E-paper   |   Sitemap   |   RSS
அறிவியல் தமிழ் - தோற்றம்
ஜூன் 19,2010,07:58

தமிழில் மரபு வழிப்பட்ட அறிவியலும், தொழில் நுட்பவியலும் வழக்கில் இருந்துள்ளதனைத் தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள இரும்பு, செம்பு போன்ற உலோகப் பொருட்கள் உறுதி செய்கின்றன. மருத்துவம், வளோண்மை, கால்நடை மருத்துவம், சிற்பவியல், நீர் மலோண்மை, கட்டடவியல் போன்ற அறிவியல் துறைகளின் பயன்பாடுகள் பற்றிய செய்திகளை இலக்கியப் படைப்புகள், வரலாற்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது. அவை பண்டைக் காலத்தில் பதிவு செய்யப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட ஓலைச் சுவடிகளில் வெடிமருந்து தொழில்நுட்பம், கால்நடை மருத்துவம் போன்ற பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இத்தகைய மரபு அறிவியல் குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் வழக்கில் இருந்திருக்க வாய்ப்புண்டு, என்கிறது தமிழ் இணையப் பல்கலைக்கழகக் குறிப்பு.
    ஐரோப்பியரின் இந்திய வருகைக்குப் பின்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் மேலைநாடுகளில் வெளியான அறிவியல் நூல்கள், இதழ்களைப் போன்று தமிழிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்     அறிவியல்     தமிழுக்கு     ஆதாரமாகும். தொழிற்புரட்சியின் காரணமாக ஐரோப்பாவெங்கும் பரவிய அறிவியல் சிந்தனைகளின் வீச்சு, தமிழ்நாட்டிலும் பரவியதன் விளைவுதான் தமிழில் அறிவியல் நூல்களின் வெளிப்பாடு, தொடக்கத்தில் தமிழ் அறிவியல் நூல்கள், ஆங்கிலத்தில் வெளியான     அறிவியல்     நூல்களைத்     தழுவியோ, மொழிபெயர்த்தோ வெளியிடப்பட்டன. இத்தகைய நூல்களுக்கு அன்று பெரிய அளவில் வரவேற்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. எனினும் ஆங்கிலேயர் ‘மெக்காலே’ கல்வி முறையினைத் தமிழகத்தில் அறிமுகம் செய்தபோது, சூழலில் மாற்றம் ஏற்பட்டது. தமிழின் மூலம் அறிவியல் பாடங்களைக் கற்கும் நிலை ஏற்பட்டபோது, அறிவியல் மொழிபெயர்ப்புகள் பெரிய அளவில் உதவின.
    இந்திய நாட்டின் முன்னேற்றம் என்பது, இன்று, முழுமையாக அறிவியல், தொழில்நுட்பவியலைச் சார்ந்துள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சியும், மாறிவரும் புதிய உலகின் போக்குகளை வெளிப்படுத்துவதை     அடிப்படையாகக் கொண்டது. மேலைநாடுகளுக்கும் தமிழகத்திற்கும் இடையில் அறிவியல் துறைகளில் நாளும் விரிவடையும் இடைவெளியைக் குறைத்திடல் வேண்டும். தமிழ்மொழியை அண்மைக் காலத்தியதாக ஆக்க வேண்டுமெனில், தொடக்கநிலையில் மொழிபெயர்ப்புகள் பல்கிப் பெருக வேண்டும். அப்பொழுதுதான் தமிழர் வாழ்க்கை வளம் அடையும்.
    அறிவியல் நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் என்பது தொடரும் பணியாகும். இதன்மூலம் அறிவியல் மரபு தமிழில் உருவாகும்; அறிவியல் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வளமுடையதாகத் தமிழ்மொழி வளமடையும். பின்னர்த் துறைசார்ந்த இதழ்கள் தமிழில் வெளிவரும் நிலைமை ஏற்படும்.
    ஒப்பீட்டளவில் அறிவியல் மொழிபெயர்ப்பானது இலக்கிய மொழி     பெயர்ப்பிலிருந்து     மாறுபட்டது.     அறிவியல் மொழிபெயர்ப்பில் உணர்ச்சி, சந்தம், ஒலிநயம், அலங்காரச் சொற்கள், ஆரவாரமான தொடர்கள் போன்றவற்றுக்கு இடமில்லை. அதே சமயம் கலைச்சொற்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.
    அறிவியல் மொழிபெயர்ப்புகளில் கருத்துகளுக்குத்தான் முதலிடம் தருதல் வேண்டும் ; மொழிநடை கருத்தினை வெளிப்படுத்தும் ஊடகமாக மட்டும் அமைந்திடல் வேண்டும்.
    மொழிபெயர்ப்பாளர், மூல மொழியிலுள்ள அறிவியல் கருத்துகள் பற்றிய செறிந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் வல்லுநர் மூலமொழியில் எத்தகைய குறிக்கோள் அல்லது கருதுகோளினை வலியுறுத்த விரும்பினாரோ, அதனைப் பெறுமொழியிலும் கொண்டு வருமாறு மொழி பெயர்ப்பு அமைந்து இருத்தல் சிறந்த அறிவியல் மொழிபெயர்ப்புக்கு இலக்கணம் ஆகும்.
    சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்குப் பின்வரும் நெறிமுறைகள் முக்கியமானவை ஆகும்.
1.வழக்கிலுள்ள சொற்களைக் கொண்டு புதிய சொல்லாக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
2.பொருள் மயக்கம் தரும் சொற்களைத் தவிர்க்க வேண்டும்.
3.கூட்டுச் சொற்கள், புணர்மொழி, அடுக்குத் தொடர்கள் ஆகியவற்றைத் தவிர்த்திடல் நல்லது.
4.இடுகுறிச் சொற்களைப் பயன்படுத்தலாம்.
5.கருத்துப் புலப்பாடு சீராக இருக்க வேண்டும்.
6.தொடர்கள் இணைப்பில் கருத்துச் செறிவு, தெளிவு தேவை.
7.குறியீடுகள், சமன்பாடுகள், வாய்பாடுகள் போன்றவற்றை உலக அளவில் பயன்படுத்தும் முறையிலே தமிழிலும் பயன்படுத்துதல் வேண்டும்.
    அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்புச் செய்திடும் மொழி பெயர்ப்பாளர், பெறுமொழி வாசகர்கள் பற்றிய புரிதலுடன் தம் பணியைத் தொடங்க வேண்டும். வாசகர்களைப் பின்வரும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1.கற்றுத்துறை போகிய அறிவியல் வல்லுநர்கள்
2.ஆய்வு மாணவர்கள் / மாணவர்கள்
3.பொது மக்கள்
பொதுமக்கள் அறிவியல் தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மொழிபெயர்க்கப்படும் நூல்கள், எளிய நடையுடனும் விளக்கப் படங்களுடனும், படிக்கும் ஆர்வத்தினைத் தூண்டும் வகையிலும் இருத்தல் அவசியம்.

வாசகர் கருத்து (13)
ராம்குமார் து திருநெல்வேலி,இந்தியா
2010-06-27 18:09:29 IST
தமிழ் ஒரு உலக புகழ் பெற்ற செம்மொழி என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆனால் இந்த அளவு புகழ் பெற்ற நம் தமிழ் மொழி இலக்கணம் இலக்கியம் என்று இல்லாமல் அறிவியலிலும் சதிக தன முத்திரையை பதிக்க வேண்டும் என்று தமிழ் அறிஞர்களும் தமிழ் எனதின் தலைவன் டாக்டர். மு . கருணாநிதி அவர்கள் தலைமையில் கொங்கு நாடாம் கோவை மாநிலத்தில் உலக தமிழ் செம்மொழி மாநாடு கண்டு அது வெறும் மாநாடு என்று சொல்லி பணத்தை விணாக்கும் செயலாக இல்லாமல் அறிவியல் தமிழ் அரங்கம் அமைத்து அதை செயல் படுத்தி என்று அறிவியல் தமிழ் வளர்த்த பெருமை அவற்கு மட்டும் அல்ல அவரை தமிழக முதல்வராக ஆக்கிய ஒவ்வொரு தமிழருகும் உண்டு. தமிழ் வரும் 5 ஆண்டுக்குள் 1௦ கோடி பேர் பேசும் மொழி அல்ல அது 25 முதல் 50 கோடி பேர் பேசும் மொழியாக ஆகும் எதை மறுப்பவர்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துகளை அனுப்பலாம். நன்றி. எதனுடன் ஒரு கோரிக்கை தயவு செய்து தமிழில் கைஎழுத்து இடுங்கள். முடிந்த வரை தமிழில் பேசுங்கள். தமிழருடன் மட்டும் ஆல்ல. அனைவருடனும் பேசி தமிழ் அறுப்பை புரி வையுங்கள்...
ந. ஜெயபாலன்நெல்லை நகர் திருநெல்வேலிமாவட்டம்,இந்தியா
2010-06-26 19:33:31 IST
கலாம் அவர்கள் அலைக்கபடவிலையா? அல்லது அவருக்கு வர நேரம் இன்மையா?அரசு தெளிவு செய்தால் பொய்யர்களின் முகமூடி கலையும்தானே...
கணேஷ் kumar Pudukkottai,இந்தியா
2010-06-26 11:16:20 IST
அப்துல் கலாம் முன்னால் குடியரசு தலைவர் என்பதை தமிழக அரசு மறந்து விட்டது மேலும் அவர் ஒரு தமிழன் என்பதை மறந்து விட்டது இனி வருங்கலத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படா வண்ணம் இருப்பது அரசுக்கு நல்லது...
சந்திர சேகர் வீ.மு . மலேசியா kuala lumpur ,இந்தியா
2010-06-25 13:10:45 IST
ex president of india mr.abdul kalam should be invited to the conference and a seat should be allocated near the present president of india during the opening ceremony. The organising committee would have requested the ex president to submitt a research paper on thirukkural or any other subject concerning of science....
ariff மேதின munawara,செனகல்
2010-06-25 03:41:38 IST
காலம் கலாமை மறந்து விட்டது...
ஷங்கர் கணேஷ் அம்மாசத்திரம் ,இந்தியா
2010-06-24 20:28:47 IST
அப்துல் கலாம் அழைக்கப் பெறவில்லை எனில் செம்மொழி மாநாடு அல்ல, செம்மறி (மா)ம க்கள் நாடு. திருந்துக தீர்வை காண்க....
Arumugam Singapore,ஸ்லேவாக்கியா
2010-06-23 14:29:57 IST
Hi Mr. Karunanidhi ,where our father Mr. Abdul Kalam ,Please always belive real don't belive the clouds....
ந.காசிவிஸ்வநாதன் நாமக்கல் ராசிபுரம் ,இந்தியா
2010-06-23 12:36:01 IST
தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழர்கள் கலச்சாரம் பண்பாடு நாகரிகம் ஆகியவற்றை உலகத்திற்கு பறைசாற்ற ஏற்பாடு செயப்பட்ட இம் மாநாட்டில் உலக தமிழர்கள் அனைவரும் வந்து சிறப்பிக்கும் இந்த தமிழ் செம்மொழி மாநாட்டில் உலகமே அறிந்த ஒரு தமிழன் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அழைகபடாதது வேதனைக்குரிய விஷயம் ....
MANI DUBAI,இந்தியா
2010-06-23 08:39:30 IST
டாக்டர் அப்துல் களம் இல்லாத மாநாடு செம்மொழி மாநாடு அல்ல டாஸ்மாக் மாநாடுதான் டாக்டர் அப்துல்கலாம் கண்டிப்பாக அளைக்கப்படவேண்டும்...
விஸ்வனதான் மதுரை ,இந்தியா
2010-06-23 06:28:27 IST
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தமிழகதில் பிறந்து, தமிழ் வழிக் கல்வி (பள்ளியில்) பயின்ற தமிழர். சிறந்த அறிவியல் மேதை. இளம் தலைமுறையினரின் எழுச்சி நாயகர். அவர் இல்லாத அறிவியல் தமிழரங்கம், நீரில்லாத பாழுங்கிணற்றுக்கு ஒப்பாகும். அவரைப் புறக்கணித்தது, ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தையே அவமதிப்பதாகும்....
சக்திவேலு கோஜே,தென் கொரியா
2010-06-23 05:54:35 IST
சிந்தனைக்குரிய செய்தி. மாநாட்டின் முழுவிபரம் தெரியாத காரணத்தால் வலுவான கருத்தை வெளியிட முடியவில்லை. திரு. அப்துல்கலாம் அவர்கள் கலந்துகொள்ள செய்யப்படவில்லை எனில் மாநாட்டில் ஒரு வெற்றிடம் மிஞ்சியே இருக்கும். உங்கள் ஆழ்ந்த கருத்தை ஆமோதிக்கிறேன் திரு. ஈஸ்வரன் அவர்களே!....
அப்துல்ரகுமான் துபாய் ,இந்தியா
2010-06-22 16:54:42 IST
ஈஸ்வரன். கருத்தை வழிமொழிகிறேன் தினமலர் ஏற்பாடு செய்ய வேண்டும்...
எ.eswaran திருப்பூர்.,இந்தியா
2010-06-20 10:35:07 IST
தமிழகத்தின் தற்போதைய மிகப்பெரும் அறிவியல் அறிஞர், நமது முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். தமிழில் குறிப்பாக திருக்குறளில் ஆழ் ந்த ஞானமும் ஈடுபாடும் கொண்டவர். தான் சென்றவிடங்களில் எல்லாம் திருக்குறளைக்கூறி,திருக்குறளின் பெருமையை பரப்பிய ஒரே ஜனாதிபதி அவர் மட்டுமே! சோம்பிக்கிடந்த இளைய சமுதாயத்தை தட்டியெழுப்பி நாட்டின் முன்னேற்றத்திற்கு கனவு காணச்செய்த மகத்தான் மாமனிதரை உலகச்செம்மொழி மா நாடு நடத்தும் முத்தமிழ் அறிஞர் மாண்புமிகு தமிழக முதல்வர் மறந்துவிட்டாரா? அல்லது அவரையழைத்தால் மாநாட்டிற்கு வருகை தரும் உலகத்தமிழ் அறிஞர்களின் பார்வையெல்லாம் அவர் பக்கம் திரும்பிவிடும் என்ற பயத்தால் அழைக்கவில்லையா? என்ற மில்லியன் டாலர் கேள்வி தமிழக மாணவச்சமுதாயத்தினர் மத்தியல் மட்டுமல்ல,தமிழக மக்களின் கேள்வியாகவும் இருக்கிறது.ஜெயலலிதா அம்மா கூறுவது உண்மையாகிவிடும் போலத்தெரிகிறது... மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இக்குறைபாட்டைச் சரிசெய்திடுவார் என்று உலகத்தமிழ் சமுதாயம் எதிர்பார்க்கிறது. தினமலர் நாளிதழ் இதற்கு உதவிட பணிவுடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமாய்க்கேட்டுக்கொள்கிறேன். நன்றியுடன், ஆ.ஈசுவரன், தமிழ் நாடு அறிவியல் இயக்கம், திருப்பூர்....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »