E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
எப்படி எழுதுவது "ஒள'காரத்தை?
ஜூன் 18,2010,11:21


தமிழ் மொழியில் 12 உயிரெழுத்துகள் உள்ளன. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில், "ஒளகார விறுவாய்ப் பன்னீரெழுத்து உயிரென மொழிப' (8) என்ற சூத்திரம் உள்ளது.
ஆனால், தமிழ் வட்டெழுத்தில் பதினோரு உயிரெழுத்து வடிவங்களே கிடைத்துள்ளன. பாண்டிய, சேர நாட்டு தமிழ் வட்டெழுத்தில் "ஒள' வடிவம் இல்லை.
"பண்டைய தமிழ் எழுத்துகள்' என்ற நுõலில், வட்டெழுத்தின் வடிவங்களை தி.நா.சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். அந்த அட்டவணையிலும் "ஒள' எழுத்து வடிவம் இருப்பதாக குறிப்பிடவில்லை.
கி.பி., எட்டாம் நுõற்றாண்டில் இருந்து 17ம் நுõற்றாண்டு வரையில் திருவிதாங்கூர் ராச்சியத்தில் கண்டெடுக்கப்பட்ட வட்டெழுத்துச் செப்பேடுகளையும், கல்வெட்டுகளையும் படித்த கோபிநாதராவ், தாம் வெளியிட்ட வட்டெழுத்து அட்டவணையில் "ஒள' வடிவம் இருப்பதாக குறிப்பிடவில்லை. மேலும், "ஒள' எழுத வேண்டிய இடத்தில் "அவ்' என்று எழுதப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
"சேரநாட்டில் தமிழ் வட்டெழுத்து'  தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நுõலில் இருந்து

வாசகர் கருத்து (12)
பிரபு ர AVINASHIகோயம்புத்தூர்,இந்தியா
2010-06-30 12:33:34 IST
அறம் வளர்த்து மறம் வளர்த்த சங்கத்தமிழ் மைந்தர்களின் செம்மொழி மாநாடு சிறப்புற வாழ்த்தும்........ தமிழ் மக்களின் உண்மையான ஹீரோ திரு அப்துல்கலாம் இல்லாத செம்மொழி மாநாடு உயிர் எழுத்து இல்லாத தமிழ் மொழி போல என்பதை ஏற்பாடு செய்தவர்கள் உணரவேண்டும்.......
மருது pandian manama,பஹ்ரைன்
2010-06-26 19:06:18 IST
அறம் வளர்த்து மறம் வளர்த்த சங்கத்தமிழ் மைந்தர்களின் செம்மொழி மாநாடு சிறப்புற வாழ்த்தும் பஹ்ரைன் வாழ் தமிழ் உள்ளங்கள். வாய்ப்பளித்த தினமலருக்கு நன்றி. ...
வ.valathappan திரிபோலிlibya,லிபியா
2010-06-26 15:45:23 IST
தமிழ் மக்களின் உண்மையான ஹீரோ திரு அப்துல்கலாம் இல்லாத செம்மொழி மாநாடு உயிர் எழுத்து இல்லாத தமிழ் மொழி போல என்பதை ஏற்பாடு செய்தவர்கள் உணரவேண்டும்....
ந.VENKATARAMAN PUNE,இந்தியா
2010-06-24 19:53:03 IST
தமிழ் மோழி மாநாடு அற்புதமாக நடத்தபடுகிறது. மிக்க மகிழ்ச்சி. எதற்காக கலிங்கர் தான் தமிழ் என்று ஜால்ரா தேவையா? மக்கள் பணத்தை வரி எரித்து விழா கொண்டாடும் ஒருவரை எப்படி புகழ வேண்டுமா? எல்லோரும் சிந்தித்து பார்க்கவேண்டும்....
அருண் புனே,இந்தியா
2010-06-24 17:53:48 IST
அய்யா யோகா விக்கு நிகரான தமிழ் சொல் உண்டா.......... மேலும் ஹரப்பன் நாகரிகத்தில் தானே யோகா உருவானது ...
கே.ப. சாவித்திரி கோவை,இந்தியா
2010-06-24 17:24:43 IST
நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே ...
சு .ஹரிஹரன் புதுச்சேரி ,இந்தியா
2010-06-24 05:49:35 IST
ள்+அ= ள, என்பது இலக்கண விதி .எனவே "அவ்" என்பது தான் சரியானதாக அக்கால அறிஞர் பெருமக்கள் கருதி இருக்ககூடும். "ஓள" என்பதை பள்ளிக்கூடம் செல்லும் சிறார்கள் ola என்றே சட்டென புரிந்து கொள்வர் .எனவே "முன்னோர் சொல் அமுதம் " என்பதற்கு ஒப்ப "அவ்"(av ), "ஒள" (ola ) ஆனது பற்றி மெய்ப்பொருள் காண்பது வரும்கால மாணவ சமுதாயத்திற்கு நன்மை தருவதாக அமையும். இதே நிலை "ஊ" (oo ), "உ " மீது ஊர்ந்து வரும் "ள" விற்கும் "உயிர் மேல் மெய் வந்து ஒன்றுவது இயல்பே . ஆனால் (உ) உயிர் மேல் (ள) உயிர்மெய் ஊர்ந்தது எங்ஙனம்? அறிஞா பெருமக்கள் விளக்குவாராயின் ஐயம் தீர்ந்து மகிழ்வேன் . என்றும் நன்றி உடையோன் ஆவேன்...
ந.ஜெயபாலன் நெல்லை நகர் திருநெல்வேலி Tamilnadu,இந்தியா
2010-06-23 19:07:31 IST
அறிஞர்கள் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் தமிழின் நுண்மைகளை பாமரனும் தெரிந்துகொள்ள உதவும் தினமலரின் பணி யன்றும் நினைவில் கொள்ளத் தக்கது பாராட்டுகள்...
தாசரதி திருப்பூர்,இந்தியா
2010-06-23 15:04:11 IST
பயனுள்ள தகவல், தினமலரின் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்.......
michael chennai,இந்தியா
2010-06-23 13:23:40 IST
சரி உங்களுடைய தகவலுக்கு நன்றி. மேலும் தகவல் தர வேண்டும் என்று நான் உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன். நன்றி...
பிரபு சோ மண்மலை கள்ளகுறிச்சி விழுப்புரம் ,இந்தியா
2010-06-22 10:57:40 IST
அப்படியா! இந்த செய்தியை தெரியபடுத்திய தினமலருக்கு நன்றி......
வேல் சென்னை ,இந்தியா
2010-06-20 14:07:02 IST
தெரிந்து கொள்ள வேண்டிய தமிழ் செய்தி. நன்றி....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »