E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 12,2010,00:00

பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவை மாநகரம், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய சிறப்பையும் பெறப்போகிறது. அதையொட்டி மாநகரம் முழுவதும் பூங்காக்கள், நடைபாதைகள், ரோடுகள், தெருவிளக்குகள், டிராபிக் சிக்னல்கள் என்று பல கோடி ரூபாயில் பணிகள் நடக்கின்றன. 'இந்த பணிகள் முடிந்து, மாநாடு சிறப்புற நடந்தால் மட்டும் போதாது; அதிகம் படித்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும்படியாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, சராசரி மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், வெளிக்கொணர வேண்டும்' என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

பழந்தமிழ் இலக்கியங்களின் சுவையை, அனைவரும் ரசிக்கும் வகையில் செய்வதற்கு, இந்த மாநாட்டை விட்டால் வேறொரு தருணம் கிடைக்குமா என்பது சந்தேகமே. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பழந்தமிழர் பெருமை பேசும் இலக்கியங்களை, அனைவருக்கும் புரியும் வகையிலான புத்தகங்களாகவும், 'சிடி'க்களாகவும் எளிய தமிழில் மாற்றம் செய்து வழங்க வேண்டும்; அதன் மூலம், தமிழின் இலக்கிய வளத்தை, இளைய தலைமுறையினரும் உணரச்செய்ய வேண்டும் என்பதே, தமிழ் ஆர்வலர்கள் பலரது எதிர்பார்ப்பு.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »