E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
ஓரங்கட்டப்பட்ட ஊடகத்துறையினர்!
ஜூன் 23,2010,17:33

செம்மொழி மாநாடுக்கான அறிவிப்பு வந்த நாளிலிருந்து, அந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள், ஆய்வுகள், வளர்ச்சிப்பணிகள் குறித்து தினமும் மக்களிடம் செய்திகளை பரப்பி, மாநாடு இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு உழைத்தவர்கள் ஊடகத்துறையினர். ஆனால், அவர்கள் நேற்றைய மாநாட்டின் ஓரங்கட்டப்பட்டனர். மேடையிலிருந்து பல நூறு அடி தூரத்தில், கிட்டத்தட்ட பந்தலின் முடிவுப் பகுதியில் பத்திரிக்கை நிருபர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து மேடையின் எந்தப் பகுதியுமே தெரியவில்லை. இதனால், தொலைக்காட்சியில் பார்த்தவாறே செய்திகளைச் சேகரிக்க வேண்டியிருந்தது. பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கின் முன் பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டுமே மின் விசிறிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், மற்றவர்கள் அனைவரும் வியர்வையில் குளித்தனர். தேவையே இல்லாமல் ஏராளமான விளக்குகளை எரிய விட்டதால் மேலும் எரிந்தது உடல்.


* மேடையில் 10.20க்கு வந்த முதல்வர் கருணாநிதி, இடையில் சிவத்தம்பி பேசும் போது 11.10க்கு எழுந்து வெளியே சென்றார். ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்தார்.


* ஜனாதிபதி பேசத் துவங்கும்போதே, இரும ஆரம்பித்தார். இரு முறை தண்ணீர் குடித்தும், இறுதி வரை கரகரப்பான குரலில், அவ்வப்போது இருமியபடியே பேசிக் கொண்டிருந்தார்.


* கருப்புச் சட்டை அணிந்திருந்த பலர், மாநாட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படாமல் திரும்பி அனுப்பி விட்டனர் காவல்துறையினர்.


* பந்தலுக்குள் வந்த சிலரை காவல்துறையினர் சோதனையிட்டபோது, அவர்களிடம் மது பாட்டில்கள் இருந்தன. அவற்றையும், சிகரெட் பாக்கெட், தீப்பெட்டி போன்றவற்றையும் காவல்துறையினர் வாங்கி வைத்துக்கொண்டனர். ஒரு சிலர் கொடுக்க மனமில்லாமல், மண்ணைத் தோண்டி புதைத்துச் சென்றனர்.


* பல ஆயிரம் பேருக்கு மதிய உணவு கிடைக்கவில்லை. மானிய விலையில் உணவு கொடுத்த இடத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. குறைவான எடையிலும், அதிக விலையிலும் இருந்ததாகக் கூறி, தனியார் உணவு நிறுவனங்கள் அமைத்திருந்த உணவுக்கூடம்-2க்குச்சென்று தேவையானதை வாங்கிச் சாப்பிட்டனர்.


* அங்கேயும் போதிய அளவுக்கு உணவு கிடைக்காமல் வெளியே சென்றனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் ஓட்டல் இல்லாததால் பல ஆயிரம் பேர், மதிய சாப்பாடு கிடைக்காமல் பல மைல் தூரம் பசியோடு நடந்து சென்றனர்.


வாசகர் கருத்து (80)
கோவை தமிழன் தம்மம்,செனகல்
2010-06-27 19:05:03 IST
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. கலைஞருக்கு பாராட்டுகள். எங்களால் இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. ஆனால் தினமும் தினமலர்.காம்இல் நாங்க மாநாடு செய்திகளை பார்த்தும் படித்தும் மகிழ்ந்தோம். எங்கள் மொழிக்கு இணை வேறு எந்த மொழியும் இல்லை. இந்த மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என் அன்பு நண்பர்களே.... ...
கோவை தமிழன் தம்மம்,செனகல்
2010-06-27 18:09:41 IST
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. கலைஞருக்கு பாராட்டுகள். எங்களால் இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. ஆனால் தினமும் தினமலர்.காம்இல் நாங்க மாநாடு செய்திகளை பார்த்தும் படித்தும் மகிழ்ந்தோம். எங்கள் மொழிக்கு இணை வேறு எந்த மொழியும் இல்லை. இந்த மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என் அன்பு நண்பர்களே....
அர்ஜுனன் கோவை,இந்தியா
2010-06-24 19:47:53 IST
தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கு ஒரு குணமுண்டு நல்லதை நல்லதாகவே பார்க்க வேண்டும் நம் தாய் மொழி தமிழ் செம்மொழி ஆனதை இவரைத்தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக விழா செய்திட முடியாது. குறைகளை விட்டு நிறைகளை கொள்வோம் வாழ்க தமிழ் மொழி அன்புடன் அர்ஜுன்...
கே.ராமசாமி வால்பாறை,இந்தியா
2010-06-24 15:22:01 IST
பிளான் பண்ணி பட்டினி போட்டுட்டாரு பரவாயில்லை. ெபாடி நடையா விடு போய் சேருவோம் ,,,,,,,,,,,,...
ஈரோடு நாதன் சென்னை ,இந்தியா
2010-06-24 14:43:37 IST
ஐயகோ இதுவும் வேணும் இனமும் வேணும்!!!! கவிதா, மதுரை அவர்கள் விளக்கம் மிக அருமை இன்னும் பத்திரிகைகள் புரிந்துகொண்டால் சரி...
பிரான்சிஸ் திருச்சி ,இந்தியா
2010-06-24 14:32:11 IST
எப்பொழுதும் கருணாநிதிக்கு ஆதரவாக செயல்படும் பத்திரிகையாளர்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும் கடந்த முறை முதல்வராக இருந்து எவ்வளவோ நன்மைகள் செய்த அந்த அம்மையாரை பாராட்ட உங்களுக்கு ஒருபோதும் மனது வருவதில்லை. கருணாநிதி செய்யும் தவறுகளை சுட்டிகாட்ட பயப்படும் உங்களைப் போன்ற வர்களுக்கு இது சரியான உபசரிப்பு....
சுப்பிரமணியன் கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-24 14:20:55 IST
பன்னிரண்டு கிலோமீட்டர் நடந்தது தான் மிச்சம். எதையும் பார்க்க முடியல டா. சாமி.. .... என்னடா மாநாடு நடத்துரிங்க ஒன்னும் பிடிக்கல. இது semmozhi மாநாடா? இல்ல v i p மாநாடா?...
அசோக் சென்னை,இந்தியா
2010-06-24 14:20:34 IST
சோறு இல்லை.. ஆனால் பீர் இருக்கு. என்ன கொடுமை சார் இது.. அரசுக்கு டாஸ்மாக் இல் மட்டும் தான் நிறைய வருமானம் கிட்டும்.. அதனால்.. மாநாட்டிற்கு செலவு செய்த பணத்தை இதில் வசூலிக்க நினைகிறது போலும்.. இன்றைய அரசு.. தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்.. இது தெரியாதா நம் தமிழக அரசுக்கு......
அஞ்சலி kovai,இந்தியா
2010-06-24 14:10:02 IST
kottam konjam over. otherwise super maanadu...
muthukrishnan coimbatore,இந்தியா
2010-06-24 14:03:52 IST
மாநாடு என்ற பெயரில் நாங்கள் படும் கஷ்டம் சொல்ல முடியாத ஒன்று. நன்றி மக்களை கஷ்டபடுத்தும் அரசுச்கு...
R.Balaji Vellore,இந்தியா
2010-06-24 13:39:17 IST
Instead of spending nearly 400 crores for Tamil Manadu, why don't govt. put a plan for new power project which gives us atleast 250 Megawatt current per day....
siva riyadh,செனகல்
2010-06-24 13:20:39 IST
always tell tamil tamil after no water,foods,and current after too much problem there no need stage program....
இர கிரிதரன் காட்டன்குளத்தூர் ,இந்தியா
2010-06-24 12:05:11 IST
துணை முதல்வர் வரவேற்புரையில் பத்திரிகையாளர் இடம் பெறவில்லை என கருதுகிறேன்....
சதீஷ் கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-24 11:25:18 IST
சாப்பிட உணவு இல்லையேன்னு சொல்லுறீங்களே. நம்ம அப்துல் கலாம் மாநாட்டுக்கு வரலையே அத பற்றி ஊடகம் தகவல் தெரிவிக்கலாமே...
kadavul singaporevu,இந்தியா
2010-06-24 08:50:20 IST
vudaga thurainaruku sariyana aapuuuuuuuuuu..........
meena coimbatore,இந்தியா
2010-06-24 08:48:36 IST
apppidiyavathu manadu parkanuma? PURAKANIYUNKALEN...
மாணிக்கம் சென்னை,இந்தியா
2010-06-24 08:17:08 IST
ஊடகம் கிட்டே இருந்தால் தவறுகளை சுட்டிக்காட்டி எழுதுவார்கள் என்று ஓரங்கட்டப்பட்டு விட்டார்களோ?...
David Karaikudi,இந்தியா
2010-06-24 08:02:33 IST
Ellorum solvathai kaetaen romba magilchiyaga irukindrathu .sapadu kidaikavillai enbathu...
kavitha madurai,இந்தியா
2010-06-24 07:42:51 IST
மதியாதார் தலை வாசல் மிதியாமை கோடி பெறும் என்றார் அவ்வை. இது பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல் போனது ஏன்? அதுவும் செம்மொழி மாநாட்டின் போது? தமிழகத்தில் பல ஆயிரம் கிராமங்களில் குடிநீர், சாலை, போக்குவரத்து, மருத்துவ வசதிகள் இல்லை. இந்த மாநாட்டிக்ற்காக செலவு செய்யப்பட்ட சுமார் ௪௦௦ கோடியை மேற்கண்ட ஆக்கபூர்வமான பணிகளுக்கு செலவிட்டால் தமிழன் வாழ்வான். இதை எந்த பத்திரிகையுமே சுட்டிக் காட்டவில்லை. மாறாக மாநாட்டு பணிகள் சூப்பர் என்ற ரீதியில் மீடியாக்களில் ஜால்ரா சத்தம்தான் அதிகம் இருந்தது. அப்படி ஜால்ரா தட்டியதற்கு பரிசுதான் நிருபர்கள் ஓரம்கட்டப்பட்டது. அப்படி ஒதுங்கி நின்று செய்தி சேகரித்து என்ன ஆகப்போகிற்து. நீங்களும் ஒது(க்கு)ங்குங்கள், உங்கள் அருமை ஆள்வோருக்கு தெரியவரும். அதை விட்டு ஓரம் கட்டிவிட்டனர் என்று புலம்புவது கொஞ்சமும் நியாயமில்லை....
கல்ஸ் சென்னை,இந்தியா
2010-06-24 07:05:38 IST
ரொம்ப கொடுமை எதோ நடத்துறாங்க family மகாநாடு தானே...
ராமசாமி.ப சேலம்,இந்தியா
2010-06-24 06:50:59 IST
சோறு இல்லை ஆனால் அன்னைவருகும் பீர் பிராண்டி மட்டும் சரளமாக கிட்டயுது கண்ணால் கண்டது...
periasamy America,இந்தியா
2010-06-24 03:18:05 IST
ஏன் இந்த குறைபாடு ? அதிக கூட்டமா? கவனகுறைவா?...
கணேஷ்.ப trichy,இந்தியா
2010-06-24 03:02:58 IST
100 % சரீயானது. நானும் பாதிக்கப்பட்டேன் மதிய சாப்பிடாமல்...
DAULATH முஹமத் மஞ்சக்கொல்லை சவுதி அரேபியா தம்மாம்,இந்தியா
2010-06-24 01:19:11 IST
என்ன சார் இப்படி. தமிழ் இனத்தவனை பசியில் போட்டு விட்டீர்கள் ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழிப்போம் என்று பள்ளி கூடடத்தில் படித்த வைர வரிகள் என் ஜாபகத்துகு வந்தது ஐயா. மன்னிக்கணும்...
விஜயகுமார் கோயம்புத்தூர் ,இந்தியா
2010-06-24 01:03:36 IST
மது பாட்டில் மாநாட்டு பந்தலிலே கிடைக்கிறது. கோவையில் டாஸ்மாக் கடைகளை தினமலர் நாளை தயுவ் செய்து போட்டோ எடுத்தால் மாநாடு நடக்கும் லட்சணம் எல்லோருக்கும் தெரியும். மதிய உணவு கொடுக்க முடியவில்லை, பிராண்டி பீர் வளங்கள் வெகு சிறப்பாக உள்ளது. வருத்தமுடன் கோவை நகர வாசி.......
சரவணப்பெருமாள் பொள்ளாச்சி ,இந்தியா
2010-06-24 00:42:40 IST
"குற்றம் பார்க்கின் சுற்றமில்லை "...
tamil kodai,இந்தியா
2010-06-24 00:38:24 IST
கோடி பணம் செலவு பண்ணி குடிக்க தண்ணீர் சாப்பிட உணவு இல்லன்னா கஷ்டம் தான் ....
எ.சிரசுடீன் குவைத் ,இந்தியா
2010-06-23 23:44:22 IST
தனி ஒருவனுக்கு வுணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி அய்யஹோ தமிழ் செம்மொழி மாநாட்டிலே வுணவு இல்லையா ........அப்போ இந்த மாநாடு பெயரும் புகழுக்காக மட்டும் தானா.........
ஜலீல் saudi,இந்தியா
2010-06-23 23:35:38 IST
ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கும் தமிழ்நாட்டில் காக்கா பிரியாணி கூட கிடைக்கவில்லையா?...
பராபரன் தோஹா,ரீயூனியன்
2010-06-23 23:25:20 IST
வணக்கம் .இது எல்லாம் பெரிய மாநாட்டின் நடப்பது சகஜம் !அதும் செம்மொழி மாநாடு! சொலவேண்டாம் !வெல்க தமிழ் வளர்க ஓங்குக !...
சரவணன் சுந்தரேசன் சென்னை,இந்தியா
2010-06-23 22:26:45 IST
மிக வருந்ததக்க செய்தி, தமிழர்கள் நங்கள் மிக தொலைவில் இருக்கும்போது ஊடகம் வழியாக தான் செய்தி தெரிந்துகொள்ள இயலும் இது மாநாடு அமைப்பழர்களுக்கு தெரியதா ?...
குமாரவேல் கோபால் நகர்,இந்தியா
2010-06-23 22:23:21 IST
நான் இன்று இனியவை நாற்பது ஊர்வலத்தை நேரில் சென்று கண்டு களித்தேன், இது நமது காலகட்டத்தில் நடை பெறுவது குறித்து பெருமை அடைகிறேன், நான் நமது முதல் அமைச்சருக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். இது போல் முயற்சி தமிழை மேலும் செழிக்க உதவும்....
பிரவீன் கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-23 22:09:07 IST
Big crowd, 1st time i am seeing this much crowd in Tamilnadu. Lots of big big sets. Good response from Public and everywhere. Day1- is superb. the negative side is "Shortage of food, Bus services from Meet place, Agneta is not even shown to all. No one knew wht is next....
jack vellore,இந்தியா
2010-06-23 21:58:59 IST
நன்றி கெட்ட அரசியல்வாதிகள்...
tharani coimbatore,இந்தியா
2010-06-23 21:56:51 IST
எழிலார் பவனி மாலை நான்கு மணிக்கு வஉசி மைதானத்தில் தொடங்கும் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது நியாமா...
jack vellore,இந்தியா
2010-06-23 21:55:19 IST
makkale vera vela vettiya parunga, velai illathavan thaan ippadi manadu athu ithunnu suththikittu iruppanga...
சோழன் ரியாத்,செனகல்
2010-06-23 21:40:25 IST
சில பல குறைகள் இருந்தாலும் இது நமது மொழியின் திருவிழா,,,பெருமிதம் கொண்டு கலந்து கொள்வோம் விழாவிற்கு சிறப்பு சேர்ப்போம்...
mvbala ch,இந்தியா
2010-06-23 21:29:14 IST
Media people deserves the insult because they are always at the mercy of these .......s. so iam happy to hear this punishment.Dont cry........
கந்த.அன்பரசு மூலனூர். திருப்பூர் ,இந்தியா
2010-06-23 21:22:51 IST
உலக செம்மொழிக்குப் பாடுபடும் பத்திரிக்கைகளுக்கு உரிய மரியாதை கொடுக்கவேண்டியது அனைவரின் கடமை... உடனடியாக அமுல்படுத்த வேண்டும்......
maraicoir chennai,இந்தியா
2010-06-23 21:20:57 IST
தமிழர்களின் பெருமை மிகு மாநாடாக செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலை பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அதிர்ந்து போகிறார்கள். உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களை ஏன் அழைக்கவில்லை என்ற வினா பூதாகாரமாக எழுப்பப்பட்டு வருகிறது. தமிழக அளவில் உள்ள அனைத்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். அல்லது வரவழைகப் பட்டுள்ளனர். ஆனால் அப்துல் கலாம் ஏன் வரவில்லை? அப்துல் கலாம் திட்டமிட்டு புறக்கனிக்கப்பட்டாரா? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. அப்துல் கலாம் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்து வருவது குறித்து மாநாட்டு பொறுப்பாளர்கள் விளக்கம் அளிக்க மறுத்து வருகின்றனர். அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றால் மீடியாக்கள் அவரைச் சுற்றியே வட்டமிடும். பொதுமக்களும் அவரைக் காணவே விரும்புவார்கள். குழந்தைகளும் மாணவர்களும் அவரோடு பேசப் போட்டி போடுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட நிகழ்ச்சி நடத்துபவர்கள் விரும்பவில்லை. எனவேதான் அப்துல்கலாமை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்....
KARTHIKEYAN SINGAPORE,இந்தியா
2010-06-23 21:12:58 IST
INTHA TAMIL CHEMMOZHI MANADU SIRAPPAGA NATAIPERA ENNUDAIA VALTHUKKAL...
mathanagopal pondicherry,இந்தியா
2010-06-23 21:11:52 IST
thamizh vazhga i am happy to say i am thamizhan and proud to say i am live with the period of thamizh mannadu...
கே. ஜே Tirunelveli,இந்தியா
2010-06-23 21:08:07 IST
பத்திரிக்கையாளர்கள் ஒதுக்கப் பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. மாநாடு சென்னையில் வைத்திருந்தால் இப்படி நடந்திருக்காது என நினைக்கிறேன். மாநாட்டின் seating arrangement incharge கோயம்புத்துரை சார்ந்தவராக இருப்பார். because கோயம்புத்தூர்காரர்கள் பத்தரிகைகள், பத்திரிக்கையாளர்கள், அரசியல், தேர்தல் இவற்றுக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். They give more importance to education and technology stuff.. They dont even bother about others life...4 வருடம் கோயம்புத்துர்ல இருந்த experience la சொல்றேன்.....
செந்தில்குமார் டென்வர்,உஸ்பெகிஸ்தான்
2010-06-23 21:02:52 IST
குறைகளை மிகைபடுதாமல் நிறைகளை மிகைபடுதவும். மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!...
ஜெயக்குமார் மதுரை,இந்தியா
2010-06-23 20:46:10 IST
இப்படி அவஸ்தை படுவதர்க்காகவா அங்கு செல்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில் திருவிழா கொண்டாடும் இவர்கள், உணவையும், இலவசமாக வழங்கியிருக்கலாம். ஆனால் நம் மக்கள் அதிலும் ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டு சிக்கி இறக்க வாய்ப்பு உள்ளதால் கொடுத்து இருக்க மாட்டார்கள் போலும்....
கோபி சென்னை,இந்தியா
2010-06-23 20:45:32 IST
பல கோடிகள் செலவு செய்தும் நிகழ்ச்சியளர்கள் சரிவர செயல் படாதது நன்றாக தெரிகிறது....
salman singapore,ஸ்லேவாக்கியா
2010-06-23 20:38:22 IST
இந்தியாவில் இது சர்வ சாதாரணம். தலைவர்கள் எல்லாம் காரில் உலா போவர்கள். பாவம் தமிழன் .இந்தியாவிலும் ,சிறிலங்காவிலும்...
jayavel chengalpattu,இந்தியா
2010-06-23 20:31:12 IST
திமுக விற்கு கருப்பு என்றாலே அலர்ஜியா? வீரமணி வந்தால் சிகப்பு சட்டை போட்டு வருவரா? வூடகங்களை அருகில் வைத்தால் குறைகளை எழுதி விடுவீர்கள் அல்லவா. அதானால் தான் அவர்களை தூரத்தில் வைத்து இருக்கிரார்கள். அவர்கள் எழுதி கொடுப்பதை அப்படியே போட சொல்லுவார்கள். வூடகங்களுக்கு என்று வொதுக்க பட்ட நிதியை அவர்களுக்கு ஒதுக்கி கொண்டு இருப்பார்கள். கட்சி மாநாடாக இருந்தால் எ வ வேலு எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்க செய்திருப்பார். தமிழர்களை சாப்பாடுக்கு வோட விட்டுடாங்களே பாவமடா தமிழன்...
மூர்த்தி மதுரை,இந்தியா
2010-06-23 20:17:20 IST
அட பத்திரிகை நண்பர்களே நீங்கள் சொல்லி இருக்கும் தகவலில் ஒரு வார்த்தை தவறு உள்ளது. அதை இங்கே நான் அடைப்புகுறியில் காட்டி உள்ளேன், செம்மொழி மாநாடுக்கான அறிவிப்பு வந்த நாளிலிருந்து, அந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள், ஆய்வுகள், வளர்ச்சிப்பணிகள் குறித்து தினமும் மக்களிடம் செய்திகளை பரப்பி, மாநாடு இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு உழைத்தவர்கள் ஊடகத்துறையினர். ஆனால், அவர்கள் நேற்றைய " மாநாட்டின் " ஓரங்கட்டப்பட்டனர் இனி தகவல் தரும்போது இது போலே பிழை வராமல் கவனத்தோடு தகவல் தரவும்....
ramanan chennai,இந்தியா
2010-06-23 20:17:07 IST
வாழ்க எம் தமிழ் வளர்க எம் தமிழின் புகழ் .எம் தமிழுக்கு விழா எடுத்த தலைவனுக்கு பல கோடி நன்றிகள்...
ப.தர்மலிங்கம் சென்னை ,இந்தியா
2010-06-23 20:09:41 IST
மாநாட்டின் ஆரம்பத்திலேயே தேசிய கீதம் பாடியது என்ன மரபா?அல்லது துவக்கத்திலேயே குழப்பமா? ஒருவழியாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சிவசிதம்பரம் பாடினார்.கணீர் குரலை கேட்க முடிந்தது.அவரை தொலைக்காட்சியில் காண்பிக்கவில்லை. ஏன் எனத் தெரியவில்லை.தீம் பாடலிலும் அவரை இடம்பெறச்செய்யவில்லை. மாநாட்டு மேடை முழுவதும் அவரது குடும்பத்தினரே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். மற்ற முக்கியஸ்தர்கள் அவ்வளவாக தென்படவில்லை....
sundararajan ,உஸ்பெகிஸ்தான்
2010-06-23 19:58:27 IST
நிருபர்கள் இனிமேல் கருணாநிதிக்கு வால் பிடிக்காமல் இருக்க வேண்டும்...
குத்தலாம் அ.ஜாகிர் உசேன் உம்ம அல் குயின் ,யூ.எஸ்.ஏ
2010-06-23 19:57:40 IST
நமது வீட்டில் சிறு விழாவாக இருந்தாலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன? வரலாற்று சிறப்புமிக்க இந்த மாநாட்டில் குறைகள் இருந்தால்!? பெரிய மனசு உள்ளவர்கள் மன்னிக்கலாம்....
sundararajan seattle,உஸ்பெகிஸ்தான்
2010-06-23 19:52:02 IST
வேணும் நல்ல வேணும் வரிப்பணம் பாழ்.மக்களுக்கு புத்தி வரணும்....
சூரியராஜ் சி.அ delhi,இந்தியா
2010-06-23 19:36:10 IST
அருந்தியர்களுக்கு மேல்சபை சீட் எத்தனை ? அதனை இந்த மாநாடு வீழா வில் தெரிவீத்த்தால் இது தமிழ் செம்மொழி மாநாடு...
suresh Dubai,யூ.எஸ்.ஏ
2010-06-23 19:25:43 IST
this all required for those who went there...
N.S.RAMACHANDRAN nanganallur,இந்தியா
2010-06-23 19:19:14 IST
iyaa oru maanaadu nadakkuthunaa cila kastangal,asowkariyangal irukkatthan seyium.pesaama adjesseithu ponkal sami.summa kurai solladeerkal....
mahadevan chennai,இந்தியா
2010-06-23 19:18:57 IST
உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்...ேபாங்க..போயி நல்லா சப்போட் பண்ணுங்கள் திமுக வை.......
Chinnappan Tiruppur,இந்தியா
2010-06-23 19:17:59 IST
செம்மொழி மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்!! செவிக்கு உணவில்லை என்ற போதே சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் என்ற முதுமொழிக்கேற்ப உளதோ --- பசியோடு மக்கள் திரிகிறார்கள் என்ற செய்தி உண்மையில் நாளை மாநாட்டுக்கு சாப்பாடு கையில் எடுத்துச்செல்வதுதான் சிறந்தது என நினைக்கத் தோன்றுகிறது. பாவம் மக்கள்....
பாரதிமகன் சென்னை,இந்தியா
2010-06-23 19:16:23 IST
ஊடகத்துறையினர் உதவி இல்லாமல் ஒரு விழா சிறப்பாக நடந்ததாக சரித்திரம் இல்லை. வெறும் முக்கிய விருந்தினர்களை மட்டும் குளிர வைத்து மக்களை வியர்வை குளியலில் நனைய வைத்து செம்மொழி மாநாடு நடத்தி புகழ் அடைவது வெறும் அரசியல் மாநாடாக மட்டுமே இருக்க முடியும். அது உலக செம்மொழி மாநாடு என்று சொல்பவர்கள் முட்டாள்கள்....
Dhileepkumar kovai,இந்தியா
2010-06-23 19:11:32 IST
ஓவர் ஜால்ரா போட்டீங்கில்ல.. நல்லா வேணும்...!...
முத்துச லண்டன்,உருகுவே
2010-06-23 19:06:03 IST
வணக்கம் நீங்க சொல்லுறது ரொம்ப சரியானது. பத்திரிக்கை தான் இந்த அளவுக்கு கொண்டு வந்தாங்க. அவர்களுக்கு மேடை ஓரத்தில் எங்காவது இடம் அமைத்து இருக்கலாம். அனால் ரொம்ப கஷ்டமா இருக்கு மக்கள் பசியாக விட்டு விட்டார்களே?, வருகிற நாள்கலயவது மக்களை கவனீங்க?..எல்லாமே மக்கள் பணம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. வாழ்க தமிழ் மக்கள் !!! வளர்க தமிழ்!!!...
Segappiriyan சவுதி Arabia,இந்தியா
2010-06-23 19:03:59 IST
தமிழ் வாழ்க ! செம்மொழியாம் நம் தாய் மொழிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், இந்த மாபெரும் முயற்சி,இவைகளை நினைத்து மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டு , குறைகளை மறப்போம்!உண்மையாய் உழைத்தவர்களை வாழ்த்துவோம் !!!...
நெல்லை பி மாரியப்பன் திருவாரூர் ,இந்தியா
2010-06-23 19:00:58 IST
பல லட்ச கணக்கான பேர் கூடும் ஒரு நிகழ்வில் இதெல்லாம் ஒரு பிரச்னையா!...
ராஜசேகர் திருப்பூர்,இந்தியா
2010-06-23 18:52:06 IST
இது எல்லாம் கருணாநிதிக்கு தேவை இல்லாத வேலை. நாட்டுக்கு நல்லது பண்ண எவ்வளவோ இருக்கு ?...
ர.வெங்கட் திருப்பூர்,இந்தியா
2010-06-23 18:47:01 IST
தமிழன் பட்டினியாய் கிடந்தால் என்ன.. வியர்வில் குளித்தால் என்ன.. தன் குடும்பமும் அதன் உறுப்பினர்களும் நல்லா இருந்தால் அதுவே போதும். வாழ்க பணநாயகம்....
bus uk,வாலிஸ் புட்டுனா
2010-06-23 18:44:01 IST
தினமலருக்கு நன்றி...
பிரபு சோ மண்மலை கள்ளகுறிச்சி விழுப்புரம் ,இந்தியா
2010-06-23 18:33:52 IST
இது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரின் நிகழ்ச்சி அல்ல.... ஒவ்வொரு தமிழனின் சொந்த நிகழ்ச்சி ஆகும்... எனவே ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் நம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வேண்டும்......
கண்ணன் சென்னை,இந்தியா
2010-06-23 18:24:29 IST
semmozhi manadu is not conference,it is festival for all tamil people....
சாமி chennai,இந்தியா
2010-06-23 18:21:40 IST
இது மக்களுக்காக அல்லது மக்கள் நன்மைகாக நடத்தப்பட்ட மாநாடு அல்ல. எனவே அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் தவிர வேறு எவரும் உங்கள் கஷ்டங்களை பற்றி பேச தேவையில்லை. கருனாநிநிதி அவரை பற்றி புகழ்ந்து பேசி கொள்ளவும், தி.மு.க உறுப்பினர்கள் அவரை வானாளாவ பேசவும், தன பெயரில் விருது வழங்கவும் தான் இந்த விழா. இந்த மாநாட்டில் தமிழ் அறிஞ்சர் , மற்றும் தமிழுக்கு தொண்டு செய்தவர்கள் படங்களை விட கருணாநிதியின் படமே எங்கும் காண முடியும். ஒரு புத்தகமாவது சொந்தமாக யோசித்து எழுதி இருந்தால் தன் பெயரில் விருது வழங்க தகுதி இருக்கும். செம்மொழி மாநாட்டில் கருணாநிதி பெயரில் விருது வழங்கும்போதே தெரியவில்லையா யாருக்காக இந்த மாநாடு என்று. இதில் பத்திரிக்கையாளர்களை வேறு கவனிக்க வில்லையாம். நல்ல காமெடி தான் போங்க....
HABIB RAHMAN dubai,இந்தியா
2010-06-23 18:19:19 IST
ethalam arasiyalil sakagam appa.......
RAMAN Jubail,செனகல்
2010-06-23 18:14:45 IST
இந்த மாநாடு இந்த சமயத்தில் தேவை இல்லாத ஒன்று. ராஜபக்ஷேவின் கொண்டாட்டமும் கலைஞரின் கொண்டாட்டமும் ஒரேமாதிரி தெரிகிறது. சொந்த பெருமைக்கு மாநாடு நடத்தும் உங்களை தமிழ் மறக்காது. !!!!!!!! பத்திரிக்கையாளர்களை அவமதிப்பது குற்றம். இதை நாங்கள் மன்னிக்க மாட்டோம்....
subbu chennai,இந்தியா
2010-06-23 18:14:20 IST
இப்படி எல்ல்லாம் நடக்கும் என்று தெரியும் என்ன பண்ணுவது தமிழ் & தமிழரின் நிலைமை அப்படி இருக்கு...
பாலா கோவை,இந்தியா
2010-06-23 18:13:14 IST
பசியோடு சென்றவர்களில் நானும் ஒருவன்....
குரு பிரசாத் கோவை,இந்தியா
2010-06-23 18:04:43 IST
இது எனக்கு முதலிலேயே தெரியும்.. நடத்துங்க நடத்துங்க.. தமிழ் மாநாடு செலவு (5 நாளுக்கு) - 400 கோடி ஒவ்வொரு தமிழன் தலையில் கடன் - ரூ. 25000 /- தமிழனின் நிலை -- ???? வாழ்க ஜனநாயகம்!!!...
Kalai Pondicherry,இந்தியா
2010-06-23 17:59:43 IST
என்ன தான் முன் ஏற்பாடுகள் செய்தாலும் இது போல தவறுகளை தவிர்க்க முடியாது. வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்ன ஆனார்களோ?...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »