E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 20,2010,00:00

வீடுகளுக்குள் வெளிச்சம் வர மறுக்கிறது; வீதியெல்லாம் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. இதுதான் கோவையின் இன்றைய நிலை. செம்மொழி மாநாடு நெருங்க நெருங்க, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர் மக்கள். இன்று இருக்கும் மின் தடை நேரம் இன்னும் அதிகரிக்குமோ என்ற பயம் தான். மின் தடைக்கு மின் தட்டுப்பாடுதான் காரணமென்றால், கோவை நகரில் திரும்பிய திசையெலாம் விளம்பரப் பலகைகளில் விளக்குகள் ஒளிர்கின்றனவே, அதற்கு எங்கேயிருந்து மின்சாரம் வருகிறது என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர். இன்னும் மாநாடு என்று வரும்போது எத்தனை விளம்பரமோ, எத்தனை விளக்குகளோ? இப்போதே மூன்று மணி நேரம் மின் தடை என்பது அறிவிப்பாக மட்டும் இருக்கிறது. ஒரு நாளில் எத்தனை மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது என்பது மின் வாரியத்துக்கே வெளிச்சம். புதை மின் வடம், பராமரிப்பு என்று ஏதாவது கூறி, வாரத்துக்கு ஒரு நாள் மின் தடை, தினமும் ஐந்து மணி நேரம் மின்சாரத்துக்கு விடை தந்து விடுகின்றனர். மாநாட்டுப் பந்தல், ஆய்வரங்கம், கண்காட்சி அரங்கம், அரசு அலுவலக அலங்காரம், வீதியெல்லாம் விளக்குத் தோரணம் என கோவையே மின்னொளியில் மின்னப் போகிறது. அப்போது ஏற்படும் மின் தட்டுப்பாட்டுக்கும், இதே வீடுகளுக்கான வெளிச்சத்தைத்தான் பறிக்கப்போகிறதா மின் வாரியம்? இப்போதே விடை சொல்லி விட்டால், பரவாயில்லை.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »