E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 10,2010,00:00

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டால், கோவை மாநகரே மிளிருகிறது. பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. செம்மொழி மாநாட்டுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பேர் மூலம், ஆட்டோ மற்றும் கால் டாக்சி உரிமையாளர், ஓட்டுநர்கள் அதிகம் பயன்பெறுவர். தமிழ் மாநாட்டுக்காக, பல நூறு கிலோமீட்டர் கடந்து வருபவர்களிடம், ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் கட்டணம் மட்டும் வசூலிப்பது தான் கோவை மாநகருக்கு பெருமையானதாக இருக்கும். அதை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுள்ள மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினரையும் அழைத்து, பேச்சு நடத்தினார். 'குறைந்த பட்சம் 30 ரூபாயும், அதற்கு மேல் வரும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் 15 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்' என்பது ஆட்டோ தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை. பரிசீலிப்பதாக கூறிய போலீஸ் கமிஷனர், 'மாநாட்டுக்கு முன்னதாகவே ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்படும், மாநாட்டுக்கு வருவோருக்கு எந்த பாதிப்பும் இருக்காது' என்று அறிவித்துள்ளார். ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் அமல் செய்து விட்டால், அது செம்மொழி மாநாட்டுக்கு மேலும் ஒரு சிறப்பு சேர்ப்பதாகவே அமையும்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »