E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 19,2010,00:00

கோவை பெருநகராக அந்தஸ்து பெருவதற்கு முன்பே, தொழில் நகராகவும், பஞ்சாலை நகராகவும் அந்தஸ்து பெற்று விட்டது. அதற்கேற்ப கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளன. இப்படிப்பட்ட கோவையில் உள்கட்டமைப்பு வசதிகள் பல கோடி ரூபாய் செலவில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான கோவை விமான நிலையம் பல நாட்டு விமானங்கள் வந்து செல்லும் அளவுக்கு விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதற்கு கோவை தயாராகி வருகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வருகை தரவுள்ளனர். இதற்காக கோவை மாவட்ட நிர்வாகமும், செம்மொழி மாநாடு தங்குமிடக்குழு தலைவரும் தமிழக அமைச்சருமான பழனிசாமி தலைமையில் கோவை நகரில் மட்டும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டல்களில் 1,500 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பொள்ளாச்சியில் மாநாட்டுக்கு வருகை தருவோருக்காக, நேற்றைய நிலவரப்படி 5700 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »