E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 13,2010,00:00

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் எட்டு முறை உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. ஒன்பதாவது முறையாக கோவையில் முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டடுள்ளது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத்தை சேர்ந்த நடுத்தர மக்கள், செம்மொழி மாநாடு குறித்த விளம்பரங்கள், அன்றாட நாளிதழ்களில் வரும் செய்திகளை பார்த்து மாநாட்டு விஷயங்களை பற்றி தெரிந்து கொள்கின்றனர். அதில் மாநாட்டிற்குரிய ஏற்பாடுகள், அமைச்சர்கள் வருவது, மாநாட்டு பணிகள் குறித்த தகவல்கள் மட்டுமே வெளிவருகிறது.கோவை அல்லாத வெளி மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை பார்க்க வரவேண்டுமென்றால், மாநாட்டு அரங்கிற்குள் செல்ல அனுமதி கிடைக்குமா, அனுமதி சீட்டு வைத்திருப்பவர் மட்டும் தான் பார்வையாளராக செல்ல முடியுமா, சாதாரண பொதுமக்களும் செல்ல அனுமதி உள்ளதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.வெளியூரைச் சேர்ந்தவர்கள் கோவைக்கு வந்தால், மாநாடு நடக்கும் இடத்திற்கு, பஸ்ஸில் செல்வதற்குரிய வழித்தடம், மாநாட்டிற்கு செல்லும் நுழைவாயில்கள், தங்கும் விடுதிகள், அங்கு உள்ள வசதிகள், வசூலிக்கப்படும் கட்டணம், அல்லது சாதரண பொதுமக்கள் தங்குவதற்கு பள்ளிக்கூடங்கள், திறந்தவெளி அரங்குகள் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இது வரை அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. அதனால், சாதாரண பொதுமக்களுக்கு பயனளிக்கும் விஷயங்கள் குறித்த தகவல்களை நாளிதழ்களில் அறிவிப்புகளாக அரசு அறிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு மிகுந்து உள்ளது.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »