E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 18,2010,00:00

அமைச்சர்கள் வருகிறார்கள்; தலைமைச் செயலர், மாநாட்டு தனி அலுவலர் வருகிறார்கள்; காலையில் சென்னையில் கிளம்பி, விமானத்தில் பறந்து வந்து பார்த்து விட்டு மாலையில் திரும்பி விடுகிறார்கள். வரும்போதெல்லாம் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குப் போகிறார்கள்.அங்கே நடக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து விட்டு, 'ஆஹா, வேலை வேகமாய் நடக்கிறது' என்று சென்னைக்குத் திரும்பி, அதையே முதல்வரிடமும் ஒப்புவித்து விடுகிறார்கள். ஆனால், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தைத் தவிர்த்து, மற்ற இடங்களில் நடக்கும் பணிகளை யாருமே பார்வையிடுவதில்லை.இதனால், 3 இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணி, நடைபாதை, பூங்கா, தற்காலிக பேருந்து நிலையம், ரயில் நிலையம் முன்பாக மாற்றுப் பாதை தயார் செய்வது, குட்ஷெட் சாலையை விரிவுபடுத்துவது என எக்கச்சக்கமான வேலைகள், இன்னும் இழுத்துக் கொண்டிருக்கின்றன.இவற்றில் எத்தனை வேலைகள், செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக முடியும், எத்தனை வேலைகள் கை விடப்படுமென்பது தெரியவில்லை. கலெக்டரும், சிறப்புப் பணி அலுவலரும் பம்பரமாய்ச் சுற்றி வேலை பார்த்தாலும், அவர்களுக்கு போதுமான ஒத்துழைப்பை பிற அலுவலர்கள் வழங்குவதில்லை.முக்கிய அமைச்சர்கள், மாநாட்டு தனி அலுவலர் என யாராவது கோவையில் வந்து முகாமிட்டு, பணிகள் அனைத்தையும் முடுக்கி விட்டால்தான் இன்னும் இரு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க முடியும். கடைசி நேரத்தில் இந்த வேலைகளை அவசர கதியில் செய்தால், பணியில் தரம் இருக்குமா என்பதே மக்களின் சந்தேகம்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »