
* உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைதானத்தில் இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தம், சிங்காநல்லூர் செல்லும் பாதையை கடக்கும் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பை ஏற்படுத்தினர். இதனால், ஹோப் காலேஜ் பாலம் முதல் மாநாடு நடக்கும் கொடிசியா வரை எப்போதும் போக்குவரத்து நெருக்கம் இருந்தது. வரதராஜா மில் அருகே இருந்து மாநாடு நடக்கும் கொடிசியா பகுதிக்கு செல்ல குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆனது.
* இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மாநாட்டுக்கு வருபவர்களுக்களின் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு செல்ல வாகனங்களில் வருபவர்களில் சிறப்பு பாஸ் வைத்திருப்பவர்கள் மருத்துக் கல்லூரி அருகே உள்ள சிறப்பு பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மாநாடு நடக்கும் மைதானத்துக்கு எதிரே, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மைதானம், அரசினர் பாலிடெனிக் மைதானம் ஆகிய இடங்களில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
*மாநாடு நடக்கும் மைதானத்தில் பத்திரிக்கை மற்றும் "டிவி' நிருபர்களுக்காக அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. உள்ளே கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. முன்புறம் அழகான தோற்றத்துடன் இருந்த அரங்கத்தை பார்த்து அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். பின், அரங்கம் நிருபர்களுக்காக அமைக்கப்பட்டது என தெரிந்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
* மாநாடு மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், கூட்டம் நடக்கும் பகுதியில் அரங்கின் முன்பகுதியில் மட்டும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பின்பகுதியில் பல சேர்கள் காலியாக கிடந்தன. அதில் அமர விரும்பியவர்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பல சேர்கள் காலியாக கிடந்தது. இதனால் அரங்கத்தை விட்டு வெகு தொலைவில் இருந்த சேர்களில் பொதுமக்கள் அமர்ந்து ஆய்வரங்கத்தை பார்வையிட்டனர்.
* மாநாட்டு அரங்கு உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாப்பாடு 30 ரூபாய்க்கு விற்பனையானது, நல்ல சுவையான சாப்பாடு, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், மக்கள் கூட்டம் குவிந்தது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை பார்த்து பலர் "டோக்கன்' பெற காத்திருக்க வேண்டும் என சங்கடப்பட்டு சென்று விட்டனர். சாப்பாடு டோக்கனை வழங்க இன்னும் அதிக "கவுன்டர்'கள் அமைக்கப்பட்டால், இன்னும் பலர் பயன் பெறுவர்.
* மாநாடு நடக்கும் மைதானத்துக்குள் மாநாடு தொடர்பான பணிக்களுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. வேறு வாகனகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மாநாடு நடக்கும் பகுதியை பொதுமக்கள் சுதந்திரமாக சுற்றி பார்க்க முடிந்தது. மாநாட்டுக்கு செல்ல குறிப்பிட்ட பாதையை மட்டும் பயன்படுத்தாமல் அனைத்து பாதைகளிலும் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதால், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சென்றனர்.
* தற்காலிக கழிப்பறைகள் ஏராளமாக நிறுவப்பட்டு இருந்தன. இதில், தண்ணீர் வசதி போதுமானதாக இருந்தது. சுகாதாரமாக இருந்ததால், இதை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தினர்.
* மாநாட்டின் முதல் நாள் "இனியவை நாற்பது' என்ற எழிலார் பவனி நிகழ்ச்சியில் இடம் பெற்ற அலங்கார வாகனங்கள் அனைத்தும் சி.ஐ.டி. கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். சிலர் அந்த வாகனங்களுக்கு முன் "போட்டோ' எடுத்துக் கொண்டனர்.
* மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்திலிருந்து "சிட்ரா' வரை ரோட்டின் இரு பக்கங்களிலும் தின்பண்டங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் முளைத்து இருந்தன. அவற்றில் விற்பனை மும்முரமாக நடந்தது.
* கொடிசியா நுழைவாயிலில் இருந்து சிஐடி நுழைவாயிலுக்கு ஆயிரகணக்கான மக்கள் மாறி மாறி சென்று கொண்டே இருந்ததால் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது.
* கொடிசியா நுழைவாயில் இருந்து ஒன்னரை கிலோமீட்டருக்கு மாநாட்டு அரங்கு வரையிலும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்ததால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
* போலீஸ் அதிகாரிகள், மின்வாரியம், பிஎஸ்என்எல், குடிநீர் வாகனங்கள் மாநாடு அரங்கு செல்லும் ரோட்டில் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்தால் நடந்து செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர்.
* மாநகராட்சி கழிப்பிடங்களில் தண்ணீர் சப்ளை இல்லாததால், அங்கு சென்ற மக்கள் முகம் சுழித்து வெளியேறினர்
* குடிநீருக்காக அமைக்கப்பட்டிருந்த பைப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குழிகளில் இருந்து நிரம்பி வழிந்ததால் சேறும் சகதியுமானது.
* நடைபாதை கடைகளில் தி.மு.க., கொள்கை விளக்க பாடல் "சிடி'களும், விளையாட்டு பொம்மைகளும் கூவிக்கூவி விற்கப்பட்டது.
* பள்ளிக்குழந்தைகளுக்கு "கைகழுவும்' பழக்கத்தை ஏற்படுத்தி சுகாதாரத்தை கடைபிடிக்க அறிவுறுத்தும் அரசு, மாநாட்டு உணவகத்தில் பிளாஸ்டிக் ஸ்பூன்களை வழங்கி "கைகழுவும்' பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
* சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருள் பயன்பாடுகளை தவிர்க்க அறிவுறுத்தும் நிலையில், மாநாட்டு உணவு வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகளவில் இருந்தது.
* மாநாட்டு அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் "எல்.இ.டி' திரைகள் மூலம் ஒளிபரப்பப்பட்டது. அதே பகுதியில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இரண்டு ஒலிபெருக்கிகளிலும் சப்தங்கள் வேறுபட்ட நேரத்தில் வெளிப்பட்டதால் யாருக்கும் புரியவில்லை.
- மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'
(745)
- கோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
(419)
- தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி? மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு
(236)
- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்
(196)
- தமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல்
(142)