E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 15,2010,00:00

மழைக்காலத்தில் நடக்கிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு. வழக்கம் போல் இந்த ஆண்டும் மழை வராது என்கிற நம்பிக்கை அரசுக்கு இருக்கலாம். பருவமழை வராவிட்டாலும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தாலோ, புயல் மையம் கொண்டோ மழை பெய்யலாம்; பெய்யாமலும் போகலாம். ஒரு வேளை மழை பெய்தால்,மாநாட்டுக்கு வரும் அத்தனை லட்சம் மக்களும் எங்கே போவார்கள்? அவினாசி ரோட்டில் வெயிலுக்கு ஒதுங்கக்கூட ஒரு மரமும் இல்லை. மாநாட்டுக்காக அமைக்கும் நவீன நிழற்குடையில் பதுங்கிப் பதுங்கி நின்றாலும் பத்துப் பேருக்கு மேல், நிற்க முடியாது. ஆய்வரங்கங்கள் நடக்கும் கொடிசியா அரங்கில், தமிழறிஞர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கலாம். ஆனால், மாநாடு, கண்காட்சி, அலங்கார வாகன ஊர்வலங்களைப் பார்க்க வரும் பல லட்சம் மக்களுக்கு மழையிலிருந்து என்ன பாதுகாப்பு? மழை பெய்தால் மாநாட்டுப் பந்தல் தாங்குமா? கண்காட்சி அரங்கம் அதே களையுடன் இருக்குமா? அலங்கார வாகனங்கள் தான் அழகாக அணி வகுக்குமா? வருமுன் காக்கும் நடவடிக்கையில், அரசு இப்போதே களம் இறங்க வேண்டும்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »