E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
நவீன வசதியுடன் காயின் பாக்ஸ்கள்
ஜூன் 24,2010,21:00

*மாநாடு வளாகத்தில் உள்ள உணவகங்களின் முன்புறம் பி.எஸ்.என்.எல். சார்பில் பொது தொலைபேசி (காயின் பாக்ஸ்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1,2, மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் என எந்த நாணயமும் பயன்படுத்தும் வசதி உள்ளது. பேசி முடித்தது போக மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வேறு "கால்'களும் பேசும் வகையில் இந்த காயின் பாக்ஸ்கள் நவீன வசதியுடன் உள்ளன.

*உணவகங்களில் அனைத்து முகப்புகளிலும் தலா ஒரு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். இதனால், உணவுப் பொட்டலம் வாங்கும் போது பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் வசதியாக வாங்க முடிந்தது.

*உணவகங்களில்  அமர்ந்து சாப்பிட தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு சேரும் குப்பைகளை உடனுக்குடன் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி, லாரிகள் மூலம் அப்புறப்படுத்தினர்.

*மாநாடு முன்னிட்டு இயற்கை உபாதைகளை கழிக்க தற்காலிகாக நவீன முறையிலான கழிப்பறைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் பல இடங்களில் ஒதுக்குப்புறமாக பலரும் ஒதுங்கியவாறு இருந்தனர்.

*மாநாடு முன்னிட்டு நேற்று திறக்கப்பட்ட கண்காட்சியைக் காண ஏராளமான கூட்டம் காணப்பட்டது. கண்காட்சி திறக்க பிற்பகலுக்கு மேலாகியது. இருப்பினும் கண்காட்சியைக் காண்பதற்கு காலை முதலே வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

*மாநாடு வளாகத்தில் பெருந்திரளான கூட்டம் காணப்பட்ட நிலையில், திறந்த ஜீப்பில், போலீஸ் சார்பில் மைக்கில் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது. குழந்தைகள் மற்றும் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு, இந்த பகுதி முழுவதும் போலீசார் தொடர்ந்து மைக்கில் அறிவித்தபடி இருந்தனர்.

* மாநாடு காண பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் குடும்பத்துடனும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடனும், கட்சி பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் அணி அணியாக வந்து கொண்டிருந்தனர். பெரும்பாலானோர் தங்களின் கேமரா மற்றும் மொபைல் போன்கள் மூலம் மாநாடு திடலில் பல இடங்களிலும் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். மாநாடு பந்தல், கண்காட்சி அரங்கம், நுழைவாயில், பேரணியில் வந்த அலங்கார வாகனங்களின் முன்புறம் என பல இடங்களில் நின்று ஆர்வத்துடன் போட்டோ எடுத்தனர்.

வாசகர் கருத்து (28)
குறவன் Doha,இந்தியா
2010-06-26 20:17:23 IST
மிக்க மகிழ்ச்சி. சேவை தொடரட்டும் ....
P.KARUPPU Madurai,இந்தியா
2010-06-26 18:52:44 IST
தமிழ் செம்மொழி மாநாடு காண வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நமது மொழி பாரம்பர்யம் கலாச்சாரம் கலைகள் இவற்றை மதித்து காப்பதோடு தமிழ் மொழி அவசியத்தை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும் .தமிழுக்கு அமுதென்று பேர்அந்த தமிழ் எங்கள் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் இப்படி ஒரு நிகழ்ச்சி நான் பார்த்தது இல்லை கலைஞர் அரசியலில் பார்த்து தமிழுக்காக பாடு படும் ஒரே தலைவர் நினைத்ததை நடத்தி காட்டுபவர் கலைஞர் தான் ... This time this i am living, i am very happy give the chance thanks to Tamilnadu Govt. & Dr. Kalaighar...
முத்து.k mumbaimahim,இந்தியா
2010-06-26 15:08:18 IST
dinamalar sina visayankalai kooda viduvathillai எல்லாருக்கும் தெரிய படுத்துகிறது ...
k.muthu mumbaimahim,இந்தியா
2010-06-26 15:04:37 IST
dinamalar is a best newspaper ...
Aruna Thiruvannamalai,இந்தியா
2010-06-26 14:50:15 IST
தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு வர முடியாவிட்டாலும், தொலைக்காட்சி வாயிலாகவும், புகைபடங்கள் வாயிலாகவும் கண்டு ரசிக்க முடிந்ததை எண்ணி திருப்தி அடைந்தேன். வாழ்க தமிழ்!!!!!...
ராமகிருஷ்ணன். பொ மனமா,பஹ்ரைன்
2010-06-26 13:40:08 IST
தமிழன் என்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா!!!!! ஏன்ற சொல்லுக்கேற்ற என்ன மெய்சிலிர்க்க வைத்த இந்த மாநாட்டின் அணைத்து நிகழ்ச்சியும் நான் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஒளிப்பரப்பு செய்த தினமலர்.காம் -க்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!! Not only that, I saw video clip of dinamalar records that's also very fantastic. Dinamalar team is doing very good performance in the conference. Importantly the news sends to public very fastest. Thank you very much DINAMALAR TEAMS. ...
muthukumar thirunelveli,இந்தியா
2010-06-26 13:05:03 IST
உலக தமிழ் செம்மொழி மாநாடு சிறக்க நல்வாழ்த்துக்கள். தமிழ்; வாழ்க அன்புடன் முத்தமிழன் திருநெல்வேலி ...
2010-06-26 11:08:45 IST
தமிழின் புகழை உலகுக்கு பறைசாற்றும் உன்னத நண்பர்களே , உங்கள் சேவை நித்தம் நித்தம் பெருகிடவும் இந்நிலவுலகில் நீங்காத ஏற்றம் பெற்றிடவே நான் கூறும் வாழ்த்துகள் ஏராளம்.. அதுவே நான் பாடும் பூபாளம்......நாம் தமிழன் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்வோம் .இணைந்தே இது போல (செம்மொழி மாநாடு) பல சாதனைகள் புரிவோம்..... வாழ்க தமிழ். வாழ்க பல்லாண்டு வாழியவே வாழியவே........
farook doha,ரீயூனியன்
2010-06-26 10:49:43 IST
வாழ்த்துக்கள். ஆனால் செய்திகளில் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கலாமே, "காயின் பாக்ஸ் ". நன்றி...
கிருஷ்ணன் டொஹா,ரீயூனியன்
2010-06-26 09:54:46 IST
இது தான் தமிழ் பற்று. மாநாட்டுக்கு முன் பல கருத்துக்கள் இருந்தாலும், அதை எல்லாம் மறந்து நிகழ்வுகள் அனைத்தையும் உலக மக்கள் முன் மிக நேர்த்தியாகத தருகிறது எங்கள் தினமலர் மட்டுமே. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். ...
சரவணன் பேட்டை திருநெல்வேலி திருநெல்வேலி,இந்தியா
2010-06-26 09:51:16 IST
dinamalar tamil con super coverage and excellent web design all the best and congratulations to dinamalar. It's particular video play is very fast than other webiste....
மரு. லெ. பூபதி parangipettai,இந்தியா
2010-06-26 07:54:23 IST
தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவம் சார்ந்த அமர்வு இல்லாதது எங்களுக்கு மிகுந்த வருத்தமே, இருப்பினும் தமிழுக்கு நமது முதல்வர் செய்துள்ள சரித்திர சான்றுக்கு தலைவணங்குகின்றோம். நன்றி நன்றி நன்றி....
ம.விஜய senthil mathur,இந்தியா
2010-06-26 05:16:43 IST
தமிழ் இணைய நாளிதழ்களில் முதல் இடம் தினமலர்ருக்கு தான்....
தமிழச்சி NJ,உஸ்பெகிஸ்தான்
2010-06-25 23:23:32 IST
Dinamalar is doing good job. If it could post the comments received from ppl all over the world on most commented ones, next day in separte column or section, tht would help all non internet users to get the message what most ppl think....
titus america,இந்தியா
2010-06-25 21:09:13 IST
வெரி குட் மாநாடு ஹிச்டோரி pasum...
ராமநாதன் சே கோபிசெட்டிபாளையம் ,இந்தியா
2010-06-25 18:49:16 IST
தமிழ் .. தமிழ் நாடு .. தமிழ் உலகம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் ...
shagulhameed shaab,குவைத்
2010-06-25 17:48:55 IST
இப்படி ஒரு நிகழ்ச்சி நான் கலைஞர் அரசியலில் பார்த்தது இல்லை தமிழுக்காக பாடு படும் ஒரே தலைவர் நினைத்ததை நடத்தி காட்டுபவர் கலைஞர் தான் ...
ஆதிமூலம்.போ.கி tiruchirappalli,இந்தியா
2010-06-25 15:33:29 IST
வந்து கலந்து கொண்டவர்கலையும் .இன்னும் பங்கேற்று வரத் துடிப்பவர்களையும் தினமலர் வாங்கிப் படிப்பவர்க்ளய்யும் ,தினமலர்.கம மூலம் படிப்பவர்களையும் ,இதன் மூலம் கருத்துக்களை கூருபவர்கலஐயும் நெஞ்சார வாழ்த்துகிறேன் .வாழ்க தமிழ்,வளர்க தமிழ்,வெல்க தமிழ் . ...
ஞானசேகரன் சென்னை,இந்தியா
2010-06-25 15:25:03 IST
கலைஞருக்கு நன்றி ...
dhinakaranதினகரன் துபாய்,இந்தியா
2010-06-25 13:40:15 IST
தேங்க்ஸ் போர் தினமலர் பேப்பர் ..... பரவட்டும் தமிழ் புகழ் உழக்கம் முழுவதும் .... அன்புடன் தினகரன் துபாய்...
2010-06-25 13:00:03 IST
தமிழ் செம் மொழி மாநாட்டிற்கு வர முடியாமல் போனாலும் இந்த வண்ண பக்கங்கள் படங்கள் பார்க்கும் போது மனம் மகிழ்கிறது நன்றி தினமலர்....
jayashree kovai,இந்தியா
2010-06-25 12:46:15 IST
முன்னமே நான் அனுப்பிய ஈமெயில் என்ன ஆனது என்று தெரியவில்லை...
ஆருர்கண்ணன் ஜெபெல் ali,யூ.எஸ்.ஏ
2010-06-25 11:55:46 IST
தேங்க்ஸ் டு dinamalar...
பாண்டியராஜன் மதுரை பேரையூர் ,இந்தியா
2010-06-25 10:55:37 IST
உலகதமிழ் செம்மொழி மாநாட்டிற்கு வந்த அனைவரையும் வரவேற்கிறோம். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் திமுக ஆட்சிக்கு நன்றி ...
2010-06-25 09:31:31 IST
தமிழ் செம்மொழி மாநாடு காண வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் அதோடு திரு விழாவை கண்டு செல்வது போல் அல்லாமல் நமது மொழி பாரம்பர்யம் கலாச்சாரம் கலைகள் இவற்றை மதித்து காப்பதோடு தமிழ் மொழி அவசியத்தை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும் .தமிழுக்கு அமுதென்று பேர்அந்த தமிழ் எங்கள் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...., ...
govan nellai,இந்தியா
2010-06-25 08:22:36 IST
கோவை செல்ல முடியாதவர்களுக்கு அழகாக செய்திகளையும், புகைப்படங்களையும், நிகழ்வுகளையும் கொண்டு சேர்க்கும் தினமலர்க்கு மிக்க நன்றி. மாநாடுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையத்தளம் மிகவும் பயன் தருவதாக உள்ளது....
செந்தாமரைkkannan chennai,இந்தியா
2010-06-25 06:42:31 IST
தமிழ் செம் மொழி மாநாட்டிற்கு வர முடியாமல் போனாலும் இந்த வண்ண பக்கங்கள் படங்கள் பார்க்கும் போது மனம் மகிழ்கிறது....
jayaraj Tewantin,ஆஸ்திரேலியா
2010-06-25 06:18:54 IST
congratulation for your excellent coverage of the conference.we felt as if we were there looking at the difference sights. I hail from Mathurai but now in australia with my children and grand children Keep up the good work. Jayaraj...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »