E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
கவியரங்க துளிகள்...
ஜூன் 25,2010,22:01

* மாநாட்டில் நேற்று காலை நடந்த கவியரங்கத்தில் பேசிய கவிஞர்கள் அனைவரும் முதல்வரை புகழ்ந்து பேசிக்கொண்டே இருந் தனர். இதனால் மாநாட்டு பந்தலில் சலசலப்பு ஏற்பட்டது.

* கவிஞர் வைரமுத்து பேசும் போது, "முதல்வர் கருணாநிதி பாட்டாளிகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டு, கூட்டாளிகளை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு இருவரையும் கசக்காமல் மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறார்' என்றதும், அரங்கமே அதிரும் வண்ணம் கரவோசை எழுந்தது.

* கவிஞர்கள் பேசும்போது, கோவையையும் ஐந்து நிலங்களையும் இணைத்து பேசினர். குறிஞ்சிக்கு ஆனைமலை மலைகள்; முல்லைக்கு நீலகிரி மலைகள்; மருதத்திற்கு மருத மலை; நெய்தலுக்கு நெசவாளிகள்; பாலைக்கு நூற்பாலைகள்' என்று குறிப்பிட்டனர்.

* கோவை நேற்று லேசாக தூறல் மழை பெய்ததால், மழையையும் மாநாட்டையும் இணைத்து வைரமுத்து கவி பாடினார். "பந்தல் நனைந்தால் கார் மேகம் பொறுப்பு; பந்தலுக்குள் நனைந் ததால் கவிஞர்கள் பொறுப்பு' என்று கவி நயத்தில் பேசினார்.

* கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர்  வந்திருந்ததால் மாநாட்டு சாலைகளில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. இணைய கண்காட்சி, கைவினை கண்காட்சி அரங் கத்தை பார்க்க 2 கிலோ மீட்டருக்கு மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

வாசகர் கருத்து (13)
சத்தியன்.சு கோபிசெட்டிபாளையம்.,இந்தியா
2010-06-27 19:19:34 IST
வணக்கம். இன்றைய மாநாடு நாளைய வரலாறு ! தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், நினைவுகளை நிஜமாக்கும் தமிழகத்தின் துணை முதல்வர் அவர்களுக்கும், மாநாட்டு பணிகளை இனி யாரும் இவ்வாறு செய்திடார் என செய்துகாட்டிய அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த எனது பாராட்டுக்களை பதிவு செய்கிறேன். ...
VPM VARMAKKALAI VAIDHIYASALAI coimbatore,இந்தியா
2010-06-27 14:48:14 IST
valgha tamil,valarga tamil....
v.m.Ganesan coimbatore,இந்தியா
2010-06-27 14:44:44 IST
It"s tamilar"s victory meeting.Vazhga tamil....
டிபோஸ் பெர்னாண்டோ சென்னை,இந்தியா
2010-06-26 21:23:51 IST
சென்னையில் அமர்ந்துகொண்டே செந்தமிழ் மாநாட்டை காண வாய்ப்பை அளித்த தினமலருக்கு நன்றிகள் பல.. ...
சுல்பிகர் நம்பாளி,இந்தியா
2010-06-26 19:31:03 IST
ஐயா, கவிப்பேரரசே ....அடுக்குமா... உங்கள் கவிதை துதி பாடுவதற்கு மட்டுமா? எங்கே போயிற்று உங்கள் வீரத் தமிழ்? ..ஏன் இந்த நிலைமை உங்களுக்கு? போதும் போதும் ...சங்கத் தமிழ் பாடிய கவிஞர்களை கண்டு மன்னர்கள் தான் பயந்தார்கள் ..கவிஞர்களல்ல....தி. மு. க உங்கள் சமயமாய் இருக்கலாம் ...கவிதையல்ல...உங்கள் தம்பியருள் ஒருவன் ...மறந்திருக்கலாம்..நம்பை நம்பி.. சுல்பிகர் ...நம்பாளி...
முருகேசன்ராஜம் nagercoil,இந்தியா
2010-06-26 17:56:56 IST
tamilai mattum valarkkanum arasu kasu pottu party_ valara koodathu ...
theepori tirupur,இந்தியா
2010-06-26 16:01:08 IST
விஜய் செந்தில் தங்கள் வேலையை ஒழுங்காக பார்த்தல் போதும் he is a tamil legend and never u will get this type of person in life...
Kiruba Nagendran coimbatore,இந்தியா
2010-06-26 14:47:43 IST
Vazhga Tamil...
ramya coimbatore,இந்தியா
2010-06-26 12:35:49 IST
சௌண்ட்ஸ் great...
சதாசிவம்.சா மதுரை,இந்தியா
2010-06-26 11:49:27 IST
தமிழ் வெற்றி மாநாடு...
கே.krishnamurthi Chennai,இந்தியா
2010-06-26 10:53:10 IST
வணக்கம், கோவை செம்மொழி மாநாட்டில் நடந்த அத்துதுனை நிகழ்ச்சிகளையும்,அரசு தன் சிலவில் ஓலி நாடாக்களாக பதிவு செய்து மக்களுக்கு இலவசமாக கொடுத்தால் மக்கள் பயனைடவார்கள்.மாணவர்களுக்கும் பயன்படும்.செய்வார்களா?...
vijay senthil Tirupur,இந்தியா
2010-06-26 10:18:13 IST
Vairamuthu this is not DMK meet !!!!Please see the heading given to you !!!!...
Chithambaram Salem,இந்தியா
2010-06-26 03:19:43 IST
வாழ்க தமிழ்! வளரக தமிழ்.....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »