E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
விருது பெறச் சென்ற தமிழறிஞர்கள் டில்லி விமான நிலையத்தில் தவிப்பு
மே 09,2011,16:31

மத்திய அரசால் விருது வழங்கப்பட்ட தமிழறிஞர்கள், 'ஏர்-இந்தியா' பைலட்களின் ஸ்டிரைக் காரணமாக, டில்லி விமானநிலையத்தில் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டனர். சென்னைக்கு விமானம் எப்போது கிளம்பும் என்பது தெரியாத நிலையில், மத்திய அரசு அதிகாரிகள் விமான நிலையத்தில் விட்டுச் சென்றதால், என்ன செய்வது என்று தெரியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.

டில்லியிலிருந்து சென்னைக்கு செல்ல இருந்த காலை விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானிகள் வந்தால் தான், அடுத்த விமானம் புறப்படும் என, 'ஏர்-இந்தியா' நிறுவனம் தெரிவித்தது. இதில், மாட்டிக் கொண்டவர்களில் 102 வயதான பேராசிரியர் அடிகளாரும் ஒருவர். என்ன செய்வது என்று தெரியாதநிலையில் பேராசிரியர் ஒருவர், தமிழக முதல்வரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஏற்பட்ட நிலைமையை விளக்கினார். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் டில்லி, தமிழ்நாடு இல்லத்தைச் சேர்ந்த அதிகாரிகள், டி-3 விமானநிலையத்துக்கு உணவுப் பொட்டலங்களுடன் விரைந்தனர். விமானநிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசிய அவர்கள், மதியம் 1.45 மணிக்கு சென்னைக்கு புறப்பட்ட, 'ஏர்-இந்தியா' விமானத்தில் தமிழறிஞர்களை அனுப்பி வைத்தனர்.

விமானம் காலதாமதமாக இயக்கப்பட்டதால், தமிழறிஞர்கள், அவர்களது குடும்பத்தினர் என, 2 பேர் அவதிக்குள்ளாகினர். மத்திய அரசும், ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளும், தமிழறிஞர்களை விருது பெற்றுக் கொள்ள டில்லிக்கு அழைத்து விட்டு, அவர்கள் திரும்பிச் செல்ல விமானம் கிடைத்ததா என்று கூட கவனிக்காமல் தவிக்கவிட்டுச் சென்றது தான், தமிழறிஞர்களுக்கு செய்யும் மரியாதையா என, தமிழறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »