E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 24,2010,00:00

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்கும் இதே தமிழகத்தில் தான், 2 இட்லி 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சட்டசபையிலும் இது விவாதிக்கப்பட்டு விட்டது. ஓட்டல் பண்டங்களின் விலையைக் குறைப்பது என்பது, 'அத்தைக்கு மீசை முளைக்கிற' கதையாகி விட்டது; அரசால் மட்டும் இதை கட்டுப்படுத்துவது சிரமமே.மற்ற ஊர்களை ஒப்பிடுகையில், கோவை ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகம், அளவு குறைவு என்பது பரவலான கருத்து. இதை உள்ளூர்க்காரர்கள் சமாளித்துக்கொள்ளலாம் அல்லது தவிர்த்துக் கொள்ளலாம். ஆனால், செம்மொழி மாநாட்டுக்காக இங்கு வருபவர்களால் இதைத் தாங்க முடியுமா?உணவுத் திருவிழா, பல விதமான உணவுக் கூடங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், உணவுப் பண்டங்களின் விலையை நிர்ணயிக்க இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதனால், செம்மொழி மாநாட்டு விருந்தினர்களுக்கு, எவ்வளவு விலைக்கு, என்ன கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.பெரிய பெரிய ஓட்டல்களின் நிர்வாகிகள், விருந்தோம்பல் குழுவில் பங்கேற்று, தங்கள் பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். லட்சம் பேர் வந்தாலும் அவர்களுக்கு உணவு கொடுப்பது பெரிய விஷயமில்லை. அது தரமாகவும், சுத்தமானதாகவும், பாதுகாப்பானதாகவும், எல்லோரும் வாங்கும் விலையிலும் இருக்க வேண்டும். அந்த உத்தரவாதத்தைத் தர வேண்டியது, மாநாட்டை நடத்தும் அரசின் பொறுப்பு.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »