E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகம்
ஜூன் 22,2010,19:52

இயல், இசை, நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது தமிழ் மொழி. பண்டைய காலத்தில் மூன்று துறைகளுடன் ஆன்மிகமும் கலந்து  தமிழ் மொழி வளர்க்கப்பட்டது.  இலக்கியம், நாடகம் மூலமாக தமிழ் மொழி வளர்க்கப்பட்டாலும்,  பெரிய அளவில் ஆன்மிகம் தான்,  தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம்,  மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், ஆகிய சைவ சமயத்தின் மூலமாக  தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது. அதே போல் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய  வைணவ சமயத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது.   இவ்வாறு ஆன்மிகமும் தமிழ் மொழியும்  பிரிக்க முடியாதவகையில் பின்னிப்பிணைந்திருக்கிறது. தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் என்றும் இருந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.  
ஆன்மிகத்தின் மூலம்  தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள்:
 பதினென் சித்தர்கள்:
 அகத்தியர்,போகர், கோரக்கர், மச்சமுனி, சட்டைமுனி,  திருமூலர், நந்தி,  கொங்கணர், ராமதேவர், பதஞ்சலி, குதம்பை முனிவர், கரூவூரார், தன்வந்திரி, வாசமுனி,  இடைக்காடர், கமலமுனி, சுந்தரானந்தர், பாம்பாட்டி சித்தர்  
 மன்னர்கள்:
சேரன் செங்குட்டுவன், கரிகால் சோழன், ராஜசோழன், உக்கிர பாண்டின், அதிவீரராம பாண்டியன்.
புலவர்கள்:
நக்கீரர், அவ்வையார்,காரைக்கால் அம்மையார்,  
பாணபத்திரர்,  சீத்தலை சாத்தனார், கம்பர், பாரதியார், திரிகூட ராசப்பக்கவிராயர், இரட்டைப்புலவர்களான இளஞ்சூரியர், முதுசூரியர், இளங்கோவடிகள், திரு.வி.க., ஆன்மிக வாதிகள்
பாம்பன் சுவாமிகள், முத்துக்குமார சுவாமிகள், குமரகுருபரர், சங்கரதாஸ் சுவாமிகள், வள்ளலார்,  கிருபானந்த வாரியார்.

வாசகர் கருத்து (45)
2012-11-08 11:39:17 IST
வினா அவ்வையார் அம்மா பெயர் என்ன?...
எஸ்.ராஜ் குமார். நாகப்பட்டினம்.,இந்தியா
2010-06-29 23:27:39 IST
ஆன்மீகம் மனதை பண்படுத்த வல்லது. தமிழ் பண்பாட்டை ,நாகரிகத்தை சீர்படுத்த வல்லது. நம் முன்னோர்கள் இரண்டையும் இணைத்து உலகிற்கே வழிகாட்டி உள்ளதும் அமைதி செழிக்க பாடுப் பட்டதும் மேகம் மறைத்த கதிரவனாய் வெளி வரும் நேரம்.. ஆன்மீகமும் தமிழும் மீண்டும் புத்துணர்வுடன் நம்மை வழி நடத்தும்.இவ் வுலகின் எதிர்காலம் இவ்விரண்டில்தான். ....
எஸ்.ராஜ் குமார். நாகப்பட்டினம்.,இந்தியா
2010-06-29 22:54:22 IST
ஆன்மீகமும் தமிழும் ஆதி முதலே இரண்டற கலந்து இன்பம் தருவன.மன அமைதியே இரண்டின் மகிமை ஆயின. வானும் கடலும் வாழும் வரை நம்மை வாழ வைக்கப் போவது ஆன்மீக மனமும் தமிழ் மனமும் என்பதில் வேண்டாம் ஐயம் ....
ராம்குமார் து திருநெல்வேலி,இந்தியா
2010-06-27 18:21:38 IST
அன்பு தமிழ் மக்களுக்கு நன்றி உடன் ஆன்மிகமும் தமிழும் தாய் மகன் உறவு கொண்டது ஏன் இவரு சொல்கிறான் என்றல் உலகில் உள்ள ஆன்மிக நூல் பட்டியலை பார்த்தால் தமிழில் எழுதிய ஆன்மிக நூல்கள் தான் அதிகம் என்று அடித்து கூறுவேன் நம் தமிழ் மொழி கூட தெய்வம் தான் சிவவாக்கியர் பதின்மர்கள் சித்தர்கள் என்று பலரும் ஆன்மிகத்தை குறியுள்ளனர் எதற்கு ஆன்மிக நுல்கள் atharam...
ராம் TIRUPPUR,இந்தியா
2010-06-27 13:34:09 IST
மொழி, பண்பாடு,நாகரிகம்,மக்களின் வாழ்க்கை முறை போன்றவை வளரவும்,அழியாமல் காக்கவும்"ஆன்மிகம்" மிக மிக அவசியம் தான் என்பதை பகுத்தறிவு வேஷம் போடும் அரசியல்வாதிகள்(கழக உடன்பிறப்புகள்)தெரிந்து கொள்ள(!?) இந்த மாநாடு மிகவும் உதவியது.ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரமும் அவசியம் தெரிய வேண்டும்.மாநாடு ஏற்பாடு செய்த பகுத்தறிவு கலைஞர் "வாழ்க"....
swaminathan madurai,இந்தியா
2010-06-27 10:15:03 IST
anbargale, Anmeegam iallemal tamil illai enpathu ULANGAI NELLIKANI() ONTRAI ONDRU AZITHU VARVATHU VILANGINAM ANAL ONDRODU ONDRU INAINTHU VUYARVATHU ILAKKANAM() NAAM NAM ILLATHIL TAMILIYE PESUKIROMA? KULANTHAIGAL NAMAI AMMA APPA ENDRU ALAIKIRATHA? TAMIL PESUPAVARAI MATHIKIROMA? TAMIL PANPATTU UDAI UDUTHUKIROMA??? ENDRU SEIKIROMA ANDU TAMIKL UYARUM NANDRI...
க.சசிகனி சவூதிஅரேபியா,இந்தியா
2010-06-26 18:11:16 IST
கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்குடி.ஆதியும் அந்தமும் அற்றது இந்து மதம். தமிழின்றி இந்து மதமில்லை.இந்துகளின்ரி தமிழில்லை.வாழ்க தமிழ்,வளர்க இந்து ஒற்றுமை.க.சசிகனி,திருப்பாலைக்குடி. ...
Ambigapathy Chennai,இந்தியா
2010-06-26 15:04:06 IST
மாலினி அவர்களே தமிழ் தெய்வத்தால் தொற்றிவைத்த மொழி எனபது உண்மை. அனைத்து மொழிகளும் (விலங்கு முற்றும் பறவை இனங்கள் மொழிகள் உள்பட) மற்றும் அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்தும் தெய்வத்தால் உருவக்கபட்டிவைக்கள்தான். திரு அறிவழகன் கூறியிருப்பது, நமது கலாச்சாரத்திலும் பழைய இந்திய மொழிகளிலும் எப்படி சமஸ்கிரிதம் வேருன்றிவுள்ளது என்பதை பற்றித்தான். இந்தியாவில் - ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை - உள்ள நம்நாட்டுக்கு சொந்தமான அனைவரும் சமஸ்கிரதம் மூலம் பரவிய பண்பாட்டை தான் பின்பற்றுகிக்றோம். சுருக்கமாக சொல்லப்போனால் இந்தியாவிற்கு சொந்நதமான அனைவரின் பெயர்களில் சுமார் 90% சமஸ்கிருத பெயரில்தான் இருக்கிறது. உங்கள் பெயரே சமஸ்கிருத பெயர்தான்! அப்படியிருக்கு, உங்கள்ளுக்கு ஏன் சம்ஸ்ரிதம் செத்து கொண்டுயிருக்கிறது என்று ஐயப்பாடு வருகிறது? சம்ஸ்ரிதம் சாகவில்லை.....சாகாது...., நாம் இந்தியர்களாக இருக்கும்வரை!!!...
மாலினி tiruchy,இந்தியா
2010-06-26 02:50:21 IST
The ancient language spoken in the southern part of India including the present day Thamizhnadu was Bali. Later on, Bali language spoke with different dialectic in and around Koda Naadu was called “Thamizh”. To write in Bali language, Grantha scripts were used. Grantha scripts are still used in Malayalam. We can also find the Grantha writings in temples built 500years ago. Thirvalluvar - his original name, place of birth, birth date or period are yet to be traced but certainly an Aryan descent - had used Grantha scripts to write the substance of Bhagavat Gita in Bali language, which we now call those writings as Thirukkural. Scripts used by Siddhas, ancient Saints (Thiruvalluvar included) and other scholars were nothing but Grantha scripts. The syllables of Bali/Grantha were largely similar to those of Sanskrit/Devanagiri. With no doubts, early Aryans were instrumental to develop Bali, which turned as present day Thamizh....
komala Tiruchy,இந்தியா
2010-06-26 02:44:52 IST
மாலினி அம்மையார் சமஸ்கிருதம் செத்து கொண்டிருக்கிறது என்று கூறுவது மறுக்கமுடியாது. அதாவது, அவர் கூறுவது நமது பண்பாடு (culture), உண்மையான தேசபற்று எல்லாம் செத்துகொண்டிருக்கிறது. ஏன் மாலினி உள்பட அனைவரும் ஒருநாள் முதுமையடைந்து அந்த நிலைக்கு வரவேண்டியவர்கல்தான். மாலினி மதியை பயன்படுத்தினால் அவருக்கு நல்லது!...
மாலினி trichy,இந்தியா
2010-06-25 19:17:32 IST
பெயர் என்னவோ "அறிவழகன் ". ஆனால் அதை பயன்படுத்த மாட்டார் போல. தமிழ் என்ன மக்களால் உருவாக்கிய மொழியா? முருக கடவுளின் அருளால் அகத்தியரால் உருவாக்கப்பட்டது. சமஸ்கிருதம் தனி. தமிழ் தனி. தமிழில் இருந்து பல மொழிகள் பிரிந்து உள்ளன. ஆனால் தமிழ் கடவுளால் உருவாக்கப்பட்ட மொழி. சம்கிருதமும் பழைய மொழிதான். அதற்காக தமிழுக்கு அன்னை எல்லாம் கிடையாது. சமஸ்கிருதம் செத்து கொண்டு இருக்கிறது. அதை காப்பாற்ற முயற்சி செய் அறிவழகா. இப்படி பிதற்றாதே. தமிழை பற்றி தெரியாமல் உளறாதே. ...
விக்னேஷ் Ezhil Singapore,இந்தியா
2010-06-25 13:26:54 IST
இதிலுமா பட்டிமன்றம் ? விடுங்கப்பா.......
kumar villupuram,இந்தியா
2010-06-25 11:54:44 IST
Sir I don't know why people like krishnamoorthi get irritated without understanding facts. A man with perfect tamil name applauds sanskirit. A man with sanskrit name degrades sanskirit. In my opinion though the manner in which Mr.arivazhagan presented may irk tamil veriyars not tamil anbars, but they are 100% right. these sort of debates alone will unify we indians not like that of divisive thinking of krishnamurthy. Caldwell, beski(veeramamunivar)all are vicious and have spread hatredism among indian language and still we foolish barathians quarell with ourselves. hope we are still slaves of those idiots...
Shrisanthajothi Chennai,இந்தியா
2010-06-25 11:30:22 IST
தமிழ் மொழி என்றுமே ஆன்மிகத்துடன் தொடர்பு உடையது என்பதற்கு திருவள்ளுவர், ஔவையார் இவர்கள் இருவருமே உதரணதிற்கு போதும்....
விஜயகுமார் நா சென்னை,இந்தியா
2010-06-25 11:21:28 IST
தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகத்தின் பங்கு மிகவும் இன்றிமையாதது. இந்தியாவில் வாழும் மக்களில் தொண்ணுறு சதவீதத்தினர் இறை நம்பிக்கை உள்ளவர்கள். அதிலும் குறிப்பாக தமிழ் நட்டு மக்கள் மிக கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். உயிரும் உடலும் போல் தமிழும் ஆன்மிகமும் ஆகும். தமிழில் உள்ளது போல ஆன்மிக நூல்கள் மற்ற மொழிகளில் உள்ளனவா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவில், ஆன்மிக தமிழ் சான்றோர்கள் ஆன்மிக நூல்களை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் மறை எழுதிய திருவள்ளுவரே "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு" என்று தான் திருக்குறளை தொடங்கி உள்ளார். எனவே தமிழ் வளர்ச்சியில் ஆன்மிகத்தின் பங்கு சொல்லோனானது. ...
G V Prakash madurai,இந்தியா
2010-06-25 08:23:20 IST
நண்பர் கண்ணன் அவர்களின் கருத்துக்கள் நன்றாக உள்ளன. ஆனால் அவர் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். ஆன்மிகம் மட்டுமே தமிழை வளர்த்தது என்று யாரும் சொல்லவில்லை. சொல்லவும கூடாது. அதே சமயம் தமிழின் வளர்ச்சியில் ஆன்மிகத்தின் பங்கு மிக மிக பெரியது & ஆன்மிகமும் தமிழும் நீண்ட காலமாக ஒன்றோடு ஒன்று பின்னி பிணைத்து ஒன்றை ஒன்று வளர்த்து வருகின்றன என்பதை கண்ணன் போன்ற - கடவுளை கும்பிட விருப்பமில்லாத - நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். கோவை மாநாட்டு காட்சிகள் காண்பதில் களிப்பை உண்டாக்குகின்றனவே அல்லாது மற்றபடி கலைஞர் கருணாநிதியின் பேத்தி பேரன் உற்றார் உறவினர்களின் பெருமையை பறைசாற்ற உதவுகின்ற ஒரு மேடையாகவே தெரிகிறது. நான் சொல்வது தவறாக இருந்தால் மன்னியுங்கள். தமிழை கடவுள் காப்பாற்றட்டும். கருணாநிதியை தமிழ் மக்கள் காப்பாற்றட்டும். வாழ்க தமிழ்....
ராமு சென்னை ,இந்தியா
2010-06-25 07:53:00 IST
தமிழ் என்பது சிவன் மொழி . அது நம் முன்னோர்கள் சொன்னது . ஒரு மொழி நம்முடன் எப்படி தொடர்பு கொள்கிறது என்பது மிக முக்கியம் . நம் தமிழ் மொழி நம் உடல் மனம் உணர்வாக கலந்து இருக்கிறது . நமக்கு வேறு மொழிகள் உயர்வா தாழ்வா என்பதை விட . தமிழ் மீது நம் கவனம் வைப்போம் . மாணிக்கவாசகர் , ஆழ்வார்கள் கிடைத்தது நம் மொழியில் தான் ஆகவே அவர்கள் எழுதியதை படித்து தீர்ப்போம் ... ரசிப்போம் .... தயவு செய்து இதை அரசியல் செய்ய வேண்டாம். தமிழுக்கு மநாடு நடத்தினாலும் நடத்தா விட்டாலும் தமிழ் வாழும் .... நமக்கு மீண்டும் சிவனடியார்களும் ஆழ்வார்களும் கிடைப்பார்கள் ......
M . Krishnamurthy எல்லிகோத்ட் சிட்டிUS,இந்தியா
2010-06-24 19:14:04 IST
It is interesting to read some of these posts! But unfortunately just as I was growing up in Tamilnadu, even now there is lot of misunderstanding. Mr. Arivazhagan says 70% of words in Tamil are from Sanskrit! What a bunk! He should read Prof. G. Hart's book to see how sanskrit gained from Thamil. If there are words from sanskrit in Thamil, it is the doing of some miscreants! But how pro. Parithimaalkalingnar even changed his name to make a change in direction! Read a book on 'Siva's Warriors' by a gentlemen from Andhra to learn how some people suppressed the telugu of common folks in favor of sanskritized version in literature!...
முருகன் சென்னை,இந்தியா
2010-06-24 17:36:23 IST
இன்றளவும் பல கோயில்களில் அர்ச்சகர்கள் பலர், சமஸ்க்ருத மந்திரம் சொல்லிய பின், தேவாரத்தையோ, நாலாயர திவ்ய பிரபந்தத்தையோ பாடுகிறார்கள். அதனால் ஆன்மிகம் தமிழுக்கும் சமஸ்க்ரிததிர்க்கும் ஒரு பாலமாக கூட இருக்கிறது. ஆன்மிகம் மொழி வேற்றுமைகளை களைகிறது. பாரதத்திற்கு சமஸ்க்ரிதம், தமிழ்நாட்டிற்கு தமிழ். ஜெய் ஹிந்த்! வாழ்க தமிழ்!!...
முருகன் சென்னை,இந்தியா
2010-06-24 15:07:55 IST
ஆன்மீகத்தின் மூலமாக தான் தமிழ் இன்றும் நிலை பெற்று இருக்கிறது. இதற்க்கு சமஸ்க்ரிதம் சாட்சி. சமஸ்க்ரிதம் இன்று பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் அந்த மொழி இன்னும் அழியாமல் இருக்க காரணம், ஆன்மிகம் மட்டுமே. வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்!!...
thendral chennai,இந்தியா
2010-06-24 12:17:29 IST
nalayira diyaprbandamum thiruvasagamum, silappathigaramum valarkka thamizhaiya m.ka valkka pogirar. indru velivarum thamil cinema-vai parthal thamil tharkolai senthu kollum, atharku m.ka -vin support veru. uruppadum tamil nadu...
2010-06-24 11:47:15 IST
பூர்வபௌதன் என்ற வடமொழி சார்புடைய பெயரை வைத்துக் கொண்டுள்ள வாசகரே: பெரும்பாலான வைணவக் கோயில்களில் உற்சவக் காலங்களில் பெருமாளுக்கு முன்பு அழகான செந்தமிழில் திவ்ய பிரபந்தம் சொல்வதையும் பின்னால்(தான்) வேதம் சொல்வதையும் கேட்டிருந்தால் உளறி இருக்கமாட்டீர்கள். அறிவழகன் என்ற தமிழ் சார்பு பெயர்வைத்துள்ள வாசகரின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. வைணவர்களின் அடியேன், தெண்டம் சமர்ப்பித்த விஞ்ஞாபனம் என்கிற வார்த்தைகள் செந்தமிழ் என்பது தங்களுக்கு தெரியுமா? உங்களது உளறலையும் மீறி வாழ்வதுதான் ஆன்மீக தமிழ்....
முருகன் சென்னை,இந்தியா
2010-06-24 11:39:28 IST
ஐயா பூர்வபௌதன், கோவில்களில் தேவாரமும் திருவாசகமும் ஒலிப்பதை கேட்டதில்லையா. இதே திமுக அரசு, தமிழ் குடி மகன் அறநிலைய துறை அமைச்சராக இருந்த போது, தேவாரம் கண்டிப்பாக அர்ச்சகர்கள் தெரிந்திருக்க வேண்டும், பாட வேண்டும் என்று உத்தரவு போட்ட, அதிகாரி திரு மெய் கண்ட தேவனை, காஞ்சி மடத்தின் உத்தரவின் பேரில், துறை மாற்றம் செய்யவில்லையா. இது தான் திமுக வின் தமிழ் பற்று. எல்லாம் பகல் வேஷம். மக்களை ஏமாற்றும் வழி. ஜெய் ஹிந்த்! வாழ்க தமிழ்!!...
K.RAVICHANDRAN CHENNAI,இந்தியா
2010-06-24 09:20:30 IST
NO TEMPLES IN TAMILNADU WITHOUT TAMIL. EVERY DAY EITHER NALAYIRADIVYAPRABANDHAM IN CASE OF VAISHNAVA TEMPLES THIRUVASAGAM/TIRUPUGAZH IN CASE OF SAIVA TEMPLE USING TAMIL LANGUAGE ONLY....
sathesh madurai,இந்தியா
2010-06-24 01:48:36 IST
தமிழ் என்றோ செத்துவிட்டது பணம் விரயமாவது காலம் விரயமாவது...
பூர்வபௌதன் சென்னை ,இந்தியா
2010-06-23 23:48:20 IST
அனைத்து பதிவர்களுக்கும் வணக்க்ம் ... தமிழ் மொழியை அதன் செம்மொழி சிறப்பை உலக மக்கள் அறிய செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி தமிழ் மக்களாகிய நம்மிடம் இருக்கிறதோ அதுபோலவே தினமலருக்கு அதன் மொழி பற்றும் அதன் விச தன்மை பொருந்திய சொற்களும். தினமலர் காலம் காலமாக செய்து கொண்டிருக்கும் ஆன்மிகம் என்ற போர்வையில் ஆரிய மொழி பரப்புரையும் திராவிட எதிர்புரையும் இங்கே செம்மொழி மாநாடு என்ற இணைய தளம் மூலமாக மீண்டும் ஆன்மிகதமிழ் என்ற சொல்லில் இருந்து துவக்கி இருக்கிறது. இங்கே பதிபவர்கள் கூட ஆன்மிகம் இல்லையேல் தமிழ் இல்லை என்ற பொருள் பட எழுதுகிறிர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மொழியில் தமிழர்களின் பண்பாடு, ஆன்மிகம் என்பது எல்லாம் தமிழ் மொழியில் தானே அமைந்திருக்கும் ஆனால் இன்று ஒரு கோவிலிலாவது தமிழ் மொழி ஒலிக்கிறதா? இந்த விச செயலைத்தான் ஆரிய ஏடுகள் ஆரிய மொழி பரப்புரையை, பகுத்தவறிவற்ற போக்கை ஆன்மிகம் என்ற சொல்லில் இருந்து ஆரம்பிகிறது இங்கயும் அந்த சிண்டு முடியும் வேலையை தான் தினமலர் ஏடும் தமிழ் இணையதளம் என்ற போர்வையில் ஆரிய மொழிக்கான அங்கீகாரம் தேட பார்கிறது ... தமிழ் பதிவர்கள் உங்கள் ஆன்மிகம் நிலை நிறுத்த பட வேண்டும் என்பதற்காக செம்மொழி தமிழை நம் தாய் மொழியின் தொன்மையை உலகலாவிய சிறப்பை உங்கள் ஆன்மிக போர்வைக்குள் புதைத்து விடாதிர்கள்......
Ragavan Coimbatore,இந்தியா
2010-06-23 20:01:43 IST
ஆன்மிகம் இல்லை என்றால் தமிழ் இல்லை. தமிழை முழுக்க முழுக்க வளர்த்த பெருமை ஆன்மீகத்தை சேரும். முன் காலத்தில் திண்ணை பள்ளியில் சிலர் படித்து போக மீதம் உள்ளோர் என்ன செய்தனர்? கோவில்களில் கதாகாலேட்சேபம் மற்றும் கலை நிகழ்சிகளில் மட்டுமே தமிழ் இலக்கியங்கள் மேடை ஏற்றப்பட்டன. கோவில் விசேஷங்கள் தவிர வேறு எங்கும் தமிழ் மக்களிடம் சென்று அடையவில்லை. ஆங்கிலேயன் வந்து நமது ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் உடைதெரிந்தால் மட்டுமே நாம் இந்தியாவை நம் வலையில் வீழ்த்தமுடியும் அதன் பின் ஆங்கிலேயம் மற்றும் ஆங்கிலம் தான் உலகில் சிறந்தது என்று ஆழ் மனதில் பதிய வைத்துவிடலாம் என்று 1835 -இல் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் லார்டு மெக்காலே உரையாற்றினார். அதன் பின்னர் அதை நிறைவேற்றினர். ஆங்கிலேயன் உடைத்தெறிந்த நம் முதுகெலும்பை என்று சீர் செய்ய போகிறோமோ அன்று தான் தமிழுக்கும் ஆன்மீகத்துக்கும் இந்தியர்களுக்கும் விடிவுகாலம். திரு மு க அவர்கள் தமிழுக்கு விழா எடுத்தது போல் ஆன்மீகத்துக்கும் மாபெரும் விழா எடுப்பாரா? எடுத்தால் மட்டுமே தமிழுக்கு மேருகேட்ட்ற ஆன்மீகம், ஆன்மீகத்துக்கு மெருகாக தமிழ் என்றாகும்...
பாஸ்கர் சென்னை,இந்தியா
2010-06-23 18:48:30 IST
இந்து மத நம்பிக்கைகளை நோகடிக்க வேண்டும் என்று முடிவு கட்டி தமிழ் மாதப் பிறப்பை சித்திரையிலிருந்து தை மாதத்திற்கு மாற்றினார் முதல்வர். அத்தோடு அதன் கதை முடிந்தது. ஏன் மற்ற மாதங்கள் அவர் கண்ணுக்கு தெரிய வில்லையா ? இதோ நடக்கும் தமிழ் மாநாட்டுக்கு ஏன் தமிழ் மாதம் பற்றிய அறிவிப்பே இல்லை ? ஆனி மாதம் என்று குறிப்பிட்டு அந்த தேதிகளை குறிப்பிடக் கூடாதா என்ன ? அது என்ன சூன் மாதம். இவருக்கு மட்டும் மொழி-ஒலி மாற்றம் நியாயம் ஆகும். கடைகளுக்கு பெயர் வைப்போர் மட்டும் சுத்த தமிழில் வைக்க வேண்டும் என்று கட்டாயம் ! ஏமாற்றுவதில் கூட எத்தனை கெட்டிக்காரத்தனம்...
Arivalagan Coimbatore,இந்தியா
2010-06-23 14:14:38 IST
Some researches well indicate that many Indian languages including Tamil, Marathi, Punjabi, Bengali or other such ancient languages were once spoken by different small groups of tribals then lived all over Indian subcontinent. Like English has influence in our day-to-day usages (for example, words such as “bus”, “paper”, “road”, “bench”), several centuries back, Sanskrit language and associated culture had great influence with all our Indian languages and our way of life. If we carefully go through thousands of words in either Tamil or any other Indian language, we could sense the influence of Sanskrit. For example, even the party name - “Dravida Munnetra Kazhagam” – the world “Dravida” itself is a Sanskrit word, which means south. "Udaya Suryan" are Sanskrit words. Karunanidhi, Ramasamy, (Ala)giri, Anna(durai) are all Sanskrit names. Even in the word "Maa-nadu", the first syllable "Maa" is a Sanskrit based word (that is, "Maha"). If we take out Sanskrit from Tamil, we may be left with limited number of original Tamil words only. It is clear slightly over 70% of the words we speak contain Sanskrit in some forms. German universities recognize both Tamil and Sanskrit have close association in a number forms. Tamil language was well developed by then ruled great kings like Pandias or Cholas, who were true lovers of Tamil language. Those kings greatly respected saints and true scholars, who were also expert in Sanskrit language/grammar, to promote Tamil literature. This is preciously why Tamil literature is enormously enunciated with pure divinity and Manu Neidhi (Sanskrit words that depict true social justice). Therefore, Sanskrit is not so called ‘Annia (or Vada) Mozhi” but our true “Annai (or Thaai) Mozhi” – that is, with no doubt, Sanskrit is the mother language of all our Indian languages including Tamil. Therefore, respecting Sanskrit is just like respecting our own mother. Hope our great CM will also consider organizing a Maa-Nadu” (or in Sanskrit called Maha-Melana) for Sanskrit in Tamilnadu before other States take the credit....
முருகன் சென்னை,இந்தியா
2010-06-23 14:05:56 IST
தமிழ் மொழியே, முருகப்பெருமானால் , அகத்தியர் மூலமாக, தொல்காப்பியருக்கும், அதங்கோட்டு ஆசானுக்கும் உபதேசிக்கப்பட்டது. அவர்கள் மூலமாக தமிழ் வளர்க்கப்பட்டது. ஆகவே தமிழ் மொழியும் ஆன்மிகமும் பிரிக்க முடியாதது. ஜெய் ஹிந்த்! வாழ்க தமிழ்!!...
கூரம் கி. வரதராஜன். அண்ணாநகர் சென்னை ,இந்தியா
2010-06-23 13:39:04 IST
தினமலர் ஆசிரியருக்கு வணக்கம்.உலக தமிழ் செம்மொழி மகாநாடு மிகவும் சிறப்பாக ஓளிபரப்பு செய்யப்படும் நிலையில் ஆன்மிகம் சாரா மொழிகள் எதுவும் நன்றாக வளராது என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்....
kannan chennai,இந்தியா
2010-06-23 13:27:05 IST
நண்பர் முருகனை போன்றோர் தனித்தமிழ் இலக்கியங்களை படிப்பதில்லை என்பதற்காக ஆன்மீக இலக்கியத்தால் தமிழ் வளர்ந்தது என்பதை எட்ட்ருகொள்ள முடியாது. அது உண்மையும் இல்லை. கண்ணைமூடிக்கொண்டு வெளிச்சம் இல்லை என்பதுபோல் உள்ளது. ஆன்மீக இலக்கியங்கலால்தான் செந்தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. சங்க இலக்கியங்களையும் சமய இலக்கியங்களையும் ஒப்பிட்டு பார்த்தல் இந்த உண்மை தெரியும். ஆரிய, ஆங்கில மாயயினால்தான் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. but, so, because, போன்ற சொற்களையும், வடமொழி சொற்களையும் இடையில் சேர்த்து பேசும் அரைவேக்காட்டு தமிழர்களால்தான் இப்போது தமிழ் அழிந்திகொண்டிருக்கிறது என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன். ஆறாயிரம் மொழிகள் உலகில் இருந்தும் பிற சாரா ஆறு மொழிகளை மட்டும் செம்மொழிகளாக ஒப்புக்கொண்டுள்ளார்கள். அதிலும் உயிர்வாழும் செம்மொழியாம் தமிழை குறை கூறி அழித்து விடாதீர்கள். நம் தாயை விட உயர்வானது நம் தமிழ்மொழி....
kannan chennai,இந்தியா
2010-06-23 12:43:40 IST
ஆன்மீகத்தால் தமிழ் மொழி வளர்ந்தது என்பதை ஒத்துக்கொள்ள இயலாது. ஆன்மீக இலக்கியங்கள் அனைத்தும் எட்டாம் நூற்றண்டிற்கு பிறகு வந்தவைதான். ஆரிய, கிறித்தவ, இஸ்லாமிய ஆதிக்கத்திற்கு பிறகு வந்தவைதான் ஆன்மீக தமிழ் இலக்கியங்கள். தேவாரம், திருவாசகம், திவ்யப்ரபந்தம், தேம்பாவணி, சீராபுராணம் போன்றவை பிற்காலத்தில் வந்தவைதான். தொல்காப்பியமும், திருக்குறளும், அய்ம்பெரும்காப்பியங்களும் சமயநூல்கள் இல்லை என்பதை என்னருமை தமிழ் நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும். திருக்குறளுக்கு இணையாக ஒரு சமய நூலும் தமிழிலும் இல்லை வேறு மொழிகளிலும் இல்லை என்பதை பணிவாய் தெரிவித்து கொள்கிறேன். தமிழ் தனி மொழி. அது எதையும் சார்ந்து வளரவில்லை. அது காலத்தால் இயற்கையாக வளர்ந்த உலகில் உயர்ந்த மொழி. வாழ தமிழ்....
முருகன் சென்னை,இந்தியா
2010-06-23 12:38:51 IST
இன்றைய தமிழர்கள், தொல்காப்பியதையோ, சிலப்பதிகாரதையோ, திருக்குறளையோ படிப்பதில்லை. ஆனால் பாமர மக்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என பல நூல்களையும் அன்று முதல் இன்று வரையும் படித்து கொண்டு இருக்கின்றனர். அதில் நானும் ஒருவன். ஜெய் ஹிந்த்! வாழ்க தமிழ்!!...
லக்ஸ்மி kovai,இந்தியா
2010-06-23 11:14:23 IST
ஆன்மீகமும் தமிழும் ஒன்றொன்று பிண்ணி பினைந்தது. இதில் பி்ரிப்பதற்கு ஒன்றுமே இல்லை....
அருண்குமார் அல்லாஹஅபாத்,இந்தியா
2010-06-23 11:09:56 IST
tamil is very fanstic language, tamil is orthodox language. Without super power nothing will happen. The super power is governing the world, but we can get super power with help of tamil.becuase, tamil having all capabilities like grammatically, musically & by words. Be proud a tamilian and thank god for i am tamilian. Only concern is, we have to learn our National language for communication purpose, that is the only sin for tamil people.This has to be implemented permanently in Education system. Tamil vaalga!!!!!!!...
2010-06-23 10:35:22 IST
ஒரு வாசகர் தமிழினால்தான் ஆன்மிகம் வளர்ந்தது என்கிறார். ஒரு மொழியினால்தான் ஆன்மிகம் வளரும் என்றால் சில மொழிகள் காணாமல் போவதேன்? ஆன்மீகக் கருத்துக்கள் உள்ளதால்தான் சம்ச்க்ரித மொழி பேச்சு வழக்கில் இல்லை என்றாலும் இன்னும் அழியாமல் உள்ளது....
பொன் நந்தன் பெக்கான் பஹாங் ,மாலத்தீவு
2010-06-23 08:12:10 IST
ஆசையறாய் பாசம் விடாய் ஆனசிவ பூசை பண்ணாய், நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய் -சீச்சீ சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய், மனமே உனக்கென்ன வாய், இப்படி ஆயிரம் இலட்சமென்று ஓதி ஓதி தமிழ் வளர்க்கப்பட்டுள்ளது. ஆன்மீகத்தினால்தான் தமிழ் வளர்ந்துள்ளது. அதிலென்ன சந்தேகம். செடிகொடிகளையும்,மாக்களையும், ஆறறிவு படைத்த மனிதகுலமும் உயர்வடையும் பொருட்டும் - எக்காலத்தாலும் எதனாலும் அழியா வண்ணம் தமிழ் அன்மீகவாதிகளால் புடம் போட்டு வார்த்து வளர்க்கப்பட்டுள்ளது. வளர்க தமிழ் - வளரட்டும் தமிழினம். ...
துரை செல்வராஜூ தஞ்சாவூர்,இந்தியா
2010-06-23 06:34:51 IST
ஆன்மீகமும் தமிழ் மொழியும் ஒன்றை ஒன்று சார்ந்து தான் வளர்ந்துள்ளன...ஆன்மிகமும் அறநெறியும் நல் ஒழுக்கமும் தமிழரின் தனி முத்திரை....
Bala Sivam chennai,இந்தியா
2010-06-23 06:14:49 IST
Good article. This is not only Mr. Karunanidhi's fault. Even ours. things will happen on its own, it will happen through karunanidhi or jeya or you and me. it is god's will and we have nothing much to say except just watch. so don't increase your BP and swallow some tablets....
சக்திவேலு கோஜே ,தென் கொரியா
2010-06-23 05:44:21 IST
தமிழ் மொழி ஆன்மிகம் என்ற ஊடகம் வழியாகவும் வளர்ந்து இருக்கிறதே ஒழிய, ஆன்மிகத்தால் தான் மொழி வளர்ச்சி என கூறஇயலாது. மன்னிக்கவேண்டும் நண்பர்களே!....
viswalingam pondicherry,இந்தியா
2010-06-23 05:14:37 IST
ஆன்மீகம் மூலமாகவே தமிழை வளர்க்க முடியும் திரு.கருணாநிதி அவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாநாட்டால் மக்கள் பணம் விரயமாவது நிச்சயம் ஆட்டு மந்தை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ? இதில் அரசியல் சாயம் வேறு இருக்கும். மேடை ஏறுபவர் எல்லோரும் கலைஞர் கருணாநிதியை தான் மிகவும் புகழ்வார்கள். இது இன்னொரு திமுக மாநாடு. வாழ்க தமிழ் நாடு வாழ்க தமிழ் உணர்வு சரியான கருத்து,ஆன்மிகம் இல்லாமல் தமிழே இல்லே ,இது கருணாநிதிக்கு தெரியலே...
suryanarayanan paris,பிரான்ஸ்
2010-06-23 01:44:36 IST
Mr Karunanidhi is of course a great writer and orator.I heard he is from andhra pradesh. Tamil has grown mainly because of anmega tamil. this is completely ignored by him and by the conference....
ராஜவடிவேலு மதுரை,இந்தியா
2010-06-23 01:01:01 IST
தமிழ் மொழியும் ஹிந்து மதமும் பிரிக்கமுடியாத ஒன்று தான். இரண்டும் ஒன்றை சார்ந்து தான் எப்பொழுதும் வளர்ந்தே வந்துள்ளன....
G V PRAKASH madurai ,இந்தியா
2010-06-22 23:13:05 IST
தமிழ் வளர்த்த மதுரை தமிழ் சங்கம் முதன்மையாக கொண்டது ஆன்மிக தமிழைத்தான். தமிழ் மொழி வளர்ச்சியின் முப்பரிமாணங்கள் என்று பார்த்தால் ஆன்மிக தமிழ், பண்டைய இலக்கிய தமிழ் மற்றும் நவீன தமிழ் ஆகியவைதான். இதில் ஆன்மிக தமிழை புறக்கணித்துவிட்டு செம்மொழி மாநாடு நடத்துவது எந்த விதத்திலும் முறை அல்ல. எப்படி மூன்று பால்களில் ஒரு பாலை விட்டுவிட்டு மற்ற இரண்டு பால்களை மட்டும் வைத்து திருக்குறளை ஆராய்ச்சி செய்வது முழுமை அடையாததோ அதே போல் தான் ஆன்மிக தமிழை புறக்கணித்துவிட்டு உலக செம்மொழி மாநாடு நடத்துவதும் முழுமையானது அல்ல. தமிழுக்கு மிகப்பழைய செம்மொழி என்ற அந்தஸ்து கிடைத்ததே ஆன்மிக தமிழால் தானே. ஒருவேளை இது உலக தமிழ் செம்மொழி நாத்திகர்கள் மா நாடோ என்னவோ....
கிருஷ்ணன் சென்னை,இந்தியா
2010-06-22 22:25:50 IST
ஆன்மீகம் மூலமாகவே தமிழை வளர்க்க முடியும் திரு.கருணாநிதி அவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாநாட்டால் மக்கள் பணம் விரயமாவது நிச்சயம் ஆட்டு மந்தை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ? இதில் அரசியல் சாயம் வேறு இருக்கும். மேடை ஏறுபவர் எல்லோரும் கலைஞர் கருணாநிதியை தான் மிகவும் புகழ்வார்கள். இது இன்னொரு திமுக மாநாடு. வாழ்க தமிழ் நாடு வாழ்க தமிழ் உணர்வு ...
விஜேநந்தகுமார் திருச்சி,இந்தியா
2010-06-22 20:54:24 IST
சரியான கருத்து,ஆன்மிகம் இல்லாமல் தமிழே இல்லே ,இது கருணாநிதிக்கு தெரியலே...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »