E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 22,2010,00:00

கோவையில் பிரம்மாண்டமாய் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு, தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், புலவர்கள் உட்பட பல லட்சம் பேர் வருகை தருவதாய் உறுதியளித்துள்ளனர். வருகை தருவோருக்கு குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதி செய்து கொடுப்பதற்காக, கோவை மாநகராட்சிக்கு ஏழு கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.அந்த நிதியில் நடமாடும், தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கவும், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல் உட்பட பல அடிப்படை வசதி ஏற்படுத்த, மாநகராட்சி புதிய திட்டம் வகுத்துள்ளது. நேற்று நடந்த செம்மொழி மாநாட்டு மாநகர மேம்பாட்டு குழு கூட்டத்தில் கலெக்டர் உமாநாத் பேசுகையில், ''நடமாடும் கழிப்பிடங்கள் எவ்வளவு தூர இடைவெளியில் அமைப்பது, மாநாட்டிற்கு வருவோருக்கு குடிநீர் வழங்க எப்படிப்பட்ட விநியோக முறை, 'டஸ்ட்பின்' எங்கெங்கு வைப்பது, சுகாதார பணியாளர்களை பணி அமர்த்தும் முறை குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.''இதற்காக அதிகாரிகள் ஒரு சுற்று அமர்ந்து முழுமையான திட்ட வரையறையை உருவாக்க வேண்டும். செம்மொழி மாநாட்டு சுகாதாரப்பணிகளுக்கென்று 45 சுகாதார ஆய்வாளர்களையும், 760 துப்புரவு பணியாளர்களையும் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திட்ட வரையறையை உருவாக்கி, கோவைக்கு சனிக்கிழமை வரும் அரசின் தலைமை செயலர் ஸ்ரீபதியிடம் காண்பித்து அனுமதி பெறவேண்டும்,' என்றார்.திட்ட வரையறை தயாரிக்கும் பணி நேற்று துவங்கியது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »