E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 17,2010,00:00

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க, உலகம் முழுவதும் இருந்து தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், மொழித் திறனாய்வாளர்கள், பொதுமக்கள் குவிய போகின்றனர். சாதாரண ஒரு கட்சி கூட்டத்துக்குப் பின் கூட பொறுக்க முடியாதபடி குப்பைகள் குவிந்து விடும். செம்மொழி மாநாட்டில் குவியப் போகும் குப்பைக் கூளங்கள், உணவுக் கழிவுகள் பற்றி கேட்கவே வேண்டாம்.நான்கு நாட்கள் நடக்கும் மாநாட்டில், மீதமாகும் கழிவுகள் நகரை அசுத்தப்படுத்தாமல் தடுக்க சிறப்பு ஏற்பாடுகளை கோவை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. கோவை மாநகரம் மற்றும் மாநாடு நடக்கும் பகுதியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள, 315 தற்காலிக சுகாதாரப் பணியாளர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.இதற்கென மொத்தம் 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, கோவை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மாநாட்டுக்கு வரும் சர்வதேசத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பயன்படுத்த, 60 நவீன நடமாடும் கழிப்பறைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »