E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
ஆன்மிகம் மூலம் தமிழ் வளர்த்த அறிஞர்கள்
ஜூன் 23,2010,12:31

குமரகுருபரர்


ஸ்ரீவைகுண்டத்தில் சண்முகசிகாமணி கவிராயர், சிவகாமசுந்தரி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். 5வயது வரை ஊமையாய் இருந்து பின்னர் திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் அருள் பெற்றார். கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதிநெறிவிளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, மதுரைக்கலம்பகம், சிதம்பர செய்யுட்கோவை, பண்டார மும்மணிக்கோவை, சகலகலாவல்லிமாலை, காசிக்கலம்பகம் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார். காசியில் குமாரசாமி மடத்தை நிறுவினார்.


சிவப்பிரகாசர்


கற்பனைக் களஞ்சியம், கற்பனை ஊற்று என்று போற்றப்படும் சிவப்பிரகாசர் முருகப்பெருமான் மீது நீரோட்டக யமக அந்தாதி பாடினார். மேல் உதடும் கீழ் உதடும் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாத வகையில் பாடப்பட்டதாகும். வீரசைவம் பற்றி கன்னட மொழியில் எழுதப்பட்ட நூலை தமிழில் பிரபுலிங்கலீலை என்று மொழிபெயர்த்தார். சோணசைலமாலை, திருவெங்கைக்கோவை, திருவெங்கைக்கலம்பகம், திருவெங்கை உலா, நால்வர் நான்மணிமாலை, திருக்கூவப் புராணம் ஆகிய நூல்கள் இவரால் எழுதப்பட்டவையாகும்.


தாயுமானவர்


வேதாரண்யத்தில் பிறந்தவர் தாயுமானவர். இவர் மவுனகுரு என்னும் ஞானாசிரியரிடம் உபதேசங்களைப் பெற்றார். 1452 பாடல்கள் இவர் பாடிய பாடல்களின் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே'' என்றும், ""நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசை கொள்ள வாராய் பராபரமே'' என்று பாடிய இவருடைய பாடல்வரிகள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.


ராமலிங்க வள்ளலார்


மருதூரில் ராமையாபிள்ளை, சின்னம்மை தம்பதியரின் மகனாகப் பிறந்தார். காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதியிடம் பாடம் பயின்றார். இவருடைய பாடல்கள் ஆறுதிருமுறைகளாக பகுக்கப்பட்டு திருவருட்பா என்ற பெயரில் தொழுவூர் வேலாயுதம் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ""வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்''என்றும், ""அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும் ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்'' என்று பாடினார். மனுமுறை கண்ட வாசகம், சீவகாருண்ய ஒழுக்கம், மகாதேவமாலை போன்ற பிற நூல்களையும் எழுதியுள்ளார். வடலூரில் சத்திய தருமசாலையை நிறுவினார்.


பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்


தெய்வக் கவிஞர் என்னும் பொருளில் "திவ்யகவி' என்று போற்றப்படும் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் வைணவசமயத்திற்கு தொண்டாற்றியுள்ளார். அழகிய மணவாளதாசர் என்னும் பெயர் இவருக்கு உண்டு. இவருடைய நூல்கள் அஷ்டபிரபந்தம் என்னும் எட்டு நூல்களாகும். அழகர் அந்தாதி, திருவரங்கக்கலம்பகம், திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவேங்கடத்து அந்தாதி, திருவேங்கட மாலை, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, திருவரங்க நாயகர் ஊசல் ஆகிய நூல்களாகும். ""அஷ்ட பிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன்'' என்னும் பழமொழி இவரின் சிறப்பை எடுத்துக் கூறுவதாகும்.


மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை


திருச்சிராப்பள்ளியில் பிறந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தில் புலவராக இருந்தார். நாளொன்றுக்கு 300 பாடல்கள் எழுதியதாகச் சொல்வர். நவீனகம்பர் என்று போற்றப்படும் இவர், தலபுராணங்கள் இருபத்தி இரண்டும், பிள்ளைத்தமிழ் பத்தும், அந்தாதி இலக்கியத்தில் பதினொரு நூலும், கலம்பகம் இரண்டும், மாலை ஏழும், கோவையில் மூன்றும், உலாவில் ஒன்றும், லீலையில் ஒன்றும் என்று சிற்றிலக்கிய நூல்களை ஏராளமாக எழுதியுள்ளார்.


ஆறுமுக நாவலர்


யாழ்பாணத்தில் பிறந்த தமிழறிஞர் ஆறுமுகநாவலர். சென்னையில் அச்சகம் நிறுவி பல நூல்களை வெளியிட்டார். மொழிபெயர்ப்பு, சிறுவர் நூல்கள், உரை நூல்கள், சமயநூல்கள் என்று பலநிலைகளில் தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். முதல் பால பாடம், இரண்டாம் பாலபாடம், மூன்றாம் பாலபாடம், நான்காம் பாலபாடம், பெரியபுராணம் வசனம், திருவிளையாடல் புராண வசனம், கோயில் புராண உரை, சைவசமய நெறி உரை,முதல் சைவ வினாவிடை, இரண்டாம் சைவ வினாவிடை, இலக்கண வினாவிடை ஆகிய நூல்களை எழுதிய இவர், ஏராளமான நூல்களைப் பதிப்பிக்கவும் செய்தார். "வசன நடை கைவந்த வல்லாளர்''என்ற ஆறுமுகநாவலரை தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் பாராட்டியுள்ளார்.


வாசகர் கருத்து (25)
அ.Natarajan Kolkata,இந்தியா
2011-02-07 20:19:12 IST
How to develope tamils and TN people is our main purpose. Growth through literature/Aanmeegam/ latest scientific and technological means. How far we have grown and what is our future strategy to lift the people through quality education by Tamil,English and other languages. This is a tool for growth. Learn as many languages as possible and be a leader in all fields....
மாசிலாமணி ப CHENNAI,இந்தியா
2010-07-09 16:01:29 IST
தமிழன் முதலில் தமிழ் பேச வேண்டும் . பிற மொழிகளைக் கற்க வேண்டும் குறைந்த பட்சம் இந்த்திய மொழிகளை கற்க வேண்டும் அரசு இதனை செய்யுமா...
க நடராசன் கோவை,இந்தியா
2010-06-28 07:54:59 IST
தமிழ்நாட்டில் பிறந்த சுவாமி தயானந்தசரஸ்வதிகள் ஒரு இடத்தில் கூட தமிழில் பேசுவது கிடையாது இதற்க்கு தினமலர் உதவி செய்யணும் , நன்றி ....
கிரீஸ் chennai,இந்தியா
2010-06-27 19:10:56 IST
உலக தமிழ் மாநாடு நடதுரடுல மகிழ்ச்சி ஆனால் இந்த பெட்ரோல் விலைவாசிய கொஞ்சம் கவனிச்ச நல்லா இருக்கும் மக்கள் தேவையை கவனிங்க ...
தே இராமநாதன் சென்னை,இந்தியா
2010-06-26 17:17:27 IST
நண்பர் சுந்தர் அவர்களே, இதை ஜாதிப் பிரச்சனையாக மாற்ற வேண்டாம். திருப்புகழை உலகறிய வைத்த செங்கல்வராய பிள்ளையும் இங்கு இல்லையே! ...
தே இராமநாதன் சென்னை,இந்தியா
2010-06-26 17:12:11 IST
இன்று உலகமெல்லாம் அருணகிரிநாதரின் திருப்புகழ் ஒலிப்பதற்கு காரணமான வடக்குப்பட்டு சுப்பிரமணியம் மற்றும் அவர் புதல்வர் சென்கல்வரயனின் பெயரே இங்கு இல்லை. முருகவேள் பன்னிரு திருமுறை என்று முருகன் மேல் உள்ள நூல்களைத் திரட்டி உரை செய்த சென்கல்வரயனை அனைவரும் மறந்தது துரத்ரிஷ்டமே....
சூர்யா நாராயணன் விழுப்புரம்,இந்தியா
2010-06-25 11:31:29 IST
நன்றாக சொன்னீர்கள் சுந்தர் அவர்களே. அனாலும் இந்த தமிழனின் மரமண்டைக்கு இதெல்லாம் ஏராது...
வ.lakshmanan AJMAN,யூ.எஸ்.ஏ
2010-06-25 09:52:49 IST
NAAN THAMILAN ENDRU SOLLUVATHIL ENAKKU PERUMAI UNDU....
வள்ளியப்பன் கல்லல்,இந்தியா
2010-06-25 06:41:36 IST
தமிழுக்கு ஆசான் முதன் முதலில் உலகுக்கீந்த மறைபொருள் எங்கே?...
ர.சிவா மதுரை ,இந்தியா
2010-06-24 19:47:19 IST
இந்த உலக தமிழ் மாநாட்டில் தமிழை வளர்த்த அறிஞர்களுக்கும் ஆண்மீகவதிகளுக்கும் சிலைகள் மற்றும் ஓவியங்களை வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...
வே.இசக்கிமுத்து ஸ்ரீவைகுண்டம்,இந்தியா
2010-06-24 11:41:38 IST
தமிழ் வாழ்க ! தமிழ் வாழ்க ! தமிழ் வாழ்க !...
வை.கிருஷ்ண குமார் டெல்லி ,இந்தியா
2010-06-24 11:39:44 IST
ஆன்மீக தமிழுக்கு அருட்பெரும் தொண்டாற்றிய திருப்புகழை மறந்து விட்டீர்களே!...
Vijeyan Chennai,இந்தியா
2010-06-23 21:00:49 IST
The conference should discuss more on how to use Tamil for scientific and techonogical purpose than discuss the past contributors. In Tamilnadu in daily conversations all phone numbers are told only in English and hardly a sentence without English words in converstions....
Ramasamy.P Coimbatore,இந்தியா
2010-06-23 20:19:48 IST
This information is precious for me.I have updated my knowledge through this one...
கார்த்திகேயன்.s thiruraipoondi,இந்தியா
2010-06-23 19:57:13 IST
இ லைக் &லவ் தமிழ் manadu...
balakannan ramanathapuram,இந்தியா
2010-06-23 16:35:34 IST
வள்ளுவரின் முதல் குறளே ஆன்மிகம் தொடர்பானது தான், ஆன்மீகம் வேறு தமிழ் வேறு கிடையாது.ஆன்மீகம் வேறு கலாசாரம் வேறு கிடையாது இவற்ற்றை மறந்தால்/மறைத்தல் பண்பு என்பது கிடையாது,பண்பு இல்லை என்னில் வளர்ச்சி என்பது கிடையாது.பகுத்தறிவு என்ற பேரில் ஆன்மிகம் என்பதை மறைத்தோம் என்றால் நமது அடுத்த தலை முறை பண்பு கெட்டு திரியும். வாழ்க தமிழ் வெல்க தமிழ்...
senkottaiyan.A Muscat,பாகிஸ்தான்
2010-06-23 16:19:41 IST
Valka tamil valarga tamilarkal..............
சம்பத் கோபர்,செனகல்
2010-06-23 15:10:15 IST
தமிழ் வழக்கு மொழியாக மட்டும் இல்லாமல் , நம் சிந்தனை வளர்க்கும் மொழியாக ஆக்குவோம் . தமிழ் வழி கல்வி பயின்று இன்று நல்ல நிலைமையில் உள்ள தமிழன் . தமிழ் வாழ்க !...
ப.shanmugadevi tiruppur,இந்தியா
2010-06-23 14:57:59 IST
வரும் தலைமுறைக்கு இந்த விழா ஒரு பொக்கிஷம் .முதல்வருக்கு நன்றி....
மாதவன் Srinivasagopalan விசாகபத்னம்,இந்தியா
2010-06-23 14:39:09 IST
பன்னிரு ஆழ்வார்கள் 63 நாயன்மார்கள் 4000 திவ்ய பிரபந்தத்தை தொகுத்தளித்த நாதமுனிகள்.. வேதாந்த தேசிகன் மணவாள மாமுனிகள். இன்னும் பல பேரை சொல்லிக்கொண்டே போகலாம்.. இதெல்லாம் ஆட்சியாளர்களுக்குத் தெரியாது.....
suresh RAMNAD,இந்தியா
2010-06-23 14:36:52 IST
intha manadu very best...
சரவணன் dubai,யூ.எஸ்.ஏ
2010-06-23 14:05:47 IST
துபாய்/௨௩.௦௬.௧௦ டியர் சார், this is best information that our ancestor who has done immortal things in anmegam thorough tamil.Moreover we are happy to know their birth place and their contribution to humanity saravanan...
ந. ஜெயபாலன் நெல்லை nagar திருநெல்வேலி நகரம் தமிழ்நாடு ,இந்தியா
2010-06-23 13:58:55 IST
இறவா தமிழ் இறையின் மொழி என்ற பாதை நின்று ஆன்மிகம் வளர்த்த பெரிஎஒரர்களை சுருங்க ஆனால் சுவையாக சொல்லி இருக்கிற்து செய்திகள்....
சதானந்தம். V chennai,இந்தியா
2010-06-23 13:52:35 IST
பழங் காலத்தில் இறைவனை பாடி அதன் மூலம் மக்கள் வாழ்வில் உயர வலி காட்டிய நாயன்மார்கள், ஆழ்வார்கள், தமிழ் வளர்த்த முனிவர்கள், திருபுகழ், தேவாரம் போன்றவை தமிழின் பெருமையை இன்றும் பறை சாற்றி கொண்டு உள்ளன. அதை பற்றி எதுவும் ஆன்மிக தமிழில் இல்லை.....
2010-06-23 13:51:09 IST
I AM HAPPY WITH ANMIGA TAMIL INFORMATION KANDAR KALIVENBA IS SHORT FORM OF KADAPURANAM SEGALIPURAM SIVAN...
Sundar Chennai,இந்தியா
2010-06-23 13:44:15 IST
They have carefully avoided mentioning any Brahmin other than Pillai Perumal Iyengar.What about Gopalakrishna Bharathi ore U.Ve SWaminathaiyer?...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »