E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 26,2010,00:00

கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை ஐந்து நாட்கள் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், கருத்தரங்கு, ஆய்வரங்கம்,சொல்லரங்கம் என்று தனித்தனி அரங்குகளில் நிகழ்ச்சிகள் பல பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான தமிழ் அறிஞர்கள், மொழிப்பற்றாளர்கள் பங்கேற்கின்றனர்.காலையில் துவங்கும் நிகழ்ச்சி, உணவு இடைவேளைக்கு மட்டும் சிறிது நேரம் இடைவெளிவிட்டு, மாலை வரை தொடர்ந்து நடக்கும். தினமும் மாலையிலிருந்து இரவு வரை, கலை நிகழ்ச்சி நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. முதல் நாளில், ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சிகள் இடம் பிடிக்கிறது. இதில், பல விருதுகளை பெற்ற 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் 'ஜெய்கோ' பாடலை பாடிக்கொண்டே, இசையும் அமைக்கிறார் ரகுமான். இசைக்கலைஞர்கள் சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன் உள்ளிட்ட பிரபலங்களின் இசைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. தொடர்ந்து ஐந்து நாட்களிலும் மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சி துவங்கி இரவு நிறைவடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துவக்க விழாவுக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட மேடையையே, இசை நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்திக்கொள்வதென, செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »