E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு
மே 11,2011,14:10

சென்னை: 'செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி' திட்டத்தின் கடைசி வெளியீட்டை, முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் மொழியின் தனித்தன்மையையும், தொன்மையையும், மேன்மையையும் புலப்படுத்தும் நோக்கில், 'செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி' ஒன்றை உருவாக்கும் திட்டம், 1974ல் தி.மு.க., ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. தேவநேயப் பாவாணரை இயக்குனராகக் கொண்டு துவங்கப்பட்டு, பின், அந்தப்பணியை மதிவாணன் பொறுப்பேற்று, தொடர்ந்து பணியாற்றி, அகர முதலியின் மடலங்களை வரிசையாக அச்சிட்டு வெளியிடப்பட்டது.

அதன் இறுதி மடலமாகிய 12வது மடலத்தை, திட்டத்தின் 31வது வெளியீடாக தயாரிக்கப்பட்டது. அதை, முதல்வர் கருணாநிதி, (மே 10) வெளியிட்டார். அதன் முதல் பிரதியை, அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார். 37 ஆண்டுகளாக நடந்துவந்த பணி, இத்துடன் முடிகிறது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »