E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 14,2010,00:00

நகர்கின்றன நாட்கள்; வேகமெடுத்து விட்டன வேலைகள். செம்மொழி மாநாட்டு வேலைகளை துரிதப்படுத்த, கூடுதல் அலுவலர்களை நியமித்து, வளர்ச்சிப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது அரசு. அரை குறையாகவோ, அழகாகவோ, தரத்துடனோ, தரமற்றோ வேலைகள் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும்.மாநாட்டு நாட்களில் வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டம் என எல்லாப் பகுதிகளிலிருந்தும் லட்சம் லட்சமாய் மக்கள் குவியப் போகிறார்கள். இதில் கோவை மக்களின் பங்களிப்பு என்ன இருக்கப்போகிறது என்பதுதான் எல்லோர் மனதிலும் கிளம்பியிருக்கிற கேள்வி. மாநாடுக்காக பல நூறு கோடி ரூபாய் செலவில் ஏதோ வேலை நடக்கிறது என்பது மட்டும்தான் உள்ளூர் மக்களுக்குத் தெரிந்த ஒரே செய்தி. வெளியூர்க்காரர்கள் வந்து கோவையில் குவியப் போகின்றனர், ஒரு வாரத்துக்கு ஏதேதோ நிகழ்ச்சிகள் நடக்கப் போகின்றன என்பதும் சிலருக்குத் தெரிந்திருக்கிறது.கோவை மக்களை இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்க வைப்பதற்கான எந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்படவில்லை. இன்னும் சொல்வதானால், செம்மொழி மாநாடு தொடர்பாக எந்தவொரு முன் நிகழ்வும், விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், நமக்கு அந்நியமான நிகழ்வாகவே இதை கோவை மக்கள் பார்க்கும் போக்கு உள்ளது. இதை மாற்ற வேண்டுமெனில், உள்ளூர் மக்களுக்கான பங்களிப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, மாநாட்டு நாட்களில் உள்ளூர் மக்களுக்கு எந்த இடையூறும் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், இது 'எங்க ஊர் திருவிழா' என்ற மகிழ்ச்சி கோவை மக்களிடம் உருவாகும். அதற்கான நிகழ்ச்சிகளை துவங்க, இதுவே சரியான தருணம்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »