E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
செம்மொழி மாநாடு துவக்க விழா துளிகள்
ஜூன் 23,2010,13:50

* மாநாடு முறைப்படி துவங்குவதற்கு முந்தைய நிமிடம் வரை, "யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் மைய நோக்குப் பாடல் தொடர்ச்சியாச ஒலிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தது.


* அமைச்சர்கள் பெரியசாமி, வேலு, சுரேஷ்ராஜன் உட்பட அனைத்து அமைச்சர்கள், வி.ஐ.பி.,களும் அடையாள அட்டையை கழுத்தில் மாட்டியிருந்தனர். அடையாள அட்டையை கழுத்தில் மாட்டியிருந்த இன்னொரு முக்கிய வி.வி.ஐ.பி., ஸ்டாலின்.


* அமைச்சர் நேரு, சட்டைப் பையில் அடையாள அட்டையை வைத்திருக்க, வைரமுத்து, கனிமொழி உள்ளிட்டோர் அட்டையை பொருட்படுத்தவில்லை.


* வி.ஐ.பி.,களுக்கான பகுதியில் மட்டும் மின்விசிறி பொருத்தப்பட்டிருந்தது.


* காலை 10.07 மணிக்கு பின்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் திடீரென முன்னோக்கி ஓடினர். முன்பகுதி அதுவரை காலியாக விடப்பட்டிருந்தது. சிலர் மரத்தடுப்புகளின் மீது ஏறியும், குனிந்தும் முண்டியடித்தபடி ஆயிரக்கணக்கானோர் சென்றனர். போலீசார் தடுக்கவோ, ஒழுங்குபடுத்தவோ முனையவில்லை. குடியரசுத் தலைவர் பங்கேற்றும் விழாவில், விழா தொடங்க 20 நிமிடங்களே இருந்த நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருப்பின், நிலைமை மோசமாகி இருக்கும்.


* சரியாக காலை 10.26 மணிக்கு மேடைக்கு சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். அதுவரை ஒலிபரப்பப்பட்ட மைய நோக்குப்பாடல் நிறுத்தப்பட்டு, நாதஸ்வர இன்னிசை துவங்கியது.


* முதுமுனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். நாதஸ்வர இன்னிசையில் வாசிக்கப்பட்ட "மகா கணபதி' பாடலை தாளமிட்டு ரசித்தார்.


* காலை 10.29 அனைத்து சிறப்பு விருந்தினர்களும் மேடையில் அமர வைக்கப்பட்டிருக்க நிதியமைச்சர் அன்பழகன் அவர்களை மரியாதை நிமித்தமாக கைகுலுக்கி வரவேற்றார்.


* சரியாக 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மேடைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்; கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவும் அதேசமயம் மேடைக்கு வந்தார். முதல்வர் வந்ததும் "தமிழ் மொழி வாழ்க, செம்மொழி வாழ்க' என முதல்வரை வாழ்த்தும் வகையிலான பாடல் இசைக்கப்பட்டது.


* ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 10.32 மணிக்கு வழக்கமான பாரம்பரிய உடையில் மேடைக்கு வந்தார்.


* ஜனாதிபதிக்கு பொன்மஞ்சள் நிறத்திலான பொன்னாடையை முதல்வர் வழங்கினார்.


* முதன்முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது; முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். முதுமையின் காரணமாக சிவத்தம்பி மட்டும் நாற்காலியிலேயே அமர்ந்திருந்தார்.


* அதைத்தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்தை, சீர்காழி சிவசிதம்பரம் பாடினார். தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க அறிவுறுத்திய அறிவிப்பாளர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதுபோன்று சொல்லாததால், பொதுமக்கள் அமர்ந்து கொண்டே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்.


* தேசிய கீதத்தை நின்றபடி பாடிய முதல்வர், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடும் போது, அமர்ந்து விட்டார்; சிவத்தம்பியும் அமர்ந்தே இருந்தார்.


* காலை 10.42 மணிக்கு துணைமுதல்வர் ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.


* துணைமுதல்வர் பெயர் அறிவிக்கப்பட்டதும், மாநாட்டுப் பந்தலில் உற்சாகச் சலசலப்பு.


* ஜனாதிபதியை தமிழக மக்கள் சார்பிலும்; கவர்னரை, விழா தலைமைக்குழு சார்பிலும்; முதல்வரை தமிழக மக்கள் சார்பிலும் வரவேற்றார். வரவேற்புக்குழு சார்பில் அமைச்சர்கள், மக்கள் பிரதிகள், மொழி வல்லுனர்கள், பொதுமக்களை வரவேற்றார். அவரின் வரவேற்பு பட்டியலில் பத்திரிகையாளர்கள் மட்டும் ஏனோ "மிஸ்ஸிங்'


* ஸ்டாலின் பேசும் போது, தேவநேயப்பாவாணரின் தமிழ் இனிமை, புதுமை என "மை' விகுதி அமையும்படி பேச, அரங்க முழுவதும் கரகோஷம். ஒண்டமிழ், தண்டமிழ், தேன்தமிழ், தீந்தமிழ் என அடுத்தடுத்து தமிழை எப்படி எல்லாம் சிறப்பிக்கின்றனர் என அடுக்கு மொழியில் பேச, அரங்கத்தினரோடு, முதல்வரும் ரசித்துக் கேட்டார்.


* ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு துணைமுதல்வர் நினைவுப்பரிசு வழங்க, மற்றவர்கள் அமர்ந்தபடி பெற்றுக் கொண்டனர். அன்பழகன், ஜார்ஜ்ஹார்ட் மட்டும் எழுந்து நின்று பெற்றுக் கொண்டனர்.


* ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்போலா, சிவத்தம்பி, குழந்தைசாமி என சிறப்பு விருந்தினர்கள் ஐந்து நிமிடங்களுக்குள் தங்களின் வாழ்த்துரையை முடித்துக் கொண்டனர்.


* வெளிநாட்டு அறிஞர்கள் தமிழில் வணக்கம் சொன்னபோது, அரங்கத்தில் மீண்டும் கரவொலி; குழந்தைசாமி தவிர, மற்ற மொழி அறிஞர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசினர்.


* குழந்தைசாமியின், "விருந்துக்கு பெயர் பெற்றது தமிழர் பண்பாடு; கொங்கு மண்டலம் அதில் தலைமைப்பீடம்; கோவை அதற்குத் தலைமையகம்' என்ற பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது.


வாசகர் கருத்து (31)
Ponni ,இந்தியா
2010-06-24 14:06:44 IST
செம்மொழி மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்...
சபாபதிகண்ணன் அழ kharz,செனகல்
2010-06-24 13:42:02 IST
வாழிய தமிழ்,வாழ்க...
ஆகாய மனிதன் ,மாலத்தீவு
2010-06-24 13:24:26 IST
ஸ்டாலினின் தமிழ் (ஆங்கிலம் கலக்காமல்) இது அவருடைய தனி மொழி மாநாடு தான்...(அதில் கனியும் உண்டு) (துணை முதல்வர் பதவிக்கு தகுதியானவர்) - ஆகாய மனிதன்...
jeevanandam male,மாலி
2010-06-24 12:45:13 IST
மிக சிறப்பான அமைப்பு... ஒரே வருத்தம் அய்யா அப்துல் கலாம் அவர்கள் இல்லாதது, கோவையின் பெருமைக்கு பெருமை சேர்த்திருக்கிறது, தமிழை வளர்க பாடுபட்டு உலக செம்மொழிகலில் ஒன்றாக்கிய என் அப்பன், பாட்டன், இன்றைய சமுதாய இலக்கிய அறிஞர்களுக்கும் நன்றி, வாழ்க தமிழ் வாழ்க நீவிர்...............
சக்திவேல் ஜூரோங்,ஸ்லேவாக்கியா
2010-06-24 11:11:27 IST
தமிழே தெரியாதவர்களுக்கு தான் தமிழ் செம்மொழி விருது.... பலே!!! பலே!!! இது உலக தமிழ் மாநாட்டின் வரிசையில் வர வாய்ப்பே இல்லை!! வரும் சட்ட சபை தேர்தலுக்கான தி.மு.க. அரசியல் மாநாடு!!...
Ramesh Singapore,ஸ்லேவாக்கியா
2010-06-24 06:14:37 IST
தமிழ் வாழ்க நன்றி...
hariharan பிண்டுலு கிழக்கு malaysiaஈஸ்ட் m,இந்தியா
2010-06-24 06:10:47 IST
இன்று காலையில் செம்மொழி மாநாடு துவக்க விழா நிகழ்சிகளை தொலைக்கட்சியில் கண்டு புளகாங்கிதம் அடைந்தோம். அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு அதிசியக்க வைத்தது .எதிலுமே குறை சொல்ல முடியாத அளவுக்கு அனைத்துமே அருமை! அருமை! அருமை! அனைத்து நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை தின மலர் வெளியிட்டால் அவற்றை பொக்கிஷமாக நாங்கள் வைத்துகொள்வோம்...
ravi alkhor,ரீயூனியன்
2010-06-24 00:22:18 IST
தமிழ் வணக்கம்...
மூ. கோபால் கரூர் ,இந்தியா
2010-06-23 19:57:18 IST
செம்மொழியான தமிழ் மொழியே இனி திரை அரங்குகளில் தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்குமா...
G.Asaimathi Tiruppur,இந்தியா
2010-06-23 19:14:50 IST
Vazha Tamil Vazha Valamudan Warm Wishes World Tamil Conference - 2010 Semozhi Tamil Vazha. -Tamil Nesan...
இனியவன் துபாய் ,இந்தியா
2010-06-23 18:21:21 IST
நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இந்த மாநாடு......
Tamilbalan chennai,இந்தியா
2010-06-23 17:55:59 IST
நமது உயிராம் , உடலில் ஓடும் குருதியிலும் கலந்த தமிழ் அன்னைக்கு எடுக்கும் இவ்விழாவில் பேசிய சிலர் தமிழ் தெரிந்தும் ஆங்கிலமே பேசினர். எத்தனையோ அயல் நாடு தமிழ் அறிஞர்கள் தூய தமிழில் பேச , மாநாட்டு தொடக்க விழா மேடையில் பாதி ஆங்கிலமே இருந்தது...
ஷேன்.பழனிசாமி Skikda,அல்ஜீரியா
2010-06-23 17:13:24 IST
The great one innagrated by our Tamil leader....
2010-06-23 16:48:00 IST
"தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்" இப்படிக்கு சபியுல்லாஹ் அபுதாபி...
நாகராஜன் கண்ணன் அரியலூர் தமிழ்நாடு ,இந்தியா
2010-06-23 16:17:07 IST
தாய் வளர்த்து வாழ்கிறோம் , தமிழ் வளர்த்து வாழ்ந்திடுவோம்...
ரவி கே திருப்பூர்,இந்தியா
2010-06-23 15:56:18 IST
அருமை மிகுந்த தமிழ் சொற்பொழிவு நிகழ்த்திய எங்கள் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களுகு நன்றி ..... புலிக்கு பிறந்தது .............
p.govindaraj கே.krishnapuram,இந்தியா
2010-06-23 15:12:46 IST
மொழிக்காக நடக்கும் மாநாடு தமிழனுக்கு புகழ் சேர்க்கும்...
k.gunasekaran chennai,இந்தியா
2010-06-23 15:00:52 IST
தமிழ்த்தாய் நல் ஆசியுடன் மாநாடு சிறப்பு பெறட்டும். வாழ்க தமிழ் வளர்க செம்மொழி. மாநாட்டிற்கு வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் என் முதல் வணக்கம்....
ravichandran chennai,இந்தியா
2010-06-23 14:55:54 IST
tamil manadu- thuligal (sidelights) thantha mutha thagaval vudagam dinamalar than......
Elango A.R. tirupur,இந்தியா
2010-06-23 14:53:18 IST
thanks to dhinamalar for giving such chance to see the ulagath tamil semozhi maanaadu-2010 through this website...
பாலசுப்ரமணி.g chennai,இந்தியா
2010-06-23 14:44:43 IST
வைரமுத்துவும் கனிமொழியும் அடையாள அட்டை காட்டிதான் தம்மை அடையாளம் படுத்த விரும்பவில்லை போலிருக்கு...
கர்னைன் துபாய்,யூ.எஸ்.ஏ
2010-06-23 14:41:15 IST
தமிழ் இனி மெல்ல வாழும்.....
வி.கே.லோகநாதன். REDHILLSvillage,இந்தியா
2010-06-23 14:39:15 IST
''யாதும் ஊரே யாவரும் கேளீர் '' ''ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்ற தமிழ் உணர்வை போற்றுவோம்.நன்றி...
K .Devasagayam Chennai,இந்தியா
2010-06-23 14:38:27 IST
வாழ்க தமிழ்...
selvam tirupur,இந்தியா
2010-06-23 14:35:25 IST
naan maanaattil kalanthu kolla virumbinaalum, yenathu velai karanamaka kalanthu kolla iyalavillai. Aanaalum yenathu manakkurai dinamalar pokki vittathu. maanaattu seithikalai sudach suda vazhanghi varum dinamalar menmelum valargha....
பாலமுருகன் சென்னை,இந்தியா
2010-06-23 14:33:09 IST
உடனுக்குடன் செய்தி தரும் தினமலர் இணைய தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க தமிழ்..வளர்க தமிழ்.. தினமலரின் பணி மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்....
சக்தி பெங்களூர்,இந்தியா
2010-06-23 14:29:46 IST
நமது உலக தமிழ்நாடு மிகவும் சிறப்பாக நடைபெற எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். பெங்களூர் - சக்தி....
jey tuticorin,இந்தியா
2010-06-23 14:27:38 IST
விழா வெற்றி பெற வாழத்துக்கள் ....தமிழ் வாழ்க...
K.MANIVANNAN Cuddalore,இந்தியா
2010-06-23 14:26:34 IST
தெளிவான, மிகச் சிறந்த வர்ணனை. நன்றி....
விஜயா பாலன் மதுரை ,இந்தியா
2010-06-23 14:15:11 IST
மிகசிறப்பாகஉள்ளது தங்க தமிழுக்கு பெருமை...
Subburamalingam.N Tirupur,இந்தியா
2010-06-23 14:04:06 IST
Really Great !!! தினமலர் !!!!!!!!! நான் மாநாட்டுக்கு வந்திருந்த மாதிரியே உணர்ந்தேன். மிக்க நன்றி தினமலர் !!!!!!!!!!!...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »