E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
தமிழறிஞர்களுக்கும் வெடிகுண்டு சோதனை : பாதுகாப்பு வளையத்தில் ஆய்வரங்க வளாகம்
ஜூன் 24,2010,21:08

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக ஆய்வரங்க நிகழ்வுகள் நேற்று துவங்கின. ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றதால், "கொடிசியா' தொழிற்காட்சி வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

அங்கு கண்ட காட்சிகள்:

*ஆய்வரங்க அமர்வுகள் நடந்த, "கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என, அனைவரும் தீவிர வெடிகுண்டு சோதனைக்கு பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவர்களை சோதனையிட, "டோர் பிரேம் மெட்டல் டிடக்டர்கள்' அதிகளவில் அமைக்கப்பட்டிருந்தன. தவிர, வெடிகுண்டு நிபுணர்கள், ஒவ்வொருவரையும் வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்திய பிறகே அனுமதித்தனர். பெண்களை சோதனையிட ஏதுவாக, தனியறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, பெண் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.

*ஆய்வரங்கம் நடந்த தொழிற்காட்சி வளாகத்துக்குள் பங்கேற்பாளர்கள் தவிர பிறர் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த எண்ணற்ற போலீசார், அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே உள்ளே நுழைய அனுமதித்தனர்.

*ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்களுக்கு தொழிற்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது நுழைவாயிலில் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. சீட்டு இருப்போர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

*அமர்வரங்க வளாகத்தில் மொத்தம் 23 ஆய்வரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஆய்வரங்கத்துக்கும், கோவையிலுள்ள கல்லூரி மாணவர்கள் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள், பங்கேற்பாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை செய்தனர்.

*நேரில் காணாமல் இணையதளம், தொலைபேசி வாயிலாக மட்டுமே தங்களுக்குள் நீண்ட காலமாக தொடர்பு வைத்திருந்த வெளிநாட்டு தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் பலரும், நேரடியாக அறிமுகமாகி தங்களுக்குள் நலம் விசாரித்தபடி நீண்ட நேரம் அளவளாவிக்கொண்டனர். இக்காட்சியால், அமர்வரங்க வளாகமே, அமர்க்களமாக காணப்பட்டது.

*ஆய்வரங்க பங்கேற்பாளர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்களுக்கென அமர்வரங்க வளாகத்தில் குடிநீர், காபி, தேநீர் உணவு வசதிகளை பிரபல உணவுவிடுதி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்திருந்தன. கூட்டம் அதிகமாக இருந்த போதிலும், அனைவரும் பொறுமையாக வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.

*வெளிநாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களிடம் பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் அலைமோதினர். வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ் தெரியுமோ, தெரியாதோ, என்ற சந்தேகத்தில் பத்திரிகையாளர்கள் பலரும் ஆங்கிலத்தில் கேள்விகளை தொடுக்க, அவர்கள் அழகு தமிழில் அற்புதமாக பேசி பதிலளித்தனர்; கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

*ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள் ஒரே வளாகத்தில் குழுமியிருந்ததால், எங்கு பார்த்தாலும் குழு, குழுவாக அமர்ந்து தமிழின் தொன்மை, மேன்மை குறித்தும், தங்களது ஆய்வு நோக்கம் குறித்தும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

*மலேசியாவில் இருந்து ஆய்வரங்கத்தில் பங்கேற்க வந்திருந்த, "மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க' தலைவர் ராஜேந்திரன், தமது மகள் லாவண்யாவையும் உடன் அழைத்து வந்திருந்தார். தமது மகளுக்கும் தமிழ் உணர்வூட்டி வளர்ப்பதற்காகவே மாநாட்டுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.

*உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தில் பங்கேற்க வந்திருந்த அனைவருக்கும், "ஆய்வரங்க நிகழ்வு நிரல்' புத்தகம் வினியோகிக்கப்பட்டது.

வாசகர் கருத்து (13)
Ansari தம்மாம்.SAUDI,இந்தியா
2010-06-27 10:58:16 IST
ஏன்பா புண்ணாக்கு மாதுரி பேசுறீங்க ? நம்ம நாடு தீவிரவாதிகளின் இலக்காக உள்ளது. நம்மை சுற்றிலும் எதிரிகள். மாநாட்டில் அசம்பாவிதம் நடந்தால் நம் சகோதர்களின் உயிர் தான் போகும் . ரவி ,காளிராஜ் நீ இரண்டு அறிவு ஜீவிகளும் ரொம்ப ரொம்ப ...... புத்திசாலி .....போ போ புள்ள குட்டிங்களை படிக்க வைங்கப்பா !...
பா. நாஜிரா ஸ்ரீமுஷ்ணம் ,இந்தியா
2010-06-25 19:18:25 IST
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தில் பங்கேற்க வந்திருந்த அனைவருக்கும் நன்றி. பா. நாஜிரா, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் வட்டம், கடலூர் மாவட்டம். தமிழ்நாடு ... ...
த. பிரபாகரன் சிருவரப்பூர் ,இந்தியா
2010-06-25 19:13:23 IST
தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் செமொழி மாநாடு வெற்றி பெற என் வாழ்த்துகள் த. பிரபாகரன், சிருவரப்பூர், விருத்தாசலம், கடலூர் மாவட்டம். தமிழ்நாடு ... ...
அ. பத்மினி திருமுதுகுன்றம் விருத்தாசலம், ,இந்தியா
2010-06-25 17:48:14 IST
தமிழ் செம்மொழி மாநாடு சிறக்க வணக்கங்கள். உலகம் முழுவதும பரவ இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் முழு முயச்சி மேற்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள அணைத்து அரசு தனியார் நிறுவனங்களில் கோப்புகள் தமிழிலேயே பயன்படுத்துமாறு சட்டம் கொண்டு வர வேண்டும். அதுவே தமிழக முதல்வர் தமிழுக்கு செய்யும் உதவி ஆகும். தமிழ் வாழ்க. அ. பத்மினி இரட்டை தெரு திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), கடலூர் மாவட்டம். தமிழ்நாடு ...
ந. பிரபாவதி விருத்தாசலம் ,இந்தியா
2010-06-25 17:40:32 IST
தமிழ் செம்மொழி மாநாடு சிறக்க வணக்கங்கள். உலகம் முழுவதும பரவ இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் முழு முயச்சி மேற்கொள்ள வேண்டும். ந. பிரபாவதி ஆலசசிகுடி, விருத்தாசலம், கடலூர் மாவட்டம். தமிழ்நாடு ...
திருமலை கோவை ,இந்தியா
2010-06-25 15:05:40 IST
மருத்துவம் இன்ஜினியரிங் சட்டம் போன்ற படிப்புகள் மேல் படிப்புகள் அனைத்தும் தமிழில் கற்பிக்க வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள அணைத்து அரசு தனியார் நிறுவனங்களில் கோப்புகள் தமிழிலேயே பயன்படுத்துமாறு சட்டம் கொண்டு வர வேண்டும். அதுவே முதல்வர் தமிழுக்கு செய்யும் உதவி. முதல்வர் செய்வர் என்று நம்புகிறோம் . தமிழ் வாழ்க ...
ந. Karthikeyan Vriddhachalam,இந்தியா
2010-06-25 11:16:21 IST
தமிழ் செமொழி மாநாடு தமிழ் மொழிக்கு பெருமையான ஒன்றாகும். நன்றி கார்த்திகேயன் அளிசிகுடி வ்ரித்தசலம். படலூர் ...
kaliraj abudabhi,இந்தியா
2010-06-25 10:41:29 IST
தமிழ்நாட்டில் தமிழ்மாநாட்டில் தமிழனை இந்தளவு சோதனைசெய்ய என்ன காரணம்? யார் காரணம்? தமிழக மாணவ சமுதாயமே யோசி ...
kaliraj madurai,இந்தியா
2010-06-25 10:32:18 IST
தமிழர்களை பற்றி யாராவது பேசினார்கள? ...
சுரேஷ் துபாய்,இந்தியா
2010-06-25 09:17:48 IST
அன்பு நண்பர்களே தமிழ் மொழிஇன் பழமையும் அவசியத்தை புரிந்து தமிழை வளர்க்க தமிழ் வாழ்க , தமிழ் வளர்க ...
ravi karur,இந்தியா
2010-06-24 22:11:44 IST
தமிழனுக்கு தமிழ் நாட்டில் என்றுமே மரியாதை இருந்தது இல்லை. இது பழகி போன ஒன்றுதான்...
தமிழன் துபாய் ,யூ.எஸ்.ஏ
2010-06-24 21:35:24 IST
வாழிய தமிழ்!...
panneerselvam tiruppur,இந்தியா
2010-06-24 21:32:10 IST
செய்திகள் அருமை .தொடரட்டும் உங்கள் சேவை TAMIL VALGHA TAMILAN VALGHA VEELVATHU NAMAGAHA இருப்பின் வாழ்வது TAMIL ஆக IRUGATTUM....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »