E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் -
ஜூன் 15,2011,16:22

தி.மு.க., ஆட்சியில் செல்லப்பிள்ளையாக இருந்த, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' இன்று இடம் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு 2004, அக்டோபர் 12ம் தேதி, "செம்மொழிகள்' என்ற சிறப்பு பிரிவை துவக்கி, தமிழை "செம்மொழி' என அறிவித்தது. அதன்பின், 2007ம் ஆண்டு, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' சென்னையில் துவக்கப்பட்டது. இதற்காக 11ம் ஐந்தாண்டு திட்டத்தில், 76 கோடியே 32 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இப்புதிய நிறுவனம் சென்னை பீச் ரோட்டில் உள்ள, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, பாலாறு இல்லத்தில் துவக்கப்பட்டது. இதன் இயக்குனராக மோகன், பொறுப்பு அலுவலராக பேராசிரியர் ராமசாமி நியமிக்கப்பட்டனர். தலைவராக அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணைத் தலைவராக பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி நியமிக்கப்பட்டனர். ஐம்பெரும் குழு, எண்பேராயம் போன்றவை துவக்கப்பட்டது. நிறுவனம் துவக்கப்பட்டபோதே, இடவசதி போதுமானதாக இல்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, கிண்டி அருகே கட்டடம் ஒன்றை வாடகைக்கு பார்த்தனர். அங்கு அலுவலகத்தை கொண்டு செல்ல, மத்திய அரசிடம் அனுமதி பெற்றனர்.
ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளதால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஒதுக்கி தருகிறேன். வேறு இடம் பார்க்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். அதையேற்று, அலுவலகத்திற்கு இடம் பார்க்கும் பணியை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஊழியர்கள் நிறுத்தினர்.
கடந்தாண்டு(2010) ஜூலை, ஜார்ஜ் கோட்டையில், சட்டசபை கூட்டம் நடக்கும் அரங்கில், "பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்' துவக்கப்பட்டது. இதில் 35 ஆயிரம் நூல்கள், 2,000க்கும் மேற்பட்ட, "சிடி'க்கள் இடம் பெற்றிருந்தன. அங்கு 120 தமிழ் ஆய்வாளர்கள் அமர்ந்து, ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தமிழ் அறிஞர்களின் படங்களும் இடம் பெற்றிருந்தன.
புதிய அரசு பொறுப்பேற்றதும், சட்டசபை கோட்டையிலே செயல்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதை தொடர்ந்து, அங்கு செயல்பட்டு வந்த, "பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்' இரவோடு இரவாக அகற்றப்பட்டது. அங்கிருந்த புத்தகங்கள் அனைத்தும், மூன்று அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. மூன்று ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' செயல்பட்டு வந்த பாலாறு இல்லத்தின், ஒரு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் குடியேறி உள்ளார். இதனால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து, முதல்வரிடம் பேச, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள், தங்கள் அலுவலகத்திற்காக இடம் தேடத் துவங்கியுள்ளனர். தங்கள் அலுவலகத்திற்கு 30 ஆயிரம் சதுரடி கொண்ட கட்டடம் தேவை என, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' அதிகாரிகள் கூறியதாவது:
"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்திற்கு தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவிகள் தேவை இல்லை. எனினும், அப்போதைய முதல்வர் கருணாநிதியை மகிழ்விப்பதற்காக, அவர் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆட்சி மாறியதும், நடைமுறைப்படி, ஜெயலலிதா தலைவராக அறிவிக்கப்பட்டார். சட்டசபை அரங்கில் செயல்பட்ட, நூலகத்தை அகற்றும் போது, புத்தகங்களை கொண்டு செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்வதாகவும், வேறு இடம் ஒதுக்கி தருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விரைவில் சொந்த கட்டடம்:
சென்னை பெரும்பாக்கத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக 17 ஏக்கர் நிலம், தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், 2 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கட்டடம் கட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இங்கு கட்டடம் கட்டப்பட்டால், இடம் தேடி அலையும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

வாசகர் கருத்து (18)
ramakrishnan Pandithacholanallur bangalore,இந்தியா
2011-08-06 09:51:28 IST
கருணாநிதி செய்த நல்ல விஷயங்களை எல்லாம் இல்லது செய்யும் தமிழ் அம்மாவிற்கு nanri...
sitaramenv Hyderabad,இந்தியா
2011-08-05 08:17:53 IST
கொள்ளை அடிப்பதற்காகவே ஒரு குடும்பத்தின் அதுவும் தேசதுரோகம் மட்டுமே செய்துவரும் குடும்பத்தின் அதிகார வெறி ஆட்டமே செம்மொழி மாநாடு.....இதைப்பற்றி அறிவுள்ள எந்த தமிழனும் அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டான் ......
s.r.ramkrushna sastri secunderabad,இந்தியா
2011-08-04 11:17:58 IST
சரியாக சொன்னீர்கள் சதாசிவம் அவர்களே! விஞ்ஞானம், அறிவியல், வாழ்வியல், அரசியல், இலக்கியம் மற்றும் எண்ணற்ற துறைகளில் உயர்ந்த நூல்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தன்னகத்தே கொண்ட மொழி தமிழ். இம்மொழியில் இருக்கும் விஷயங்களை படித்து அறிய ஒரு பிறவி போதுமா? அப்படி பட்ட மொழியை இவர் காப்பாற்றுகிறாராம்! இவர் என்ன வாட்ச்மேனா? அறிவாகிய பொக்கிஷத்தை எவனாவது திருட முடியுமா?...
vadaloorsamy Jawahar Boonlay,ஸ்லேவாக்கியா
2011-08-04 06:06:46 IST
பதினேழுஎக்கர் நிலம் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி.தமிழக முதல்வருக்கு பாராட்டுக்கள்...
s.r.ramkrushna sastri secunderabad,இந்தியா
2011-08-03 14:14:33 IST
ஏடுகளில் இருந்த பல அறிய சங்க நூல்களை இரவு பகலாக நெடுநாள் பாடு பட்டு அச்சில் வடித்தளித்த உ.வெ.சாமிநாத ஐயர் கூட இது போல நான் தான் தமிழ் வளர்த்தேன் என்று பீற்றிக்கொள்ள வில்லை! செம்மொழி என்று அறிவித்ததினால், உண்மையிலேயே தமிழக மக்கள் கண்ட பயன் என்ன? அரசியல் வாதிகளுக்கு என்னவோ இதனால்தான் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடுவது போலவும், அதுவும் தங்களின் முயற்ச்சியால் தான் என்றும் நம்பவைத்த மாயையை தவிர வேறு ஒன்றும் இருப்பதாக தெரிய வில்லை! சென்னை மாநகரில் எம்.ஏ., எம்.பில். தமிழில பட்டம் பெற்ற ஒருவர் மூன்று நட்சத்திர ஓட்டலில் சப்ளையராக சுமார் இருபது ஆண்டுகளாக பனி புரிந்து வருகிறார். மத்திய அரசு தமிழை செம்மொழி என்று அறிவித்ததினால், இவருக்கு தமிழ் ஆசிரியர் வேலையோ, விரிவுரையாளர் வேலையோ கிட்டவில்லை! இன்னும் இது போல எத்துனை பேர்களோ!...
Tamilselvan.R Gingee,இந்தியா
2011-08-02 10:28:33 IST
தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என இப்படி கூறுவதானால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது. தமிழை நான்தான் வாழவைக்கிறேன் என்று சிலர் மக்களை ஏமாற்றி தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்துள்ளார்கள். இவ்வளவு கேவலங்களையும் தாண்டி தமிழ் வாழ்வது அதன் தனிச்சிறப்பு. தமிழ் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் தாண்டி வாழும், அதை யாரும் வாழ வைக்க தேவையில்லை. மொழி உணர்வுடன் கணினித் தமிழ்.செஞ்சி...
H Narayanan Hyderabad,இந்தியா
2011-08-01 13:10:35 IST
இடம் பார்க்க வேண்டியது அரசு நிறுவனம்.. .மத்திய அரசின் வேலை.. தமிழக அரசு அதற்க்கு உதவி செய்யலாமே தவிர பொறுப்பு ஏற்க்க முடியாது. இடம் கிடைத்த பொது, அதை தடுத்து நிறுத்தி, சட்டசபை வளாகத்தை கொடுத்தது கருணாநிதி அரசு, தமிழின் மேல் உள்ள பற்றின் காரணமாக அல்ல... ஜெயலலிதா வந்தால் பழைய சட்டசபை வளாகத்தை பயன்படுத்தக் கூடாது என்ற குறுக்கு புத்தியினால். அந்த குள்ள நரித் திட்டத்தின் வலையில் விழுந்தது செம்மொழி நிறுவனம். அது ஜெயலலிதா குற்றம் அல்ல... இதில் ஜாதி-மதத்தை புகுத்தப் பார்க்கும் கீழ்த்தரமான-இழிவான வேலையை கருணாநிதி போல, நீங்களும் செய்யவேண்டாம்....
sadhasivam Puducherry,இந்தியா
2011-07-30 14:27:20 IST
திரு உ. வே. சாமிநாதன் (தமிழ் தாத்தா) போன்ற எத்தனையோ பார்ப்பனர்கள் தமிழுக்காகவும், தமிழர்களுக்கா- கவும் தங்களை அர்ப்பணித்தார்கள். ஆனால், ஜெயலலிதா இவரும் பார்ப்பனர்தான் (பார்ப்பானை அய்யனென்ர காலமும் போச்சே! வெள்ளைப் பரங்கியை துறை என்ற கலாமும் போச்சே! - பாரதியார்) இவர் தன்னை வாழவைக்கும் தமிழையும், தமிழனையும் ஏன் இப்படி கேவலப்படுத்துகின்றார்? பிழைப்புக்காக வந்தவரை, கோபுரத்தில் ஏற்றிய தமிழனுக்கு இன்னும் வேண்டும். சதாசிவம் புதுச்சேரி...
Uma Maheswari chennai,இந்தியா
2011-07-27 04:11:52 IST
RAMASAMY SEKAR ஐயா, அவர்களே! உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன்....
S.Lakshminarasimhan bellevue ,உஸ்பெகிஸ்தான்
2011-07-25 21:55:51 IST
செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தை செம்மொழிக்கு முதலில் குரல் கொடுத்த பரிதிமாற்கலைஞர் பெயரில் மதுரையில் அமைத்திடல் வேண்டும். ஒய்வு பெற்ற பேராசிரியர்கள் சென்னையில் வசிப்பதால் அங்கு அமைத்து விட்டார்கள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைதான் சிறந்த இடம். இதை நிகர்நிலை பல்கலை அந்தஸ்தில் எல்லா பாடங்களும் கற்பிக்க வேண்டும் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மன்...
Guruvayurappadhasan Astro Thanjavur,இந்தியா
2011-07-23 20:54:01 IST
பேசாமல் தமிழ் வளர்த்த மதுரைக்கே செம்மொழி ஆராய்ச்சி மையத்தை மாற்றி விடலாம் . மு.க அழகிரி அண்ணன் மேற்பார்வையில் இது நன்கு வளரும்...
Arun Bangalore,இந்தியா
2011-07-19 17:51:07 IST
தமிழ் வாழ்க...
karunaishankar chennai,இந்தியா
2011-07-18 18:20:07 IST
அம்மா தமிழே தனி தான் !!!! அவிங்க வழி தனி வழி !!!!! இங்க எங்க இருந்து செம்மொழி தமிழ் வந்தது அத நாங்க ஒத்துக்க மாட்டோம் ! ஒத்துக்க மாட்டோம் !! ஒத்துக்க மாட்டோம் !!! ஒத்துக்கவே மாட்டோம் !!!!!!...
Suresh RD Chennai,இந்தியா
2011-07-18 10:51:00 IST
தமிழை நான்தான் வாழவைக்கிறேன் என்று சிலர் மக்களை ஏமாற்றி தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்துள்ளார்கள். இவ்வளவு கேவலங்களையும் தாண்டி தமிழ் வாழ்வது அதன் தனிச்சிறப்பு. தமிழ் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் தாண்டி வாழும், அதை யாரும் வாழ வைக்க தேவையில்லை....
RAMASAMY SEKAR chennai,இந்தியா
2011-07-16 21:56:31 IST
எப்படியோ அம்மாவும் அய்யனும் சேர்ந்து செம்மொழியை இன்னொரு சமச்சீராக்காமலிருந்தால் சரிதான்....
Raman Jaya kanchipuram,இந்தியா
2011-07-15 06:53:43 IST
தமிழை வளர்ப்பதுபோல் ஒருவர் தவிர்ப்பதுபோல் ஒருவர். இவர்கள் வாழ்வது தமிழால் தமிழ்நாட்டில். தமிழ் எவ்வளவு பேரை கடந்து வந்து நம் மனதில் நிற்கிறது. இதுதான் தமிழ்....
BAS TIRUVARUR,இந்தியா
2011-07-12 05:40:27 IST
innum evvalavu nalaikkuththan இப்படியே ஏமாத்துவீங்க.உங்க த்மிழ் என்ன கட்டிடத்துக்குllaa வளர்கிறது?...
மதுரை விருமாண்டி சான் ஹோஸே, கலிபோர்னியா ,உஸ்பெகிஸ்தான்
2011-06-30 00:53:16 IST
"அம்மா" கண்ணகியையே காணாமல் போகச் செய்திருக்கலாம், ஆனால், கல் தோன்றி, மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த தமிழ், காலாண்டு அறையில் பூட்டிக் கிடப்பதால் அதற்கு அழிவு வந்திடாது...!!...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »