E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 25,2010,00:00

எண்ணி இரு மாதங்களே முழுதாகவுள்ளன. மீதமிருக்கும் எல்லா வேலையையும் அதற்குள் முடிக்க வேண்டும். 50 நாட்களுக்குள் வேலைகளை முடித்தால் தான், கடைசி 10 நாட்களில் அலங்கார வேலைகளைச் செய்ய முடியும். அனைத்துப் பணிகளும் ஜூன் முதல் வாரத்தில் முடியுமென்கிறார் தலைமைச்செயலர் ஸ்ரீபதி.ஆனால், பல பணிகள் முடியாது என்பது தான் யதார்த்த நிலை. மாநாடு நடக்கவுள்ள அவினாசி சாலையின் நெரிசலைத் தவிர்க்கவே, 3 இணைப்புச் சாலைகளை இந்த மாநாட்டுக்கு முன்பாக அமைக்க வேண்டுமென்று திட்டமிட்டு, அதற்கான அரசாணையும் ஒரு மாதத்துக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டது.இன்று வரை, டெண்டர் விட்டபாடில்லை. புதை மின் வடம் அமைக்கும் பணி, இன்னும் இழுக்கிறது. எல்லா முக்கியச் சாலைகளும், அபாயகரமான குழியோடு காத்திருக்கின்றன. நடைபாதை, பூங்கா, உயர் மின் கோபுரம், தற்காலிக பஸ்ஸ்டாண்ட், குடிநீர் ஏற்பாடுகள் என எக்க்க்கச்சக்கமான பணிகள் பாக்கியுள்ளன. பணிகளை துரிதப்படுத்த, மாநகராட்சிக்காக நியமித்த 22 அலுவலர்களில் 2 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். இருகூர் இரு வழிப்பாதை, மாநாட்டுக்கு முன் முடியுமா என்பது சந்தேகமே. ரயில் நிலைய பிரதான வாயிலில் கூடுதல் பாதை ஏற்படுத்தும் முயற்சியும் தடைபட்டுள்ளது. உண்மை நிலை இப்படியிருந்தும், ஜூன் 10க்குள் பணிகள் முடியுமென்று தலைமைச் செயலர் சொல்வது ஆச்சரியம். முன்பு, ஏப்ரலில் முடியும், மே மாதத்தில் முடியும் என்றவர்கள், இப்போது ஜூனில் முடியுமென்கிறார்கள். அடுத்து வரும் போது...என்ன சொல்வார்களோ?.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »