E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 21,2010,00:00

எத்தனை லட்சம் பேர், செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் குவியப் போகிறார்கள் என்பதை இப்போதைக்கு யாராலும் கணிக்க முடியாது. வருபவர்கள் அனைவரும் தங்குவதற்கு இடம், உணவு, போக்குவரத்து வசதி அனைத்தும் சரி வரக் கிடைக்குமா என்பதையும் யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது.முக்கியமான ஓட்டல்களின் அறைகள் அனைத்தையும் அரசு எடுத்துக்கொண்டது. இன்னும் பல ஆயிரம் அறைகளை, பொது மக்களுக்காக விட்டுக் கொடுத்திருப்பதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அவையெல்லாம் போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகமே.கோவையில் இல்லாவிட்டாலும், திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி போன்ற இடங்களிலும் பலரும் போய் தங்கிக்கொள்ளலாம் என்று காரணம் சொல்லலாம். அங்கே தங்கிக் கொண்டு, இங்கே வந்து எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது அவ்வளவு சாத்தியமில்லை. இதையெல்லாம் விட, இந்த அறைகளின் வாடகை எத்தனை மடங்கு உயர்த்தப்படும் என்பதுதான், செம்மொழி மாநாட்டுக்கு கோவை வரத் திட்டமிட்டிருக்கும் வெளியூர் வாசிகளை பயமுறுத்தும் விஷயம். எக்காரணத்தை முன்னிட்டும், சாதாரண நாட்களில் வாங்கும் வாடகையை எந்த ஓட்டல் நிர்வாகமும் வாங்கப்போவதில்லை. ஆனால், வழக்கமாக இப்போது வாங்குவதை விட அநியாய கட்டணத்தை வாங்க விடாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை. அதே நேரத்தில், செம்மொழி மாநாட்டுக்கு படை திரண்டு வருபவர்களிடமிருந்து, உள்ளூர் ஓட்டல்காரர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியதும் அரசின் பொறுப்பு.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »