E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
தொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல்

ஆத்தூர்: மத்திய அரசின் உயரிய விருதான, "தொல்காப்பியர்' விருது பெற்ற அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம், "தொல்காப்பியம்' குறித்த ஆய்வு கட்டுரை எழுத, 2.50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
கடந்த, 2005-06ம் ஆண்டுக்கான, "தொல்காப்பியர்' தேசிய விருதுக்கு, ஆத்தூர் அடுத்த தலைவாசல், கூகையூரில் வசிக்கும், 102 வயது பேராசிரியர் அடிகளாசிரியர் தேர்வு செய்யப்பட்டார். கடந்த, 6ம் தேதி, டில்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் அவ்விருதை வழங்கினர்.
அடிகளாசிரியரின், 102வது பிறந்த நாள் விழாவை, குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி கூகையூர் கிராம மக்கள் நேற்று(மே-11)விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். அதில், ஆத்தூர், தலைவாசல் பகுதி தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு அடிகளாசிரியரிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
தொடர்ந்து, அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம், "தொல்காப்பியம்' குறித்து எளிதான முறையில் ஆய்வு கட்டுரை எழுதுவதற்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்துள்ளது.
இதுகுறித்து, "தொல்காப்பியர்' தேசிய விருது பெற்ற அடிகளாசிரியர் கூறியதாவது:
உலகத்தில் தமிழ் மொழியை தவிர வேறு எந்த ஒரு மொழிக்கும் இலக்கண நூல் கிடையாது. எந்த மொழிக்கும் கிடைக்காத இலக்கண நூல், தமிழ் மொழிக்கு தொல்காப்பியம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு மொழி அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொல்காப்பிய இலக்கண நூலை ஆய்வு செய்து, எளிமையான முறையில் கட்டுரைகள் எழுதி கொடுக்கும்படி, மத்திய உயர்கல்வி மற்றும் மனிதவள மேட்டுத்துறையின் கீழ் சென்னையில் அமைந்துள்ள மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம் தெரிவித்தது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் தொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை பணிகளைமுடித்துகொடுக்க உள்ளேன்.
இவ்வாறு அடிகளாசிரியர் கூறினார்.
***

வாசகர் கருத்து (6)
T.G.Prasanna Chennai,இந்தியா
2011-05-31 11:21:59 IST
தமிழ் மொழிக்கோர் இலக்கியநூல் உள்ளது போல் வேறு மொழிகளுக்கும் இருக்கலாம். நம் கண் முன் நிற்கும் சாட்சி - சம்ஸ்கிருதம். பாணினி எனும் இலக்கிய நூல் அதற்கு உள்ளது. அது போல் தொன்மையான எகிப்திய மொழிக்கும் இலக்கிய நூல் இருக்கலாம். யார் சொல்வதையும் அப்படியே ஏற்றுக்கொள்வது நம்மவர் மரபு அல்லவே, எதையும் பகுத்தறிந்து பார்த்து பின்னர் ஒப்புக்கொள்ளல் அவசியம்....
thiyagarajan karaikkal,இந்தியா
2011-05-29 19:59:04 IST
இந்த விஷயத்திலும் மத்திய அரசு தி.மு.க.வைப் பழி வாங்கி விட்டது. தமிழகத்தில் ஒரு தொல்காப்பிய தலைவர் இருக்கும்போது,4 கோடி-மன்னிக்கவும் 6 கோடி தமிழர்களின் தலைவர் இருக்கும்போது; எதோ ஒரு கத்துக்குட்டியிடம் கொடுத்து ஆய்வுக்கட்டுரை எழுதச்சொல்லி இருப்பது தமிழினத்திற்கே தலை குனிவு. உடன்பிறப்பே ஓடோடி வா, திகார் சிறையை நிரப்பி தில்லிக்கு நாம் யாரென்று காட்டுவோம் வா (எனக்கு வேற வேல இருக்குது )...
VTR Singapore,ஸ்லேவாக்கியா
2011-05-29 09:47:06 IST
" இதுகுறித்து, "தொல்காப்பியர்' தேசிய விருது பெற்ற அடிகளாசிரியர் கூறியதாவது: உலகத்தில் தமிழ் மொழியை தவிர வேறு எந்த ஒரு மொழிக்கும் இலக்கண நூல் கிடையாது. எந்த மொழிக்கும் கிடைக்காத இலக்கண நூல், தமிழ் மொழிக்கு தொல்காப்பியம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு மொழி அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்." வெளியிட்ட செய்தியைப் படித்தால் மற்ற எம்மொழிகளுக்கும் இலக்கண நூல் இல்லை என்றுதான் பொருளாகிறது. அகத்தியர் காலத்தில் இருந்த அதே தமிழ் இன்றும் மாறாமல் வழக்கில் உள்ளதா ? சம்ஸ்க்ருதத்தில் பாணினி என்கிற பண்டிதர் வியாகரணம் என்கிற விரிவான இலக்கண நூலை இயற்றியுள்ளார். சம்ஸ்க்ருதத்தில் கொச்சை மொழி என்று கிடையாது. இலக்கண ரீதியாகத்தான் பேசப்பட்டது. பண்டைய காலங்களில் தூதவர்கள் மற்ற நாட்டு அரசிடம் பேச வடமொழியை உபயோகப்படுத்தியுள்ளனர். பாரதத்தில் இணைப்பு மொழியாக சம்ஸ்க்ருதம் இருந்துள்ளது. தமிழ் இலக்கியங்களுக்கு பலவற்றிற்கு முதல் நூலாக வடமொழி இலக்கியங்கள் இருந்திருக்கின்றன. கவிச்சக்ரவர்த்தி கம்பன் வால்மீகி ராமாயணத்தை வடமொழியில் நன்கு அறிந்த பின்னர் தான் தமிழில் ராம காதையை ஆசையினால் பற்றி அறையலுற்றார் . இன்றும் பாரத தேசத்தில் கோவில்களில் செய்யும் பூஜைகளும் அர்ச்சனைகளும் வடமொழியில் செய்கின்ற நடைமுறை உள்ளது. வேதங்கள் , இதிகாசங்கள் , காவியங்கள், உபநிஷதங்கள் என்று பல பொக்கிஷங்களை கொண்ட ஒரு வளமான மொழி இலக்கணம் அற்ற மொழி எனபதை அம்மொழியை அறியாதவர்கள் வேண்டுமானாலும் கூறலாம் அல்லது நம்பலாம். ஹிந்தியுடன் சேர்த்து வடமொழியையும் விரட்டிய பிறகு அந்த மொழி பற்றி தமிழகத்தில் வேண்டுமானால் நடைமுறையில் இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கலாம். இதே வடமொழிச சொற்களை தற்சமம் த்த்பவம் என்று வாங்குகின்ற முறைகள் பற்றி தமிழ் இலக்கணநூல் கூறுவதெல்லாம் ஏன்? நடை முறையில் இல்லாத ஒரு மொழியினின்றும் வாங்கி நடைமுறைப்படுத்தும் அவசியம் தமிழுக்கு வந்தது ஏன் ? வடமொழி ஒன்று தான் இயற்கையான மொழிகளில் செயற்கை அறிவு மொழியாக பயன்படுத்த முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கண்டு அதை செயற்கை அறிவு ப்ரோக்ராம்ம்களுக்கு பயன்படுத்தும் வழிகளை ஆராய்கின்றனர்....
Vinod K London,உருகுவே
2011-05-24 01:11:35 IST
ஐயா, நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இன்னொன்று தோன்றுகிறது. பழமையான உயிர் உள்ள மொழி தமிழ் மட்டும் தான். சமஸ்க்ரிதம் பேச்சு மொழி அல்லவே. வடக்கு மொழி பலவற்றிற்கு அடிப்படை சமஸ்க்ரிதம். ஆனால் சமஸ்க்ரிதம் நடை முறையில் உள்ளதா என்று பார்க்கும் போது தமிழ் தான் இலக்கண நூல் கொண்டதாக இருக்கலாம். இங்கு திரு அடிகளாரின் பேட்டி என்று குறிப்பிடவில்லை. அவர் வேறு பல கூறியதை கூட இங்கு வெளியிடாமல் இருக்கலாம். எனக்கு தெரிந்ததை கூறினேன்....
Moorgan Ayyanar Doha,ரீயூனியன்
2011-05-23 03:19:25 IST
அடிகளாசிரியர் அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள், தங்களது தொண்டு வளர மேலும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் ....அப்படியானால் மு.க. எழுதிய தொல்காப்பிய உரை எங்கே...????!!!!....மு.க.வுக்கு கிடைக்கவேண்டிய ரூ. இரண்டரை லட்சம் கிடைக்காமல் போனதே...ஐயஹோ...மு.க.வே உடனே மத்திய அரசுக்கு கடிதம் எழுது...எனக்கு ஒரு லட்சம் கொடுத்தால் போதும் நான் எழுதித்தருகிறேன்...மு.க.வே உம்மால் முடியாது......
s.r.ramkrushna sastri secunderabad,இந்தியா
2011-05-20 12:06:23 IST
ஐயா, அடிகளாசிரியருக்கு வணக்கம். மிக்க மரியாதையுடன் இங்கு ஒரு தகவலை கூற விழைகிறேன். சம்ஸ்க்ருதத்தில் பாணினி என்கிற பண்டிதர் வியாகரணம் என்கிற விரிவான இலக்கண நூலை இயற்றியுள்ளார். அந்த நூலிலேயே, அவர், தனக்கு முன்னர் வாழ்ந்த பெரும் புலவர்கள் கையாண்ட இலக்கண நுணுக்கங்களைப்பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். எனவே "உலகில் வேறு எந்த மொழிக்கும் இலக்கண நூல் கிடையாது" என்கிற தகவல் சரியல்ல. தமிழ் ஒரு மிக மிக தொன்மையான இலக்கிய செறிவுமிக்க மொழி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதேசமயம் தகவல்களை வெளியிடும் போது தகவல் அளிப்பவரும், பதிப்பாளரும் விழிப்புடன் இருக்க வேண்டும்....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »