E-paper   |   Sitemap   |   RSS
செம்மொழியும், அறிவியலும்
ஜூன் 20,2010,18:20

தமிழ் மொழியை கலை இலக்கிய மொழியாக மட்டும் இன்றி "அறிவியல் தொழில் நுட்ப மொழியாகவும் மாற்றினால் தான் எந்தக் காலத்திற்கும் ஏற்புடையதாக தமிழ் அமையும். இதற்கென பல்கலைக்கழகங்கள் செய்த முயற்சிகளில் நெகிழ்வுத் தன்மை இல்லை.
இதனால் கடினமான சொற் களால் அமைந்த அறிவியல்  சொற்கள்  உயர் கல்வி அறிவியலில் மாணவர்களைக் கவரவில்லை.
கல்லூரிகளில் அறிவியலை தமிழில் படிப்பதை விட, ஆங்கிலத்தில் படிப்பது எளிதாக உள்ளது என மாணவர்கள் கூறும் அளவுக்கு பாடப்புத்தகங்கள் இருந்தன. இரண்டாவதாக அறிவியல் பாடங்களை தமிழிலும் படிக்கலாம், தேர்வுகள் எழுதலாம் என்ற நிலை வந்தாலும் அதற்கேற்ற "அறிவியல் தமிழ்' சூழல் கல்லூரிகளில் இல்லை.
பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்கள் ஆங்கிலத்தை பாட மொழியாகக் கொண்டு அறிவியலைக் கற்கும் போது, அறிவியலை விட ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதற்கே அதிக நேரம் ஆகிறது.
ஆங்கில வழி அறிவியல் கல்வி, தாய் மொழி அறிவியல் கல்வியைப் போல சிந்தனையைத் தூண்டுவதில்லை. மனப்பாட இயந்திரங்களாகவே மாணவர்கள் உள்ளனர்.
இதனால் தான் பிளஸ்2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களை பெறும் நிலை உள்ளது. இந்த நிலையை இப்போது தான் பெற்றோர்கள் உணர்கின்றனர். பெற்றோர் களின் சி.பி.எஸ்.இ., மோகத் திற்கு இந்த உணர்தலே காரணம். 
இன்றைய பேராசிரியர் களுக்கு, அவர்கள் பாடத்தை ஆங்கிலத்தில் விளக்கிக் கூறும் அளவுக்கு, தமிழில் விளக்கிக் கூற முடியாது.
கிராமப்புற மாணவர்கள் இன்ஜினியரிங் கல்லூரி களில் முதல் ஆண்டில் மிரண்டு நிற்பதற்கு இதுதான் காரணமாகும்.
தமிழ் மொழி பேராசிரியர் களுக்கு தடையாக இருப்ப தால் கல்லூரிச் சுவர்களைத் தாண்டி மக்களிடம் அறிவியலைக் கொண்டு செல்வதும் இயலாத செயலாக உள்ளது.
அறிவியல் தமிழை வளர்க்க, மக்கள் அதிகம் கேட்கும் எப்.எம்., ரேடியோக்களும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு சார்பில் நடத்தும் ரேடியோ, அறிவியல் தமிழை வளர்க்க நடத்தும் "அறிவியல் சுரங்கம்' போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் பேராசிரியர்கள் தமிழில் விளக்கிக் கூற முடியாமல், தொகுப்பாளர்களின் கேள்விகளுக்கு விடை தெரிந்தும் திணறுகின்றனர்.
ஜப்பானில் ஒரு ஆங்கில வார்த்தை கூட தெரியாமல், ஒருவர் விஞ்ஞானி ஆக வர முடியும். இந்தியாவில் அந்நிலை வந்தால் தான் அறிவியலில் உண்மையான வளர்ச்சி ஏற்படும்.
கலை, இலக்கியமாக மட்டுமின்றி அறிவியல், தொழில்நுட்பம், அன்றாடம் பயன்பாட்டுக்கு ஏற்ற மொழியாக, எந்த மொழி வளர்கிறதோ அந்த மொழி தான் காலத்தைக் கடந்து நிற்கும். செம்மொழி தமிழ் அந்த உயரிய நிலையை அடைய வேண்டும்.

வாசகர் கருத்து (20)
கோட்டாளம் சாண்டியேகோ,உஸ்பெகிஸ்தான்
2010-10-16 23:24:37 IST
அன்புள்ள நண்பரே, 'கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற பாரதியின் கட்டளைக்கிணங்க, நான் ஓர் அறிவியல் நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன். இதை நீங்கள் http://members.cox.net/kottalam/ என்ற தளத்தில் காணலாம். இந்த முயற்சியைக் காண்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று நம்புகிறேன். இதில் தாங்கள் ஏதும் உதவியளிக்க இயன்றால் நன்றியுடனிருப்பேன். வணக்கங்களுடன் கோட்டாளம்...
தை மாதம்.. kannanoor Nagercoil.kannanoor,இந்தியா
2010-07-25 19:16:26 IST
முதல ஏல்லா இங்கிலீஷ் அறிவியல் புக்ஸ் ஈல்லாம் தமிழை ஆக்கு இங்க அப்புறம் யோசிப்பஊம் ஓகே -வா...
திருமூர்த்தி chennai,இந்தியா
2010-07-08 05:05:50 IST
தமிழ் மொழி மெகா நல்ல மொழி என்பதை எல்லோரும் அறிவார்கள். தமிழ் உலகம் மொழி ஆகும்....
அழ.இராசேந்திரன் சென்னை,இந்தியா
2010-07-06 13:16:17 IST
அறிவியலை தமிழில் கற்க வேண்டும்.தமிழ் கலைச் சொற்களுக்கு ஈடான ஆங்கில சொற்களை அடைப்புக்குறிக்குள் போடவேண்டும்.ஆங்கில வழியில் கற்போருக்கு தமிழ் கலைச்சொற்க்களை அடைப்புக்குறிக்குள் போடவேண்டும்.10 மதிப்பெண்களுக்கு இந்த மொழிபெயர்ப்பு கேள்விகள் 6 வது வகுப்பு முதல் 12 வது வகுப்பு வரை தேர்வில் இடம்பெறச்செய்தல் எல்லோரும் அறிவியல் தமிழை கற்க வாய்ப்பாக அமையும்.தமிழ்நாட்டில் அனைவரும் தமிழ் அறிய சிறந்த வாய்ப்பை ஏற்படுத்த வேண்டியது அரசு மற்றும் பள்ளி கல்லூரிகளின் கடமையாகும்....
priya bangalore,இந்தியா
2010-06-27 14:21:40 IST
i like only tamil...
அ கண்ணப்பன் mississauga,கனடா
2010-06-27 01:16:57 IST
வாழ்கையை வாழ்வதற்காக வைத்துக் கொள்ளுங்கள். ஆங்கிலப் பாடம் படித்து அயல் நாட்டில் வேலைக்காக வந்து ஒழுங்கா பேச பழக தெரியாமல் தத்தளிக்கிற நிலையை மாற்றி தமிழில் அறிவுள்ளவராக தாய் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று வாழ்தல் மேல். மேலும்.. தமிழை தமிழாய் சொல்ல தொல்லாசிரியன் இல்லை அமிழ்தாம் தமிழை அறிந்தவர்யாரும் இல்லை தமிழ் காப்போர் என்று கபடநாடகம் போடும் தமிழ் வேடதாரிகளை களைதல் வேண்டும்....
M.Rakkiannan Ciombatore,இந்தியா
2010-06-26 21:14:52 IST
பெலிக்ஸ்குமார் பெங்களூர்,இந்தியா 2010-06-26 14:54:24 IST தமிழ் மொழி நமது தாய் மொழிதான். அதற்காக அறிவியல் கருத்துகளை தமிழில் படிப்பதால் , எந்த பலனும் இல்லை. அப்படி தமிழில் அறிவியலை படித்தால் நமது அறிவை தமிழ் நாட்டை தவிர வேறு எங்கும் உபயோகிக்க முடியாது.... -இக்கருத்தை ஏற்க இயலாது.ஏனெனில் அறிவியல் கருத்துக்களைத் தமிழில் படிப்பது என்பதால் ஆங்கிலமே படிக்க கூடாது-படிக்க வாய்ப்பில்லை-என திரு பெலிக்ஸ்குமார் அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டார் போலும்!ஒரு அறிவியல் கலைச்சொல் என்பது பொருள் உணர்ந்து சிந்திக்கும்போது தானாகவே தோன்றிவிடுவதாகும்.வேண்டுமானால் தொடக்கத்தில் அதனைப் பயன்படுத்தும் போது அச்சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்த தொடங்கிய நபருக்கு நபர் சிற்சில வேறுபாடுகளைக்கொண்டதாக அமையலாம்.அதுவே பரவலாகப் புழக்கத்திற்கு வரும்போது முடிவாகச் சரியானதோர் வடிவத்தைக்கொண்டதோர் சொல் காலப்போக்கில் உருவகிவிடும்.பொருளுணர்ந்து அந்த அறிவியற்சொல்லைப்பயன்படுத்த முனையும்ஒருவருக்கு அதற்கு ஈடான ஆங்கிலச்சொல் அவர் கருத்தில் தானாகவே உதித்துவிடும்.காரணம் அவர் சுயசிந்தனையுடன் கற்பதால்!சுயசிந்தனை யை வளர்த்துக்கொண்டவர்கள் எந்தச்சூழலுக்கும் ஈடுகொடுத்துத் தாக்குப்பிடித்துச் சாதிப்பர்.அவர்களுக்குத்தான் யாதும் ஊராகும்.யாவரும் கேளிர் ஆவர்.இது திண்ணம். ...
பெலிக்ஸ்குமார் பெங்களூர்,இந்தியா
2010-06-26 14:54:24 IST
தமிழ் மொழி நமது தாய் மொழிதான். அதற்காக அறிவியல் கருத்துகளை தமிழில் படிப்பதால் , எந்த பலனும் இல்லை. அப்படி தமிழில் அறிவியலை படித்தால் நமது அறிவை தமிழ் நாட்டை தவிர வேறு எங்கும் உபயோகிக்க முடியாது....
Rajkumar Punjaipuliampatti,இந்தியா
2010-06-26 14:40:37 IST
தாய் மொழி கல்வி மிகவும் அவசியம் காரணம் ஜப்பான் மற்றும் ஜேர்மன் முன்னேத்ரதிற்கு அதுதான் காரணம்...
ஷங்கர்கணேஷ் கொலம்பஸ்ஓஹயோ,உஸ்பெகிஸ்தான்
2010-06-26 01:03:03 IST
எல்லோரும் தமிழை ஆராய்ச்சி செய்கிறார்கள். தமிழில் ஆராய்ச்சி செய்ய அரசாங்கம் ஒன்றால் தான் இயலும். இந்தியாவில் ஆங்கிலத்தில் ஆராய்ச்சி செய்யவே நிதி ஒதுக்குவதில்லை. தமிழில் ஆராய்சிகள் நடைபெறும் வரை தமிழ் வழக்கு மொழியாகவே இருக்கும்....
krishna mumbai,இந்தியா
2010-06-25 15:36:34 IST
தாய் மொழியில் தான் சிந்திக்க முடியும் ..இது பண்டைய எண்ணங்கள். காலத்தோடு மாற்றங்கள் ...பல திருப்பங்கள் ..இன்றைய ரசாயன கண்டுபிடுப்புகள், என பல, பல..அன்றைய தேவைகள் வேறு..இன்றைய இருப்பு வேறு..தாய் மொழி மிஹவும் முக்கியம், ஆனால் மற்ற மொழியையும், மற்ற முனேற்றத்தையும் புறகணிக்க முடியாது. ...
ஆலாசியம் கோ. தஞ்சோங் பகார் சிங்கப்பூர் ,ஸ்லேவாக்கியா
2010-06-24 12:58:07 IST
தமிழ்ப் பாடப் புத்தகத்தில் அறிவியல் தமிழ் என்ற ஒரு பிரிவு கொண்டு அந்தப் பிரிவில் அறிவியல் தொடர்பான சொற்களுக்கு தமிழ் சொற்களை (படங்களுடன் இருக்கவேண்டும்) ஆரம்ப பள்ளிகளில் இருந்து போதிக்கலாம்....
Parthas canton,உஸ்பெகிஸ்தான்
2010-06-24 00:36:58 IST
தாய் மொழியில் தன சிந்திக்க முடியும என்கிற வாதம் சரி இல்லை. பெரிய விஞ்ஞானிகள் எப்படி பெரும் சாதனை புரிந்தார்கள். ஆங்கிலம் வாயிலாக நம்மவர்கள் செய்த சாதனைகளை பாராட்ட வில்லை. இந்தியாவிற்கு கிடைத்த 3 Nobel பரிசுகளும் தமிழனின் சாதனை உள்ளது. அவர்களை என்றேனும் பாரட்டிநோமா? சட்டமன்றத்தில் அவர்கள் படம் எதாவது உள்ளத? பெரியார் அறிவியலுக்கு என்ன செய்தார்? அவர் பெயரில் விஞ்ஞான இடங்கள். ராமன், சந்திரசேகர்,ராமனுஜன் பிரியம்வத் நடராசன், வரத்தான் பற்றி என்ன இருக்கிறது. பிரியா நடராஜன் கோவையை சேர்ந்தவர். Astrophysics துறையில் பெரும் சாதனைகள் புரிந்து வருகிறார். அவரை இந்த மகாநாட்டில் பாராட்டி இருக்கலாமே. ஒரு தமிழ் பெண்ணின் விஞ்ஞான சாதனை பாராட்ட் நமக்கு நேரமேது. கனிமொழி, கயல்விழியின் கவிதைகளை வனல்லவா புகழ்வோம். Priya Natarajan did by reading in English. This achievement is not possible by reading in any other India language. Moderator please publish this. Indian science scene is seen by others by the works of Tamil speaking scientists....
Natarasan Guntur,இந்தியா
2010-06-23 17:04:52 IST
அறிவியலை தாய்மொழியில் சிந்தித்தால் மட்டுமே ஆக்கத்திறன் வளரும் ungal karutthu migavum sariyanathu ......
குமார் Chennai,இந்தியா
2010-06-23 16:55:46 IST
கனகராசா கருத்து மிக சரியானது...
ந. ஜெயபாலன் நெல்லை நகர் திருநெல்வேலி தமிழ்நாடு ,இந்தியா
2010-06-23 14:09:38 IST
பாரதியின் சொல்லில் சொன்னால் ஆங்கில மோகத்தை கொன்றுவிடு. இல்லையேல் மோதி மிதித்துவிடு.வளர ஆசைபடும் நேரத்தில் வழியை நாம்தான் திறந்து விடவேண்டும்.நுட்பமான சொற்களை எளிய தமிழில் மக்களின் நடைமுறை தமிழுக்குள் கொண்டுவந்தால் போதும். தமிழ் தாராளமாக வளரும் அறிவியல் துறையில்....
குகன் பஹ்ரைன்,இந்தியா
2010-06-23 12:20:16 IST
என்றைய நிலையில் கிராமப்புற மக்கள் தங்கள் குழந்தைகளை அங்கில வழியில் படிக்கச் முயற்சிகிரறாக்கள் . பொதுவாக கிராமபோரத்தை சார்ந்த தனியார் கல்விகுடங்கள் சரிவர இருந்து மொழிகளையும் கற்பிப்பது இல்லை .எதற்கு வலி சமச்சீர் கல்வி மோரே சரி .அப்படி கற்கும் பொது அறிவியல் என்ன எந்த துறையிலும் நாம் வெற்றி பெறுவோம்....
ஈரோடு நாதன் சென்னை ,இந்தியா
2010-06-23 11:08:24 IST
நமது பழைய தமிழ் அறிவியல் ஒப்பிடமுடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்து இருந்தது ஒரு காலத்தில். பல அன்னிய ஊடுருவல் காரணமாக கால போக்கில் முற்றிலுமாக அழிந்து விட்டது. நாம் பழைய அறிவியல் உத்திகளை வெளிக்கொணர பாடுபட வேண்டும். ...
கே.karthick tiruppur,இந்தியா
2010-06-22 17:25:02 IST
ungal karutthu migavum sariyanathu ...
devarajan chennai,இந்தியா
2010-06-22 17:01:22 IST
சொல்லுறது சுலபமுங்க, செய்யிறது எப்பிடி ? GPS க்கு சொல் கண்டுபிடிக்கவே குடுமிப்பிடிச் சண்டை. லச்சக்கணக்குல இருக்குற வார்த்தைகள எப்பிடி தமிளுல சொல்லுறது ? தேவ்...
ப.ப.கனகராசா அன்னூர் ,இந்தியா
2010-06-22 11:13:25 IST
அறிவியலை தாய்மொழியில் சிந்தித்தால் மட்டுமே ஆக்கத்திறன் வளரும்; அறிவு மேம்படும். எனவே அறிஞர் பெருமக்கள் தன கற்றறிந்ததையும் கண்டறிந்ததையும் செம்மொலியம் தமிழ் மொயின் எளிய நடையில் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் இயற்றினால் நம் மொழியை வளர்க்க முடியும். மேலும் தமிழ் ஆர்வத்தையும் தூண்ட முடியும்....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »