E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
மக்கள் அறிய முயன்ற "கோட்டை' ரகசியம்
ஜூன் 24,2010,18:05

* மாநாட்டு கண்காட்சியைக் காண மக்கள் மதியம் 12 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்டனர். அரங்குகளை திறந்து வைத்த பின், கட்டுக்கடங்காத கூட்டம், "கோட்டை'க்குள் இருக்கும் ரகசியங்களை அறிய ஆர்வம் காட்டினர். எனவே, ஆங்காங்கே தள்ளு முள்ளு நடந்தது. தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு மக்கள் முன்னேறினர்.

* கண்காட்சி அரங்குகளை காண மக்கள் கூட்டம் வரிசையாக நீண்ட தூரம் நின்றிருந்தது. ஒரு கி.மீ.,தூரத்திற்கு மூன்று வரிசையாக நின்றிருந்தனர். மூன்று கி.மீ.,வரிசையில் காத்திருந்து பார்வையிடுவதாக அமைந்தது.

* கண்காட்சி அரங்குகள், மாநாடு முடிந்த பின்பும் பார்வைக்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டும், மக்கள் ஆர்வம் காட்டியதால், நெரிசலும் ஏற்பட்டது.

* அவினாசி ரோட்டில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. மாநாடு வளாகம் - அவினாசி ரோடு சந்திப்பில் அதிக கூட்டம் நெரிசல் இருந்தது. இப்பகுதியில் வழி ஏற்படுத்திக் கொடுக்க இயலாமல் போலீசார் தவித்ததே நெரிசலுக்கு காரணமாக இருந்தது. இதை மாற்றுப்பாதை வழியாக செல்ல அனுமதித்திருந்தால், கூட்டம் குறைந்திருக்கும்.

வாசகர் கருத்து (5)
jayaprakashr chennai,இந்தியா
2010-06-25 13:27:31 IST
வேஸ்ட் program...
2010-06-25 06:56:04 IST
கருணாநிதியின் குடும்ப மாநாட்டைக் காண எதற்கு இந்த தள்ளுமுள்ளு...பேசாமல் வீட்டிலேயே இருந்து இருக்கலாமே..இது உண்மையான செம்மொழி மாநாடாக இருந்து இருந்தால் திரு அப்துல் கலாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும். வெறும் ஆங்கிலேயர்களை அழைத்து ஒரு தமிழ் மாநாடு..அதற்கு ஒரு வெட்டி செலவு...தமிழர்களே நாம் என்றுதான் திருந்த போகிறோமோ...ஓட்டுக்கு காசு வாங்கினால் இதுவும் நடக்கும் எதுவும் நடக்கும்....
சுந்தரம் ராஜு dakar,செசேல்ஸ்
2010-06-24 19:42:49 IST
இது ஒரு அற்புதமான மாநாடு. கலைஞர் பல்லாண்டு வாழ்க !!!...
suresh singapore,இந்தியா
2010-06-24 19:09:31 IST
முதலில் முந்துவது நம் தமிழ் பண்பாடு...
2010-06-24 18:50:57 IST
எதற்கு இந்த வீண் அலைச்சல் மக்களுக்கு. ஆறு மாதங்களாக ஏற்பாடு செய்தும் கூட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லையாம். பிறகு என்ன ஏற்பாடு செய்தார்களாம்? திரு அப்துல் கலாம் இல்லாமல் ஒரு தமிழ் மாநாடு அதற்கு ஒரு வெட்டி கூட்டம்...இது தமிழ் மாநாடு இல்லை...திமுக மாநாடு. மக்களே இனிமேலும் ஏமாறதிர்கள்..அவர்கள் நினைத்த, வருகின்ற சட்ட மன்ற தேர்தலை நீங்களும் நினைவில் வையுங்கள்...பிறகு தெரியும் அவர்களுக்கு......

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »