E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு?
ஜூன் 26,2010,20:50

தமிழகத்தின் வேறெந்த பெரு நகரத்துக்கும் கிடைக்காத பெருமை, கொங்கு மண்ணுக்குக் கிடைத்திருக்கிறது. சங்கத் தமிழுக்கு செம்மொழி என்னும் தங்க மகுடம் கிடைத்ததற்காக, பொங்கு தமிழர்களெல்லாம் சங்கமித்துக் கொண்டாடிய, முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெருமைதான் அது.

இப்படியொரு பிரமாண்டத்தையும், பிரமிப்பூட்டும் கூட்டத்தையும் கோவை நகரம் முன்னெப்போதும் கண்டதில்லை. முந்தைய உலகத் தமிழ் மாநாடுகளை எல்லாம் மிஞ்சுகிற கூட்டம், செம்மொழி மாநாட்டுக்கு வந்தது என்பதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஐந்து நாட்களில் ஆறு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தது அரசு. ஆனால், மாநாட்டு நாட்களிலும், நீட்டிக்கப்பட்டுள்ள கண்காட்சி நாட்களிலும் வரும் மக்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வகையில், இந்த மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதும் உண்மை. தமிழுக்கு இன்னொரு முறை இப்படியொரு மாபெரும் திருவிழா நடத்தப்படுமா, அது இந்தளவுக்கு வெற்றி பெறுமா என்பதெல்லாம் சந்தேகமே. அதேநேரத்தில், இதெல்லாம் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமா, உணர்வோடு ஒன்று கூடிய கூட்டமா என்றொரு சிக்கலான கேள்வி எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை.

தமிழுக்காக நடத்தப்பட்ட இந்த மாநாட்டால் தமிழ் எந்த அளவுக்கு பாதுகாப்பு பெறும் அல்லது வளர்க்கப்படும் என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். இந்த மாநாட்டை எந்த நோக்கத்தில் கருணாநிதி நடத்தியிருந்தாலும், அதில் தமிழின் மீதான அவரது தீராக்காதலும் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான், தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுமாறு தமிழறிஞர்களைக் கேட்டுக் கொண்டார் முதல்வர். அரசியல் தலைவர்களிடமும் இதையே எதிர்பார்த்தார் அவர். எல்லோரும் சொல்லும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிவிப்புகள் வருமென்றும் அவர் உறுதியளித்தார். நிறைவு விழாவில் இடம் பெறும் தனது பேச்சு, இன்னொரு "பட்ஜெட்' உரையாக இருக்குமென்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் தூண்டி விட்டுள்ளார். ஆனால், முதல்வர் கேட்ட ஆணையையும், ஆலோசனைகளையும் வழங்கியிருக்க வேண்டிய வேண்டியவர்கள், அந்த கடமையைச் செய்தார்களா என்றால் இல்லவே இல்லை. ஆய்வரங்கத்தில் நல்ல பல தலைப்புகளில் விவாதங்கள் நடந்தன; ஆய்வுக் கட்டுரைகளில் ஆழ்ந்த கருத்துக்களும் தென்பட்டன. முதல் முதலாய், இலக்கியத்தோடு இணையம் சேர்ந்ததைப் போல, தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைய மாநாடும் இணைந்தே நடந்தது. கண்காட்சியும் தமிழினத்தின் பழமையை, பாரம்பரியத்தை, நாகரிகத்தை இந்த தலைமுறைக்குச்சொல்லும் விதத்தில் நன்றாகவே உள்ளது. பழமையான இலக்கிய நிகழ்வுகளை நினைவூட்டிய எழிலார் பவனியும் புதுமையாகவே இருந்தது. இப்படி எல்லாவற்றிலும் தமிழின் வாசம் இருந்தது; ஆனால் தமிழ் சுவாசமாய் இல்லை.

தமிழை வளர்த்தெடுக்க அரசே ஆலோசனை கேட்கும் அற்புதமான வாய்ப்பை அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் அப்பட்டமாகத் தவற விட்டார்கள். மாறாக, அதிகார மையங்களுக்கு புகழ் பாடக் கிடைத்த வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொண்டனர். ஆய்வரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம் எல்லாவற்றிலும் புகழ்ப்பாக்களே அதிகம் இடம் பெற்றன. சில அறிஞர்கள், கட்டுரைத் தலைப்புகளிலேயே, தங்களது தீவிர விசுவாசத்தை வெளிப்படுத்தினர். கட்சி மேடைகளில் சரவெடியாய் தமிழ் பொழியும் பல அரசியல் தலைவர்களும், மாநாட்டு மேடையில் துதிபாடிகளாய் மாறிப் போயினர். ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்கள், அரசியல் மாநாடு நடத்தினாலும், அரசு விழா நடத்தினாலும் இத்தகைய துதிபாடல்களைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால், செம்மொழி மாநாட்டில் செவியிரண்டும் கிழிந்து போகும் அளவுக்கு, பலரும் உரக்கத் துதி பாடியது, முதல்வருக்கே சற்று நெருடலாய் இருந்திருக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி, தமிழை வளர்ப்பதற்கான பல நல்ல ஆலோசனைகளையும் இந்த மாநாட்டில் பலர் வழங்கியிருக்கிறார்கள். தமிழை அறிவியல் மொழியாக மாற்ற வேண்டும்; தமிழ் வளர்ச்சித்துறையை நிறுவனமாக மாற்றி, வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் தமிழைப் பரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில், பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும்; மேல்நிலைக் கல்விகளில் தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும்...என இந்த பட்டியல் நீள்கிறது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து, அதன் அடிப்படையில் சிறப்பு மிக்க முக்கிய அறிவிப்புகளை முதல்வர் இன்று வெளியிடுவார் என்பது பலரது எதிர்பார்ப்பு. தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கும் தமிழும், தடங்களை இழந்து வரும் தமிழினமும், தமிழ்நாடும் தலை நிமிர வேண்டுமென்பது பலரது விருப்பம். இதையெல்லாம் உணராதவரில்லை முதல்வர் கருணாநிதி. அவரே "பட்ஜெட்' போல அறிவிப்பு என்றதும், பலருக்குள்ளும் படபடப்பு அதிகரித்திருக்கிறது. சரித்திரத்தில் பதிவு பெறப்போகும் இப்படியொரு மாநாட்டில் அவர் வெளியிடும் அறிவிப்புகளும் வரலாற்றுச் சிறப்புடையதாக இருக்குமென்பதில் யாருக்கு மாற்றுக்கருத்து இருக்கும்?

வாசகர் கருத்து (46)
முல்லை முருகேசன்இராமசாமி கௌண்டர் நாமக்கல்மற்றும்துபாய்,இந்தியா
2010-11-06 01:47:17 IST
தமிழர்களே என் அன்னையை விட தமிழ் மொழியையும், தமிழ் மண் மீதும் பற்று உள்ளவன் என்ற முறையில் கூறுகிறேன். மாண்புமிகு முதலமைச்சர் திரு.கருணாநிதியின் முதல் மற்றும் கடைசி (உலக அளவில்) மிக பெரிய மாநாடு தமிழுக்கு வேண்டி நடத்தியதை எண்ணி பெருமை பட வேண்டும். குடும்ப அரசியல், அவரின் அரசியல் ஆட்சி பற்றி குறை கூறும் மக்கள் இந்த ஒரு தமிழ் மொழி மாநாட்டினை குறை கூறாதீர்கள் நண்பர்களே. திரு கருணாநிதி அவர்களை மனமார பாராட்டுகின்றேன். வாழிய தமிழ்! வளர்க தமிழர்கள்! வளரட்டும் என் தமிழ்மொழி! (தமிழ் மொழி வளர ஒரே வழி -> அண்டை மக்கள் தமிழ் கற்றால் சிறப்பு தொகை மற்றும் கௌரவப்பட்டம் வழங்க வேண்டி கேட்டு கொள்கிறேன்)...
அன்வர் துபாய்,இந்தியா
2010-08-16 11:47:10 IST
தமிழன் என்று சொல்லுடா தலைநிமிர்ந்துநில்லுடா...
Nakkeeran Toronto,கனடா
2010-07-21 04:49:13 IST
தமிழுக்கு விழா எடுப்பதால் தமிழ் வளராது. தமிழைப் பயன்படுத்தினால் மட்டுமே தமிழ் வளரும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எங்கும் தமிழ் கற்கை மொழியாகச் செய்ய வேண்டும். கோயில் வழிபாடு தமிழில் இருக்க வேண்டும். நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடும் உரிமை இருக்க வேண்டும். அலுவலக மொழி தமிழில் இருக்க வேண்டும். இவற்றைச் செய்தால் தமிழ்மொழி தானே வளரும்....
ராதாக்ருஷ்ணன் மலேசியா,இந்தியா
2010-07-20 11:22:39 IST
தமிளுக்கு மாநாடா! இல்லை கருணாநிதி தன் குடும்ப மாநாடா! எனக்கு தெரியாது....ஆனால் என் தாய் தமிழுக்கு இப்படி ஒரு விழா நடந்ததில் எனக்கு மகிழ்ச்சி......
gbgbbg dhdfhdfg,ஆப்கானிஸ்தான்
2010-07-11 14:46:31 IST
வேஸ்ட் ...
anna.sena Dubai,யூ.எஸ்.ஏ
2010-07-08 01:19:12 IST
Hello, i am sorry to say,dont know how to make tami fontsl in this bulletin box so please let me know any one.would like to discus with you all.........
சங்கர நாராயணன் லண்டன்,புதுச்சேரி
2010-07-04 16:25:36 IST
நல்ல மாநாடு. எவ்வளவோ பண்ண வேண்டிய நல்ல காரியங்கள் இருக்கும்போது இவ்ளோ காசு செலவழிச்சு இப்படி ஒரு விழா தேவையா? இதனால யாரு வீட்டுல அடுப்பு எவ்ருஞ்சது?...
villivooraan ssss,இந்தியா
2010-07-04 01:44:01 IST
தலைப்பே சரியாற்றதுபோல் தெரிகிறது. தமிழுக்கு மாநாடு நடத்தினால் மட்டும் தமிழ்நாட்டினால் தலை நிமிரமுடியுமா? மனுநீதி சோழன் போல் ஆட்சி செய்ய கூடியவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழ்நாடு தலைநிமிரும். ஜாதிபேரை சொல்லாமல், காசு பணம் கையூட்டு பெறாமல், திறமைக்கு ஏற்ற வேலை, கடமை தவறாத கையூட்டு பெறாத அரசு வூழியர்கள், கோசம்போட சொல்லாத வோட்டுக்கு காசு கொடுக்காத, பொய் சொல்லாத திருட்டுதனம் பண்ணாத அரசியல்வாதிகளால் மட்டுமே தமிநாடு தலை நிமிரும். வல்லரசு நாடுகள் மொழிமானாட்டை நடத்தியதால் பொருளாதார வளர்ச்சி அடையவில்லை. அந்நாட்டு மக்கள் ஒழுக்கமான தலைவர்களை தேர்ந்து எடுத்தால் மட்டுமே அவைகள் வல்லரசு நாடாக ஆனது....
karunganni chennai,இந்தியா
2010-07-01 07:22:47 IST
what a waste of taxpayers money for self aggrandisement? a language alone has given the people food and shelter...
M மெய்யநாதன் போர்த்ப்ளைர்அந்தமான்,இந்தியா
2010-07-01 00:02:19 IST
தமிழ் மொழி ஒரு தொன்மை வாய்ந்த மொழி... கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான மொழி.... 2004 ஆம் ஆண்டு அது செம்மொழி தகுதியை அடைந்து விட்டது... 2006 ஆம் ஆண்டு தி. மு.க ஆட்சிக்கு வந்த பிறகு உடனடியாக இந்த மாநாட்டை நடத்தியிருக்க வேண்டும் 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடை பெற இருக்கும் தருவாயில் மக்களிடம் வேடிக்கை காட்டுவதர்க்காகவே இந்த மாநாடு நடத்தப்பட்டது ... மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இது போன்ற அரசியல் கட்சிகளை ஒழிக்க முடியும்... படித்த பண்புள்ள சுயநலமில்லாத பொதுநோக்குடைய இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.........
மெய்யர் மெய்யநாதன் போர்த்ப்ளைர்,இந்தியா
2010-06-30 23:47:19 IST
பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகத்தை செம்மொழி மாநாட்டில் சொன்னால் மட்டும் போதாது. அதை நடைமுறையில் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். கலைஞர் முதல்வர் அவர்கள் இதை செய்துவிட்டால் இந்த செம்மொழி மாநாட்டின் வெற்றி அதுவே ஆகும்...
கே. சுபாஷ் உரல்பட்டிஉடுமலைப்பேட்டை,இந்தியா
2010-06-30 16:26:22 IST
மரணப் படுக்கையில் உள்ள ஒருவரைக் காப்பாற்றும் வழி அவர்மேல் பஜனை பாடுவது அல்ல. நல்ல மருந்தும் நல்ல உணவும்தான் அவரைக் காப்பாற்றும். அதுபோல ஒரு மொழியைக் காப்பாற்ற வேண்டுமானால் ஆடம்பர விழாக்கள் போன்ற மாநாடுகள் பயன்படாது. அந்த மொழியை நம்பி அந்த மக்கள் வாழ முடிய வேண்டும். அத்தகைய ஒரு நிலையை அடைவது என்ற பூனைக்கு இந்த எலிகள் மணி கட்டுமா?...
prajjnavaru dindigul,இந்தியா
2010-06-29 20:47:00 IST
this is waste...
ர . Devanathan chennai,இந்தியா
2010-06-29 15:59:31 IST
pirra pokkum எல்லாவுயிர்க்கும் என்பது சரிதான் ஆனால் ,வேலோடு நின்றான் கொடு என்ற குறள் இந்த அரசியல் வாதிகளை பார்க்கும்போது நினைவிற்கு வராமல் இல்லை ...
ப.ரத்தினசாமி tiruppur,இந்தியா
2010-06-28 19:21:34 IST
தமிழா கச்சிமாநாடு என்று கூறாதே எந்த கச்சியாகேருந்தாலும் இதைத்தான் செய்யும்,ஆகவே நீங்கள் தமிழனாக கலந்துக்குங்க....
p.rathinasamy thiruppur,இந்தியா
2010-06-28 19:09:31 IST
தமிழன் எதனை பேர் இருக்காங்க ஆனா செம்மொழி மாநாட்டில் கலந்தவங்க லச்சக்கனகானவங்கதானா, கோடிக்கணக்கில் வரவேண்டிய தமிழர்கள், தமிழ் உணர்வு எங்கே போனது தமிழனுக்கு நாம் தான் தமிழன் தமிழன் என்று கூரிகொள்ளவேண்டும், இது ஒரு ஜாதி மாநாடாக இருந்திருந்தால் அப்பா! எங்கே போனது தமிழ் உணர்வு தமிழா தூங்காதே தமிழா இனியும் ... ...
2010-06-28 18:27:04 IST
திரை கடல் ஒடி திரவியம் தேடும் உலக தமிழர்கள் தலை நிமிர்ந்தது. இத்தமிழ் செம்மொழி மாநாட்டால் என்றால் மிகை இல்லை.தமிழர் நிலை உயரும் தமிழின் தலை நிமிரும். ...
மோகன் எர்னாகுளம்,இந்தியா
2010-06-28 06:43:46 IST
As somebody pointed, in Kerala, all the cheap labour are being done by the Tamil people from south TN and areas like Salem and surrounding places. this is true for places in North of India. Even I have seen people working for the road laying jobs in the hottest summer on the haryana and rajasthan highways and as housemaids also. Our politicians does not cross tamil nadu border and there is no chance that they could have seen this pathetic situations of Tamilans ( My Blood) doing the odd and sundry jobs. Truely, blood oozes out of our hearts when we see such conditions. We cannot assure them a daily living as we have limited resources as individuals, other than offering some tips out of pity as fellow brethren. Somebody needs to bell the cat. . ...
venkateswaran chennai,இந்தியா
2010-06-28 06:23:47 IST
kalamum panamum nathiyai pravaham eduthathu silar chillarai parthanar, vazgha tamil, ...
சர் குமார் சிகாகோ,இந்தியா
2010-06-28 01:35:56 IST
ஏன் வெளி மாநிலம் நாடு பொய் போலைக்குங்கரேன்? இங்கே ஏற்றுமதி சந்தை உருவாக்குங்கள். வெளி நாடுகளுக்கு உங்கள் உற்பத்தியை ஏற்றுமதி செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையை அல்ல. ஜப்பான் மற்றும் கொரியாவின் சரித்திரத்தை படியுங்கள்....
vijayaraghavan அபுDhabi,யூ.எஸ்.ஏ
2010-06-28 01:05:14 IST
திருமதி கனி மொழி மற்றும் சுமதி என்ற தமிழச்சி ஒரு மித சிறந்த கவிஞ்சர்கள் ....
செல்வம் சென்னை,இந்தியா
2010-06-27 23:06:46 IST
தமிழ்நாட்ட விட்டு தாண்டவே முடியாது தமிழுன்னு சொன்னால்,இங்கிலீஷ் எப்படி ஒரு சுப்ஜெக்ட் அது மத்ரிரி ஹிந்தி சேருங்க ஒரு பாடாம அபோதான் எங்க போனாலும் பிழைக்க முடியும்.இல்லன இங்கே குண்ட சதியல குதிர ஓட வேண்டியது தான். தமிழு தமிழுன்னு பெசமலமே தவிர வழுக்கைக்கு ஒத்துவராது.எந்த அரசியல்வாதி பிள்ளை தமிழ் மீடியம் ஸ்கூல் ல் படிக்குது?முதல அவங்கள படிக்கச் வைக்க சொல்லணும் அவங்க பிள்ளைகளா.... ...
பைந்தமிழ் நேசிகன் பொதிகைமலைஅகத்தியமுனிவர்அடிவாரம்,இந்தியா
2010-06-27 22:39:52 IST
தமிழ் மொழி ஒரு தொன்மை வாய்ந்த மொழி... 2004 ஆம் ஆண்டு அது செம்மொழி தகுதியை அடைந்து விட்டது... 2006 ஆம் ஆண்டு தி. மு.க கட்சி ஆட்சி கு வந்த பிறகு உடனடியாக இந்த மாநாட்டை நடத்தியிருக்க வேண்டும் 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடை பெற இருபதால் மக்களிடம் வேடிக்கை காடுவதர்க்காகவே இந்த மாநாடு நடத்த பட்டது ... மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இது போன்ற அரசியல் கட்சிகளை ஒழிக்க முடியும்... தி. மு.க வும் வேண்டாம் அ.தி.மு.க வும் வேண்டாம்... படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்......
shanmugasundharam tiruppur,இந்தியா
2010-06-27 21:52:33 IST
நல்ல தமிழய் பார்த்தேன் இப்பொழுதுதான் நன்றி ...
பிரசாத் புதுக்கோட்டை,இந்தியா
2010-06-27 21:40:49 IST
தமிழ் வளர்க்க சங்க இலக்கியத்தை பற்றி பேசினால் மட்டும் போதாது தமிழை காப்பாற்ற புது புது கட்டுரை, பாடல் என்று படைகப்படவேண்டும் அவை அனைத்தும் மக்களக்கு சென்று சேர வேண்டும்.மேலும் பெற்றோர் தன் மகன்,மகள் தமிழில் பேச உக்குவிக்க வேண்டும். மேற்ப்படிப்பில் கட்டயாம் தமிழை சேருக வேண்டும்.இவைகளை செய்தால் கட்டயாம் தமிழ்நாடு தலை நிமுரும்.......வாழ்க தமிழ்....
abdurrahman chennai,இந்தியா
2010-06-27 21:09:29 IST
இதெல்லாம் வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் அதுதான் உண்மை....
john Madurai,இந்தியா
2010-06-27 20:33:43 IST
தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவதைவிட ஆசிரியர்களுக்கு சரியான தமிழ் உச்சரிப்பை கற்றுகொடுத்து அடுத்த தலைமுறை தமிழர்களாவது நல்ல தமிழ் உச்சரிப்பில் பேசட்டுமே! சென்னை, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் அ, ஆ, ..., க, கா, ... எழுத்துகளை முறையே ஆ, ஆ...ஆ, ..., கா, கா...கா, கீ, கீ...கீ,...(சென்னை - குறில் இல்லை), அ வன்னா, ஆ வன்னா, இ யன்னா, ... க வன்னா, கா வன்னா, ... (மதுரை -வன்னா சேருகிறது), அ(எ), ஆ, இ,... க(எ), கா, கி, ...(திருநெல்வேலி - அகரமுடன் எ சேர்ந்தே ஒலிக்கிறது). இதுதான் இளந்தலைமுறையின் பிரச்சனை அல்லது பிரச்சனையின் மூலம்....
சத்தியநாதன் தலைவாசல்,இந்தியா
2010-06-27 19:47:59 IST
தமிழுக்கு பெருமை சேர்ப்பது நமது கடமை. தமிழ் பேசுவதால் நமக்கு பெருமை, உண்டு உரைவிடம் போல் தமிழும் நமது உயிர் முச்சு, தமிழை நேசிப்போம் தமிழ் கற்றை சுவாசிப்போம், அகில உலக தமிழ் செம்மொழி மாநாடு நமக்கு பெருமை தர கூடிய ஒரு வரலாற்று சம்பவம். தமிழை பேசுவது வரலாறு படிப்பது போன்றது, தமிழை காப்பது வரலாறு படைப்பது போன்றதாகும், உலகத்தி அணைத்து மொழிகளுக்கும் தாய் மொழி தமிழ் ஆகும். * * * தமிழ் ஒரு சரித்திரம் * * *...
யூசுப் dubai,யூ.எஸ்.ஏ
2010-06-27 18:49:49 IST
இது எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்குது ஆனா நடைமுறை வாழ்க்கையிலே சாத்தியப்படுமா தமிழை மட்டும் படித்து விட்டு தமிழ்நாட்டை விட்டு வேற எங்கேயும் தமிழன் பொழைக்க முடியாது ஏன் அடுத்த மாநிலத்தில கூட பொழைக்க முடியாது. இது தான் உண்ம்மை ...
tirunavukarasu texas,செர்பியா & மொண்டெனேகுரோ
2010-06-27 17:53:26 IST
தமிழ் அறிஞர்கள் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நிரந்தர அமைதி நிலவ பாடுபடவேண்டும். அப்போதுதான் இது உண்மையான தமிழ் மாநாடு...
சந்துரு நட்ராம்பள்ளி,இந்தியா
2010-06-27 15:09:22 IST
எல்லா விஷயத்திலும் தமிழை நாம் தான் காப்பாற்ற வேண்டும். Actually நான் என்ன சொல்ல வருகிறேன் என்று இப்போது நமக்கு தெளிவாக விளங்கும் என நான் நினைக்கிறேன். பிற மொழி கலப்பில்லாமல் பேச்சு தமிழை நாம் இந்த நிமிடம் இருந்து உச்சரிக்க செய்தலே போதும். நிலைமை கண்டிப்பாக மாறும்...
Raghu Kolkata,இந்தியா
2010-06-27 14:42:03 IST
கருணாநிதி போன்ற அரசியல் வியாதிகள் இருக்கும் வரை தமிழ் வாழ்வது கடினம் தான்.......
jeyashri டெல்லி,இந்தியா
2010-06-27 14:41:46 IST
சாணக்கிய கலைஞர் தம் செம்மொழி மாநாட்டிற்கு வந்தனம். தமிழகமெங்கும் திருவிழாகோலம் . போட்டி போட எத்தனை மொழிகள் வந்தாலும் , ஆளுமை மொழிகளை விட, சிறப்பான ஒரு தொன்மையான தமிழிக்கு மாநாடு நடத்துவது பெருமைப்பட வேண்டிய ஒன்று.அம்மா தினம், அப்பா தினம், காதலர் தினத்தை விட தாய் மொழிக்காக செம்மையான தமிழ் மொழி மாநாடு நடக்க தலைனகரிலிருந்து வாழ்த்துகிறோம்.வடக்கை, தெற்கில் சங்கமிக்க வைத்த பெருமை தமிழக முதலமைச்சரை சாரும்.தமிழுக்கு உண்டான அனைத்து புகழையும் மேதைக்கு கிரீடமாக சூட்டுவோம்.தமிழ் எங்கும் ஒலிக்கட்டும்.தமிழர்கள் உலகத்தில் எங்கும் ஒளிர்கிறார்கள். வளர்க தமிழ். கலைஞர்களுக்கெல்லாம் கலைஞராக திகழும் கலைஞரை வாழ்த்தி மீண்டும் மீண்டும் செம்மொழி மாநாடு நடத்த உதய சூரியன் உதிக்கட்டும்.தமிழக முதல்வரின் முயற்சிக்கு பாராட்டுகள்.தமிழ் , டேமில் ஆக மாறாமல் இருக்க அணைத்து தமிழ்கர்களும் செம்மொழி ஐ அறிவோம் , பிழையற கற்போம். வாழ்த்துகள். சாளரம் ஜெயஸ்ரீ...
surya salem,இந்தியா
2010-06-27 14:41:38 IST
நான் அனைத்து தமிழ் குலத்தையும் ஒன்று சேர கோவை மண்ணில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி. தமிழ் வாழ தமிழர் வாழ்வார். தமிழ்நாடு வாழும். ஏட்டில் எழுதாமல் செயலில் ஆனது இனி எல்ல துறைகளிலும் நடவடிக்கை தொடர வேண்டும் -- வரும் காலத்தில் வேற்று மாநில மக்கள் ஆக்கிரமிப்பை அரசு தடுக்க ஆவன செய்யவேண்டும். அப்போதுதான் தமிழரையும் தமிழ் பண்பாட்டையும் காக்க முடியும்.தனி சட்டம் சட்டசபைஇல் ஏற்ற வேண்டும்.....
samson aseervatham TRIVANDRUM,இந்தியா
2010-06-27 13:30:19 IST
Tamils are serving at the platforms of the cities in Kerala,ironing cloths,selling peanuts,.collecting scraps,washing plates in petty hotels,masons.,begging, and doing odd and silly jobs.They are living in inhuman conditions .It is pathetic to see them everyday .The Tamil school here is also neglected by the government . When the position of Tamils are elevated the position of Tamil automatically rises.will the Tamilnadu Govvernment look into their crucial problems....
guru prasad chennai,இந்தியா
2010-06-27 13:06:31 IST
oru tamilan dr. kalaingar karunanethi ulagin ulla anaithu tamizargalin udambil pudu rattham(blood) paichi vittar vazga tamil...
ஹெதி chennai,இந்தியா
2010-06-27 13:00:06 IST
nice...
கா. சிவக்குமார் bangalore,இந்தியா
2010-06-27 11:53:12 IST
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு செய்திகளை மிக அற்புதமாக கொடுத்ததற்கு தினமலருக்கு மிக்க நன்றி,...
ஜெபமணி mohanraj chennai,இந்தியா
2010-06-27 10:41:30 IST
தலையa எங்கே இருக்கு?தமிழ்நாடே போயாச்சு . அவ்வளுவுதான். ...
ராமராஜ் தூத்துக்குடி,இந்தியா
2010-06-27 10:24:08 IST
"தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு ? "- நல்ல ஒரு கேள்வி , மாநாடோடு தமிழ் பேச்சு நின்று விடாமல் தமிழனின் மூச்சிருக்கும் வரை பேச்சு ஓயாதிருக்க வேண்டும் .... வீச்சரிவாள் வீசிய கட்ட பொம்மன் காலத்திலருந்தே கேட்ட வீர தமிழ், வோயதிருக்க வேண்டும், தமிழ் நாடு தலை நிமிர ஓவ்வொரு தமிழனின் தனிப்பட்ட வாழ்வாதாரம் முன்னேற இந்த அரசு புதிய முயற்சி எடுக்க வேண்டும்.. .... வீழ்வது தமிழனாக இருந்தாலும் வாழ்வது தமிழக இருக்கட்டும் .........வாழ்க தமிழ்...
முனைவர் இரா மணிகண்ணன் தைவான்,இந்தியா
2010-06-27 09:48:06 IST
இதெல்லாம் வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் அதுதான் உண்மை கண்காட்சியும் அந்த இனியவ நாற்பதையும் வந்து பார்கத்தான் வந்துகிட்டு இருக்கு மக்கள் , இதனால தமிழ் வளருமா என்பது கேள்வி குறிதான் நம்ம மக்கள் எப்பவும் எதாவது ஒரு திருவிழாவுக்கு போகுறது போல போய் இறுக்கும் அவளவுதான் இதுவேனுமுன்ன கட்சி மாநாடு என்று சொல்லலாம் தி மு க கட்சி தொண்டர்கள் அனைவரும் வந்து இருப்பார்கள் அதுவு பல லட்சம் அப்பரம் பொதுமக்கள் வேடிக்கை பார்க்க வந்து இருக்கு கூட்டத பார்த்து இது எல்லாம் தமிழ் வளர்க தமிழ் ஆர்வத்துல வந்தாங்கனு சொன்ன அதைவிட நகைப்புக்கு உரிய செய்தி வேற ஒன்னும் இருக்காது ...
கண்ணன் கும்பகோணம்,இந்தியா
2010-06-27 07:53:23 IST
நான் தொடரந்து சுமார் முப்பது ஆண்டுகள௧ தினமலர் வாசகர்,வீமர்சகர்,வெறியர்,அபிமானர், தினமலர் யங்கள் யூரில் கீடைகவிலை ஆவன செய்யவும்...
kannan kumbakonam,இந்தியா
2010-06-27 07:40:12 IST
1நல்ல தமிழ் எல்லா யுடகங்களிலும் 2எல்லா கல்லூரிகளிலும்,பள்ளிகளிலும் தமிழ் ...
சா. ஹரிகரன் TirupatturVELLORE,இந்தியா
2010-06-27 06:37:33 IST
நிமிர்த்துமா தலையை தமிழ்? கஷ்டம் தான்....
தனா தயா France,இந்தியா
2010-06-27 05:04:44 IST
நல்ல விடயம் முதல்வர் வாழ்க தமிழ் இலங்கையில் இருந்து நான் தயா...
முஹம்மத் அமின் paris,பிரான்ஸ்
2010-06-27 02:55:57 IST
"எல்லாவற்றிலும் தமிழின் வாசம் இருந்தது; ஆனால் தமிழ் சுவாசமாய் இல்லை"எப்படி இருக்கும் தமிழை வெளியில் பரவசெயும் தமிழர் அவர் வீட்டில் அலை புரண்டு ஓடுவது மாற்றான் தொட்டது மல்லிகைத்தானே."தமிழை வளர்த்தெடுக்க அறிஞர்கள் அப்பட்டமாகத் தவற விட்டார்கள். மாறாக, அதிகார மையங்களுக்கு புகழ் பாடக் கிடைத்த வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொண்டனர்"பின்னே அவன் அடுத்த வேலை அடுப்பு எரியவேண்டாமோ அரசியலில் இதுவெல்லாம் "சகஜமப்பா"..தமிழினமும், தமிழ்நாடும் தலை நிமிர வேண்டுமென்பது பலரது விருப்பம்,நடக்குமா நடக்காது ஏன் என்றால் அரஸந்கபலிக்கூடகல்லில் அரசாங்கம் முதலில் முனுரிமைக்கொடுக்க வேண்டும்,கவர்மென்ட் உதவியை நாடும் அணித்து தனியார் பள்ளிகளுக்கும் கட்டாய "தமிழ்"பாடம் இருக்கவேண்டும் என்று ஏன் இந்த கவர்மென்ட் சட்டம் போடவில்லை கட்டாயமாக இதை "உரிமை"குரலாக எடுத்து செய்யலப்படுத்த வேண்டும்.எந்த "டிவி"திறந்தாலும் ஆங்கிலம் கலந்த "தமிழ்"தான் பெரும்பாலும்,கேட்டால் நாம் எல்லோரும் "தமிழ்பெண்"என்று தமிழை கொலை செய்கிறார்கள்,"திருடனப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"என்ற பழமொழி எப்படியோ,அதேப்போல் மக்களே உணர்ந்து திருந்த வேண்டும்.நடக்குமா. ஏனென்றால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக "தமிழ்"கற்றுக்கொடுக்க எவ்வளவு கழ்ட்டப்படுகிறோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும்....
S.Ramaraju Coimbatore,இந்தியா
2010-06-26 23:24:59 IST
இன்று நான் என் கும்பத்தோடு மாநாடு நிகைச்சிகளை கண்டுகளித்தேன், விழா ஏற்பாடுகள் நன்றாக இருந்தது . தமிழ் வளரும் என்ற நம்பிக்கை இருத்தது . ஆனால் தமிழ் கலாச்சாரம் நிரஎவே மாறிவிட்டது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது . முக்கியமாக ஆண்களில் , ஒரு சிலரை தவிர , அனைவரும் பான்ட் அணிதிருன்தனர் .தமிழ் கலாச்சாரத்தை பறை சாற்றும் வேஷ்டி போன்ற உடைகளில் கலந்து கொண்டுருந்தாள் சிறப்பாக இருந்து இருக்கும்...
thamizh chennai,இந்தியா
2010-06-26 22:14:30 IST
thamizhan verum perungaaya dabbaavaaga illaamal aaga vendiyadhai sindhippom.nadandha sambavangalai thambattam adikkaamal unmayaaga paadupadvom indru nokia company ford company ponra velinaattu kampany matrum it thurai illaavidil yosithu paarungal naam oru rupaa arisi vaanga varisayil nirpom enbadhai marakkaadheergal...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »