E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
செம்மொழியா... செவ்வியல் மொழியா?: மணவை முஸ்தபா
ஜூன் 18,2010,17:06

 


தமிழை செம்மொழி என்பதா அல்லது செவ்வியல் மொழி என்று அழைப்பதா என்ற குழப்பம் சமீபகாலமாக நீடித்து வந்தது. சங்க இலக்கியம்,தொல்காப்பிய இலக்கணம் முதலாக மொழி ஞாயிறு பாவணர் வரை அனைவருமே தமிழை செம்மொழி என்றே அழைத்து வந்துள்ளனர். "செம்மையாய் அமைந்த மொழி' என்பது அதன் பொருளாகும்.
கிளாசிக்கல் எனும் ஆங்கில வார்த்தையை அப்படியே மொழி பெயர்க்கும் போது, செவ்வியல் என்று மொழி பெயர்க்கிறார்கள். கிளாசிக்கல் லிட்டரேச்சர் என்பதை செவ்வியல் இலக்கியம் என்று மொழி என்று மொழி பெயர்க்கலாம். ஆனால் செவ்வியல் மொழி என்றால் புதுவகை இயல் மொழி என்றே எண்ணத் தோன்றும். ஆனால் செம்மொழியில் உள்ள செம் என்பது செம்மை என்பதன் சுருக்கமாகும். செம்மையாய் அமைந்த மொழி என்று பொருள். இதனால்தான் கிளாசிக்கல் லாங்குவேஜ் என்பதை செம்மொழி என்று கூறுவதே பொருத்தம்.


வாசகர் கருத்து (38)
அ. முஹமது மாலிக் வேதாளை,இந்தியா
2010-09-08 21:11:03 IST
செம் மொழி மாநாடு வாழ்க .. வளர்க .....
2010-09-08 20:49:25 IST
தமிழ் எங்கள் உயிர்...
ராஜ் வாஷிங்டன்,உஸ்பெகிஸ்தான்
2010-07-02 22:37:19 IST
தமிழ் பற்றி விளக்க முற்படும் இந்த அறிஞர்கள் தங்கள் சந்நதிகளை தமிழ் கற்க வைப்பதன் மூலம் தான் தமிழ் வளர்க்க முடியும்! செம்மொழி செழிக்க இயலும்!...
விமல்நாத்.B bangalore,இந்தியா
2010-06-27 18:39:12 IST
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நிகழ்சிகளை தொலைக்காட்சி ஒளிபரப்பில் இன்று காலை நடை பெற்ற பட்டிமன்றமும் புகழ் பாடும் மன்றமாகவே இருந்தது தமிழில் இதனால் ஒரு புதிய மாற்றம் எதுவும் வரப்போவதுவுமில்லை ...
sethupathy DUBAI,இந்தியா
2010-06-27 08:12:03 IST
we wish you great language of our tamil language...
Raja singapore,ஸ்லேவாக்கியா
2010-06-26 16:07:00 IST
தமிழுக்கு மகுடம் சஊட்டும் வரலாற்று நிகழ்ச்சியில் தமிழ் அறிந்த முன்னால் அதிபர் அப்துல் கலாம் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைக்காதது தமிழுக்கு இவர்களால் ஏற்படுத்திய அவமானம். கலாமுக்கு அல்ல ...
பிள்ளை கத்தார்,இந்தியா
2010-06-26 11:30:32 IST
எல்லாம் நன்றாக இருக்கிறது ஆனாலும் மண்நின் மைந்தன் கலாம் அவர்களுக்கு ஒரு அழைப்பு இல்லை என்பது மனதுக்கு ஒரு நெருடலானது....
Nathar Gani Dubai,யூ.எஸ்.ஏ
2010-06-26 10:30:41 IST
Language is a tool for everyone to understand things which are necessary for non only for his survival but also for his finding happiness and peace of mind. Our Great Tamil provids this oopurtunity. Like one side we try for its growth the other side we should try for eleminating unwanded contamination of awkward tamil speaking like in cities e.g. Chennai tamil speaking etc. Thanks for providing oppurtunity to convey my feelings on this subject. Gani...
இடிந்தகரை ஜவிதா pratheep டார்எஸ்salaam,காம்பியா
2010-06-26 09:51:20 IST
நாங்கள் தூரமாய் இருந்து தமிழை வர்ணிக்க தயவு செய்த தினமலருக்கு நன்றி ...
மைக்கல் பிரதீப் டர்எஸ்salaam,காம்பியா
2010-06-26 09:44:47 IST
தமிழ் வாழ்க தமிழன் வாழ்க தமிழ் அறிஞன் வாழ்க இவர்கள் வாழ வழி தரும் எங்கள் கலைஞர் வாழ்க ...
பிரதீப் fernando டர்எஸ்salaam,காம்பியா
2010-06-26 09:23:40 IST
அறிஞர்களின் தவபுதழ் வார்த்தைகலை உடன்னுக்குடன் பெரும் வாய்ப்பை தந்த தினமலருக்கு நன்றி ...
ananthapadmanabhan udumalpet,இந்தியா
2010-06-26 08:55:25 IST
காலத்தால் அழிக்கமுடியாத ஞாலத்தில் மூத்த மொழியே, என் உயிரே, உடலே, நிலவும் தேயும் ,மறையும், கதிரவனும் எழுவான், மறைவான், ஆனால் என்றும் புத்திளமை பொழிவோடு திகழும் எம் செம்மொழிக்கு என்றும் தொய்வில்லை, அது வாழும், நாளும் வளரும், வளர தமிழராகிய நாம் யாவரும் ஒன்றுபடுவோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர்....
2010-06-25 15:56:48 IST
செம்மொழி மாநாட்டில் வெள்ளைகாரர்கள் அழகிய தமிழில் பேசினார்கள் ஆனால் நம் தமிழக முக்கியமாணவர்களோ ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுகிறார்கள் தமிழ் வாழ்க லால்பேட்டை அ . ர . தாஜுதீன் துபாய் ...
பி. ஆதம்ஷா jeddah,செனகல்
2010-06-25 11:46:39 IST
எல்லாம் இணையத்தளம் ஆன இந்த காலத்தில் அதுவும் மொபைல் போன் மூலம் பார்க்க வசதி இருந்தும் அதில் தமிழ் எழுத்து இல்லாதது ஒரு வெக்க கேடானதாகும். இதற்கு முயற்சி எடுக்க வேண்டுமாய் மாநாடு நடத்துபவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
2010-06-25 08:35:57 IST
தமிழ் என்றாலே, இயல், இசை, நாடகம் நிறைந்தது என்ற பொருளில், செவ்வியல்மொழி என்று உரைத்தாலும், சாலத்தகும் என்றுதான் தோன்றுகின்றது....
kesavan Dubai,யூ.எஸ்.ஏ
2010-06-24 22:03:43 IST
கருணாநிதி வீட்டில் எல்லோரும் தமிழ் பேசுகிறார்கள? மொத்தத்தில் நல்ல லைவ் நாடகம்...
இபு பாரிஸ் SARCELLES,பிரான்ஸ்
2010-06-24 16:29:03 IST
மணவை முஸ்தபா போன்ற அறிவாளிகள் கலந்து கொண்டுள்ளது செம்மொழி மாநாட்டுக்கு மேலும் சிறப்பு!!...
ர.காமராஜ் கோயம்புத்தூர் ,இந்தியா
2010-06-24 15:59:06 IST
தமிழ் மொழி பல அழகினை உடையது அவளை எவ்வாறு அழைத்தாலும் அழகுதான்.செம்மொழி என்றாலும் தேன் தமிழ் என்றாலும் அழகு thaan...
2010-06-24 12:17:16 IST
Only 1 Chemmozhi !!! செம்மொழி...!!! வாழ்க வையகம் !!! வாழ்க வளமுடன் !!!...
மனோகரன் சிங்கப்பூர்,ஸ்லேவாக்கியா
2010-06-24 11:03:27 IST
முதலில் செம்மொழி மாநாட்டில் தமிழில் பேசுங்கள் ஐயா. முதல்வர் கருணாநிதியே ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசமுடியவில்லை, இனி தமிழ் நாட்டில் தமிழில் பேசுவது பற்றி யாரிடம் சொல்வது? எல்லாம் தமிழ் நாட்டு தமிழனின் மெத்தனபோக்கு தான் காரணம்....
முனியாண்டி Ponnusamy கோலா Lumpur,மாலத்தீவு
2010-06-24 06:59:59 IST
manaivai mustapa avarhalukku nandri. aangkilathilurunthu thamilukku mozhi maatram seyyum pothu mikuntha kuzhappam eerpaduhirathu. aangilathil ariviyal, poruLaathara, meelaanmai matrum pala pirivukalil varthaikalukku thadmattram eerpaduhirathu. itharku eethavathu seyya mudiumah nandri...
அப்துல் காதர் யாங்கோன் ,நமீபியா
2010-06-23 19:27:23 IST
மணவை முஸ்தபாவின் கருத்து மிக பொருத்தமானது. பாராட்டுகள்....
சுப்பையா dubai ,யூ.எஸ்.ஏ
2010-06-23 15:15:33 IST
உலக தமிழ் செம்மொழி மாநாடு வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ். தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம்......
Tamil Chennai,இந்தியா
2010-06-23 14:49:44 IST
தௌபீக்..."செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குவது ஏன் ?.".. அதென்ன aall ஆளுக்கு ..இந்த பாட்டை பாடுறீங்க...உங்க கல்யாணத்தை தவிர நீங்கல்லாம் வேஷ்டி கட்டினதுண்டா ..அதுக்கே நாட்ல பல பேர் பெல்ட் போட்டு கட்ராங்க..வந்துட்டனுங்க கருத்து solla....
அகமத் கனி பழனி,இந்தியா
2010-06-23 14:04:35 IST
இவ்வளவு எளிமையாக, சுருக்கமாக யாரும் விளக்கவில்லை. செம்மொழி - செவ்வியல்மொழி - தொல்சீர்மொழி(கா.சிவத்தம்பி கூறியது).. எது பொருத்தமானது என்பதை பாவணர் கூற்று மூலம் விளக்கியமைக்கு நன்றி....
ஷவ்கத் அலி ஷார்ஜா,யூ.எஸ்.ஏ
2010-06-23 12:17:42 IST
செத்த மொழி இல்லாமல் நம் மொழி இருந்தாலே போதும்...
நஜுமுதீன் அல்கோபர் ,செனகல்
2010-06-23 12:17:19 IST
செம்மொழி, செவ்வியல் மொழி இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும் Classical Language என்பதுற்க்கு செம்மொழியே சரியானதாக இருக்கவேண்டும் என்று விளக்கம் தந்த மணவை முஸ்தபா அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்க உங்கள் தமிழ் தொண்டு...
2010-06-23 11:20:36 IST
உலக தமிழ் செம்மொழி மாநாடு வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ் ! இன்றைய மாநாடு நாளைய வரலாறு ! தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம்...
ABOO HALIMA DUBAI,யூ.எஸ்.ஏ
2010-06-23 10:54:42 IST
Each and every scholar will view in their own style. Thanks to Manawai Mustafa for his explanation....
பிரபாகர் சென்னை,இந்தியா
2010-06-23 10:10:44 IST
tamil vazka...
சொக்கனாவூர்பாலு சித்ரா ,பஹ்ரைன்
2010-06-23 09:57:08 IST
மணவை முஸ்தபா அவர்கள் மிகபெரிய தமிழ் அறிஞர். அவர் தமிழுக்காக செய்த அர்பணிப்புகள் நிறைய. அவரை நான் பார்த்தது இல்லை. அவருடைய உரையை கேட்டு இருக்கிறேன். இந்த நேரத்தில் அவரை வணங்குகிறேன்....
mohamed zubair tamilnadu,இந்தியா
2010-06-23 07:22:33 IST
super explanation; absalutely fine about tamil....
ஜியாவுதீன் திருலோக்கி தஞ்சை மாவட்டம்,இந்தியா
2010-06-22 10:38:02 IST
உலகத்தின் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஒருங்கிணைத்து தமிழ் மொழியின் மகத்துவத்தை உலகுக்கு உரைக்கும் விழாவான இந்த செம்மொழி மாநாட்டை முன்னின்று நடத்தும் கலைஞர் மற்றும் இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்தமிழ் நெஞ்சங்களுக்கு இணையதளத்தின் ஊடாக அளித்து தமிழ்த் தொண்டாற்றிவரும் தினமலர் குழுமத்திற்கும் எனது நன்றிகள். இம்மாநாடு மேலும் சிறக்க இவ்வுலகம் அதைக்கண்டு வியக்க மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க தமிழ். வளர்க தமிழர் ஒற்றுமை....
முஹம்மது முஸ்தபா அப்ஹா,இந்தியா
2010-06-21 22:30:47 IST
கலைஞர் ஆட்சியில் மேலும் ஒரு வைரமகுடமாக இந்த உலக தமிழ் செம்மொழி மாநாடு சிறந்துவிளங்க வாழ்த்தும் அசீர் தமிழர் நலவாழ்வு சங்கம்....
தௌபீக் துபாய் ,இந்தியா
2010-06-21 09:58:01 IST
செம்மை மொழி பற்றி விளக்கம் கிடைத்தது நன்றி ! செம்மொழி மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகிற நெஞ்சம் இங்கே பல ! வாழ்க தமிழ் வளர்க தமிழ் ! இன்றைய மாநாடு நாளைய வரலாறு ! தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம் மேலும் பல மொழிகளையும் கற்போம் ! செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குவது ஏன் ?...
அழகை மைந்தன் கோலாலம்பூர்,இந்தியா
2010-06-19 19:49:25 IST
மணவையார் விளக்கம் அற்புதம், தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு....
அப்துல்ரகுமான் மணவை ,இந்தியா
2010-06-19 17:52:35 IST
மணவை முஸ்தபா அவர்கள் இன்னும் விளக்கமாக தெரிவித்து இருக்கலாம். வாழ்த்துக்கள். வாழ்க எம்மொழி வளர்க தமிழ்மொழி ...
இஸ்மாயில் லால்பேட்டை,இந்தியா
2010-06-18 22:44:19 IST
உலக தமிழ் செம்மொழி மாநாடு வெற்றி பெற முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் எங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம் ....
முஹம்மது நியாஸ் கோலாலம்பூர் ,மாலத்தீவு
2010-06-18 21:19:36 IST
மண்வையார் அவர்கள் மிகசிறப்பான விளக்கம் அளித்துள்ளார்கள் அவர்களது தமிழ் பணியும், அவர்களும் நீடுழி வாழ் வாழ்த்துகின்றேன்....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »