E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
உலகத் தமிழ்ச் செம்மொழியே!
ஜூன் 22,2010,15:21

அவரவர் அகவை அனைவரும் அறிவர்!
அமிழ்து தமிழ்மொழி அகவை யார் அறிவர்!
தோராயமாகத்தானே தொன்று தொட்டுயென
துதிக்கின்றோம் தொழுகின்றோம் துதிபாடுகின்றோம்!
என்று பிறந்தாலும் அழிவு என்பது உனக்கு
என்றுமே இல்லையென்பது நிதர்சனம் அன்றோ!
வெளிநாட்டவரும் போற்றி புகழும் பிறப்பு!
வல்லினம் மெல்லினம் இடையினம் உமது சிறப்பு
பிள்ளைக்கனியமுதே! நீ செல்லக்கனியமுதே!
புலவர் பலர்பாட உன் நடையோ அழகு!
அறியா பருவத்தினருக்கு ஒளவை ஆத்திசுவடிபாடி
அறிவுக்கண் திறந்த மொழியும் நீ அல்லவோ!
உலக மொழிகளில் மூத்தமொழி மூலப்பண்பாட்டு மொழி
உயர்தனிச் செம்மொழி என உரைக்கின்றனரே உலகத்தாரே!
கம்பராமாயணம் மகாபாரதம் ஐம்பெரும் காப்பியம்
காலத்தால் அழியா உனது கருத்து ஓவியம் அன்றோ!
முப்பால் அளித்த தமிழும் முதும் நீயன்றோ!
மொழிகளின் அரசி நீயன்றோ!
தமிழ்மொழியே! செந்தமிழே! நற்றமிழே!
தீந்தமிழே! தேமதுரத்தமிழே! பைந்தமிழே!
பலபுனைப் பெயர் பெற்ற தமிழே!
பல்லக்கில் உனது சுவடு பவனி வர
உலகத்தமிழ்ச் செம்மொழியே என உனக்கு
<உலகத்தார் பட்டயம் வழங்கிட!
கோவைப்பழமே! கொவ்வைக் கனியே!
கோவையிலே கொண்டாடும்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடுதானே!
-- க.குமாரசாமி,
நொச்சிபாளையம் பிரிவு,
வீரபாண்டி, திருப்பூர்.

வாசகர் கருத்து (21)
செல்வராஜ் துபாய்,இந்தியா
2010-06-27 01:22:58 IST
அடுத்த தமிழ் மாநாடு எங்கள் அம்மா எப்படி நடத்திக் காட்டுகிறார் பொறுத்திருந்து பாருங்கள் ...
முனீஸ்வரன் ரா அபு தாபி ,இந்தியா
2010-06-23 15:30:21 IST
நம் முன்னோர்கள் செய்த புண்ணியம்.........
கோகுலா கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-23 13:53:43 IST
தமிழ் வாழ்க! வாழ்க!...
பிரசன்னா மும்பை ,இந்தியா
2010-06-23 13:05:54 IST
உளம்கனிந்த நல்வாழ்துக்கள் !!...
கோகுல் நந்தகுமார் ஹைதராபாத்,இந்தியா
2010-06-23 12:52:03 IST
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - அல்ல தமிழ் எங்கள் உயிருக்கு மேல்...
U .KA . VADIVU Coimbatore,இந்தியா
2010-06-23 12:17:20 IST
செம்மொழியே... நின்னை சீராட்டி பாராட்டிட..... எத்துணை உள்ளங்கள்........ எங்கள் கோவை மாநகரத்துக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் உந்தன் வரவால்..... மகிழ்ச்சி அடைகிறோம்..... வாழ்க நின் புகழ்! வளர்க உந்தன் மொழி!...
அருண் சுப்ரமணியம் கோபி,இந்தியா
2010-06-23 11:41:05 IST
என் தாய் கற்று தந்த தாய்மொழி செம்மொழி தமிழே, உன்னை வணங்குகிறேன்....
Thamilan. Ladakh,இந்தியா
2010-06-23 10:06:01 IST
என்ன செய்கிறாய் மனமே உன் தாய் மொழிக்கு நடக்கும் விருந்தில் உன்னால் பங்கெடுக்க முடியவில்லையே கலங்காதே இது என்றும் அழியா மொழி வாழ்க தமிழக்கம் வளர்க தமிழ்...
saravanaiyyappan பெங்களூர் ,இந்தியா
2010-06-23 09:52:18 IST
தமிழ் தாய்க்கு என் பணிவான வணக்கம்...
Mani DUBAI,இந்தியா
2010-06-23 08:48:45 IST
அம்மா என்ற வார்த்தைக்கு ஈடு இணை ஏதுமில்லை. தமிழை ஒவ்வொரு தமிழனும் தாயைப்போல மதிக்கவேண்டும். தமிழுக்கு ஈடு இணை எந்த மொழியும் இல்லை. நம்மிடம் தான் ஒற்றுமை இல்லை...
anbarasu .k Mulanur..Tirupur Dt,இந்தியா
2010-06-23 08:47:13 IST
செம்மொழியான தமிழ்மொழியே ... தமிழ்ப் பாலூட்டும் எங்கள் தாயே... உயிருள்ளவரை உன் உறவு வேண்டும் எங்களுக்கு... உன் பாதம் பணிந்து வேண்டுகிறோம்......
Halilur Rehman Kumbakonam,இந்தியா
2010-06-23 08:25:07 IST
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாப்புகழ் பெற்றவள் நீ! திருக்குறள் தந்த திராவிடத்தின் தாய் மொழியே! செந்தமிலென்று நாங்கள் போற்ற செம்மொழியென்று உலகம் போற்றுதே!...
Mrs.mohan coimbatore ,இந்தியா
2010-06-23 08:20:53 IST
தமிழ் தாய்க்கு என் பணிவான வணக்கம் ...
2010-06-23 01:02:41 IST
மேதகு டாக்டர் மு. கருணாநிதி அவர்களுக்கு மிக்க நன்றிகள் .....வாழ்க தமிழ் .... வளர்க தமிழ்நாடு ......" செம்மொழி மாநாடு" இனிதே நடைபெற இனிய நல்வாழுத்துகள் இப்படிக்கு செல்வாரசு இராசமாணிக்கம்...
Srinivasan Kovai,இந்தியா
2010-06-22 23:50:33 IST
senthamilae unnai vanangukiren...
sendhil chennai,இந்தியா
2010-06-22 23:28:02 IST
கவிதை arputham...
Josephine Mary Susai Massachusets,உஸ்பெகிஸ்தான்
2010-06-22 23:23:52 IST
Kovaikku kidaitha athirstum thaan indha "Tamil Manadu". Valarga Thamil !...
காளிராஜ் Chennai,இந்தியா
2010-06-22 17:00:20 IST
அருமையான படைப்பு......
தாரிக் அன்வர்தீன்.பூதம் இளங்காகுறிச்சி ,இந்தியா
2010-06-22 16:42:03 IST
மொழிகளின் அரசி நீயன்றோ! தமிழ்மொழியே! செந்தமிழே! நற்றமிழே! தீந்தமிழே! தேமதுரத்தமிழே! பைந்தமிழே அழிவு என்பது உனக்கு என்றுமே இல்லையென்பது நிதர்சனம் உலக மொழிகளில் மூத்தமொழி பிள்ளைக்கனியமுதே! நீ செல்லக்கனியமுதே!வாழிய வாழியவே ...
Subramani karur,இந்தியா
2010-06-22 16:17:50 IST
தமிழ்மொழியே தலை வணங்குகிறேன் ...
பையப்பசெட்டி முருகன். பெங்களூர் ,இந்தியா
2010-06-22 15:54:59 IST
ஆஹ என்ன அற்புதம் பலே நீ வளர்க நீன் தமிழ் வளர்க...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »