E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 27,2010,00:00

செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கம் நடக்கும்; தமிழறிஞர்களும், பெரும் கவிஞர்களும் தமிழை அலசி ஆராயப் போகிறார்கள். இதற்காகத்தான், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 30 உள்ளரங்கங்கள், குளுகுளு வசதியுடன் தயாராகி வருகின்றன. அதெல்லாம் சரி! தமிழ் மாநாட்டுக்கு தமிழின் சுவையை அறிய வரும் சாதாரணத் தமிழனுக்கும், உள்ளூர் வாசிக்கும் இந்த மாநாட்டில் என்ன பொழுது போக்கு அம்சம் இருக்கப் போகிறது என்பதுதான் எல்லா மக்களின் கேள்வி. நிச்சயமாகத் தமிழைச் சுவையோடு பருக பல அம்சங்கள் காத்திருக்கின்றன.இதற்காகவே 50 ஆயிரம் பேர் அமரும் வகையில், பொது மாநாட்டுப் பந்தல் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ளது. அந்த மாநாட்டுப் பந்தலில், துவக்க விழா, நிறைவு விழா, மாநாட்டு முக்கிய நிகழ்ச்சிகள் தவிர மற்ற நேரங்களில் ஏராளமான பொது அரங்க நிகழ்ச்சிகள் தயாராகி வருகின்றன.இந்த நிகழ்ச்சிகள் என்னென்ன என்பதை முடிவு செய்ய, தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் கணேசன் தலைமையில், சென்னையில் நாளை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. எந்தெந்த நிகழ்ச்சியை எந்த நாளில், எந்த நேரத்தில் நடத்தலாம் என்பது பற்றி இதில் விவாதிக்கப்படும்.பட்டிமன்றம், இசைக் கச்சேரி, நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்கள், இந்த பொது அரங்க நிகழ்ச்சியில் நிகழ்த்தப்படும். இயல், இசை, நாடகம் என தமிழின் அத்தனை சுவையையும் ஓரிடத்தில் பருக...தமிழர்களே தயாராகுங்கள்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »