E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 16,2010,00:00

செம்மொழி மாநாட்டையொட்டி அரசு அறிவித்த, செம்மொழி மாநாட்டுப் பூங்கா பணிகள் எப்போது துவங்கும் என்று ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறார்கள் கோவை மக்கள். இந்தியாவிலேயே மிகப்பெரிய அல்லது மிகச் சிறந்த தாவரவியல் பூங்காவாக இதை மாற்றுவதாக உறுதி கூறியிருக்கிறது தமிழக அரசு. அப்படியே மற்றொரு உறுதியையும் அரசு கொடுத்து விட்டால், 'கோவையின் நுரையீரல்' ஆக இருக்கும் மத்திய சிறைச்சாலை வளாகத்தின் பசுமைக்கு எந்த ஆபத்தும் நேராது என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவர். பூங்கா அமைக்க, மரங்கள் எதுவும் வெட்டப்படாது என்பது தான் மக்கள் எதிர்பார்க்கும் உறுதி. மேலை நாடுகளில் எத்தனை பெரிய வளர்ச்சிப் பணியாக இருந்தாலும், பசுமையான மரங்களை வெட்டாமல் பாதுகாப்பது அல்லது அப்படியே இடப்பெயர்ச்சி செய்வது வழக்கமாகவுள்ளது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் கோவையில் 3,000க்கும் அதிகமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன; பதிலுக்கு 100 மரங்கள் கூட வளர்க்கப்படவில்லை. செம்மொழி மாநாட்டுக்காக ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. குறைந்த பட்சமாக, மத்திய சிறை வளாகத்தில் இப்போதுள்ள மரங்களையாவது அப்படியே விட்டு வைக்க வேண்டுமென்பதே மக்களின் விருப்பம். இன்னும் அதிகமாக அங்கு மரக்கன்றுகளை நட்டு, கோவையில் வெட்டி வீழ்த்தப்பட்ட பசுமைக்கு மறு உயிர் கொடுக்க வேண்டும். முதல்வரின் கையில் உள்ளது முடிவு.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »