E-paper   |   Sitemap   |   RSS
இணைய கண்காட்சி அரங்கை தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பார்வை
ஜூன் 26,2010,11:50

கோவை: தமிழ் இணைய மாநாடு கண்காட்சியில் இடம் பெற்றுள்ள தினமலர் அரங்கை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடும் நடைபெறுகிறது. அதில் தினமலர் சார்பில் சிறப்பாக இணைய கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
தினமலர் அரங்குக்கு வரும் தமிழ் அறிஞர்கள், பொது மக்களுக்கு வலைதேடல் (பிரவுசிங்) செய்யும் வகையில் எட்டு கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தானியங்கி நாளிதழ் வழங்கும் இரண்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அரங்கில் தரப்படும் ஸ்மார்ட் கார்டு கொண்டு இயந்திரத்தில் தேய்க்கும் பொழுது தினமலர் நாளிதழை இலவசமாக பெறலாம்.
தமிழ் அறிஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் வாழ்க்கை வரலாறு, அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றி 'கடல் தாமரை' நூலில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் அடங்கிய கோவை வழிகாட்டி புத்தகம் அரங்கை பார்வையிடுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மின்அஞ்சல், இணையதளம், தேடல் ஆகியவையும் தினமலர் நாளிதழ், கோவை வழிகாட்டி கையேடு புத்தகங்களுடன் இலவசமாக வழங்கப்படுகிறது. மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அசத்தலான அரங்கை பார்வையிட்ட தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துகள் தெரிவித்தார்.

வாசகர் கருத்து (2)
ramesh coimbatore,இந்தியா
2010-06-26 18:59:10 IST
தமிழ் வெப் பேஜ் அமைத்தது நன்று. ...
ராமகிருஷ்ணன். பொ மனமா,பஹ்ரைன்
2010-06-26 13:50:59 IST
வளர்க தினமலரின் சேவை மற்றும் ஒளிப்பரப்பு. வளமுடன் வாழ்க தினமலரின் தினமலர்.காம் நன்றி !!!!...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »