E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
திராவிட மொழிகள் என்னென்ன?
ஜூன் 18,2010,11:23


இந்தியாவில் தற்காலத்தில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர்.
இந்தோ  ஆரிய மொழிகளை 73 சதவீதத்தினரும், திராவிட மொழிகளை 25 சதவீதத்தினரும் பேசுகின்றனர். "திராவிடம்' என்ற சொல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. மொழியியல் அறிஞர் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்கு இச்சொல்லைப் பயன்படுத்தினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளை திராவிட மொழிகள் என அழைத்தார். தென்னிந்திய பேச்சு மொழிகளைக் குறிக்கும் போது, வட மொழி ஆய்வாளர்கள் "திராவிடி' என்ற சொல்லால் குறிப்பிட்டனர்.
தற்காலத்தில் 23க்கும் அதிகமான மொழிகள், திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. அவையாவன, 1.தமிழ், 2.மலையாளம், 3.கன்னடம், 4.தெலுகு, 5.கோண்டி, 6.குரூக், 7.துளு, 8.கூயி, 9.பிராகூய், 10.கூவி, 11.கோயா, 12.மால்தோ, 13.குடகு, 14.கோலாமி, 15.பர்ஜி, 16.கொண்டா(கூபி), 17.கதபா, 18.நாயக்கி, 19.பெங்கோ, 20.கோத்தா,21.தோடா, 22.மண்டா, 23.கொரகா என்பனவாகும்.
இவற்றுள், தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா என்ற எட்டு மொழிகளும் தென்திராவிட மொழிகள்; தெலுகு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலமி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டா என்ற 12 மொழிகளும் நடுத்திராவிட மொழிகள்; குரூக், மால்தோ, பிராகூய் என்ற மூன்றும் வட திராவிட மொழிகள் என்ற பகுப்பில் உள்ளடங்குகின்றன.
இந்திய நிலப்பரப்பில் பேசப்படும் இடங்களைக் கொண்டு இந்தப் பகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நன்றி: அரங்க சுப்பையா, நுõல்: "உலக மொழிகளின் வரலாறு'

வாசகர் கருத்து (13)
ராதாகிருஷ்ணன் கிள்ளான்,மாலத்தீவு
2010-07-20 17:29:54 IST
மலேசியாவில் இருந்துகொண்டு தமிழ்நாட்டில் நடந்த செம்மொழி விழாவை என் கண்முன்னே கொண்டவந்த தினமலருக்கு நன்றியும் வாழ்த்துகளும்....
nisha colombo,செயின்ட் ஹெலனா தீவு
2010-06-27 13:48:23 IST
இந்திய முதல் குடிமகன் இந்த மாநாட்டில் இல்லை என்ற பெரும் இழிச்சொல்லுக்கு இந்தமாநாட்டை நடத்தியவர்கள் ஆளாக விட்டார்கள். தமிழின் தலைஎழுத்தே இல்லாதது போலே தமிழ் மாநாட்டை நடத்தி விட்டார்கள் (அ) அப்துல்கலாம் இதை தமிழின் அகராதி என்று கூட சொல்லலாம். செந்தமிழ் மாநாட்டில் கலைஞர் கூடவா இதை மறந்துவிட்டார்...
purushoth dubai,இந்தியா
2010-06-23 22:18:35 IST
தமிழ் வாழ்க...
முபாரக் ஜுபைல்,செனகல்
2010-06-23 16:04:10 IST
வாழ்க தமிழ், வளர்க தமிழ், எங்கும் தமிழ், எதிலும் தமிழ். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லட....
செந்தில்குமார்.எ கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-23 15:24:32 IST
தமிழ் மொழி, தமிழ் நாட்டில் பிறந்தது என் பாக்கியம். தமிழன் என்று சொல்ல பெருமைபடுகிறேன். 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லட'....
கு.ரமேஷ் சென்னை ,இந்தியா
2010-06-23 14:57:27 IST
மிகவும் பயனுள்ள தகவல்.மிக்க நன்றி....
Saleem Mustafa MELUR MADURAI,இந்தியா
2010-06-23 09:46:15 IST
VAZHAGA THAMIZH, PORAMAI, KAZHPUNARCHI ILLAMAL PIRARAI MATHITHTHU VAZHA ILANGAR SAMUTHAYATHUKKU MATTUMALLAMAL ANAIVARUKKUM EDUTHTHUCHOLVATHU OVVARU THAMIZHANIN KADAMAI. DINAMALARIN THOUNDU VAZHAGA. VALARGA INDIARGAL....
A S Rajan bagdad,ஈராக்
2010-06-23 02:10:39 IST
தினமலர் நீ தினமும் மலர்க .....வளர்க...
ஆறுமுகம்.சு. ஜுபைல் soudiarabia,இந்தியா
2010-06-22 20:39:59 IST
நம் தமிழ் அன்னைக்கு இலக்கியங்களில் ஆயிரம் அணிகலன்கள் இருப்பினும் இன்று உலக மக்களை எல்லாம் இணைக்கும் மின் அஞ்சல் மூலம் தினமலர் நீவீர் செய்யும் சேவை தமிழ் அன்னைக்கு மட்ருமோர் மணிமகுடமாகும். தங்கள் சேவை மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அன்னை அருள் என்றென்றும் துணை நிற்கும்....
அப்துல்ரகுமான் துபாய் ,இந்தியா
2010-06-22 16:23:58 IST
தினமலருக்கு கோடானகோடி வாழ்த்துக்கள்.வாழ்க..... தமிழ் வளர்க..... தமிழ் எக்கட்சியனாலும் தமிழன்தான் வளர்க தமிழர்பண்பாடு, தமிழ்எங்கள் உயிர் தமிழ்எங்கள் அமுதம் எல்லாமொழிகளையும் படி,வேண்டாம் என்று சொல்லவில்லை.40,மொழிகள் அறிந்த பாரதியாரே யாம்அறிந்த மொழிகளிலே,தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றார்.வளர்க....... வளர்க....... வளர்க...........செந்தமிழ் ...
கிருபா நாகேந்திரன் கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-21 10:58:04 IST
திராவிட மொழிகளில் ஒன்றான நம் தமிழ் செம்மொழி என்றென்றும் நிலைக்க தமிழரான நாம் எல்லோரும் ஒன்றாக பாடுபட வேண்டும். தமிழ் வாழ்க ...
DASS CHENNAI,இந்தியா
2010-06-20 03:25:21 IST
TAMIHZ...
க.வெங்கடேசன் TRICHY,இந்தியா
2010-06-18 14:28:24 IST
திராவிட மொழிகள் என்றால் என்ன இதுவரை தெரியாதவர்களுக்கு தினமலர் இணையதளம் வாயிலாக தெரிந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இதுபோல் மெம்மேலும் தமிழ் தொண்டு புரிய தினமலருக்கு வாழத்துக்கள்...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »