்லக்கியத்தில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றும் மந்திர சொற்கள். சிலப்பதிகாரத்தில் கூட "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் " என்ற கருத்து உள்ளது. தமிழுக்கு கிடைத்த பெரும் சிறப்பு. ௧) சங்க இலக்கியங்கள்.. ௨) பக்தி இலக்கியங்கள். ௩) நீதி இலக்கியங்கள். திருக்குறள், அகநானுறு, புறநானுறு, பத்துபட்டு, எட்டுத்தொகை ...
உஷா வ அயர் moorseville,உஸ்பெகிஸ்தான்
2010-06-27 21:02:49 IST
உண்மை பேசும் திரு சேகர் அவர்களின் துணிவை பாராட்டுவோம்...
ச.சிவகுமார் கும்பகோணம்,இந்தியா
2010-06-27 13:55:57 IST
சேகர் சொல்வது மிகமிக சரி. ஜிங்சா. எம். எல். எ. சீட் நிச்சயம் உண்டு. ஜிங்சா. மீண்டும் அம்மாவிடம் செல்லாமல் இருந்தால் சரி. ஜிங்சா ஜிங்சா....
இல .செ நாதன் tirunelveli,இந்தியா
2010-06-27 13:00:57 IST
ஐயா சேகர் அவர்களே ,முதலில் உமது எம் எல் எ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிறகு கதைகளை பேசும் . மக்கள் ஓட்டு போட்டது காட்சிக்காக ,உங்கள் முகத்துக்காக இல்லை...
எ. பிரகாஷ் tirupur,இந்தியா
2010-06-27 12:23:59 IST
செம்மொழியாம் தமிழ்மொழி ஆத்மாவின் இன்னிசை செம்மொழியாம் தமிழ்மொழி உலகத்தின் இன்னிசை தமிழின் முதல் மொழி அம்மா உலகத்தின் முதல் மொழி செம்மொழி...
அசுகி.ரஅசுகி சென்னை,இந்தியா
2010-06-27 12:22:04 IST
bn threr there was no mention of u e ve swanminatha iyer . u ve swaminatha iyer . not een not even a word ....
moorthy singai,ஸ்லேவாக்கியா
2010-06-27 09:10:10 IST
neenga oru indipendant aanal dependant...
vazhthukkal சேகர் நீங்கள் சொல்வது 100 நூறு சரி ...
குமரன் சென்னை,இந்தியா
2010-06-26 22:17:10 IST
தி.மு.க.வில் சேராமலே ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ ஆகப் பணியாற்றும் சேகருக்கு "சேராமலே சேர்ந்த சேகர்" என்ற பட்டத்தை வழங்கலாம். ...
2010-06-26 21:45:44 IST
தமிழ் மீடியம் மூலம் படித்த எஞ்சினியர் பணி இல்லாமல் இருப்பது பல பெற்றோர்களுக்கு சங்கடமாயுள்ளது மாநாட்டு முடிவாக இவர்களுக்கு வேலை கிடைக்க அரசு ஏற்ப்பாடு செய்ய வேண்டும் வாழ்க வளமுடன் ...
குமரகுருபரன் திருச்சி,இந்தியா
2010-06-26 21:08:34 IST
எம். எல். எ. சீட் நிச்சயம் உங்களுக்கு உண்டு. வாழ்த்துக்கள்....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »