E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 11,2010,00:00

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கும் கொடிசியா கண்காட்சி வளாகம், கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதியுடைய வளாகமாக மாற்றப்படுகிறது. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன், தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படுகிறது. இதற்கு தலைவராக கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் அனந்தகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கொடிசியா கண்காட்சி வளாகத்தில் 'ஏசி' வசதியுள்ள 'இ' பிளாக்கிலுள்ள அரங்கம், தமிழ் இணைய மாநாட்டிற்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் இணைய மாநாடு நடக்கும் 'இ' அரங்கிற்கு இன்டர்நெட் வசதி ஏற்படுத்துவதற்காக , பி.எஸ்.என்.எல்., நிறுவனம் மூலம் கம்பி இழை கேபிள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழ் இணைய மாநாடு நடக்கும் அரங்கம், செய்தியாளர் அரங்கம், பொதுதகவல் மையம் ஆகியவற்றில் எளிமையாக இன்டர்நெட் வசதி பெறும் வகையில், கம்ப்யூட்டர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இது தவிர கொடிசியா வளாகம் முழுவதும், கம்பியில்லா இணைய தளவசதி கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்பணி தொடர்பாக 'எல்காட்' மேலாண் இயக்குனரும், தமிழ் இணைய மாநாட்டின் உறுப்பினருமான சந்தோஷ் பாபு, கொடிசியா கண்காட்சி வளாகத்தை அண்மையில் பார்வையிட்டார். இணைய மாநாட்டிற்கு தேவையான வசதி செய்வது தொடர்பாக பி.எஸ்.என்.எல்., தேசிய தகவல் மைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »