E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
tச்ட்டிடூ டுஞுதூண்
பிப்ரவரி 12,2011,17:02


தமிழ் எழுத்துக்கள் குறைக்கப்பட வேண்டும்: மணவை முஸ்தபா
----------------------------------------------------------------
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு தக்கவாறு தமிழ்மொழி முன்னேற வேண்டும் என்ற எதிர்கால நோக்குடன் பணியாற்றுபவர்களில் ஒருவர் மணவை முஸ்தபா. நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் ஏழு, கலைச்சொற்களஞ்சிய அகராதிகள். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்கிற ஒரு அமைப்பையும் நிறுவியுள்ளார். தற்போது தென்மொழிகள் புத்தக நிறுவன நிர்வாகப் பதிப்பாசிரியராக இருக்கும் மணவை முஸ்தபா, தமிழுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து கூறியிருப்பதாவது:
தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் உடனடியாக கட்டாயம் செய்யப்பட வேண்டும். ஏனெனில் 247 எழுத்துக்களில்
பெரியார் எழுத்துச் சீர்மைக்கு பிறகும் 131 எழுத்துக்கள் என்பது, குழந்தைகளுக்கு மொழி மீது ஒரு வெறுப்பை
உருவாக்க காரணமாக உள்ளதோ என எண்ண வேண்டியுள்ளது. மேலும் எழுத்துக்களைக் குறைக்கும்போதுதான்
அதனை சுலபமாக கணினியிலும் கையாள முடியும். ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள்தான் உள்ளன.
அதில் மூன்று வகையான வடிவங்கள் இருந்தன. இன்று அதை தேவையில்லாத ஒரு சுமை என்று கருதி எடுத்து
விட்டார்கள். "கேப்பிட்டல் லெட்டரைத்' தான் வாக்கியத்தின் முதல் எழுத்தாக பயன்படுத்த வேண்டும் என்ற மன
நிலையும் மாறிவிட்டது.
சீனமொழியை மேலிருந்து கீழாக எழுதிக்கொண்டிருந்தார்கள். கணினியில் சீனத்தை பயன்படுத்த இது தடையாக
உள்ளது என்பதால் அதை மாற்றி நேர்க்கோட்டில் எழுதத் தொடங்கி விட்டார்கள். இதுபோல் தமிழில் சில சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் தமிழை சிறப்புடையதாக்க முடியும்.
குறிப்பாக ஒலியை மாற்றாமல் வரி வடிவங்களில் மட்டும் மாற்றங்களைச் செய்யலாம். 31 எழுத்துக்களை மட்டுமே வைத்துக் கொண்டு 247 ஒலியும் வரும்படி தமிழை பயன்படுத்த முடியும்.
இரண்டாவது, இலக்கணம் மாறவேண்டும். தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூல். அது இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதன் பிறகு ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை, இலக்கிய படைப்புகளை
மையமாகக் கொண்டு நன்னூல் என்னும் இலக்கண நூல் <<உருவாக்கப்பட்டது. நன்னூலுக்குப் பிறகு ஆயிரம்
ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றுவரை மாற்றியமைக்கப்பட்ட ஒரு இலக்கண நூல் வரவில்லை.
மொழியியல் அறிஞர்கள் குழு செய்ய வேண்டிய மிகப்பெரிய பணி இது. மூன்றாவதாக அறிவியல்
தொழில்நுட்பத்துக்கான புதிய கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். இந்த மூன்றும் மிக முக்கியமான
பணிகள்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »