E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 23,2010,00:00

கோவையில் நடக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்போர், பார்வையளார்கள் பயன்படுத்துவதற்கு வாகனங்களை சேகரிக்கும் பணியில் கோவை சரக போக்குவரத்து துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களில் அன்றாடம் பேசி, 15 பேர் பயணிப்பதற்கேற்ற 'டெம்போ டிராவலர்', நான்கு பேர் செல்வதற்கு 'இன்டிகா' போன்ற கார்களை தயார் செய்து வந்தனர் போக்குவரத்து அதிகாரிகள். ஆனால், அதிகபட்சமாக 'இன்னோவா' கார்களை சேகரிக்கும்படி, சில நாட்களுக்கு முன், உயர் அதிகாரிகள் அறிவுரை கூறினர். அதனால், போக்குவரத்து அதிகாரிகள் 'இன்னோவா' கார்களை தேடிப்பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். இதுவரை, 'இன்னோவா' உள்ளிட்ட ஆயிரத்து 216 வாகனங்கள் 'புக்கிங்' செய்யப்பட்டுள்ளன. மேலும் 800 வாகனங்கள் தேவைப்படுவதாக, உயர் அதிகாரிகள் கூறியதால், கோவை சரகத்திற்கு அடுத்துள்ள மற்ற சரகங்களில் வாகனம் தேடும் பணியில் போக்குவரத்து துறையினர் ஈடுபட்டுள்ளனர்.வாகனத்தை தேடிக்கண்டுபிடிப்பதோடு, டீசல், பெட்ரோலுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, கோவையிலுள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் முன்கூட்டியே பேசி ஒப்பந்தம் ஏற்படுத்தி விட்டனர் அதிகாரிகள்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »